பூரணி

7 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Aug 6, 2026, 1:01:00 PM (8 days ago) Aug 6
to Santhavasanthsm சந்தவசந்தம்
தெய்வவடி வங்கள்தான்எத்தனை எத்தனை
திருக்கோ வில்தான் எத்தனை
தெருவெலாம் தேருலா தெப்பமுந் திருவிழா
தினபூ சையோ டர்ச்சனை

செய்யுநிய மங்கள்தான் எத்தனை எத்தனை
ஜபவு பாசனை எத்தனை
சகமேவு தீர்த்தயாத் திரைகளாய் எத்தனை
சத்சங்கந் தான் எத்தனை

பெய்யுமழை யாய்விழியால் உய்யுவழி யாதறியாப்
பிதற்றுதல் தான் எத்தனை
பிறந்துழலும் சங்கடந் தானெத்தனை எத்தனை
பிரம்மப் பெரு முத்தனை

பொய்யவிய மெய்யுறையும் பூரணம் எனவுணரும்
போதம் வர எத்தனை
போதெனச் சொல்லியென் வாதறு! தீதறு!
பூரணி! சக்தி உமையே!


மீ. ரா
6-8-2026
Sent from my iPhone

இமயவரம்பன்

unread,
Aug 6, 2026, 4:39:02 PM (8 days ago) Aug 6
to santhav...@googlegroups.com, Santhavasanthsm சந்தவசந்தம்
சந்தமும் பாடலும் மிக அருமை

Rajja Gopalan

unread,
Aug 6, 2026, 8:31:19 PM (8 days ago) Aug 6
to santhav...@googlegroups.com, Santhavasanthsm சந்தவசந்தம்
நன்றி
Sent from my iPhone

> On 7 Aug 2026, at 02:09, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
>
> சந்தமும் பாடலும் மிக அருமை
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/367DC4E1-9BD4-4438-B0E5-520E349535D5%40gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages