தானனா தானனா தானனா தானனா (வடமொழியில் ஸ்ரக்விணி என்று அழைக்கப் படும் சந்தக் குழிப்பு)

6 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Jun 1, 2026, 11:44:02 PM (4 days ago) Jun 1
to சந்தவசந்தம்
ஆசை யாரை விட்டது! அடியேனும் முயற்சி செய்கிறேன். 


ஆலிலை பாலகா அண்டமே போனதே
நீலமாய் வண்ணமே நின்றதே எங்குமே
பாலிலே வெண்ணையாய்ப் பார்த்ததே உன்னையார்
வேலியே வாழியே வேறெலாம் வேண்டுமோ?

நாளெலாம் நன்மையே நாடுவேன் நாயினேன்
தோளெலாம் தாள்முனே தோற்குமோ  வீழவே
ஆளெலாம் ஆக்கினாய் அன்பனாய்த் தேற்றினாய்
நீளநாள் பாதமே நேடினேன் நீலனே


புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி,, பெங்களூர்

Ram Ramakrishnan

unread,
Jun 2, 2026, 8:17:39 AM (4 days ago) Jun 2
to santhav...@googlegroups.com
அருமை, திரு. பார்த்தா. ஆசையில் அனுபவத்து எழுதிய கவிதைக்குக் கைமேல் பலன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 1, 2026, at 23:44, Parthasarathy S <spart...@gmail.com> wrote:

ஆசை யாரை விட்டது! அடியேனும் முயற்சி செய்கிறேன். 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/b48b5a09-eed1-4bde-84c5-8a5358a537cbn%40googlegroups.com.

Parthasarathy S

unread,
Jun 2, 2026, 8:57:13 AM (4 days ago) Jun 2
to சந்தவசந்தம்
நன்றி திரு ராம்கிராம்!!
Reply all
Reply to author
Forward
0 new messages