shatpadi - ஷட்பதி - Kannada meter

142 views
Skip to first unread message

Siva Siva

unread,
May 27, 2017, 8:20:31 PM5/27/17
to santhavasantham
FYI

-----------
From Nagavarma Canarese Kannada prosody:

Inline image 1
-----------

http://www.shastriyakannada.org/DataBase/KannwordHTMLS/CLASSICAL%20KANNADA%20LITERATURE%20HTML/SHATPADI%20HTML.htm

SHATPADI

Shatpadi (ಷಟ್ಪದಿ) is arguably the most popular prosodic meter in Kannada. The variations of this meter can be found even in modern poetry written during the twentieth century, as demonstrated by the celebrated scholar T.N.Srikantaiah. Shatpadi has existed in some form or the other right from the beginnings of Kannada literature.

Shatpadi means literally ‘six lines’. (Shat= 6, Paada=Line). This is a meter where the first, second, fourth and fifth lines are equal to one another in terms of ‘Amsha’ or ‘Maatre’ the basic elements of Kannada prosody depending on the parameters that the poet has chosen. The third and sixth lines are 1.5 times longer than the rest and they are equal to one another. The second important condition that is imposed has to with the initial rhyming or ‘Adi praasa’ as it is usually called. Some more minor conditions are applicable to specific shatpadis.

Shatpadi was originally a part of ‘amshagana chandassu’ which has specific Dravidian roots. Here the basic modules are brahma gana, vishnugana and rudragana. Shatpadi in its original form was based on these units. Nagavarma gives the rules that govern the structure of a shatpadi in detail. This is usually called ‘muula shatpadi’. (The original shatpadi) This is used in sporadic instances and no literary work constructed entirely in amsha gana shatpadi is available.

However, there was a gradual movement away from the Dravidian roots and this is manifested in prosody by the shift from ‘amsha gana chandassu’ to ‘maatraa gana chandassu’. This transformation led to certain changes in the structure of shatpadi also. The basic units were changed to ‘maatre’s. (syllable) These are divided in to units of three, four and five ‘maatre’s. Shatpadis are written using various permutations and combinations of these basic units. Consequently, the ‘muula shatpadi’ gave rise to six different variations. They are called Shara, (shara) Kusuma, (kusuma) Bhoga, (BOga) Bhamini, BAmini) Parivardhini (parivardhini) and Vardhaka (vArdhaka). ‘Veereshacharite’ by Raghavanka is written in “Uddanda Shatpadi’ a minor variant. Some scholars have tried to derive two more shatpadis named ‘Tala Shatpadi’ and ‘Jala Shatpadi’. However, Bhamini and Vardhaka are the most popular shatpadis and they are used by many major poets of Kannada such as Raghavanka, Kumaravyasa, Lakshmeesha, Chamarasa, Kumara Valmeeki and Bhaskara Kavi. It is an interesting point to be noted that Shaiva and Brahmin poets have preferred this form and Jaina poets have hardly ventured to write in Shatadis. Shatpadi was the favorite meter among the medieval poets writing in ‘naDugannaDa’. The important Kannada works in the shatpadis are as follows:

1. Shara Shatpadi: None

2. Kusuma Shatpadi: None

3. Bhoga Shatpadi: a) Tirukana Kanasu – Muppina Shadakshari

4. Bhamini Shatpadi: a) Karnata Bharata Kathamanjari – Kumaravyasa

b) Prabhulingleele -- Chamarasa

c) Toraveya Ramayana -- Kumara Valmeeki

d) Nalacharite -- Kanakadasa

5. Parivardhini Shatpadi:

5. Vardhaka Shatpadi:

a) Harishchandra Kavya- Raghavanka

b) Siddarama Charite – Raghavanka

c) Somanathacharite - Raghavanka

d) Jaimini Bharata - Lakshmeesha

e) Bhavachintaratna - Gubbiya Mallanarya

Some Kannada works contain a combination of these six variations. ‘Mahadeviayakkana Purana’ (1550 A.D.) by Chennabasavanka is an interesting work because it makes use of all six shatpadis. ‘Kumudendu Ramayana’ also makes use of diffrent Shatpadis.

The shift from amshagana tripadi to maatragana tripadis resulted in a reduction of flexibility and musicality. The singing mode was replaced by the reciting mode. (Gamaka) However these works were communicated even to illiterate communities through various modes. T.N. Srikantaiah has shown in his writings that even twentieth century poetry contains shatpadi patterns, of course with out the the restrictive rules regarding rhymes.

Shatpadi’ is perhaps the most prevalent prosodic form in Kannada, considering the fact that ‘Champu’ is a combination of various ‘vruttas’ creating a space even for prose. On the contrary, shatpadi works contain literally thousands of poems running on and on with out causing monotony. This is so because it is possible to play with this form depending on the exigencies of the situation. It is possible to mould it for description, conversation and dramatic rendering. Great masters such as Kumaravysa and Raghavanka have shown the possibilities of this meter exhaustively.  

===============

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Siva Siva

unread,
May 28, 2017, 8:37:24 AM5/28/17
to santhavasantham

கன்னடத்தில் "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பு - இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளனவாம். (இக்காலத்திலும் எழுதுகின்றனரா என்று அறியேன்).

இந்த "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பின் யாப்புக் குறிப்புச் சுருக்கம் - (நான் அறிந்த அளவில்):

X X

X X

X X X +1

X X

X X

X X X +1

X = எவ்வகைச் சீர்/சீர்கள் அமைப்பும் இருக்கலாம். அதே அமைப்பு "X" குறியீடு காட்டும் எல்லா இடங்களிலும் வரும்.

  • ஆறு அடிகள்

  • எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.

  • 1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிக்கு 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முதற்பாதியில் உள்ள சீர் அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.

  • 3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. (இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முதற்பாதி சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் நெடில் எழுத்து).

  • கன்னட யாப்பில் சீர்களைக் கணக்கிடுவதில் அம்ச கணம் (தேசி சந்தஸ் - தென்னிந்திய யாப்பு முறை) என்றும், மாத்திரைக் கணம் (வடமொழி யாப்பு முறை) என்றும், அக்ஷர கணம் (வடமொழி யாப்பு முறை) என்றும் மூன்று வகைகள் உள்ளன.

  • ஆரம்பகாலத்தில் அம்ச கணங்கள் முறையில் கணக்கிட்டு ஷட்பதிகள் எழுதப்பெற்றன. காலப்போக்கில் இது மாறி, நெடுங்காலமாக மாத்திரைக் கணங்கள் முறையில் கணக்கிட்டு ஷட்பதி எழுதுகின்றனர். ஆனால் இருவகைகளுமே கன்னட இலக்கியத்தில் ஏற்புடைத்தே.

ஷட்பதி வகைகளுள் ஒன்று "சர ஷட்பதி".

உதாரணமாக - "சர ஷட்பதி" என்ற வகையின் அமைப்பு - மாத்திரைக் கணக்கில் சீர்களைக் கணக்கிட்டால்:

4-4

4-4

4-4-4-2

4-4

4-4

4-4-4-2

This meter is somewhat in a similar class akin to some thevaram songs which have unequal lines. However, those thevaram songs are usually 4 lines with lines 1&3 as longer lines and lines 2&4 as shorter lines. Further, many of those thevaram songs do not have an edhugai pattern inside a single line.

Thus, I do not think there is any exact match between any thevaram song and kannada shatpadi meter.

("thiru-mukkAl style" songs of thevaram - sambandar thevaram 3.97 -

"திடமலி மதிளணி சிறுகுடி மேவிய

படமலி யரவுடை யீரே

படமலி யரவுடை யீருமைப் பணிபவர்

அடைவது மமருல கதுவே."),

(sambandar thevaram 3.110 -

"வரமதேகொளா வுரமதேசெயும் புரமெரித்தவன் பிரமநற்புரத்

தரனனாமமே பரவுவார்கள்சீர் விரவுநீள் புவியே."),

(sambandar thevaram 1.135 -

"நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை

கூறு சேர்வதொர் கோலமாய்ப்

பாறு சேர்தலைக் கையர்ப ராய்த்துறை

ஆறு சேர்சடை யண்ணலே.")

(sambandar thevaram 2.112 -

"மாதோர் கூறுகந் தேற தேறிய

ஆதி யானுறை யாடானை

போதி னாற்புனைந் தேத்து வார்தமை

வாதி யாவினை மாயுமே.")

ஷட்பதி வகைகளுள் ஒன்று "பாமினி ஷட்பதி". அவ்வகை ஷட்பதி உதாரணம் ஒன்று: (மாத்திரைச் சந்தஸ் அடிப்படையில்):

3-4-3-4

3-4-3-4

3-4-3-4-3-4-2

3-4-3-4

3-4-3-4

3-4-3-4-3-4-2

ವೇದ ಪುರುಷನ | ಸುತನ ಸುತನ ಸ

ಹೋದರನ ಹೆ|ಮ್ಮಗನ ಮಗನ ತ

ಳೋದರಿಯ ಮಾ|ತುಳನ ಮಾವನ|ನತುಳಭುಜಬಲ|ದಿ

ಕಾದು ಗೆಲಿದನ|ನಣ್ಣನವ್ವೆಯ

ನಾದಿನಿಯ ಜಠ|ರದಲಿ ಜನಿಸಿದ

ನಾದಿಮೂರುತಿ | ಸಲಹೊ ಗದುಗಿನ | ವೀರನಾರಯ|

வேத³ புருஷன | ஸுதன ஸுதன ஸ

ஹோத³ரன ஹெம்|மக³ன மக³ன த

ளோத³ரிய மா|துளன மாவன|நதுளபு⁴ஜப³| தி³

காது³ கெ³லித³|நண்ணனவ்வெய

நாதி³னிய ஜட²|ரத³லி ஜனிஸித³

நாதி³மூருதி |ஸலஹொ க³து³கி³| வீரனாரய|

---

அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

Pas Pasupathy

unread,
May 28, 2017, 9:11:11 AM5/28/17
to Santhavasantham
அருமை! நிதானமாய் மீண்டும் படிப்பேன்!

2017-05-28 8:37 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

கன்னடத்தில் "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பு - இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளனவாம். (இக்காலத்திலும் எழுதுகின்றனரா என்று அறியேன்).

இந்த "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பின் யாப்புக் குறிப்புச் சுருக்கம் - (நான் அறிந்த அளவில்):

Siva Siva

unread,
May 28, 2017, 12:38:20 PM5/28/17
to santhavasantham

There are some padhigams of Sambandar that are shown as 2 line songs in thevaram books - but some of them have edhugai pattern across some seers. The shatpadi pattern of Kannada matches it.

sambandar thevaram 3.110.1 -

"வரமதேகொளா வுரமதேசெயும் புரமெரித்தவன் பிரமநற்புரத்

தரனனாமமே பரவுவார்கள்சீர் விரவுநீள் புவியே."

If the above song is written in the following manner: sambandar thevaram 3.110.1 -

"வரம தேகொளா வுரம தேசெயும்

புரமெ ரித்தவன் பிரம நற்புரத்

தரன னாமமே பரவு வார்கள்சீர் விரவு நீள்புவி யே."

and, if we similarly look at the next song of that padhigam - sambandar thevaram 3.110.2 -

சேணு லாமதில் வேணு மண்ணுளோர்

காண மன்றலார் வேணு நற்புரத்

தாணு வின்கழல் பேணு கின்றவர் ஆணி யொத்தவ ரே.

one can see that the pattern of first 3 lines of a shatpadi follows the above. (In a shatpadi, the pattern of the first 3 lines repeats exactly in the next 3 lines).

V. Subramanian

2017-05-28 8:37 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

Ramamoorthy Ramachandran

unread,
May 28, 2017, 8:52:18 PM5/28/17
to santhav...@googlegroups.com
இன்னும் தொடர்ந்து "இயற்றியும்" பதிவு செய்க. நன்றி. - புலவர் இராமமூர்த்தி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Subbaiyar Ramasami

unread,
May 29, 2017, 9:16:49 AM5/29/17
to santhav...@googlegroups.com
 இதோ என்பாடல்

ஷட்பதி தானா சொல்லுக!

காலை வேளையில் சாலை ஓரமே
பாலை விற்பவன் கோலை நாட்டினன்
நாலு பக்கமும் சேலைமாதர்கள் பாலை வாங்கிட வே
மேலும் நீரினைப் பாலை விற்பவன்
சீல மின்றியே சாலச் சேர்த்தனன்
சூலம் கொண்டவள் போலப் பெண்டிரும் ஓலமிட்டன ரே!

இலக்கணம்

தேமா கூவிளம் தேமா கூவிளம்
தேமா கூவிளம் தேமா கூவிளம்
தேமா கூவிளம் தேமா கூவிளம் தேமா கூவிளம் நேர்(நெடில்)

இலந்தை

Siva Siva

unread,
May 29, 2017, 9:26:52 AM5/29/17
to santhav...@googlegroups.com
Yes. 
In line edhugai is nice effect. 

Subbaiyar Ramasami

unread,
May 29, 2017, 9:58:29 AM5/29/17
to santhav...@googlegroups.com
இன்னுமொருபாடல்

வண்ணமுற வாழ்ந்தகதை எண்ணமெலாம் ஆழ்ந்திருக்கக்
கண்ணதனில் ஓர்கசிவு பெண்ணவளின் ஓர்மைதர
மண்ணிதனில் வாழ்கையிலே விண்ணதனின் போகமெலாம் கொண்டுவந்த தெண்ணும்மன மே!
பண்பொழிந்த என்கவிதை உண்ணிறைந்து மேல்வரவே
எண்ணமெனத் தந்தவளை  விண்ணழைத்துக் கொண்டதுவே
உண்மையிலே உன்னிடத்தில் திண்ணமுற வாழுகிறாள் கண்டவிதம் சொல்லுமன    மே!

இலந்தை

--

Subbaiyar Ramasami

unread,
May 29, 2017, 10:08:52 AM5/29/17
to santhav...@googlegroups.com
eன் நோக்கில் ஆறடிகளில் மட்டும் எதுகை அமைந்து  அடிகளுக்குள் முன்பின் பகுதிகள் அளவொத்து , அவ்வடியே 1245 ல் அளவொத்து 3ம் ஆறும் நீண்டு வந்தால் மட்டும் போதுமென நினைக்கிறேன். 

Subbaiyar Ramasami

unread,
May 29, 2017, 10:14:52 AM5/29/17
to santhav...@googlegroups.com
அந்தி ஓவியம்

செக்கர் வானச் செம்மைப் பூச்சு,
பக்கம் எல்லாம் பாய லாச்சு,
அக்கம் பக்கம் மஞ்சள் கோலம் அள்ளு கின்ற தே
தக்க வைத்துக் கொள்ளும் பாடல்
சிக்க வேண்டிச் சந்தம் கூடல்
இக்க ணத்தில்  என்றன் உள்ளம் துள்ளு கின்ற தே!

இலந்தை

Siva Siva

unread,
May 29, 2017, 11:23:24 AM5/29/17
to santhavasantham
அழகு. 
அடிகளின் ஈற்றில் உள்ள இயைபுத்தொடை இன்னும் மெருகேற்றுகின்றது!

2017-05-29 10:14 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
அந்தி ஓவியம்

செக்கர் வானச் செம்மைப் பூச்சு,
பக்கம் எல்லாம் பாய லாச்சு,
அக்கம் பக்கம் மஞ்சள் கோலம் அள்ளு கின்ற தே
தக்க வைத்துக் கொள்ளும் பாடல்
சிக்க வேண்டிச் சந்தம் கூடல்
இக்க ணத்தில்  என்றன் உள்ளம் துள்ளு கின்ற தே!

இலந்தை

2017-05-29 8:08 GMT-06:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
eன் நோக்கில் ஆறடிகளில் மட்டும் எதுகை அமைந்து  அடிகளுக்குள் முன்பின் பகுதிகள் அளவொத்து , அவ்வடியே 1245 ல் அளவொத்து 3ம் ஆறும் நீண்டு வந்தால் மட்டும் போதுமென நினைக்கிறேன். 

Subbaiyar Ramasami

unread,
May 29, 2017, 6:04:01 PM5/29/17
to santhav...@googlegroups.com

இயைபு இல்லாமலும் எழுதலாம்

நெஞ்சமே உனைத் தஞ்சமேஎன  வந்தபோதிலே மிஞ்சலாகுமோ

கொஞ்சமேனும்நீ என்னையேமதி, கோணல்மார்க்கமே போவதோ விடு

அஞ்சிடாதெனை வந்துகாக்கவோர் அன்னைபாதமே பற்றினேனடா என்னவாகுது பார்

தஞ்சமேயென வந்தபேர்களைத் தாங்குவாளவள் தன்மைகேளடா

புஞ்சையாமெனை நஞ்சையாக்கினள் போதஞானமே தந்துகாத்தனள்

விஞ்சைஞாலமும் அன்னைபார்வையில் கொஞ்சமேனுந்தன் சுற்றுமீறுமோ, நெஞ்சமேநினை நீ!

ilanthai

--

Siva Siva

unread,
May 29, 2017, 8:01:45 PM5/29/17
to santhavasantham
/இயைபு இல்லாமலும் எழுதலாம்/
ஆம். 

/அஞ்சிடாதெனை வந்துகாக்கவோர் அன்னைபாதமே பற்றினேனடா என்னவாகுது பார்/
இப்பாடலின் 3, 6-ஆம் அடிகளின் அளவு (மற்ற அடிகளின் அளவோடு ஒப்பிட்டு நோக்குங்கால்) சற்றுக் குறைந்துவந்துள்ளதோ?

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

Subbaiyar Ramasami

unread,
May 29, 2017, 10:02:02 PM5/29/17
to santhav...@googlegroups.com
சற்றல்ல. நிறையவே குறைந்துள்ளது.
3 வது அடி

அஞ்சிடாதெனை வந்து காக்கவோர் அன்னைபாதமே பற்றினேனடா என்னாவாகுது நின்றுபாரடா நீ
6 லைன்
விஞ்சைஞாலமும் அன்னைபார்வையில் கொஞ்சமேனுந்தன் சுற்றுபாதையை மீறிப்போகுமோ, நெஞ்சமேநினை நீ!

--

ramaNi

unread,
May 29, 2017, 11:52:33 PM5/29/17
to சந்தவசந்தம்
என் முயற்சி. சரியாக வந்துள்ளதா என்று சொல்லுங்கள் சிவசிவா!

பனவன் பொற்பதம்
(கன்னடமொழி ஷட்பதி யாப்பமைப்பு)

அமைப்பு
புளிமா கூவிளம்
புளிமா கூவிளம்
புளிமா கூவிளம் மா விளம் நெடில்

நனவு லாவிடும்
தினவு வாழ்விதே
கனவு லாவிடும் கண்ணில் சுமையென வே.
மனமு லாவிடும்
வனவி லங்குகள்
பனவன் பொற்பதம் காணும் நிலைவரு மோ?

[பனவன் = அந்தணனாம் சிவன்; திருப்பெருந்துறை யுறையும் பனவன்--திருவாசகம், 34.3]

--ரமணி, 30/05/2017

*****
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
May 30, 2017, 12:13:47 AM5/30/17
to santhav...@googlegroups.com
மூன்றாவது ஆறாவது அடிகளில் கடைசி நெடிலுக்கு முன்னால் உள்ள சீர் முதலடியின் முதல் சீரை அளவொத்திருக்கவேண்டும் 
மூன்றாவது அடி புளிமா கூவிளம் புளிமா கூவிளம் புளிமா  நெடில் என அமைய வேண்டும்

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Siva Siva

unread,
May 30, 2017, 8:02:26 AM5/30/17
to santhavasantham
If the base unit is "புளிமா கூவிளம்", (let us call it x) 
then the lines should be
2x
2x
3x+long syllable
2x
2x
3x+long syllable

By the way, you could have chosen to define your base unit as  "மா விளம்" - in which case the meter conformance will be OK.

By the way,  I did not get the meaning of this phrase - "மனமு லாவிடும் வனவி லங்குகள் பனவன் பொற்பதம் காணும் நிலைவரு மோ"
What are the wild animals roaming in the mind - and why do they need dharsanam of His holy feet?

2017-05-29 23:52 GMT-04:00 ramaNi <sai...@gmail.com>:
என் முயற்சி. சரியாக வந்துள்ளதா என்று சொல்லுங்கள் சிவசிவா!

பனவன் பொற்பதம்
(கன்னடமொழி ஷட்பதி யாப்பமைப்பு)

அமைப்பு
புளிமா கூவிளம்
புளிமா கூவிளம்
புளிமா கூவிளம் மா விளம் நெடில்

நனவு லாவிடும்
தினவு வாழ்விதே
கனவு லாவிடும் கண்ணில் சுமையென வே.
மனமு லாவிடும்
வனவி லங்குகள்
பனவன் பொற்பதம் காணும் நிலைவரு மோ?

[பனவன் = அந்தணனாம் சிவன்; திருப்பெருந்துறை யுறையும் பனவன்--திருவாசகம், 34.3]

--ரமணி, 30/05/2017

*****
2017-05-28 8:37 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

கன்னடத்தில் "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பு - இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளனவாம். (இக்காலத்திலும் எழுதுகின்றனரா என்று அறியேன்).

இந்த "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பின் யாப்புக் குறிப்புச் சுருக்கம் - (நான் அறிந்த அளவில்):

X X

X X

X X X +1

X X

X X

X X X +1

X = எவ்வகைச் சீர்/சீர்கள் அமைப்பும் இருக்கலாம். அதே அமைப்பு "X" குறியீடு காட்டும் எல்லா இடங்களிலும் வரும்.

  • ஆறு அடிகள்

  • எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.

  • 1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிக்கு 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முதற்பாதியில் உள்ள சீர் அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.

  • 3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. (இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முதற்பாதி சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் நெடில் எழுத்து).

  • கன்னட யாப்பில் சீர்களைக் கணக்கிடுவதில் அம்ச கணம் (தேசி சந்தஸ் - தென்னிந்திய யாப்பு முறை) என்றும், மாத்திரைக் கணம் (வடமொழி யாப்பு முறை) என்றும், அக்ஷர கணம் (வடமொழி யாப்பு முறை) என்றும் மூன்று வகைகள் உள்ளன.

  • ஆரம்பகாலத்தில் அம்ச கணங்கள் முறையில் கணக்கிட்டு ஷட்பதிகள் எழுதப்பெற்றன. காலப்போக்கில் இது மாறி, நெடுங்காலமாக மாத்திரைக் கணங்கள் முறையில் கணக்கிட்டு ஷட்பதி எழுதுகின்றனர். ஆனால் இருவகைகளுமே கன்னட இலக்கியத்தில் ஏற்புடைத்தே.

Subbaiyar Ramasami

unread,
May 30, 2017, 8:03:08 AM5/30/17
to santhav...@googlegroups.com
 வந்த இறைவன்

தந்த தனைத்தும்

சொந்தம் எனவே எண்ணப் பெரிய பந்தமே

முந்து கவியில்

அந்த இறையை
எந்தக் கவிதை எண்ணும் அதுவுன் சொந்தமே!

 ilanthai

Siva Siva

unread,
May 30, 2017, 8:06:20 AM5/30/17
to santhavasantham
In this song, Lines 3 and 6 are longer than expected.

2017-05-30 8:03 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
 வந்த இறைவன்

தந்த தனைத்தும்

சொந்தம் எனவே எண்ணப் பெரிய பந்தமே

முந்து கவியில்

அந்த இறையை
எந்தக் கவிதை எண்ணும் அதுவுன் சொந்தமே!

 ilanthai

Subbaiyar Ramasami

unread,
May 30, 2017, 9:06:41 AM5/30/17
to santhav...@googlegroups.com

வந்த இறைவன்

தந்த தனைத்தும்

சொந்தம் எனவே எண்ணப் படுபவோ?

முந்து கவியில்

அந்த இறையை
எந்தக் கவிதை எண்ணித் தொடுவதோ

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.

Subbaiyar Ramasami

unread,
May 30, 2017, 9:15:03 AM5/30/17
to santhav...@googlegroups.com
இதையும் ஒரு வகை இலக்கணத்தில்  நாம் புகுத்திவிடலாம்.

xy
xy
xyxyx+1
Message has been deleted
Message has been deleted

Siva Siva

unread,
May 30, 2017, 9:42:49 AM5/30/17
to santhav...@googlegroups.com
Please review my initial post on the rules for this form. 

On Tue, May 30, 2017 at 9:37 AM ramaNi <sai...@gmail.com> wrote:
திருத்திய வடிவம்:

பனவன் பொற்பதம்
(கன்னடமொழி ஷட்பதி யாப்பமைப்பு)

அமைப்பு
புளிமா கூவிளம்
புளிமா கூவிளம்
புளிமா கூவிளம் புளிமா கூவிளம் புளிமா நெடில்

நனவு லாவிடும்
தினவு வாழ்விதே
கனவு லாவியே கனலாய்க் காய்வது வருத்த மே.
வனவி லங்குகள்
மனமு லாவுமே
பனவன் பொற்பதம் பனியாய் வீழ்ந்தருள் மனமென் றோ?

[பனவன் = அந்தணனாம் சிவன்; திருப்பெருந்துறை யுறையும் பனவன்--திருவாசகம், 34.3]

--ரமணி, 30/05/2017

*****

On Tuesday, May 30, 2017 at 9:43:47 AM UTC+5:30, கவிமாமணி wrote:
மூன்றாவது ஆறாவது அடிகளில் கடைசி நெடிலுக்கு முன்னால் உள்ள சீர் முதலடியின் முதல் சீரை அளவொத்திருக்கவேண்டும் 
மூன்றாவது அடி புளிமா கூவிளம் புளிமா கூவிளம் புளிமா  நெடில் என அமைய வேண்டும்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Saranya Gurumurthy

unread,
May 30, 2017, 9:45:15 AM5/30/17
to santhav...@googlegroups.com
வணக்கம். 

அடியேனின் ஷட்பதி முயற்சி. 

மா விளம் மா விளம் 
மா விளம் மா விளம் 
மா விளம் மா விளம் மா விளம் நேர்(நெடில்)

நீல கண்டனை நெஞ்சில் வைத்திட
கால பயமது காய்ந்து போகுமே;
மால யன்முத லான வர்தொழும் வாம தேவனை யே
சீல மாய்க்கவித் தேம லர்களை
கோல இசையுடன் கூட்டிப் பாடுவோம்;
ஆல மூர்த்தியின் அங்க ழல்தனை அடைந்து மகிழ்வுறு வோம். 

பணிவுடன், 
சரண்யா. 
30.05.2017

ramaNi

unread,
May 30, 2017, 9:52:06 AM5/30/17
to சந்தவசந்தம்
திருத்திய வடிவம்: இப்போது சரியா?

பனவன் பொற்பதம்
(கன்னடமொழி ஷட்பதி யாப்பமைப்பு)

அமைப்பு
புளிமா கூவிளம்
புளிமா கூவிளம்
புளிமா கூவிளம் புளிமா கூவிளம் புளிமா கூவிளம் நெடில்

நனவு லாவிடும்
தினவு வாழ்விதே
கனவு லாவியே கனலாய்க் காய்வது சினமாய் மேலுறு மே!
வனவி லங்குகள்
மனமு லாவுமே
பனவன் பொற்பதம் பனியாய் வீழ்ந்தருள் மனமாய் ஆவதென் றோ?

Siva Siva

unread,
May 30, 2017, 9:55:55 AM5/30/17
to santhav...@googlegroups.com
What is the seer pattern that repeats twice in the first line?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ramaNi

unread,
May 30, 2017, 10:04:07 AM5/30/17
to சந்தவசந்தம்
I follow now. The first line should be 2x that is of 4 seers, right? The second is like the first, the third is 3x (six seers). I shall try again.
ramaNi

ramaNi

unread,
May 30, 2017, 10:18:16 AM5/30/17
to சந்தவசந்தம்
மீண்டும் திருத்திய வடிவம்: இப்போது சரியா?

பனவன் பொற்பதம்
(கன்னடமொழி ஷட்பதி யாப்பமைப்பு)

அமைப்பு
புளிமா கூவிளம் புளிமா கூவிளம்
புளிமா கூவிளம் புளிமா கூவிளம்
புளிமா கூவிளம் புளிமா கூவிளம் புளிமா கூவிளம் நெடில்

நனவு லாவிடும் அனத்தம் வாழ்வெனத்
தினவு கொள்ளுமே தனதெ னும்குணம்
கனவு லாவியே கனலாய்க் காய்வது சினமாய் மேலுறு மே!
வனவி லங்குகள் இனமாய்ப் பற்பல
மனமு லாவிட வினைக ளேறுமே
பனவன் பொற்பதம் பனியாய் வீழ்ந்தருள் மனமாய் ஆவதென் றோ?

[பனவன் = அந்தணனாம் சிவன்; திருப்பெருந்துறை யுறையும் பனவன்--திருவாசகம், 34.3]

--ரமணி, 30/05/2017

*****

Siva Siva

unread,
May 30, 2017, 11:15:16 AM5/30/17
to santhavasantham
அடிக்கு 4 சீர்களேனும் இருக்கும்போது , மோனை இருந்தால் ஒலி சிறக்கும்.
உங்கள் பாட்டில் மோனை வரும் இடத்தில் எதுகை வந்து ஒலியைச் சிறக்கசெய்கின்றது.

பாட்டின் கருத்து எனக்குப் புரியவில்லை.

ramaNi

unread,
May 30, 2017, 11:48:44 AM5/30/17
to சந்தவசந்தம்
நான் எண்ணிய பொருள் கீழே, சிவசிவா.

நனவு லாவிடும் அனத்தம் வாழ்வெனத்
தினவு கொள்ளுமே தனதெ னும்குணம்
கனவு லாவியே கனலாய்க் காய்வது சினமாய் மேலுறு மே!
வனவி லங்குகள் இனமாய்ப் பற்பல
மனமு லாவிட வினைக ளேறுமே
பனவன் பொற்பதம் பனியாய் வீழ்ந்தருள் மனமாய் ஆவதென் றோ?

பொருள்:
நனவில் உலாவும் அனர்த்தமே வாழ்வாக,
தினவு கொள்ளுமே என்னுள் தனதெனும் குணம்;
இந்நிலை கனவிலும் உலாவிக் ஆசைகள் கனலாய்க் காய்வது என்மேல் எனக்கே சினமாக மேல்வருமே.
வனவிலங்குகள் ஆகும்வண்ணம் கொடூரம் பலவினமாயென்
மனத்தில் உலாவிட வாழ்வில் வினைகள் ஏறுமே.
இந்நிலை மாறி, பனவன் பொற்பதம் அவன் கைலாயப் பனியாய் என்னுள் வீழ்ந்தே அருள் வரும் மனமாய் என்மனம் என்றாகுமோ?

இந்த அமைப்பில், இலந்தையார் பாக்களில் உள்ளதுபோல் மோனையிடத்தில் வரும் எதுகையே ஒலிநயம் தருவதாகத் தோன்றுகிறது.

அன்புடன்,
ரமணி

Siva Siva

unread,
May 30, 2017, 8:41:38 PM5/30/17
to santhavasantham
நானும் சில பாடல்கள் எழுதினேன்.

அவற்றுள் ஒன்று:

("மா மா / மா மா / மா மா மாங்காய்" என்ற அடி அமைப்பு;
கன்னடத்தில் "ஷட்பதி' என்று சொல்லப்பெறும் பாடல் அமைப்பில் அமைந்தது);

1)

பூவால் போற்றிக்

காவாய் என்றார்

சாவா திருக்க அருள்செய்தான்

மூவூர் சுட்டான்

ஆவூர் பெருமான்

தேவூர்ச் சிவனை நினைநெஞ்சே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

Saranya Gurumurthy

unread,
May 30, 2017, 8:59:45 PM5/30/17
to santhav...@googlegroups.com
அழகு!

சரண்யா. 

Lalitha & Suryanarayanan

unread,
May 30, 2017, 10:26:58 PM5/30/17
to santhav...@googlegroups.com
​கன்னடத்துக் காரிகையாள்​
முன்னடக்க முத்தமிழாள்
பின்னடந்து பாடிவர பின்னிவைத்த ஆறடிகள் பார்!
சின்னமகள் நடைபயில
அன்னையவள் தனைமறந்து
பொன்னடிகள் வைத்தபடி புன்னகைக்கும் காட்சியினைப் பார்!

பஞ்சரத்துப் பைங்கிளியாள்
கொஞ்சிவரும் வழிசென்று
செஞ்சொல்மொழிச் சீரிழையார் செப்புமொழி கேட்கையிலே தான்
கெஞ்சிவரும் தாயடியும்
மிஞ்சிவரும் சேயடியும்
நெஞ்சமெலாம் இன்பமது தஞ்சமெனப் போந்ததுவும் ஏன்!

கன்னலுடன் கனிச்சாறு
இன்பளிக்கச் சேர்ந்ததுபோல்
மன்னுபுகழ் மங்கையர்கள் முன்னம்வந்த காட்சியிலே தான்
துன்பமதை மறந்திடவே
அன்புநதி பிறந்ததென
என்புருக ஊனுருக இன்றுகவி செய்யவந்தேன் நான்!

சிவசூரி.

Siva Siva

unread,
May 30, 2017, 10:51:48 PM5/30/17
to santhav...@googlegroups.com
Very nice.  
But the meter seems to vary slightly  in line 3 & 6 compared to Kannada shatpadi form. 

Lalitha & Suryanarayanan

unread,
May 31, 2017, 12:38:59 AM5/31/17
to santhav...@googlegroups.com
​மாற்றப்பட்டது:

கன்னடத்துக் காரிகையாள்​
முன்னடக்க முத்தமிழாள்
பின்னடந்து பின்னிவைத்த ஆறடிகள் பார்!
சின்னமகள் நடைபயில
அன்னையவள் தனைமறந்து
பொன்னடிகள் வைத்துசெயும் புன்னகையைப் பார்!

பஞ்சரத்துப் பைங்கிளியாள்
கொஞ்சிவரும் வழிநின்று
செஞ்சொல்மொழிச் செப்புவது கேட்கையிலே தான்
கெஞ்சிவரும் தாயடியும்
மிஞ்சிவரும் சேயடியும்
நெஞ்சமதில் தஞ்சமெனப் போந்ததுவும் ஏன்!

கன்னலுடன் கனிச்சாறு
இன்பளிக்கச் சேர்ந்ததுபோல்
மன்னுபுகழ் மங்கையர்கள் முன்னம்வந்த தால்
துன்பமதை மறந்திடவே
அன்புநதி பிறந்ததென
என்புருக இன்றுகவி செய்யவந்தேன் நான்!

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
May 31, 2017, 3:26:34 AM5/31/17
to santhav...@googlegroups.com
வேறு வகை யாப்பில்:

ஏலமும் பாக்கும் எழிலுடன் நோக்கும்
கோலமும் கூடும் கொங்கண நாடும்
வாலையர் விழியும் வனிதையர் மொழியும் மஞ்சமர் மலையும் பார்
சாலையின் மருங்கில் காலமும் தருக்கள்
சோலையின் நிகராய்த் தோன்றிடும் காட்சி
மாலையின் எழிலைக் காலையில் காட்டும் கன்னட நாட்டைக் காண்!

இன்னிசை பாட எழுசுரப் பாடம்
தன்னிகர் இன்றித் தந்ததிந் நாடே!
பொன்னுடன் இரும்பும் மின்னிடும் தேசம் பொன்னியும் பாய்வா ளே!
கன்னடம் துளுவும் கொங்கண மொழியும்
ஒன்றுடன் ஒலிக்கும் ஒப்பிலி நாட்டில்
அன்புடன் வழங்கும் ஆறடி யாப்பில் அமைத்திதை மகிழ்ந்தே னே!

சிவசூரி.

Siva Siva

unread,
May 31, 2017, 8:13:45 AM5/31/17
to santhavasantham
2017-05-31 3:26 GMT-04:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
வேறு வகை யாப்பில்:

ஏலமும் பாக்கும் எழிலுடன் நோக்கும்
கோலமும் கூடும் கொங்கண நாடும்
வாலையர் விழியும் வனிதையர் மொழியும் மஞ்சமர் மலையும் பார்
சாலையின் மருங்கில் காலமும் தருக்கள்
சோலையின் நிகராய்த் தோன்றிடும் காட்சி
மாலையின் எழிலைக் காலையில் காட்டும் கன்னட நாட்டைக் காண்!

--> 
பல அடிகளில் 2,4-ஆம் சீர்களில் இயைபு / எதுகை அமைத்ததும் அழகு.

/மாலையின் எழிலைக் காலையில் காட்டும் கன்னட நாட்டைக் காண்/

புதுமை! 

இன்னிசை பாட எழுசுரப் பாடம்
தன்னிகர் இன்றித் தந்ததிந் நாடே!
பொன்னுடன் இரும்பும் மின்னிடும் தேசம் பொன்னியும் பாய்வா ளே!
கன்னடம் துளுவும் கொங்கண மொழியும்
ஒன்றுடன் ஒலிக்கும் ஒப்பிலி நாட்டில்
அன்புடன் வழங்கும் ஆறடி யாப்பில் அமைத்திதை மகிழ்ந்தே னே!

--> /அமைத்திதை மகிழ்ந்தே னே!/ 

"அமைத்தகம் மகிழ்ந்தே னே" என்றிருக்கலாமோ?

சிவசூரி.

Lalitha & Suryanarayanan

unread,
May 31, 2017, 8:18:48 AM5/31/17
to santhav...@googlegroups.com
​நன்றி சிவசிவா.​

"அமைத்தகம் மகிழ்ந்தே னே" என்றிருக்கலாமோ?

அப்படியே மாற்றிக் கொள்கிறேன். நன்றி.

சிவசூரி.

Vis Gop

unread,
Jun 1, 2017, 8:19:02 AM6/1/17
to santhav...@googlegroups.com
அன்பு
தேமா கூவிளம் தேமா கூவிளம்
தேமா கூவிளம் தேமா கூவிளம்
தேமா கூவிளம் தேமா கூவிளம் தேமா கூவிளம் தேமா நேர்

அன்பு மிக்கவர் துன்பு நேரினும்
என்பு தேயினும் தென்பி ழப்பரோ?
வன்பு யல்சிறு மென்பு லின்முனர் தன்ப லத்தினைக் காட்டு மோ?
முன்பு தீயதில் இன்பு கண்டவர்
பின்பு வாடுவர் என்ப ரான்றவர்
மன்ப தைநலம் அன்பு தான்தரும் என்ப தோர்ந்திட வேண்டு மே!

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 1, 2017, 8:29:53 AM6/1/17
to santhavasantham
Nice song with in line edhugai too.

/தேமா கூவிளம் தேமா கூவிளம் 
தேமா கூவிளம் தேமா கூவிளம்
தேமா கூவிளம் தேமா கூவிளம் தேமா கூவிளம் தேமா நேர் /

In shatpadi form, in the above pattern, you have an extra seer in the later part of the third line.

it should be of the pattern
x x
x x
x x x நேர்

2017-06-01 8:19 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:
அன்பு
தேமா கூவிளம் தேமா கூவிளம்
தேமா கூவிளம் தேமா கூவிளம்
தேமா கூவிளம் தேமா கூவிளம் தேமா கூவிளம் தேமா நேர்

அன்பு மிக்கவர் துன்பு நேரினும்
என்பு தேயினும் தென்பி ழப்பரோ?
வன்பு யல்சிறு மென்பு லின்முனர் தன்ப லத்தினைக் காட்டு மோ?
முன்பு தீயதில் இன்பு கண்டவர்
பின்பு வாடுவர் என்ப ரான்றவர்
மன்ப தைநலம் அன்பு தான்தரும் என்ப தோர்ந்திட வேண்டு மே!

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

Vis Gop

unread,
Jun 1, 2017, 9:36:59 AM6/1/17
to santhav...@googlegroups.com

On Jun 1, 2017 5:59 PM, "Siva Siva" <naya...@gmail.com> wrote:
>
> Nice song with in line edhugai too.

நன்றி. மாற்றி முயன்றிருக்கிறேன்.

> it should be of the pattern
> x x
> x x
> x x x நேர்

அன்பு

தேமா கூவிளம் தேமா கூவிளம்
தேமா கூவிளம் தேமா கூவிளம்

தேமா கூவிளம் தேமா கூவிளம் தேமா கூவிளம்  நேர்

அன்பு மிக்கவர் துன்பு நேரினும்
என்பு தேயினும் தென்பி ழப்பரோ?

வன்பு யல்வர மென்பு லின்முன தன்ப லஞ்செலு மோ?

முன்பு தீயதில் இன்பு கண்டவர்
பின்பு வாடுவர் என்ப ரான்றவர்

மன்ப தைநலம் அன்பு தான்தரும் என்ப தோர்குவ மே!

Siva Siva

unread,
Jun 1, 2017, 5:24:15 PM6/1/17
to santhavasantham
Nice.
அடிக்குள் எதுகையன்றி மோனை அமையுமாறு எழுதலாம். அது இவ்வகைப் பாட்டு இயற்றலைச் சற்று எளிதாக்கக்கூடும்.

Siva Siva

unread,
Jun 1, 2017, 6:08:42 PM6/1/17
to santhavasantham
இன்னொன்று:

2)

பிறவான் என்றும்
இறவான் அமுதம்
பெறவான் போற்ற அருள்செய்தான்
மறையார் நாவன்
பிறையான் தேவூர்
உறைவான் கழலை நினைநெஞ்சே.

2017-05-30 20:41 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:
நானும் சில பாடல்கள் எழுதினேன்.

அவற்றுள் ஒன்று:

("மா மா / மா மா / மா மா மாங்காய்" என்ற அடி அமைப்பு;
கன்னடத்தில் "ஷட்பதி' என்று சொல்லப்பெறும் பாடல் அமைப்பில் அமைந்தது);

1)

பூவால் போற்றிக்

காவாய் என்றார்

சாவா திருக்க அருள்செய்தான்

மூவூர் சுட்டான்

ஆவூர் பெருமான்

தேவூர்ச் சிவனை நினைநெஞ்சே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

Dr Subramanian

unread,
Jun 1, 2017, 8:01:05 PM6/1/17
to santhav...@googlegroups.com
அருமை. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Dr.V.V.Subramanian -Prof Va.Ve.Su.
Educationist.

41/1, Ashok Balaji Apartments, 48th Street
9th Avenue, Ashok Nagar, Chennai, 600083
Land: 044-24748674
Mobile: 9381044470

Skype ID vavesu1

Siva Siva

unread,
Jun 2, 2017, 8:57:05 AM6/2/17
to santhavasantham

ஆறு அடிகளிலும் ஒரே எதுகை அமையப் பாடுவது, நாலடிப் பாடல்களில் எதுகை அமைப்பதைவிடக் கடினம் என்று தோன்றுகின்றது.

கன்னட இலக்கியங்களில் வகையுளி மூலம் எதுகை அமையுமாறு பாடல் இயற்றுவது பரவலாகக் கையாளப்படுகின்றது. (தெலுங்கிலும் அவ்வாறே என்று அறிகின்றேன்).

தமிழிலும் அப்படி வகையுளி மூலம் எதுகை அமையலாம் எனினும் ஆயிரக்கணக்கான தேவாரப் பாடல்களில் வகையுளி மூலம் எதுகை அமைந்த அடிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று எண்ணுகின்றேன். ஆகவே, தமிழில் இப்படி ஷட்பதியில் ஒரு நூல் எழுதவேண்டுமெனில், (உதாரணமாக, 100 பாடல்கள் அமையும் ஒரு சிற்றிலக்கிய நூல் - ஒரு நாயன்மார் வரலாற்றைச் சொல்வது), அப்படி வகையுளியால் எதுகை அமைவது பரவலாகக் கையாளப்படவேண்டி வருமோ?

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

2017-05-28 8:37 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

கன்னடத்தில் "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பு - இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளனவாம். (இக்காலத்திலும் எழுதுகின்றனரா என்று அறியேன்).

இந்த "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பின் யாப்புக் குறிப்புச் சுருக்கம் - (நான் அறிந்த அளவில்):

X X

X X

X X X +1

X X

X X

X X X +1

X = எவ்வகைச் சீர்/சீர்கள் அமைப்பும் இருக்கலாம். அதே அமைப்பு "X" குறியீடு காட்டும் எல்லா இடங்களிலும் வரும்.

  • ஆறு அடிகள்

  • எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.

  • 1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிக்கு 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முதற்பாதியில் உள்ள சீர் அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.

  • 3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. (இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முதற்பாதி சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் நெடில் எழுத்து).

  • கன்னட யாப்பில் சீர்களைக் கணக்கிடுவதில் அம்ச கணம் (தேசி சந்தஸ் - தென்னிந்திய யாப்பு முறை) என்றும், மாத்திரைக் கணம் (வடமொழி யாப்பு முறை) என்றும், அக்ஷர கணம் (வடமொழி யாப்பு முறை) என்றும் மூன்று வகைகள் உள்ளன.

  • ஆரம்பகாலத்தில் அம்ச கணங்கள் முறையில் கணக்கிட்டு ஷட்பதிகள் எழுதப்பெற்றன. காலப்போக்கில் இது மாறி, நெடுங்காலமாக மாத்திரைக் கணங்கள் முறையில் கணக்கிட்டு ஷட்பதி எழுதுகின்றனர். ஆனால் இருவகைகளுமே கன்னட இலக்கியத்தில் ஏற்புடைத்தே.

ஷட்பதி வகைகளுள் ஒன்று "சர ஷட்பதி".

உதாரணமாக - "சர ஷட்பதி" என்ற வகையின் அமைப்பு - மாத்திரைக் கணக்கில் சீர்களைக் கணக்கிட்டால்:

4-4

4-4

4-4-4-2

4-4

4-4

4-4-4-2

This meter is somewhat in a similar class akin to some thevaram songs which have unequal lines. However, those thevaram songs are usually 4 lines with lines 1&3 as longer lines and lines 2&4 as shorter lines. Further, many of those thevaram songs do not have an edhugai pattern inside a single line.

Thus, I do not think there is any exact match between any thevaram song and kannada shatpadi meter.

("thiru-mukkAl style" songs of thevaram - sambandar thevaram 3.97 -

"திடமலி மதிளணி சிறுகுடி மேவிய

படமலி யரவுடை யீரே

படமலி யரவுடை யீருமைப் பணிபவர்

அடைவது மமருல கதுவே."),

(sambandar thevaram 3.110 -

"வரமதேகொளா வுரமதேசெயும் புரமெரித்தவன் பிரமநற்புரத்

தரனனாமமே பரவுவார்கள்சீர் விரவுநீள் புவியே."),

அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Subbaiyar Ramasami

unread,
Jun 2, 2017, 9:03:46 AM6/2/17
to santhav...@googlegroups.com
வராது. ஆனால் சில எதுகைகள் வேறுபொருளில் மீண்டும்   வர நேரலாம். 

முயன்று பார்த்துவிடலாமே!

இலந்தை

--

Siva Siva

unread,
Jun 2, 2017, 11:34:14 AM6/2/17
to santhavasantham
தேவூர் - இத்தலத்தைத் தரிசித்திராதவர்கள் Google map-இல் காணலாம்https://www.google.com/maps/place/Thevur,+Tamil+Nadu,+India/@10.724385,79.731447,2106m/data=!3m2!1e3!4b1!4m2!3m1!1s0x3a5541f96cefb6d9:0xb2fd54fac29acbcf!6m1!1e1

2017-06-01 18:08 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:
இன்னொன்று:

2)

பிறவான் என்றும்
இறவான் அமுதம்
பெறவான் போற்ற அருள்செய்தான்
மறையார் நாவன்
பிறையான் தேவூர்
உறைவான் கழலை நினைநெஞ்சே.

Siva Siva

unread,
Jun 2, 2017, 11:45:26 AM6/2/17
to santhavasantham

7)

ஒருமான் ஏந்தி

இருமா துடையான்

அருமா மறைசொல் திருநாவன்

கருமா மிடறன்

தருவார் தேவூர்ப்

பெருமான் கழலை நினைநெஞ்சே.

Lalitha & Suryanarayanan

unread,
Jun 2, 2017, 12:52:37 PM6/2/17
to santhav...@googlegroups.com
ஆகவேதமிழில் இப்படி ஷட்பதியில் ஒரு நூல் எழுதவேண்டுமெனில், (உதாரணமாக, 100 பாடல்கள் அமையும் ஒரு சிற்றிலக்கிய நூல் ஒரு நாயன்மார் வரலாற்றைச் சொல்வது),அப்படி வகையுளியால் எதுகை அமைவது பரவலாகக் கையாளப்படவேண்டி வருமோ?

சிவசிவா,

நானும் முயன்று பார்த்தேன் :​

1)

குருநாதர் சீரடியைக் கொண்டுள்ள சிந்தையிலே
உருவாகும் கவிதையென உறுதியுடன் நம்புவதால்
கருவாகக் கண்ணுதலான் அடியாரின் காதையினைக் கருத்துடனே
எடுத்துரைக்க வே
அருளீயும் அவரடியை அன்புடனே துதித்தபடி
பொருளார்ந்த சொல்லருளிப் புலமைதந்து எனைக்காக்கும்
கருணைசெய வேண்டுகின்றேன் கன்னடத்து யாப்பினிலே
கனித்தமிழில் காதைசெய்ய வே.

2)

அங்கையிலே அழலேந்தி அப்பூதி நாமமுடன்
திங்களூரில் நாவரசர் திருநாமம்​ தினந்தோறும்
மங்கலிலாக் காதலுடன் வாயார ஓதிவந்த மாண்பதனை 
வடித்துரைக்க வே
பொங்கிவரும் பெருநிலவால் பூரிக்கும் கடலென்ன
இங்கிருக்கும் மன்றிலுள்ள இணையில்லாப் புலவோரைச்
செங்கைதனைச் சிரந்தாங்க வணங்கிநின்று ஆறடியாம்
யாப்பிலிதைச் செப்புகின்றே னே!

3)

பொன்னிநதி பாய்ந்துவளம் பொங்கிநிற்கும் சோணாட்டில்
மின்னுகின்ற கலசத்தை மேகங்கள் தழுவுவணம்
அன்பொழுக ஆலயங்கள் வானுயரப் பண்ணிவைத்த அரசர்கள் முயற்சியினா லே
மன்னுபுகழ் தேவாரத் திருமுறைகள் நிதமோதி
என்புருகும் அடியார்கள் எங்கெங்கும் நிறைந்தபடி
இன்புடனே துதிசெய்யும் எழிலார்ந்த தஞ்சையிலே நன்றினிநாம்
நுழைந்திடுவோ மே.

சிவசூரி.

Siva Siva

unread,
Jun 2, 2017, 2:47:51 PM6/2/17
to santhavasantham
நல்ல தொடக்கம்.
வாழ்க!

"காய் காய்" என்ற அடிப்படை அமைப்பில் அமைக்கும் பாடல்களில் அடிதோறும் மோனை அமையப் பாடியுள்ளது நன்று.

/அங்கையிலே அழலேந்தி அப்பூதி நாமமுடன்/
அப்பூதி அழலோம்பினார். ஆனால் "அங்கையிலே அழலேந்தி"?

/செங்கைதனைச் சிரந்தாங்க வணங்கிநின்று ஆறடியாம் யாப்பிலிதைச் செப்புகின்றே னே!/
சிரந்தாங்க?  சிரமேற்றி?

"யாப்பிலிதைச் செப்புகின்றே னே" -- செய்யுளினால்  செப்புகின்றே னே?

Subbaiyar Ramasami

unread,
Jun 2, 2017, 6:29:48 PM6/2/17
to santhav...@googlegroups.com
திருநாவன்    வன் என முடிதிருக்கிறீர்களே! நெடில் வரவில்லையே
சிவசிவாவுக்கு இந்தக் கேள்வி

அளவொத்து வந்தால் போதுமா. அல்லது முதலடியில் எந்த மாதிரிச் சீர்கள்  பயன்படுத்தியிருக்கிறோமோ அதே மாதிரித்தான் பயன்படுத்த வேண்டுமா? உங்கள் பாடல்களில் அதேமாதிர்த்தான் பயன்படுத்தியிருக்கிறீர்கள்..

சிவசூரி பாடலில் அங்கையிலே அழலேந்தி அப்பூதி நாமமுடன்
திங்களூரில் நாவரசர் திருநாமம்​ தினந்தோறும்
மங்கலிலாக் காதலுடன் வாயார ஓதிவந்த மாண்பதனை 
வடித்துரைக்க வே  என்பதில் வடித்துரைக்கவே என்பது கருவிளங்காயாகி விடுகிறது. இது ஏற்புடைத்தா?

திங்களூரில் என விளாங்காய்ச் சீர் வருகிறதே! இது ஏற்புடைத்தா?

இலந்தை ,

--

Siva Siva

unread,
Jun 2, 2017, 7:10:57 PM6/2/17
to santhavasantham
/திருநாவன்/
கூர்ந்து நோக்கியுள்ளீர்! 
கன்னடத்தில் சீர் அமைப்பு: (நண்பர் முன்பு எழுதிய விளக்கம்):

In Kannada, the basic unit is a two-mAtra structure. Two mAtrAs can be obtained in only two ways: U, II. To these, if we add a guru and a laghu, we get UI, UU, III and IIU. These are the Brahma gaNas.
To the Brahma gaNas, if we add a guru and a laghu we get the following Vishnu gaNas: UII, UIU, UUI, UUU, IIII, IIIU, IIUI, IIUU.
To each of the Brahma gaNas, if we add a guru and a laghu, we get the sixteen rudra gaNas- UIII, UIIU, UIUI, UIUU, UUII, UUIU, UUUI, UUUU, IIIII, IIIIU, IIIUI, IIIUU, IIUII, IIUIU, IIUUI, IIUUU. 

தேசி சந்தஸில் (அதாவது, தென்னிந்திய யாப்பு முறையில்):
அம்ச கணங்களின் அடிப்படையில் சீர்கள் அமைவதால், எவ்வகை அம்ச கணம் வருமோ அதே வகைதான் வரும் ஆனால் அக்கணம் வரும் இடங்களிலெல்லாம் ஒரே எழுத்தமைப்பு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, தமிழிலும் மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் என்ற அளவில் சீர்கள் அளவொத்து வந்தால் போதும். ஒரே மாதிரியே அமையவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்றே கருதுகின்றேன்.

3, 6-ஆம் அடிகளின் ஈற்றில் நெடில் ஓசை எழுத்தே வரவேண்டும் என்று எண்ணுகின்றேன். விதிவிலக்காகக் குறில் வரலாமா என்று கேட்டுத் தெளிவுபடுத்துவேன். ஆகவே அவ்விடத்தை  மாற்றவேண்டி வந்தாலும் வரும்.

மாத்திரைச் சந்தஸில், குறில்+ஒற்று = குரு. அது மட்டுமன்றி, அடி ஈற்றுத் தனிக்  குறிலும் 'குரு' என்று கொள்ளப்படும். ;

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

Swaminathan Sankaran

unread,
Jun 2, 2017, 7:21:43 PM6/2/17
to santhav...@googlegroups.com
தேவூர் என்று மஹாராஷ்டிராவில் ஒரு ஊர் இருக்கிறது. இதைப் பற்றி எழுதிய ஒரு மராத்தி ஆராய்ச்சியாளர் இது தமிழ் நாட்டிலிருந்து கிடைத்த பெயர் என்று எழுதி உள்ளார். பூணேயில் 2008இல் ஒருமுறை சந்தித்துப் பேசினேன். விவரங்களைக் குறித்து வைக்கத் தவறி விட்டேன்.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 Swaminathan Sankaran

Siva Siva

unread,
Jun 2, 2017, 9:42:42 PM6/2/17
to santhavasantham
Here is the update:
3, 6-ஆம் அடிகளில் கடைசி எழுத்து - 'குரு' என்ற அமைப்பில் இருந்தால் போதுமாம். அவ்வடியின் ஈற்றில் வரும் தனிக்குறிலும் குரு என்று கருதப்படுமாம்.
அம்ச கணங்கள் அடிப்படையில் எழுதப்பெற்ற ஷட்பதிகள் "மூல ஷட்பதி" என்று அழைக்கப்பெறுவனவாம். அவற்றில் சீர்கள் 'அளவொத்து' இருந்தால் போதுமாம். ஒரே அமைப்புத் தேவையில்லை.

Minor correction in my previous msg - regarding the amsa gaNas of Kannada: 
In Kannada, the basic unit is a two-mAtra structure. Two mAtrAs can be obtained in only two ways: U, II. To these, if we add a guru and a laghu, we get UI, UU, III and IIU. These are the Brahma gaNas. 
To the Brahma gaNas, if we add a guru or a laghu, we get the following Vishnu gaNas: UII, UIU, UUI, UUU, IIII, IIIU, IIUI, IIUU.
To each of the Vishnu gaNas, if we add a guru or a laghu, we get the sixteen rudra gaNas- UIII, UIIU, UIUI, UIUU, UUII, UUIU, UUUI, UUUU, IIIII, IIIIU, IIIUI, IIIUU, IIUII, IIUIU, IIUUI, IIUUU. 

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

Lalitha & Suryanarayanan

unread,
Jun 2, 2017, 10:41:40 PM6/2/17
to santhav...@googlegroups.com
நன்றி சிவா.

அங்கையிலே அழலேந்தி அப்பூதி நாமமுடன்
திங்களூரில் நாவரசர் திருநாமம்​ தினந்தோறும்
மங்கலிலாக் காதலுடன் வாயார ஓதிவந்த மாண்பதனை 
வடித்துரைக்க வே

என்பதை

அங்கையிலே அழலேந்தும் அரனடியார் அப்பூதி 
திங்களூரில் நாவரசர் திருநாமம்​ தினந்தோறும்
மங்கலிலாக் காதலுடன் வாயார ஓதிவந்த மாண்பதனை 
வடித்துரைக்க வே

என்று மாற்றிக் கொள்கிறேன்.

இங்கிருக்கும் மன்றிலுள்ள இணையில்லாப் புலவோரைச்
செங்கைதனைச் சிரந்தாங்க வணங்கிநின்று ஆறடியாம்
யாப்பிலிதைச் செப்புகின்றே னே!

என்பதை

இங்கிருக்கும் மன்றிலுள்ள இணையில்லாப் புலவோரைச்
செங்கைதனைச் சிரமேற்றி வணங்கிநின்று ஆறடியாம்
செய்யுளினால் செப்புகின்றே னே!

நன்றி. இந்த முயற்சியை நான் தொடர விழைவதால் என்னுடைய பாடல்களை இனி வேறோர் தனி இழையில் இடுகின்றேன்.

சிவசூரி

Lalitha & Suryanarayanan

unread,
Jun 3, 2017, 2:56:01 AM6/3/17
to santhav...@googlegroups.com
மங்கலிலாக் காதலுடன் வாயார ஓதிவந்த மாண்பதனை 
வடித்துரைக்க வே  என்பதில் வடித்துரைக்கவே என்பது கருவிளங்காயாகி விடுகிறது. இது ஏற்புடைத்தா?

இலந்தை ,

தலைவருக்கு வணக்கம்.

ஐயா " வடித்துரைக்க" என்னும் காய்ச்சீரை அடுத்துவந்த தனி நெடில் "வே"

சிவசூரி.

Siva Siva

unread,
Jun 3, 2017, 7:50:05 AM6/3/17
to santhavasantham
"திருநாவன்" என்ற இடத்தில் ஈற்றில் "திருவாயான்" என்ற சொல்லும் பொருந்தும்.

சிவசூரியார் பாடலில்:
/திங்களூரில் என விளாங்காய்ச் சீர் வருகிறதே! இது ஏற்புடைத்தா?/

தமிழ்ப்பாடல்களில் எந்தப் பாட்டிலும் விளாங்காய் தவிர்க்கப்படவேண்டுமா? 

Pas Pasupathy

unread,
Jun 4, 2017, 5:37:08 PM6/4/17
to Santhavasantham
>தமிழ்ப்பாடல்களில் எந்தப் பாட்டிலும் விளாங்காய் தவிர்க்கப்படவேண்டுமா?  >

  சந்த, வண்ண விருத்தங்களில் தான் அவற்றைப் பார்த்திருக்கிறேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Subbaiyar Ramasami

unread,
Jun 4, 2017, 8:27:51 PM6/4/17
to santhav...@googlegroups.com
எல்லாச்சீர்களும் அளவொத்து விளாங்காய்ச் சீர்களாய் வருமெனில் தவிர்க்கவேண்டிய அவசியமில்லை. அப்படியின்றி ஒரே சீர் மட்டும் விளாங்காயாக  வருமென்றால் ஓசை உதைக்கும்.  அது இரண்டு மாச்சீர்களாகப் பிரியும். குறில் முடிவு மாச்சீராகவும் நெடில் தொடக்க மாச்சீராக்மவும் பிரியும் போது ஓசை கூடும். காய்ச்சீர் குறில் முடிவு மாச்சீராகவும் குறில் தொடங்கும் மாச்சீராகவும் பிறிந்தால் ஓசை இடராது

எ.க திங்களூரில்--    திங்க ளூரில்
என்றுசொல்ல --- என்று  சொல்ல

இலந்தை

Vis Gop

unread,
Jun 11, 2017, 9:02:23 AM6/11/17
to santhav...@googlegroups.com

இன்னுமொரு முயற்சி:

காய் காய்
காய் காய்
காய் காய் பூ

கண்ணெதற்குக் காதெதற்குப்
பண்ணெதற்குப் பாட்டெதற்கெம்
அண்ணலுக்கென் றர்ப்பணிக்க ஆகாதென்றால்?
விண்ணவர்க்கு வாழ்வளித்துப்
பெண்ணுடற்குப் பங்களித்த
கண்ணுதற்கே யாதுமெனக் காண்பாய் நெஞ்சே!

கோபால்.

Siva Siva

unread,
Jun 11, 2017, 11:18:52 AM6/11/17
to santhavasantham
Nice.

/பெண்ணுடற்குப் பங்களித்த/
May need revision for clarity?

Siva Siva

unread,
Jun 11, 2017, 11:25:33 AM6/11/17
to santhavasantham
சம்பந்தர் தேவாரத்தில் சில பாடல்களில் காணலாம். அவை இசைப்பாடல்கள்.

சம்பந்தர் தேவரம் - 1.52.1
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

ஒரு வேளை வேறுவிதமாகச் சீர் பிரிக்கவேண்டுமோ?

சம்பந்தர் தேவாரம் - 3.56.2
சடையினன் சாமவேதன் சரி கோவண வன்மழுவாட்
படையினன் பாய்புலித்தோ லுடை யான்மறை பல்கலைநூல்
உடையவ னூனமில்லி யுட னாயுமை நங்கையென்னும்
பெடையொடும் பேணுமிடம் பிர மாபுரம் பேணுமினே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 13, 2017, 10:56:30 PM6/13/17
to சந்தவசந்தம்

 <> வழி <>

ஊனார் உடலை

நானென் றெண்ணி

நானா வழியிற் சென்றேனைத்

தானாய் என்றன்

கோன்முன் தோன்றி

வாஇங்(கு) எனவே அழைத்தானே

ஏனோ அவன்சொல்

தேனாய் இனிக்க

நானும் அவன்பால் நண்ணினனே

தேனார் மொழியாள்

தானோர் பங்கன்

கானை நோக்கி நடந்தாங்கே

எரியில் வெந்து

கரியும் உடல்கள்

நரிகள் பேய்கள் இவைநடுவே

விரிசெஞ் சடையில்

சொரிநீர் தெறிக்க

ஒருகூத் ததனைக் காணவைத்தான்

தன்னை மறந்தென்

முன்னர்க் காணும்

அன்னான் உருவில் திகைத்தேனை

இன்னும் உளதென்

பின்னர் வாவென்(று)

என்னை அழைத்துத் தில்லையெனும்

பதியை அடைந்து

மதிசேர் சடையன்

அதிஅற் புதமாம் மன்றினில்தன்

சதிரா டிடுமோர்

பதம்முன் காட்டி

இதுவுன் வழியென் றேமறைந்தான்!

... அனந்த் 13-6-2017

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 13, 2017, 11:28:14 PM6/13/17
to சந்தவசந்தம்

முன்னமிட்ட வகையில், ஷட்பதி இலக்கணத்தை ஒட்டிச் சில காய்ச்சீர்களைத் திருத்தியமைத்தேன். தனி அஞ்சலில் இதைச் சுட்டிய சரண்யாவிற்கு என் நன்றி. 

<> வழி <>

ஊனார் உடலை

நானென் றெண்ணி

நானா வழியிற் சென்றேனைத்

தானாய் என்றன்

கோன்முன் தோன்றி

வாஇங்(கு) எனவே அழைத்தானே

ஏனோ அவன்சொல்

தேனாய் இனிக்க

நானும் அவன்பால் நாடுங்கால்

தேனார் மொழியாள்

தானோர் பங்கன்

கானை நோக்கி நடந்தாங்கே

எரியில் வெந்து

கரியும் உடல்கள்

நரிகள் பேய்கள் நடுவேதன்

விரிசெஞ் சடையில்

சொரிநீர் தெறிக்க

ஒருகூத் ததனைக் காண்பித்தான்

தன்னை மறந்தென்

முன்னர்க் காணும்

அன்னான் உருவில் திகைத்தேனை

இன்னும் உளதென்

பின்னர் வாவென்(று)

என்னை அழைத்துத் தில்லைப்பேர்

பதியை அடைந்து

மதிசேர் சடையன்

அதிஅற் புதமாம் மன்றில்தன்

சதிரா டிடுமோர்

பதம்முன் காட்டி

இதுவுன் வழியென் றேமீண்டான்!

அனந்த் 13-6-2017

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 13, 2017, 11:29:50 PM6/13/17
to சந்தவசந்தம்
 தில்லைப்பேர் - தில்லைப்பேர்*ப்* 

அனந்த்

Saranya Gurumurthy

unread,
Jun 14, 2017, 12:09:26 AM6/14/17
to santhav...@googlegroups.com
அழகு.

மழுவை ஏந்தும்
அழகன் சிவனின்
கழலை நாமும் தொழுவோ மே
மழையாய் அருளைப்
பொழியும் ஐயன்
நிழலாய் நம்மைத் தொடர்வா னே

சரண்யா.

Vis Gop

unread,
Jun 14, 2017, 12:58:12 AM6/14/17
to santhav...@googlegroups.com
ஷட்பதியில் பஞ்சரத்னம்! அருமை!
திருமதி சரண்யாவின் பின்னூட்டம் ஆறாவது ரத்னம்.
கோபால்.

2017-06-14 8:57 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

Siva Siva

unread,
Jun 14, 2017, 7:57:04 AM6/14/17
to santhavasantham
குளகமாக அமைந்த ஷட்பதி!

திருமறைக்காட்டிலிருந்து திருநாவுக்கரசரைத் திருவாய்மூருக்கு அழைத்துச் சென்ற காட்சியை நினைவூட்டினீர்.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2017-06-13 23:29 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
 தில்லைப்பேர் - தில்லைப்பேர்*ப்* 

அனந்த்

2017-06-13 23:27 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

முன்னமிட்ட வகையில், ஷட்பதி இலக்கணத்தை ஒட்டிச் சில காய்ச்சீர்களைத் திருத்தியமைத்தேன். தனி அஞ்சலில் இதைச் சுட்டிய சரண்யாவிற்கு என் நன்றி. 

<> வழி <>

ஊனார் உடலை

நானென் றெண்ணி

நானா வழியிற் சென்றேனைத்

தானாய் என்றன்

கோன்முன் தோன்றி

வாஇங்(கு) எனவே அழைத்தானே

-->  நெடிலோசையில் ஆரம்பிப்பதால், ஆறாம் அடியில் எதுகை உள்ளதாகக் கருதப்படுமா?

ஏனோ அவன்சொல்

தேனாய் இனிக்க

நானும் அவன்பால் நாடுங்கால்

தேனார் மொழியாள்

தானோர் பங்கன்

கானை நோக்கி நடந்தாங்கே

எரியில் வெந்து

கரியும் உடல்கள்

நரிகள் பேய்கள் நடுவேதன்

விரிசெஞ் சடையில்

சொரிநீர் தெறிக்க

ஒருகூத் ததனைக் காண்பித்தான்

தன்னை மறந்தென்

முன்னர்க் காணும்

அன்னான் உருவில் திகைத்தேனை

இன்னும் உளதென்

பின்னர் வாவென்(று)

என்னை அழைத்துத் தில்லைப்பேர்

--> /அன்னான் உருவில் திகைத்தேனை
உருவில் = உருவினால் என்று பொருள்கொள்ளவேண்டுமோ?

பதியை அடைந்து

மதிசேர் சடையன்

அதிஅற் புதமாம் மன்றில்தன்

சதிரா டிடுமோர்

பதம்முன் காட்டி

இதுவுன் வழியென் றேமீண்டான்!

அனந்த் 13-6-2017

--> அழகு! அவன் வழிகாட்டிவிடில் அச்சம் இல்லையே!
 
Saranya Gurumurthy

unread,
Jun 14, 2017, 8:00:45 AM6/14/17
to santhav...@googlegroups.com
நன்றி திரு. கோபால் ஐயா.

சரண்யா.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 14, 2017, 12:48:38 PM6/14/17
to சந்தவசந்தம்
பாடல்பற்றிக் கருத்துச்ச் சொன்னோர்க்கு என் நன்றி.

சிவசிவா:  >வாஇங்(கு) எனவே அழைத்தானே
-->  நெடிலோசையில் ஆரம்பிப்பதால், ஆறாம் அடியில் எதுகை உள்ளதாகக் கருதப்படுமா?

முதலில் வாநீ எனவே அழைத்தானே என்றுதான் எழுதியிருந்தேன். அதை ஏன் மாற்றினேன் என்று நினைவில்லை.. இங்கே வா என்பது இன்னும் பொருத்தமாக இருப்பதாக எண்ணியிருக்கலாம். 
-> /அன்னான் உருவில் திகைத்தேனை/  உருவில் = உருவினால் என்று பொருள்கொள்ளவேண்டுமோ? 
ஆம்

அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 14, 2017, 1:32:15 PM6/14/17
to சந்தவசந்தம்
முன்னமிட்ட பாடலில் சில இடங்களில் மாற்றம் செய்த வடிவம்:

<> <> வழி காட்டி  <>

ஊனார் உடலை
நானென் றெண்ணி
நானா வழியிற் சென்றேனைத்
தானாய் என்றன்
கோன்முன் தோன்றி
வாநீ இங்கென் றழைத்தானே

ஏனோ அவன்சொல்
தேனாய் இனிக்க
நானும் அவன்பால் நாடுங்கால்
தேனார் மொழியாள்
தானோர் பங்கன்
கானை நோக்கி நடந்தாங்கே

எரியில் வெந்து
கரியும் உடல்கள்
நரிகள் பேய்கள் நடுவேதன்
விரிசெஞ் சடையில்
சொரிநீர் தெறிக்க
ஒருகூத் ததனைக் காண்பித்தான்

தன்னை மறந்தென்
முன்னர்க் காணும்
அன்னான் நடத்தில் திளைத்தேனை
இன்னும் உளதென்
பின்னர் வாவென்(று)
என்னை அழைத்துப்  போய்த்தில்லைப்

பதியை அடைந்து
மதிசேர் சடையன்
அதிஅற் புதமாம் மன்றில்தன்
சதிரா டிடுமோர்
பதம்முன் காட்டி
இதுவுன் வழியென் றேமீண்டான்!

அனந்த் 14-6-2017

Subbaiyar Ramasami

unread,
Jun 14, 2017, 6:42:57 PM6/14/17
to santhav...@googlegroups.com
ஏனோ அவன்சொல்
தேனாய் இனிக்க
நானும் அவன்பால் நாடுங்கால்
தேனார் மொழியாள்
தானோர் பங்கன்
கானை நோக்கி நடந்தாங்கே--- 

நானும், கானை  - குறில் , 

பாடல் மிகச் சிறப்பு.

இலந்தை

Vis Gop

unread,
Jun 15, 2017, 12:54:44 AM6/15/17
to santhav...@googlegroups.com
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம்
மா விளம் மா விளம் மா விளங்காய்
 
மாதை அழகுற மார்பில் அணிந்தவ!
கோதை விரும்பிய கோபர்க் குலத்தவ!
சூதை விரும்பிய துட்டர் களிடமும் தூதாய்ச் சென்றவனே!
கீதை அருச்சுனன் கேட்க வாழ்வியல்
பாதை அறநெறிப் பாடம் வழங்கினை!
தீதை அகற்றிநல் தெம்பை அளித்திடத் தேவா தயவொடுவா!

நல்வாழ்த்துகளுடன்,
கோபால்.

2017-06-14 10:28 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:

Vis Gop

unread,
Jun 15, 2017, 12:59:31 AM6/15/17
to santhav...@googlegroups.com
"கோதை வணங்கிய" என்று வாசிக்கவும். ('விரும்பிய' இருமுறை வருவதைத் தவிர்ப்பதற்கு]
கோபால்.

Subbaiyar Ramasami

unread,
Jun 15, 2017, 1:12:46 AM6/15/17
to santhav...@googlegroups.com
good

Vis Gop

unread,
Jun 15, 2017, 1:20:53 AM6/15/17
to santhav...@googlegroups.com
Thank you!
Regards.
gopal.

Siva Siva

unread,
Jun 15, 2017, 7:58:38 AM6/15/17
to santhavasantham
/கோபர்க் குல/ = ?

Vis Gop

unread,
Jun 15, 2017, 8:10:22 AM6/15/17
to santhav...@googlegroups.com
கோகுலத்தவர்கள் கோபர்கள், கோபாலர்கள் என்று அழைக்கப்படுவார்கள். [அரசர்கள் பூபர் என்றும் பூபாலர் என்றும் அழைக்கப்படுவது போல]. [गोपः = गोपालः = cowherd]
கோபால்.

Siva Siva

unread,
Jun 15, 2017, 8:23:50 AM6/15/17
to santhavasantham
தமிழில் இடைக்குலம் போன்ற பிரயோகம் உண்டு.
கோபர் குலம் போன்ற பிரயோக முன்னோடி இருப்பின் தருக.

அது மட்டுமன்றிக், "கோபர்க்குலம்" என்று 'க்' மிக்கு வருமா என்றும் அறியேன்.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 15, 2017, 9:15:28 AM6/15/17
to சந்தவசந்தம்
அழகாய் அமைந்துள்ளது. 

அனந்த்

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 15, 2017, 9:16:16 AM6/15/17
to சந்தவசந்தம்

<> பேறு <>

செய்பல வேள்வியால்

எய்திடும் சீரெலாம்

மெய்யுணர் வைத்தர லாகிடுமோ?

உய்வதற் கோர்வழி

ஐயனின் முன்னிரு

கைகுவித் தேத்திடல் என்றுணர்வாய்

வாயினால் ”அத்தனும்

தாயும்நீ உன்முனம்

நாயினும் தாழ்ந்தவன் நானெனினும்

சேய்பிழை நீபொறுப்

பாயென வந்துளேன்

நீயலா தார்துணை?” என்றிறைஞ்சிச்

சிற்சபை நாதனின்

பொற்பதந் தூக்கிடும்

அற்புதக் காட்சியில் மெய்ம்மறந்தால்

முற்றிலும் உன்வினை

இற்றிடும் நற்றவர்

பெற்றிடும் பேறுனைச் சார்ந்(து)அதனால்

நானவன் தானெனும்

ஞானமுள் ஓங்கிடும்

மோனமும் கைவரும் காண்பதெல்லாம்

கோனவன் பேருரு

தானெனும் உண்மையாம்

தேனினைத் துய்த்தலும் வாய்த்திடுமே

மேலுல கோருளர்

பாலுமில் லாதவோர்

சீலமி தைத்தரும் நாதனவன்

மேலவன் கீர்த்தியே

மேலவன் பேரருள்

மேலவற் கேபணி செய்பவரே!

(ஷட்பதி அந்தாதிப் பஞ்சகம்)

..அனந்த் 14-6-2017

Hari Krishnan

unread,
Jun 15, 2017, 10:02:22 AM6/15/17
to சந்தவசந்தம்
2017-06-15 17:53 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
தமிழில் இடைக்குலம் போன்ற பிரயோகம் உண்டு.
கோபர் குலம் போன்ற பிரயோக முன்னோடி இருப்பின் தருக.

இது ஒரு புதிய பிரயோகம்.  அவ்வளவுதானே.  Coinage தவறு இருந்தால் சுட்டலாம்.
 
அது மட்டுமன்றிக், "கோபர்க்குலம்" என்று 'க்' மிக்கு வருமா என்றும் அறியேன்.

தோடா.  ஒங்களுக்காகத்தான் சி பா ஆதித்தனார் தினத் தந்தி என்று மிகாத இடத்தில் ஒற்றுப் பெய்தார் போலருக்கு.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Vis Gop

unread,
Jun 15, 2017, 10:53:12 AM6/15/17
to santhav...@googlegroups.com

ஒற்று தவறு என அறிகிறேன். நீக்கி விடலாம். கோபர்கள் குலம், கோப நாடு,  கோப ராச்சியம் ..என்றெல்லாம் காண்கிறேன். கோபர்கள் என்ற சொல்லும் இலக்கிய விமரிசனங்களில் காண்கிறேன். கோபர் குலம் என்ற பிரயோகம் தவறில்லை என்று தோன்றுகிறது.
நன்றியுடன் கோபால்.

Vis Gop

unread,
Jun 15, 2017, 11:16:07 AM6/15/17
to santhav...@googlegroups.com

மிக்க நன்றி. கோபால்.

Subbaiyar Ramasami

unread,
Jun 15, 2017, 1:21:45 PM6/15/17
to santhav...@googlegroups.com
பஞ்சகம் பரமானந்தம்

Vis Gop

unread,
Jun 15, 2017, 1:34:11 PM6/15/17
to santhav...@googlegroups.com

5ஆவது செய்யுளும் செய்பவரே என்னும் ஈறும் என் சிற்றறிவுக்கு விளங்கவில்லை. உதவி தேவை.

நன்றியுடன் கோபால்.

> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To post to this group, send email to santhav...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 15, 2017, 1:54:41 PM6/15/17
to சந்தவசந்தம்
ஐந்தாவது செய்யுளின் பிற்பகுதியில் ‘மேல்’ என்னும் சொல் மேலானது என்ற பொருளில் பயிலும். இறைவனின் கீர்த்தியும், பேரருளும் மேலானவை என்பதை அடுத்து அவனுக்குப் பணிசெய்பவரும் மேலானவர் என்ற பொருளில் அமைத்தேன். நீங்கள் சொல்வதைப் பார்ர்க்கையில் இறுதியடியை 
‘மேலவற் கேபணி செய்வதுமே’ என்றமைக்கலாம் எனத் தோன்றுகிறது.    

2017-06-15 13:34 GMT-04:00 Vis Gop <vis...@gmail.com>:

5ஆவது செய்யுளும் செய்பவரே என்னும் ஈறும் என் சிற்றறிவுக்கு விளங்கவில்லை. உதவி தேவை.
நன்றியுடன் கோபால்.

On Jun 15, 2017 6:46 PM, "VETTAI ANANTHANARAYANAN" <gan...@gmail.com> wrote:
>
> <> பேறு <>
>
>  
>
> செய்பல வேள்வியால்
>
> எய்திடும் சீரெலாம்
>
> மெய்யுணர் வைத்தர லாகிடுமோ?
>
> உய்வதற் கோர்வழி
>
> ஐயனின் முன்னிரு
>
> கைகுவித் தேத்திடல் என்றுணர்வாய்
......

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 15, 2017, 2:55:43 PM6/15/17
to சந்தவசந்தம்
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. 

நானும், கானை  - குறில் .
கானை-யில்,  ஐகாரம் நெடிலோசை கொண்டதன்றோ?
இவ்வகைப் பாடலில் எதுகையில் இரண்டாம் எழுத்தும் ஓசை ஒத்திருக்க வேண்டுமா? (வெண்பா, விருத்தங்களில் இத்தகைய தேவையில்லை எனத் தெரிகிறது.)

அனந்த்

அனந்த் 14-6-2017

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 15, 2017, 2:57:23 PM6/15/17
to சந்தவசந்தம்
நீங்கள் பாடலை இரசித்தமைக்கு என் நன்றி.

அனந்த்

2017-06-15 13:21 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
பஞ்சகம் பரமானந்தம்

2017-06-15 7:15 GMT-06:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

<> பேறு <>

செய்பல வேள்வியால்

எய்திடும் சீரெலாம்

மெய்யுணர் வைத்தர லாகிடுமோ?

உய்வதற் கோர்வழி

ஐயனின் முன்னிரு

கைகுவித் தேத்திடல் என்றுணர்வாய்

வாயினால் ”அத்தனும்

(ஷட்பதி அந்தாதிப் பஞ்சகம்)

..அனந்த் 14-6-2017

Siva Siva

unread,
Jun 15, 2017, 6:17:26 PM6/15/17
to santhavasantham
/இவ்வகைப் பாடலில் எதுகையில் இரண்டாம் எழுத்தும் ஓசை ஒத்திருக்க வேண்டுமா? (வெண்பா, விருத்தங்களில் இத்தகைய தேவையில்லை எனத் தெரிகிறது.)/

தமிழில் எவையெல்லாம் எதுகை என்று ஏற்றுக்கொள்ளப்படுமோ அவையெல்லாம் இங்கும் பொருந்தும்.

Siva Siva

unread,
Jun 15, 2017, 6:20:41 PM6/15/17
to santhavasantham
நாட்கம்பி உதாரணம் நன்று! :)

Siva Siva

unread,
Jun 15, 2017, 6:21:51 PM6/15/17
to santhavasantham
Thanks.

Siva Siva

unread,
Jun 15, 2017, 6:22:39 PM6/15/17
to santhavasantham
Nice.

/மேலுல கோருளர் பாலுமில் லாதவோர் / 

மேலுலகோர் உளர் பாலும் இல்லாத ஓர் 

How to interpret this phrase?

அவனடிமை

unread,
Jun 15, 2017, 7:28:05 PM6/15/17
to சந்தவசந்தம்
புதிய பா வடிவத்தில் கவிஞர்கள் தொடுத்த பாடல்கள் எல்லாமும் அருமையோ அருமை.
//

/மேலுல கோருளர் பாலுமில் லாதவோர் / 
மேலுலகோர் உளர் பாலும் இல்லாத ஓர் 

How to interpret this phrase?

//
சொர்க்கத்தில் இருப்பவரும் கூட எய்தாத சீலமாகிய ‘வீடு பேற்றை’ அளிப்பவன் என்ற பொருளோ?
சொர்க்கம், சொர்க்கப் பதவி என்பவைகளையும் முன்வினைகளின் அதி உன்னத புண்ணிய பலன்களை அனுபவிக்க ஒரு தற்காலிக இருப்பிடமாகத்தான் கருதுகிறார்கள் நம் ரிஷிகள் என்று படித்த ஞாபகம்.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 15, 2017, 7:50:55 PM6/15/17
to சந்தவசந்தம்
மேலுலகோர் உளர் பாலும் இல்லாத ஓர்  -  How to interpret this phrase?

அவனடிமையார் அளித்த விளக்கமே நான் கூற நினைத்த பொருளும். (முதல் அடி: ”விண்ணுலகோரிடமும் இல்லாத ஒரு”. சீலம் = (இங்கே) நல்லறிவு)

அனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 15, 2017, 10:36:23 PM6/15/17
to santhav...@googlegroups.com
Did you intend to say மேலுலகோர் அவர்?

On Thu, Jun 15, 2017 at 7:50 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
மேலுலகோர் உளர் பாலும் இல்லாத ஓர்  -  How to interpret this phrase?

அவனடிமையார் அளித்த விளக்கமே நான் கூற நினைத்த பொருளும். (முதல் அடி: ”விண்ணுலகோரிடமும் இல்லாத ஒரு”. சீலம் = (இங்கே) நல்லறிவு)

அனந்த்
2017-06-15 19:28 GMT-04:00 அவனடிமை <murt...@gmail.com>:
புதிய பா வடிவத்தில் கவிஞர்கள் தொடுத்த பாடல்கள் எல்லாமும் அருமையோ அருமை.
//
/மேலுல கோருளர் பாலுமில் லாதவோர் / 
மேலுலகோர் உளர் பாலும் இல்லாத ஓர் 

How to interpret this phrase?

//
சொர்க்கத்தில் இருப்பவரும் கூட எய்தாத சீலமாகிய ‘வீடு பேற்றை’ அளிப்பவன் என்ற பொருளோ?
சொர்க்கம், சொர்க்கப் பதவி என்பவைகளையும் முன்வினைகளின் அதி உன்னத புண்ணிய பலன்களை அனுபவிக்க ஒரு தற்காலிக இருப்பிடமாகத்தான் கருதுகிறார்கள் நம் ரிஷிகள் என்று படித்த ஞாபகம்.

On Thursday, June 15, 2017 at 3:22:39 PM UTC-7, siva siva wrote:
Nice.

/மேலுல கோருளர் பாலுமில் லாதவோர் / 

மேலுலகோர் உளர் பாலும் இல்லாத ஓர் 

How to interpret this phrase?

2017-06-15 9:15 GMT-04:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

<> பேறு <>

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

அவனடிமை

unread,
Jun 15, 2017, 11:06:44 PM6/15/17
to சந்தவசந்தம்
எண்ணத்திரள் என்னைப்பதம்
பண்ணப்படைப் பாயோயிருள்
வண்ணத்தர ணிக்குள்நித மாழ்த்தும்தர மோ?
கண்ணின்சுழல் கன்னக்குழி
கண்டால்மனம் கட்டும்தளை
பெண்ணானெனும் பேதந்தவிர் பெண்ணான்மலை யே!

உண்ணாடிடும் உத்திக்கென
உண்டாக்கிய ஊன்தானகம்
பண்பட்டிலை பார்பார்த்திடும் பாழ்பட்டிடு மோ?
புண்ணானது பூசித்தெழும்
மண்ணானது மாண்பைப்பெறும்
அண்ணல்நினை வாலேயருள் அண்ணாமலை யே!

--------------------
ஊன்தானகம் = 'I am indeed this body' என்னும் அகந்தை/சுய-அடையாளம்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 15, 2017, 11:16:17 PM6/15/17
to சந்தவசந்தம்
Did you intend to say மேலுலகோர் அவர்?

ஆம். அப்படியிருந்திருக்க வேண்டும். சுட்டியதற்கு நன்றி. ஓர் மேலுலகு உளர் என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளலாமா? (ஓர் (ஒரு) = ஒப்பற்ற, சிறந்த)

2017-06-15 22:36 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:
Did you intend to say மேலுலகோர் அவர்?

On Thu, Jun 15, 2017 at 7:50 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
மேலுலகோர் உளர் பாலும் இல்லாத ஓர்  -  How to interpret this phrase?

அவனடிமையார் அளித்த விளக்கமே நான் கூற நினைத்த பொருளும். (முதல் அடி: ”விண்ணுலகோரிடமும் இல்லாத ஒரு”. சீலம் = (இங்கே) நல்லறிவு)

அனந்த்

2017-06-15 19:28 GMT-04:00 அவனடிமை <murt...@gmail.com>:
புதிய பா வடிவத்தில் கவிஞர்கள் தொடுத்த பாடல்கள் எல்லாமும் அருமையோ அருமை.
//
/மேலுல கோருளர் பாலுமில் லாதவோர் / 
மேலுலகோர் உளர் பாலும் இல்லாத ஓர் 

How to interpret this phrase?

//
சொர்க்கத்தில் இருப்பவரும் கூட எய்தாத சீலமாகிய ‘வீடு பேற்றை’ அளிப்பவன் என்ற பொருளோ?
சொர்க்கம், சொர்க்கப் பதவி என்பவைகளையும் முன்வினைகளின் அதி உன்னத புண்ணிய பலன்களை அனுபவிக்க ஒரு தற்காலிக இருப்பிடமாகத்தான் கருதுகிறார்கள் நம் ரிஷிகள் என்று படித்த ஞாபகம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Vis Gop

unread,
Jun 16, 2017, 7:37:10 AM6/16/17
to santhav...@googlegroups.com
[மா நேர் மா நேர்
மா நேர் மா நேர்
மா நேர் மா நேர் மா நேர் மா தேமா]

கந்தா வா கடம்பா வா
வந்தன் பால் வளமை தா
எந்தாய் நீ எந்தை நீ எல்லாம் நீயே
செந்தில் வேல் சீர்பா டச்
சந்தம் தா தாளம் தா
குந்தப் பூக் கொண்டுன் னைக் கும்பிட் டேனே.

It is loading more messages.
0 new messages