1905 லேயே பாரதி பாடலை வெளியிட்ட பிரம்ம சமாஜம்- புதிய செய்தி

8 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Dec 3, 2021, 3:24:51 AM12/3/21
to santhav...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்,

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவரும் பாரதி ஆய்வாளருமான பேராசிரியர் ய. மணிகண்டன் அவர்கள் "காலச்சுவடு" இதழில் "பாரதியியல்" எனும் தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

அதில் தனது ஆய்வில் கண்டறிந்த "பாரதி" பற்றிய புதிய செய்திகளை அவர் பதிவு செய்து வருகிறார். 

அந்த விதத்தில் தற்போது வெளிவந்துள்ள டிசம்பர் மாத காலச்சுவடு இதழில் முதன்முதலில் பாரதி கவிதையை வெளியிட்டுப் பரப்பிய பிரம்ம சமாஜம்" என்ற தலைப்பில்  அவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

1907ல் கிருஷ்ணசாமி ஐயரின் உதவியோடு பாரதியின் மூன்று தேசபக்திப் பாடல்கள் "ஸ்வதேச கீதங்கள்" என்ற பெயரில் வெளியாகின.  முதன்முதலில் பாரதியின் பாடல்கள் ஒரு தொகுப்பாக வெளிவந்தது அப்போது தான் என்பது நாம் இதுவரை அறிந்த செய்தி.

ஆனால், 1905லேயே பிரம்ம சமாஜம் பாரதியின் "எங்கள் நாடு" பாடலை ஒரு சிறு பிரசுரமாக வெளியிட்டுள்ளது என்ற புதிய செய்தியை பேராசிரியர் ய.மணிகண்டன் நமக்கு அறியத் தந்திருக்கிறார்.



நன்றி,
நிரஞ்சன் 

N. Ganesan

unread,
Dec 3, 2021, 8:53:46 AM12/3/21
to சந்தவசந்தம்
மணிகண்டனின் கட்டுரையை இங்கே இட முடியுமா? நன்றி,
நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages