பிள்ளையவர்கள் பிறந்த தினம் - 2026

20 views
Skip to first unread message

veNbA virumbi

unread,
Apr 6, 2026, 8:05:06 AM (5 days ago) Apr 6
to சந்தவசந்தம்
அன்பர்களுக்கு நமஸ்காரம். ஆங்கில நாளேட்டுக் கணக்குப்படி, இன்று (6 - 4 - 2026) மகாவித்துவான் பிள்ளையவர்களின் 211-ஆம் பிறந்த தினம்.

********************
(நேரிசை வெண்பா)

பங்குனி நீங்காப் பரியெய்தச் செய்குதற்
கிங்கண் புலர்ந்தஞான் றிஃதுமையாள் - பங்கன்பான்
மெய்யன் பகலாத மீனாட்சி சுந்தரப்பே
ரய்யன் பிறந்ததின மாம்.

பரி = பெருமை 
********************
(நேரிசை வெண்பா)

புயல்வியக்கப் பாடல் புனைந்து பொழியுஞ்
செயல்புரிந்த ஆசுகவிச் செம்மல் - கயல்விழியாண்
மேவழகன் நாமத்து  மேலோன் சனித்தின்று 
பூவடையச் செய்தனன் பொன்.


பொன் = செல்வம்
********************
(கலிநிலைத்துறை)

பத்தர் துறவியர் பண்டிதர் பல்கலை பயிலும்
வித்தர் பிரமுகர் மேவவைக் கண்ணொளிர் மீனாய்ச்
சுத்த இறையுணர் வெங்கணுஞ் சூழ்நவ கோடி
சித்த புரமடத் திருந்தவன் உதித்ததித் தினமே.

​நவகோடிசித்தபுரம் = திருவாவடுதுறை
********************
(கட்டளைக்கலித்துறை)

எல்லா விதத்து மகேசற் குகந்த தெனத்துணிந்து
நல்லோர் நிறுவில் உறுதலக் காதை நனியுணர்த்தச் 
சொல்லால் விரித்திசை நாட்டிய மீனாட்சி சுந்தரநா
வல்லோன் வரவின் றெழுந்தது பைந்தமிழ் மண்ணிலின்பே.

********************
(அறுசீர் விருத்தம்)

குற்றமற் றுலகில் வாழ்ந்து குருவடி பணிந்தான் நீடு
கற்றவர் விதந்து கூறு கழிபெருங் கவிஞ ரேறு
நற்றமிழ்ப் பாடங் கேட்கு நயமுளோர் அணுக ஏற்றுச்
சுற்றமாக் கொண்மீ னாட்சி சுந்தரற் கில்லை ஈடு.

நயம் = விருப்பம்
********************
(அறுசீர் விருத்தம்)

எள்ளளவுஞ் சலியாமல் தரவியலா தென்னாமல்
     ஈயும் ஒப்பில்
வள்ளலெனும் பேர்விளங்க வரையின்றிக் கல்விநிதி
     வழங்கி அன்று
பிள்ளையெனுங் குலப்பெயரே இட்டபெயர் ஆனதனிப்
     பெருமை ஈட்டித்
தெள்ளமுதத் தமிழ்வளர்த்த மீனாட்சி சுந்தரன்பார்
     சேர்ந்த திந்நாள்.

********************

Siva Siva

unread,
Apr 6, 2026, 9:22:04 AM (5 days ago) Apr 6
to santhav...@googlegroups.com
Nice set of verses.

A couple of questions.

/மெய்யன் பகலாத மீனாட்சி சுந்தரப்பே
ரய்யன்/

Why அய்யன்? ஐயன் என்றே இருக்கலாமே. எதுகையும் சரிதானே.

/மேலோன் சனித்தின்று /

பிறந்தின்று - என்பதும் பொருந்துமே

ஜனித்து என்று எழுதியதற்குக் காரணம் ஏதேனும் உண்டா?

V. Subramanian


VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 6, 2026, 11:04:11 AM (5 days ago) Apr 6
to santhav...@googlegroups.com
பிள்ளையவர்களின் பிறந்த நாளை மறவாமல் ஆண்டுதோறும் அவர்மேல் பல்வகை மரபுப் பா வகைகளில் துதிகள் எழுதுவது உங்கள் மரபு. அவ்வகையில் இன்றிட்ட பாக்கள் அனைத்தும் அருமை.

>> பூவடையச் செய்தனன் பொன்.- அழகான சொல்லாட்சி.

அனந்த்


On Mon, Apr 6, 2026 at 8:05 AM veNbA virumbi <mvms...@gmail.com> wrote:

veNbA virumbi

unread,
Apr 6, 2026, 1:57:35 PM (5 days ago) Apr 6
to சந்தவசந்தம்


On Monday, April 6, 2026 at 6:52:04 PM UTC+5:30 Siva Siva wrote:
Nice set of verses.

 Thank you.  

A couple of questions.

/மெய்யன் பகலாத மீனாட்சி சுந்தரப்பே
ரய்யன்/

Why அய்யன்? ஐயன் என்றே இருக்கலாமே. எதுகையும் சரிதானே.

Indeed. I wrote that for two (perhaps not too compelling!) reasons: (1) "visual conformity" and (2) my own irrational tendency to read the ரையன் there incorrectly (i.e., making it sound like "ryan").  

/மேலோன் சனித்தின்று /

பிறந்தின்று - என்பதும் பொருந்துமே

ஜனித்து என்று எழுதியதற்குக் காரணம் ஏதேனும் உண்டா?

Only to avoid repetition of the word  பிறந்து (which appears in the first verse).  I have also used உதித்து and எழுந்து elsewhere. 

veNbA virumbi

unread,
Apr 6, 2026, 1:58:33 PM (5 days ago) Apr 6
to சந்தவசந்தம்
Thank you. 

Siva Siva

unread,
Apr 6, 2026, 2:06:54 PM (5 days ago) Apr 6
to santhav...@googlegroups.com
ok. Thanks.

I am generally allergic to அய்யன், பய்யன், தோசய், etc. way of writing. That is why I asked.

V. Subramanian

Reply all
Reply to author
Forward
0 new messages