பழம்பாடல்

6 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 25, 2026, 10:07:27 PM (11 hours ago) Mar 25
to சந்தவசந்தம்
<> எனது துணை <>
முன்னம் இவ்விழையில் இட்ட பாடலொன்றைக் கீழே தந்துள்ளேன். இது எந்தப் பாவகையை/அணியினத்தைச் சேர்ந்ததென்று கூற வேண்டுகிறேன்.

அனந்த் 
----------------------------
அரனென்பார் என்றுமெனக்(கு) அரணென்பேன், கங்கா
தரனென்பார் எனக்கவனா தாரமென்பேன்
, கருணா
கரனென்பார் என்னுறவுக் காரனென்பேன்
, மேலாம்
பரனென்பார் தரிப்பன்என் பாரமென்பேன்
, பணிந்து.
 
வானென்பார் சீலகுண வானென்பேன் கொம்புத்
தேனென்பார் விழைந்துகுடித் தேனென்பேன் கரத்தில்
மானென்பார் எனதுபெரு மானென்பேன் ஈசன்
தானென்பார் எனதுள்ளத் தானென்பேன்
, தெரிந்து. 

சிவனென்பார் என்னுள்வாழ் சீவனென்பேன்
, அருளு
பவனென்பார் மலையுறைசாம் பவனென்பேன்
, மூத்தோன்
இவனென்பார் யான்கேட்ட(து) ஈவனென்பேன்
, இரப்பான்
அவனென்பார் எனதுதுணை ஆவனென்பேன்
, அறிந்து.

GOPAL Vis

unread,
Mar 25, 2026, 11:08:15 PM (10 hours ago) Mar 25
to santhav...@googlegroups.com
அற்புதம்.வேறு  என்ன சொல்வது!
கோபால். 

--

Reply all
Reply to author
Forward
0 new messages