தமிழ் யாப்பில் மோனைகள்.
வழக்கமாகப் பயன்படுத்தும் மோனைகளைப்பற்றிக் கூறப்போவதில்லை . அவை எல்லோருக்கும் தெரியும்.
1 கள்ள மோனை.
அவை நான்கு வகையாக வரும்
1 சொல்மோனை- இதை அறிமுகப்படுத்தியவர் சி. வை தாமோதரம் பிள்ளை
தேனார் கமழ்தொங்கன்
மீனவன் கேட்பத்தெண் நீரருவிக்
கானார் மலையத் தருந்தவன் சொன்னகன் நித்தமிழ்நூல்
(யா. கா. கா.2)
தே என்னும் முதல்சீர் முதலெழுத்துக்கு நான்காம் சீரின் இடையே தெண் என்று வந்து கள்ளமோனை அமைந்துள்ளது. இதைக்கள்ள மோனை என்று சொல்லாமல் சொல் மோனை என்கிறர் சி.வை.தா
கள்ள மோனைக்கு இலக்கணம்: வரவேண்டிய எழுத்து வரவேண்டிய இடம் ஆகியவற்றுக்கு மாறாகத் தொடர்புடைய எழுத்து வருதலும் இடம் மாறி மோனை இடம் பெறலும் கள்ள ,மோனையாகும்-(தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி(பக்கம் 130) - முனைவர் ய. மணிகண்டன்
கள்ளமோனை வகைகள்
1 ஓர் ஒற்றின் மேல் உயிரெழுத்துகள் வேறு வேறு சேர்வது, வருக்க மோனை, வல்லின மோனை போன்றவை
எ.கா: பகலேபல் பூங்கானல் கிள்ளை ஒப்பியும்- ப பூ
அ: பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇப்- நெடில் மோனைகள் பா- கூ
ஆ: பின்னும் பிணியவிழ்ந்த் நன்னெடுங் கூந்தல்- எதுகை மோனை
2 சீரின் முதலில் வராமல் இடையில் வருகிற உயிர்மெய் மோனை
பெருமையும் பேசுவ தெப்படி நாம்பிறை வாளெயிற்று
பெ- நாலாவது சீரில் நடுவில் பி.
3 குறிப்பிட்ட யாப்பில் மோனை நிற்கவேண்டிய இடத்தில் நில்லாது வேறு சீரில் இடம்பெறல் இது கூழை மோனை எனப்படும்(அளவடியில் வரும் கூழை மோனையொடு குழப்பிக்கொள்ளக் கூடாது)
கள்ள மோனை என்பதிங்கே வேறு காணும் போக்கிலே
இந்த அறுசீரடியில் நான்காவது சீரில் மோனை வந்திருக்க வேண்டும். மாறி ஐந்தாம் சீரில் வருவது கூழை மோனை. இதுவும் கள்ள மோனையின் பாற்படும்(ஆதாரம் தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி : முனைவர் ய மணி
கண்டன்)
நான்காவது கள்ளமோனை
புணர்ச்சி விதிக்கு உட்படாது இயல்பாக அமைகிற மோனை
தகுதி மிகுவிருந் தானீர் நீரே!
தகுதி மிகுவிருந்து ஆனீர் நீரே என்று புணர்ச்சிக்கு உட்பட்டு அமையவேண்டியது தகுதி மிகுவிருந் தானீர் நீரே என்றூ தாவுக்குத் தா மோனை யானது.
வழக்கமாக நாமறிந்த மோனை எழுத்துகளைத்தவிர வரும் மோனை எழுத்துகள். (அறுவகை இலக்கணம்)
1இ ஈ, எ, ஏ ய யா
2 உ,ஊ,ஒ,ஓ. யொ. யோ
3 அ,ய
4 ற,ர,ல
5” ந,ர.’ ட, ந, ல, ந, ஞ,ந
பி.கு: 3, 4 இரண்டும் நாடகவழக்கில் மட்டும் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது
வழி மோனையென்றும், மறி மோனை என்றும் மோனை வகைகள் இருப்பதாகத் தெரிய வருகிறது.
வண்ணப்பாக்களில் மோனை அமைப்புக்குத் தனி இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது
இலந்தை
தமிழ் யாப்பில் மோனைகள்.
வழக்கமாகப் பயன்படுத்தும் மோனைகளைப்பற்றிக் கூறப்போவதில்லை . அவை எல்லோருக்கும் தெரியும்.
1 கள்ள மோனை.
அவை நான்கு வகையாக வரும்
1 சொல்மோனை- இதை அறிமுகப்படுத்தியவர் சி. வை தாமோதரம் பிள்ளை
தேனார் கமழ்தொங்கன் மீனவன் கேட்பத்தெண் நீரருவிக்
கானார் மலையத் தருந்தவன் சொன்னகன் நித்தமிழ்நூல் (யா. கா. கா.2)தே என்னும் முதல்சீர் முதலெழுத்துக்கு நான்காம் சீரின் இடையே தெண் என்று வந்து கள்ளமோனை அமைந்துள்ளது. இதைக்கள்ள மோனை என்று சொல்லாமல் சொல் மோனை என்கிறர் சி.வை.தா
கள்ள மோனைக்கு இலக்கணம்: வரவேண்டிய எழுத்து வரவேண்டிய இடம் ஆகியவற்றுக்கு மாறாகத் தொடர்புடைய எழுத்து வருதலும் இடம் மாறி மோனை இடம் பெறலும் கள்ள ,மோனையாகும்-(தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி(பக்கம் 130) - முனைவர் ய. மணிகண்டன்
கள்ளமோனை வகைகள்
1 ஓர் ஒற்றின் மேல் உயிரெழுத்துகள் வேறு வேறு சேர்வது, வருக்க மோனை, வல்லின மோனை போன்றவை
எ.கா: பகலேபல் பூங்கானல் கிள்ளை ஒப்பியும்- ப பூ
அ: பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇப்- நெடில் மோனைகள் பா- கூ
ஆ: பின்னும் பிணியவிழ்ந்த் நன்னெடுங் கூந்தல்- எதுகை மோனை
2 சீரின் முதலில் வராமல் இடையில் வருகிற உயிர்மெய் மோனை
பெருமையும் பேசுவ தெப்படி நாம்பிறை வாளெயிற்று
பெ- நாலாவது சீரில் நடுவில் பி.
3 குறிப்பிட்ட யாப்பில் மோனை நிற்கவேண்டிய இடத்தில் நில்லாது வேறு சீரில் இடம்பெறல் இது கூழை மோனை எனப்படும்(அளவடியில் வரும் கூழை மோனையொடு குழப்பிக்கொள்ளக் கூடாது)
கள்ள மோனை என்பதிங்கே வேறு காணும் போக்கிலே
இந்த அறுசீரடியில் நான்காவது சீரில் மோனை வந்திருக்க வேண்டும். மாறி ஐந்தாம் சீரில் வருவது கூழை மோனை. இதுவும் கள்ள மோனையின் பாற்படும்(ஆதாரம் தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி : முனைவர் ய மணி
கண்டன்)
நான்காவது கள்ளமோனை
புணர்ச்சி விதிக்கு உட்படாது இயல்பாக அமைகிற மோனை
தகுதி மிகுவிருந் தானீர் நீரே!
தகுதி மிகுவிருந்து ஆனீர் நீரே என்று புணர்ச்சிக்கு உட்பட்டு அமையவேண்டியது தகுதி மிகுவிருந் தானீர் நீரே என்றூ தாவுக்குத் தா மோனை யானது.
வழக்கமாக நாமறிந்த மோனை எழுத்துகளைத்தவிர வரும் மோனை எழுத்துகள். (அறுவகை இலக்கணம்)
1இ ஈ, எ, ஏ ய யா
2 உ,ஊ,ஒ,ஓ. யொ. யோ
3 அ,ய
4 ற,ர,ல
5” ந,ர.’ ட, ந, ல, ந, ஞ,ந
பி.கு: 3, 4 இரண்டும் நாடகவழக்கில் மட்டும் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது
வழி மோனையென்றும், மறி மோனை என்றும் மோனை வகைகள் இருப்பதாகத் தெரிய வருகிறது.
வண்ணப்பாக்களில் மோனை அமைப்புக்குத் தனி இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது
இலந்தை
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/santhavasantham.
For more options, visit https://groups.google.com/d/optout.