8 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Aug 9, 2025, 12:45:32 PM8/9/25
to Santhavasanthsm சந்தவசந்தம்




🙏

*திருப்பட்டூர் காசி விஸ்வநாதர்-விசாலாட்சி ஆலயம்
புலிக்கால் சித்தர் ஜீவ சமாதி*

 

புலிக்காலர் சித்தரருட் பூசையின் நிமித்தமொரு
புனலருகி லாதிளைக்கப்
பொலியருவி சுனைகருக பூமிநீ ரும்அருகிப்
போனதெனப் பரிதவிக்க

சொலிப்பூற ஐராவ தமேறி வானுலவும்
சுரபதிசு மந்தகங்கைச்
சொட்டேனும் தரவேண்டச் சட்டென மறுத்ததுவும்
சுடர்ஜம்பு நாதருக்காய்

வலித்தோத ஆனைக்கா வந்தயிந் திரனையீசன்
வைதுபுலிக் காலருக்கு
வழங்கெனச் சொல்லவுடன் வருவனைச் சித்தருடன்
வாராதே எனமறுத்து

புலிக்காலை இறையருளப் பூமியைக் நகத்தாலே
பூரித்துராய கங்கை
பொங்கிவரச் சங்கரனை பூசித்து காசிவிசா
லாட்சியோ டடிதுதித்துக்

கலிகால யிருளவியுங் கதிரான முனிராசன்
கமழுமருட் சமாதிகாண
கட்டமிலை! இட்டமுறும்! துட்டரிடர் பட்டழியும்!
*கருணைதிருப் பட்டூரின் அழகே!*

மீ. ரா
8-8-2025

Subbaier Ramasami

unread,
Aug 12, 2025, 4:07:23 PM8/12/25
to santhavasantham
மனத்துக்கு ஒரு மடல்-   மீள் பதிவு


மனத்துக்கு ஒரு மடல்

சீட்டுக் கவி

கருத்தினை மரபிலே கவிதையாய் யாப்பது
                     கைவரப் பெற்ற கவிஞன்
                     கணகணச் சந்தமும் கட்டளைப் பாவகை
                     காணெழுத் துக்கணக்கும்
விருத்தங்கள் விரிவுகள் மிறைப்பா எனப்பல
                     வித்தகம் கொண்ட புலவன்
                     வில்லுப்பாட் டின்நயம் சொல்லிக்காட் டும்வகை
                     மீட்டிடும் இராமசாமி
பொருத்தமாய்க் கவிவேழம், சந்தத் தமிழ்க்கடல்
                     புனைகவி மாமணி யாம்
                     புகழ்மிகு பட்டங்கள் பூட்டிய தேரினில்
                     புவிவலம் வருகின்றவன்
திருத்தமாய் எங்கணும் தென்படும் தன்மனம்
      சிந்திக்க வேண்டு மென்றே
      திகழ்தமிழ்ப் பாவினால் திரிகின்ற மனத்துக்குத்
      தீட்டிடும் கவிதை ஓலை!

அனுப்பிட முகவரி, யாரிடம் கேட்பது?
                     அஃதுள இடமும் எங்கே?
      அகத்துளா, நெஞ்சுளா, இதயம் அடித்திடும்
                     ஆனந்தப் பாட்டகத்தா
முனைப்புள புத்தியின் முடுக்கிலா, அல்லது
                     மூளையின் மடிப்பகத்தா
                     முழுதாக அதற்கென்றே ஓரிடம் உள்ளதா
      முழுமேனி அதன் பீடமா?
நினைக்குமாம், நிகழ்த்துமாம், நிறுத்துமாம், அப்பப்போ
                     நிர்த்தனம் தான் செய்யுமாம்
      நேசமனம் என்கிறார், நீச மனம் என்கிறார்
                     நேரில் உணர்ந்தவர் யார்?
அனைத்தையும் அறிந்தவர் அறிந்ததைச் சொல்லிடார்
       ஆய்ந்தவர் கதையளப்பார்
       அடிமனம் என்கிறார், ஆழ்மனம் என்கிறார்?
       அந்தோ தலை சுற்றுதே!

ஆமெனவே பொது வோலை விடுக்கிறேன்
       யாரும் அறியட்டுமே!
       அப்படி யேனுமிங் கிப்படி எனமனம்
       அண்டி உரைக்கட்டுமே!
ஏமன மேயுனை என்னுள் உணர்ந்திட
                     ஏற்றதோர் உத்தியுண்டு
                     என்னுள் இயங்கிடும் கற்பனைத் தேரினில்
      ஏறிடும் புத்தியுண்டு
பூவன மேயெனப் பாவகை பூத்திடப்
      புன்னகை செய்துநிற்பாய்
       பொங்கிடும் போதினில் கங்கினைத் தூக்கிப்
       பொசுக்கிட நீகொடுப்பாய்
நாவனப் போடுசொல் நாடகம் ஆடிட
                       ஞாபகம் நீதருவாய்
                       நாலுபு றத்தெழில் நர்த்தனம் பார்த்ததை
        நன்கு பதிந்திடுவாய்

தீங்குகள் செய்கையில் நீங்குதல் இன்றியே
                      தீச்சட்டி கைகொடுப்பாய்
                      சித்தத்தி லேயொளித் தேசு குறைகையில்
       தீண்டி நிமிண்டிடுவாய்
தூங்கிடும் போதினில் சொப்பனந் தன்னில்நீ
                     சொந்தங்களைக் கொணர்வாய்
                     தோற்றம் கடந்த தொலைவை நெருங்கியே
      தொட்டிட வைத்திடுவாய்

 ஓங்கிடும் ஆசைகள் உன்னை உசுப்பிட
      உண்டாட்டுக் காட்டுகிறாய்
                     உன்னத நல்லொளி ஓட்டத்தை விஞ்சிய
      ஓட்டத்தைக் கூட்டுகிறாய்.
ஈங்கிது நாள்வரை என்னை  வசக்கினை
      இன்றென் வசப்பட்டனை
      இன்று முதல்நீ எனக்கடங்கிக் கொண்டே
      என்றனை ஆண்டிடுக!

அலைகள் இலையெனில் ஆழிக் கழகிலை
                     அப்படித்தான் உனக்கும்
                     ஆடுநீ, ஓடுநீ , யான்விழை நல்லவை
      யாவும் நடத்திவைநீ
சிலபொழு துன்றனின் சீற்றமும் தேவைதான்
      செப்புகையில் கொணர்வாய்
      தேகம், இதயம் செழிப்புகள் உன்கையில்
       தேடிப் பலம் தருவாய்  
கலகல எனநலக் களிப்புடன் வாழ்க்கையில்
                      காரியம் ஆற்றுதற்கே
       கவல்கிற நிலைவிடு, கணித்திடும் நிலைதொடு
       கைகொடுப்பாய் மனமே
உலகினில் இருந்தனம் ஒடுங்கினம் எனும்நிலை
       உயிர்களின் பொது நிலைமை
       உனதருள் தயவினால் உயர்புகழ் நிலவிட
       உதவுக புதுத் தலைமை.

மனமுன்றன் அருகினில்   கால்போட்டு வாழுவேன்
        வருத்தம்நீ படவேண்டாம்
        வஞ்சகர் தீங்குகள் செய்திடில் எதிரடி   
        வஞ்சகம் செயவேண்டாம்
தினந்தினம் காண்கிற தீனரை அலட்சியம்
     செய்துநீ செலவேண்டாம்
      சிந்தையே அன்புநீ, தீயரின் வழித்தடம்
      தேடிநீ செலவேண்டாம்,
கனமெதும் மிகுந்திடில் கானம் இசைத்திடு
     கவலையில் விழ வேண்டாம்
      கயமையை மாய்த்திடும் காலத்தில் சொல்லுவேன்
      கத்தியைத் தீட்டிவைப்பாய்
உனக்கென்ன மன்னன்நீ, உன்வழி என்வழி
      ஒன்றியே நாம் வாழலாம்
      உன்னிடம் சகலமும் ஒப்படைப்பேன் பினர்
      உலகையே நாமாளலாம்

Ram Ramakrishnan

unread,
Aug 12, 2025, 5:32:49 PM8/12/25
to santhav...@googlegroups.com
ஆகா! அருமையான எண்ண வோட்டச் சீட்டுக் கவி

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 12, 2025, at 16:07, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAqA5LcdfeY%2BvHH-aqg%2B%3DURBMxGB_1AEvif%3DVhGkuLFCA%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages