அனுபவமே கடவுள்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!
---------------------------------------------------------------
அனுபவமும், கண்ணதாசனும்:
https://www.dinamani.com/editorial-articles/2016/jun/24/பட்டறிவுப்-பாவலன்-2530016.html

புரிகின்ற சிந்தையின் ஊடே புகுந்து புகுந்திருளை
அரிகின்றது ஆய்கின்ற எல்லா அறிவின் அரும்பொருளைத்
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம் தெளிந்து முற்றவிரிகின்றது எண்ணெண் கலைமான் உணர்த்திய வேதமுமேபுள்ளிக்கலை என்று சங்க இலக்கியம் கூறும்:சரசுவதியை 64 கலைகள் புள்ளிகளாகக் கொண்ட கலைமான் என்கிறார் கம்பர். சரசுவதி அந்தாதி.கண்ணே, கலைமானே என்றார் கண்ணதாசனும். https://youtu.be/EfYeT2FsSGoமானின் பெயர்கள், காரணங்கள் பற்றி இங்கே சொல்லியுள்ளேன்:http://nganesan.blogspot.com/2021/06/navvi-chinkara-antelope.htmlநா. கணேசன்On Sat, Oct 1, 2022 at 7:47 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:On Sat, Oct 1, 2022 at 7:39 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///கண்ணே பிணைமானே!/// வேந்தர் ஐயா எழுதியது...சங்க இலக்கிய வழி பார்த்தாலும், கண்ணே, கலைமானே என்பதில் பிழையில்லை.விரிவு பின்னர்.தோகை, குயில் பால்மயங்கு வழுவமைதியைப் பல நூற். காட்டுகளைக் கொண்டு தொகுக்கலாம்.கண்ணதாசன் எழுதிய கடைசிப்பாடல் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். சூப்பர் ஹிட்.அது கலைமானாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே!மாற்றும் தகுதி எனக்கெல்லாம் இருப்பதாக நான் எண்ணியதில்லை. அந்த அளவிற்கு பாட்டையும் காட்சியையும் நான் ரசித்து இருக்கிறேன்.சக