ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

968 views
Skip to first unread message

Ramesh Ph.D.,

unread,
Feb 6, 2012, 3:15:20 AM2/6/12
to kadhal, kadhalfeelings, tamizhsiragugal, pira...@googlegroups.com, tamilpunna...@googlegroups.com, kavitha...@googlegroups.com, tamil2...@googlegroups.com, santhav...@googlegroups.com, Kavikath...@googlegroups.com, tamila...@googlegroups.com, anbalagan s, janma...@gmail.com, ramajayam g, vilakkuministries

மல்லிகை

உதிர்ந்து கிடக்கும்

செடியின் கீழ்

 

மல்லிகை ஏன் உதிர்ந்து கிடக்கிறது?

 

வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டையா என்ன?

 

தெருவில் இரண்டு பெண்களுக்குள் சண்டையா?

 

ஒரு பெண்ணே ஏதோ ஒரு கோபத்தினால் தலையில் கிடந்தப் பூவை இப்படி உதிர்த்திருக்கிறாளா?

 

இல்லை அது முதல் இரவாகக் கூட  இருந்திருக்கலமே என்று நினைக்கிறீர்களா?

 

சரி ஏன் அப்படி உதிர்ந்து இருக்கிறது? என்று மூன்றாம் அடியைப் பார்க்கிறோம்.

 

செடியின் கீழ் – அட செடியின் கீழ்தான் உதிர்ந்து கிடந்திருக்கிறது.

 

சரி…  செடியின் கீழ் ஏன் மல்லிகை உதிர்ந்து கிடந்திருக்கிறது?

 

நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்…

 

இந்த ஹைக்கூவில் முதல் அடியில்,

 

மல்லிகை – யை மல்லிகைப் பூக்கள் என்று எழுதலாம் என்றிருந்தேன்… ஹைக்கூவை மேலும் சுருக்க நினைத்து அவ்வாறு எழுதாமல்,

 

மல்லிகை

உதிர்ந்து கிடக்கும்

செடியின் கீழ்

 

என்று எழுதி முடித்தேன்.

 


--

என்  காதல்

கை  நழுவிப்போனது

மாராப்பை  விட்டு

விலகிய  சேலையாய் 

 


Subbaier Ramasami

unread,
Feb 6, 2012, 4:01:57 PM2/6/12
to santhav...@googlegroups.com
ஹைக்கூவிற்கும் இலக்கணம் உண்டு. மூன்று சிறிய அடிகளை எழுதிவிட்டுக் ஹைக்கூ என்பது தவறு. ஹைக்கூவிற்கு  இலக்கணம் 5 7 5 அசைகள் கொண்டிருக்கவேண்டும். மூன்றாவது அடியில் ஒரு திருப்பம் இருக்கவேண்டும்.   இப்பொழுது அதனினும் குறைவாக எழுதுவது தொடங்கியிருப்பதாக அறிகிறேன்.            இலந்தை

2012/2/6 Ramesh Ph.D., <poetr...@gmail.com>


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Subbaraman NV

unread,
Feb 6, 2012, 8:05:13 PM2/6/12
to santhav...@googlegroups.com
Ye; in any language, traditional Haiku must have 5-7-5 syllables in three lines. Ideal it will be when the first and third line rhyme. But nowadays all over the world shorter than 5-7-5 is given as Haiku. But then they are also recognized -not as Haiku- but as a "short verse".
I am happy to share that I have completed 1052 Haiku- Tanka poems in traditional style in English language- including translation of 500 Thirukkural couplets, 110 Ramana's Akshara maNa Maalai couplets and on other themes.

Thanks and regards.
N V Subbaraman

2012/2/7 Subbaier Ramasami <elan...@gmail.com>



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/


Subbaier Ramasami

unread,
Feb 7, 2012, 6:28:04 AM2/7/12
to santhav...@googlegroups.com
Thank you for the information.   you can release a few(say 10) here.

Ramasami

2012/2/7 Subbaraman NV <nvsubb...@gmail.com>

Ramesh Ph.D.,

unread,
Feb 6, 2012, 9:54:54 PM2/6/12
to santhav...@googlegroups.com
தங்களின் கருத்துகள் உண்மைதான். அது 5-7-5 என்ற அசை எல்லா ஜப்பானிய ஹைக்கூக்களுக்குப் பொருந்தி வருகிறது. வரும். தமிழின் ஹைக்கூக்கள் பற்றிய சிறு விளக்கம்.

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்
‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’ என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது. 

இவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவிதைக் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 

‘ஹைக்கூ’ ஜப்பானிய மொழிக் கவிதை. 3 அடிகள் கொண்டது. மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து சீர்களைக் கொண்டு 17 சீர்களில் ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு இந்த சீர் எண்ணிக்கை தேவையில்லை). ஜென் தத்துவத்தோடு இயற்கை மற்றும் மெய்யியலோடு தொடர்பு கொண்டது. கவித்துவம் கொண்டது. இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் எப்படியோ இந்தியாவில் (தமிழ்நாடு உள்பட) ஓர் இலக்கிய வடிவமாக / கவிதையாக இடம் பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக தமிழ்நாட்டு ஹைக்கூ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘ஹைக்கூ’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். 

இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் தமிழ் ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருப்பது சிறப்பு. இன்று எழுதப்படுவதெல்லாம் ‘புதுக்கவிதை’ என்பது போல ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் 3 அடிகள்கொண்டு எழுதப்படுவது எல்லாம் ‘ஹைக்கூ’ என்பதால் ஹைக்கூவின் உள்ளடக்கம் தாழ்ந்துபோய் உள்ளது. ஜப்பானிய ஹைக்கூவின் தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்த்து விட்டால் 1974ல் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழில் முதன்முதலாக ஹைக்கூ படைத்துள்ளார். இன்று பல ஆயிரம் பேர் தமிழில் ஹைக்கூ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே சில தனி சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டுள்ளன. 

இன்றைய ஹைக்கூக் கவிஞர்கள் பெரும்பான்மையினர் தங்களை ஹைக்கூக் கவிஞர்கள் என்று கூறிக் கொள்ள வேண்டும் அல்லது தொடர்ந்து ¨ஹைக்கூவிற்குள் இயங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்புக்காகச் சென்ரியு வகைக் கவிதைகளை நிறைய படைத்து அதனை ஹைக்கூ என்று பெயரிட்டு வெளியிட்டு வருகிறார்கள் என்பது உண்மை. இதன் காரணமாகச் சென்ரியு என்ற ஒரு வடிவம் இருப்பதை அவர்களால் வெளிக்காட்டாமல் இருட்டடிப்பும் செய்யப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஓராண்டுவரை நீடித்தால் கூட சென்ரியு கவிதைகள் தான் தமிழின் ஹைக்கூக் கவிதைகள் என்று வாசகர்கள் மனத்தில் பதிந்துபோய்விடும். 

ஜப்பானிய மொழியில் இன்னும் - இன்றும் ஹைக்கூ, ஹைக்கூவாகவேதான் இருக்கிறது. ஹைக்கூவை எழுத முடியாதவர்கள் சென்ரியு வகையை நாடிச் சென்றுவிடுகிறார்கள். ஹைக்கூவின் பிறிதோரு வகையான நகைச்சுவை, வேடிக்கை, சமூக கேலி கிண்டல்களை உள்ளடக்கமாகக் கொண்டதுதான் சென்ரியு. 

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹைக்கூ கவிஞர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பலரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆயிரக்கணக்கான ஹைக்கூக்கள் படைத்துள்ளதாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற போலியான / தன்முனைப்பால்(Ego) சென்ரியு வகை கவிதைகளைப் படைத்து ஹைக்கூ என்ற தலைப்பில் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைக்கூவின் உள்ளடக்கம் வேறு. சென்ரியுவின் உள்ளடக்கம் வேறு என்று ஹைக்கூ பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தும், உண்மையான ஹைக்கூவை எழுத (நிறைய எழுத) முடியாதக் காரணத்தால் சென்ரியு வகைக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டு ஹைக்கூ என்று சொல்லிக் கொள்கிறார்கள். தவறான வழிகாட்டியாவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய ஹைக்கூக் கவிதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுதான் ‘ஹைக்கூக் கவிஞர்’ என்று அழைக்கின்றனர் அல்லது பட்டம் கொடுக்கப்படுகிறது. இது தவறு. ஒருவர் ஓரிரு ஹைக்கூவைச் சிறப்பாகப் படைத்தாலும் அவர் ஹைக்கூக் கவிஞர்தான் என்று ஏற்றுக் கொள்ளும் ஜப்பானியர்களின் மனநிலை தமிழ்நாட்டிலும் பரவலாக்கப்பட வேண்டும். 

ஹைக்கூ மரபுகள் 

1. ஹைக்கூ மூன்று வரியாக இருக்க வேண்டும். (ஒரு வாக்கியத்தையே பிரித்து மூன்று அடியாக்கி ஹைக்கூ எழுதக் கூடாது. ஹைக்கூவில் ஒவ்வொரு அடியும் ஒரு வாக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)
2. ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். (ஹைக்கூவுக்குத் தலைப்பிடக்கூடாது என்பதற்கானக் காரணம் இதுதான். தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன. ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி இருப்பது சிறப்பு.) 

கவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று: 
ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு. 
1.ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.
2.மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும். (ஹைக்கூ எளிய சொற்கள் கொண்டும் குறைந்த வார்த்தைகளைக் கொண்டும் இருப்பது சிறப்பு. படைப்பாளர் எல்லாவற்றையும் விவரித்துக்கொண்டு இருக்கக்கூடாது. விவரிப்பது வசனம் அல்லது புதுக்கவிதையின் வேலை.)
3.உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும். 

மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன. 

ஹைக்கூ வாசிப்பு முறை
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும். 

சென்ரியு 
(சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. ) 

சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென் தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும். சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும். 

‘சென்ரியு’ என்னும் புனைப்பெயரைக் கொண்ட ‘கராய்ஹச்சிமோன்’ என்னும் ஜப்பானியக் கவிஞர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார். பின்னர் அக்கவிஞரின் புனைப் பெயரே அக்கவிதை வகைகளுக்கான பெயரும் ஆயிற்று. தமிழில் இவ்வகையை நகைப்பா என்கிறார்கள். 

தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழலுக்கு தமிழில் ‘ஹைக்கூ’வை விட ‘சென்ரியு’ சிறந்த வடிவம் /உள்ளடக்கம் ஆகும். 

தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இவ்வகைக் கவிதைகளைச் சொல்லும் மரபு ஜப்பானில் இயல்பாக இருக்கிறது. சென்ரியு கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஏனெனில் அதற்கு எதை எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால் எதை வேண்டுமானாலும் அந்த வடிவத்துக்கு உட்பட்டு எழுதலாம். (ஹைக்கூ எழுத சிறிதாவது நுன்மான் நுழைப்புலம் வேண்டும்) நீங்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு செய்தித்தாள் மட்டுமே கூட வாசித்தால் ஏறக்குறைய 100 சென்ரியு கவிதைகள் எழுதிவிட முடியும். தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் எளிய மனிதர்கள் இலக்கிய நயங்களை, இயற்கையை, கவித்துவத்தை, கவிதைப் பற்றிய உட்சிந்தனையை விரும்பாதவர்கள் ஒருவரோடு ஒருவர் களிப்பூட்டிக் கொள்ளும் முறையில் பேசிக்கொள்ளும் போது, அங்கதக் கவிதைகளில் அர்த்தச் செறிவும் கவித்துவமும் ஹைக்கூவாகவும் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே. 

இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருக்கும் ஹைக்கூவைத் தவிர பிற அனைத்தும் சென்ரியு வகையைச் சேர்ந்ததாகும். நம்பிக்கையிழந்ததால், பிற சூழ்நிலைகளை இழித்துப் பேசும் தன்மையும் இவற்றில் உண்டு. பல சென்ரியுக்கள் கருத்தில் நேர்த்தியில்லாத, சிறிதும் கலையழகும் வேலைப்பாடுமற்ற வெளிப்படையான விமர்சனங்கள் ஆகும். 

மூட நம்பிக்கைகள், காதல் மற்றும் அதோடு தொடர்புடைய பலவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பிச்சை, வறுமை, சாதி, மதம், வரதட்சணை, பெண்ணியத்தின் சாடல் போன்ற சமுதாயச் சீர்கேடுகளும், நீதியின் முரண்பாடுகள், நோய்கள், அன்றாடச் செய்திகள், அரசியல் சார்ந்த விமர்சனங்கள் மற்றும் புகழ்பாடுதல், உரைநடை போன்ற அமைப்பில் நேரடியாகக் கருத்தை சொல்லுதல் மற்றும் அறிவுறுத்தல்கள், இவை போன்ற பிற (புதுக் கவிதையில் கருப்பொருளாகப் பயன்படுத்தும் மேலும் பல) அனைத்தும் சென்ரியு வகையைச் சார்ந்தவையாகும். தமிழ் ஹைக்கூக் கவிஞர் பெரும்பான்மையும் இவ்வகைக் கவிதைகளையே அதிகம் படைத்துவிட்டு ஹைக்கூ என்று தலைப்பிட்டுக் கொள்கிறார்கள். தற்போது உங்களால் எது ஹைக்கூ? எது சென்ரியு? என்று பிரித்து அடையாளம் காண முடியும் என நினைக்கிறேன். 

தமிழ் ஹைக்கூ, ஜப்பானியப் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாய்த் தெரியவில்லை. இதற்குப் படைப்பாளர் சிலரின் அறியாமையும், ஒரு காரணமாயிருக்கலாம், சிலர் அதனைப் பொருட்படுத்தாமையும் காரணமாயிருக்கலாம் என்கிறார் டாக்டர் பட்டத்துக்காகத் தமிழ் ஹைக்கூக்களைப் பல்கலைக்கழகத்துக்காக ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ் அவர்கள். 

தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘சென்ரியு’ படைத்துள்ளார். தமிழில் சிலரே ‘சென்ரியு’ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் எழுதப்படும் ‘ஹைக்கூ’ எல்லாம் ‘சென்ரியு’ கவிதையாகவே காணப்படுகின்றன. 

குருக்களாகிவிட்ட கடவுள் 
மறுபடியும் கடவுளாகவில்லை 
தட்டு நிறையக் காணிக்கை - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு

யார் சொல்லிக் கொடுத்தவன்? 
அடி பிள்ளைக்கு 
வலி வாத்தியாருக்கு - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு 

லிமரைக்கூ 
ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது. 

தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது. 

ஹைக்கூ, லிமரிக் என்னும் இரண்டு வகைக் கவிதைகளின் வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் உள் வாங்கிக் கொண்டு தமிழில் கவிதைப் படைக்கத்தக்க திறமையும் பயிற்சியும் தேர்ச்சியும் மொழியாளுமை - கவித்துவ இயக்கம் ஆகிய இரண்டிலும் தேவை என்கிறார் ஈரோடு தமிழன்பன். 

5-7-5 என்னும் அசையமைப்பு அடிகளைக் கருத்தில் கொண்டால் ஹைக்கூவின் தன்மை அதுவென உணர்ந்து மூன்றடிகளின் இடையடி சற்றே - ஒரு சீர் அளவே மிக்கிருக்க எழுதலாம். முதல், கடை அடிகள் தவிர்த்த இடையடிகள் சீர் குறைந்து வரும் லிமரிக்கைக் கருத்தில் கொள்ளும் போது - லிமரைக்கூவிலும் நடுவடி சீர் குறைந்து வரலாம் (இது சிறுபான்மை). மூவசைச் சீர்களைப் பயன்படுத்தும் போது அவை ஈரசைகளாகப் பிரிக்கத்தக்கதாக இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார் ஈரோடு தமிழன்பன். 

எடுத்துக்காட்டாக, ‘வந்ததற்காய்’ என்னும் மூவசைச் சீர், ‘வந்த + தற்காய்’ என இரண்டு சீராகப் பிரியும் வாய்ப்புள்ளதாகவும், ‘வந்ததனால்’ என்பது, ‘வந்த + தனால்’ எனப் பிரிவும் போது அவ்வாய்ப்பைப் பெறாததாகவும் அமைவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். 

3 அடிகளிலும் சந்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஈரோடு தமிழன்பன் தமிழுக்கு முதன்முறையாக லிமரைக்கூவை அறிமுகம் செய்து வைத்தபோது சந்தம் கடைபிடிக்கப்பட்டது. (அவ்வாறு சந்தம் அமைத்துக் கொண்டது ஈரோடு தமிழன்பனின் தனி உத்தி.) மூன்று வரி, சந்தம் மட்டுமே லிமரைக்கூ ஆகிவிடாது. ஹைக்கூ, சென்ரியுவின் இணைப்புதான் லிமரைக்கூ.

தேன் நிரம்பி வழிந்தது 
வண்ணத்துப் பூச்சி பறந்து சென்றது 
பூ தலைக் கவிழ்ந்தது
-இது சந்தம் கொண்டு அமைந்த லிமரைக்கூ. 

ஜணகனமன பாடியது 
மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள் 
அரசியல்வாதி கொட்டாவி விட்டது - ம.ரமேஷ்
-இது இயைபுத் தொடை கொண்டு அமைந்த லிமரைக்கூ. 

குருக்கள் தெய்வங்கள் ஆனார்கள்
கோயி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியி ருக்கப் போனார்கள்

பறவை கூடு திரும்பியது
சிறகு முளைத்துப் பறந்து திரிய
வானின் இதயம் விரும்பியது
- ஈரோடு தமிழன்பன் – சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள் 

எதிரெதிர் தலைவர்கள் கைக்குலுக்கல்
விளை நிலங்கள் பங்கீடு பேச்சுக்குப்பின்
அவரவர் பங்குகள் பதுக்கல்

வாழ்வில் எத்தனை இன்னல்
முதிர் கன்னியோடு ஏங்கி ஏங்கி
இளைத்துப் போனது பின்னல்
-கன்னிக்கோவில் இராஜா - சென்னைவாசி 

மார்கழி மாதப் பனிக்காலம்
மனத்தில் எண்ணங்கள் தேக்கி வாசலில்
வரைந்தாள் அழகிய கோலம்

வீசும் மெல்லியக் காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்கும் நாற்று
- ந.க. துறைவன் - உப்பு பொம்மைகள்

இயற்கைக்கு வந்தது ஊறு!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!

கொட்டி தீர்த்த மழை!
வீடுகளில் உள்ளே புகுந்தது நீரு!
தூர்வாறா குளங்களால் பிழை!
- " தளிர் அண்ணா" சா. சுரேஷ்பாபு

கவிதைக்குக் குறுகிய வடிவம் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. அந்தச் சிறப்பை ஹைக்கூ,சென்ரியு, லிமரைக்கூ பெற்றுள்ளன. சொற்கள் குறையும் பொழுது சொற்களுக்கிடையே மௌனங்கள் கூடுகின்றன. இந்த மௌனங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சிந்திக்கும்பொழுது நமக்குள் கூர்மைப்படுகிறோம். இந்தத் திசையில்தான் அந்தக் கவிதைகள் நம்மோடு ஒட்டுகின்றன. உறவாடுகின்றன. அவை நம்மோடும் உரையாடுகின்றன. குறுகிய வடிவம் என்பதன் காரணமாகப் படிமம், குறியீடு, தொன்மம் முன்னுக்கு வருகின்றன. அவைதான் கவிதைக்கு உயிராய் அமைகின்றன என்று சொல்வதில் தவறு இல்லை என்பார் ஞானி.

இன்று தமிழில் இவ்வகை வடிவங்களைத் தவிர ஹைபுன், லிபுன், குறட்கூ, சீர்க்கூ, கஸல் எனப் பல வடிவங்கள் உருவாகிக் கொண்டு வருகின்றன. 
காண்க : www.rameshpoet.blogspot.com 

Subbaier Ramasami

unread,
Feb 7, 2012, 9:30:32 AM2/7/12
to santhav...@googlegroups.com
bharathiyar has translated japanese hiku and had given one of his articles on poetry. That seems to be the first hiku in Tamil.

You have mentioned about limeriku. I think it is different from limeric.

Here in Santhavasantham a masterly research was done by Dr, Ananthanarayanan (Our Ananth)and he has compiled a fine collection of  limerics(kurumba)and in fact we have rewritten grammar for limeric.  Mahakavi of Srilanka was a master in composing limerics

Ramasami

I do not know which tamil scholars have accepted hiku in tamil in its present form.

Ramasami

2012/2/6 Ramesh Ph.D., <poetr...@gmail.com>

Raja.Tyagarajan

unread,
Feb 7, 2012, 3:11:59 PM2/7/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
துளிப்பாக்களைப் பற்றிய விவரங்களைக் கண்டேன்.  முகநூலின் நான்கு கட்டுரைகளாக நான் எழுதிப் பகிர்ந்து கொண்ட குறிப்புகளை இங்கே பகிர்கிறேன்.

முன்னர் ஒரு முறை துளிப்பாக்களின் இலக்கண அமைப்பினைப் பற்றியொரு குறிப்பினை எழுத்தி இருந்தேன். அதன் பின்னர், பாவலர் திரு கரிசலார் அவர்களுடன், ஒருமுறை துளிப்பாக்கள், இயைதுளிப்பாக்கள், நகைதுளிப்பாக்கள், அவற்றின் அமைப்புகள், படிம உத்திகள் இவற்றை சில எடுத்துக் காட்டுகளுடன் மடலாடல்கள் செய்திருந்தேன்.

இவற்றை பல புத்தகங்களில் இருந்தும், இணையத்தில் சென்னை பல்கலை கழக பாடங்களில் இருந்தும் நான் அறிந்தேன். ஆனால் நான் அதிகம் இவ்வகைப் பாக்களை ஏனோ இயற்ற முற்படவில்லை! இதில் வரும் விவரங்கள் எல்லாமே நான் படித்து அறிந்தவையே! சென்னை பல்கலைக் கழக பாடத்திட்டத்திற்கு என் உளமார்ந்த நன்றி. துளிப்பாக்கள் வகையிலான கவிதை இயற்ற வேண்டும் என்று முனையும் அன்பர்களுக்கு இந்த கட்டுரை உதவும் என்று நம்புகிறேன்.

ஜப்பானிய இலக்கியத்தில் உருவான ஹைக்கூ, 5-7-5 என்ற அசையமைப்பு கொண்டு, ஜென்(Zen) குருமார் தத்துவத்தை பரப்புதற்கும், இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. இதுவல்லாது வேறு கருக்களைக் கொள்வது துளிப்பா ஆகாது என்பனர் பலர். தமிழிலக்கியத்தில் இவ்வடிவம் படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திகளில் அமைக்கப்படுவதோடு, சமூக விமர்சனத்திற்கும் சமுதாயக் கேடுகளைச் சாடுதற்கும் தமிழ்த் துளிப்பா அன்பர்கள் கைக் கொள்கின்றனர் எனலாம்.

ஹைக்கூ என்கிற துளிப்பா-1

படிமம்:

துளிப்பாவில் பெரிதும் கையாளப் பெறுவது படிம உத்தியேயாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புல உணர்வுகளையும் அனுபவித்தவாறே வெளியிடுகின்ற உணர்ச்சி வெளிப்பாடே படிமம் எனப்படும். வருணனைத் திறன் மிக்கது இது.

(எ-கா):

1. கட்புலப் படிமம்

சாரல் அடிக்கிறது

ஜன்னலைச் சாத்தும்போது மரக்கிளையில்

நனைந்தபடி குருவி (பரிமள முத்து)

2. விளையாட்டுப் படிமம்

பம்பரம் சுற்ற

நல்ல கயிறு

எறும்பின் பாதை (மித்ரா)

3. அச்சு வடிவக் காட்சிப் படிமம்

அதிக சுமையா?

மெ. .ல் . . .ல நகரும்

நத்தை (மு.முருகேஷ்)

குறியீடு:

செறிவான கவிதை வடிவத்திற்குக் குறியீடுகள் பெரிதும் உதவுகின்றன. ‘ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் (object), குறியீடு எனப்படுகிறது. ஒரு குறியீடு மற்றொன்றிற்குப் பதிலாக நிற்கலாம்; சுட்டிக் காட்டுவதோடு மட்டுமேகூட அமைந்து விடலாம். இயற்கை, சமயம், வாழ்க்கை என்பனவற்றைச் சுட்டுவனவாகவே அமைவதே பெரும்பான்மை எனலாம்.

(எ-கா):

1. இயற்கைக் குறியீடு

அந்தக் காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல் (அமுதபாரதி)

2. சமயக் குறியீடு

இதயத்தில் இறுக்கம்

இதழ்களில் மௌனம் இங்கே

சிலுவையில் நான் (பரிமள முத்து)

3.வாழ்க்கைக் குறியீடு

உழுதுவந்த களைப்பில்

படுக்கும் மாடுகள்

காயம் தேடும் காக்கை (அறிவுமதி)

(தொடரும்)

----- Original Message -----
Sent: Tuesday, February 07, 2012 8:00 PM

Raja.Tyagarajan

unread,
Feb 7, 2012, 3:15:32 PM2/7/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
துளிப்பாக்களின் வரிசையில் இஃது இரண்டாவது கட்டுரை.
 
ஹைக்கூ என்கிற துளிப்பாக்கள்-2
 

முந்திய கட்டுரையில் நான் சென்னைப் பல்கலைக் கழகப் பாடங்களில் நான் அறிந்த, ஹைக்கூ எனப்படும் துளிப்பாக்களின், படிமம், குறியீடு இவற்றையும், அவற்றின் உள்ளீடான கட்புலம், விளையாட்டு, அச்சுக் காட்சி முதலான படிமங்களையும், இயற்கை, சமயம், வாழ்கை முதலான குறியீடுகளைப் பற்றிச் சொன்னேன்.

அதன் தொடர்ச்சியாக, துளிப்பாக்களில் காணும், தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் முதலானவற்றையும் அவற்றின் உள்ளீடானவற்றைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் சொல்ல முயல்கிறேன்.

தொன்மம்:

புராண, இதிகாச நிகழ்வுகளை ஒட்டியோ, திரித்தோ, மறுத்தோ இக்கால நிலைக்கேற்ப குறியீடு ஆக்குதல் தொன்மப் படிமம் ஆகும்.

(எ-கா):

கல்லாகவே இருந்துவிடுகிறேன்

மிதித்து விடாதே

சுற்றிலும் இந்திரன்கள் (ராஜ.முருகுபாண்டியன்)

என்பது கௌதமரின் சாபத்தால் கல்லான அகலிகை இராமனின் கால்பட்டுச் சாபவிமோசனம் அடைந்து பெண்ணான நிகழ்வை அடியொற்றியது. பெண்ணாக இருப்பதினும் கல்லாக இருப்பதே பாதுகாப்பானது என்றால் இச்சமூகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பது இதன்வழிப் புலப்படுகின்றது.

(எ-கா):

ஆராய்ச்சிமணி அடித்த மாடுகள்

அரண்மனைத் தட்டில்

பிரியாணி (அவைநாயகன்)

என்னும் கவிதை, மனுநீதிச் சோழனிடம் முறையிட்ட கன்றை இழந்த பசுவின் கதறலையும், அக்கதறல் கேட்டுத் தன் மகனையே கொன்று முறைசெய்த மன்னனின் நீதிமுறையையும் கொண்டு அமைக்கப் பட்டது. நீதிமன்றங்கள், தக்க தீர்ப்பு வழங்காமல் குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பதையும், முறையிட வந்தவர்களையே தண்டிப்பதுமாகிய நிலையில் இருக்கும் நாட்டு நடப்பினைப் புலப்படுத்துகின்றது.

முரண்:

மாறுபடத் தொடுப்பது முரண் எனப்படும். இது சொல் முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண் என வகைப்படுத்தப்படும்.

1. சொல் முரண்

தாழ்வு இல்லை

உயர்வே குறிக்கோள்

விலைவாசி (ல.டில்லிபாபு)

என்பதில் தாழ்வு x உயர்வு எனச் சொல் முரண் அமைந்தது.

2. பொருள் முரண்

அன்புடைமை அதிகாரத்தை

ஆசிரியர் கற்பிக்கிறார்

கையில் பிரம்புடன் (கழனியூரன்)

என்னும் கவிதையில் அன்புடைமைக்கு முரணாகத் தண்டனை எனும் பொருண்மை இணைத்துக் கூறப்படுகிறது.

3. சொற்பொருள் முரண்

மௌன ஊர்வலம்

முடிந்தது

கலவரத்தில் (பா.உதயகண்ணன்)

என்னும் கவிதையில், மௌனமும் கலவரமும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுகின்றன.

அங்கதம்:

சமூகக் கேடுகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நயம்பட எடுத்துரைத்துத் திருத்த முயல்வது அங்கதம் எனப்படும்.

(எ-கா):

எங்கள் மக்கள்

எப்போதும் நலமே தெருவுக்கு

நான்கு டாக்டர்கள் (பரிமள முத்து)

என்பதில் நலத்திற்குக் காரணம் நோய் வாராமை அன்று, நோய் நிலையாமையே எனக் கூறுவதாக அமைகின்றது.

(எ-கா):

நான்கு கால்களும்

பல கைகளுமாய்

அரசாங்க மேசைகள் (தங்கம் மூர்த்தி)

என்னும் கவிதை, கையூட்டு அரசு அலுவலகங்களில் அங்கிங்கெனாதபடி பரவி நிலை பெற்றிருப்பதைப் புலப்படுத்துகின்றது.

இனி அடுத்த கட்டுரையில், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் இவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

(தொடரும்)

Raja.Tyagarajan

unread,
Feb 7, 2012, 3:19:05 PM2/7/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
துளிப்பாக்களின் வரிசையில் இஃது மூன்றாவது கட்டுரை.
 
ஹைக்கூ என்கிற துளீப்பாக்கள் - 3
துளிப்பாக்களில் காணப்படும் விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் முதலான படிமங்களை நான் பல நூல்களில் இருந்தும், சென்னைப் பல்கலைக் கழக பாடங்களில் இருந்தும் அறிந்தேன். துளிப்பாக்களை இயற்ற விரும்பும் அன்பர்க்கு உதவுமென்று இங்கே சந்தவசந்தத்தில் பகிர்கிறேன்.

பழமொழி:

பழமொழிகளை நயமுறக் கையாண்டு கருத்தை விளக்குதலும் உண்டு.

(எ-கா):

கந்தலானாலும் கசக்கிக்கட்டு

கசக்கினான்

கிழிந்து போனது (மலர்வண்ணன்)

என்னும் கவிதையில் தூய்மைக்குச் சொல்லப்பட்ட பழமொழியை, வறுமையைச் சித்திரிக்க எடுத்துக் கொண்டுள்ளார் கவிஞர்.

(எ-கா):

ஐந்தில் வளைப்பதற்கோ

பிஞ்சு முதுகில்

புத்தக மூட்டைகள் (பாட்டாளி)

என்பதில், ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமோ?’ எனப் பணிவுக்குக் கூறப்பட்ட பழமொழி இன்றைய கல்வி முறையை விமரிசிக்கக் கையாளப்பட்டுள்ளது.

வினாவிடை:

கவிதை முழுவதும் வினாவாக அமைந்து, தலைப்பு அதற்குரிய விடையாக அமைவதுண்டு. மூன்றாம் அடியே விடையாவதும் உண்டு.

(எ-கா):

வெட்ட வெட்ட

வளரும் நீ என்ன

விரல் நகமா? (பரிமள முத்து)

என்னும் கவிதைக்குரிய பதிலாகிய கவலை இதற்கான தலைப்பாக அமைகிறது.

(எ-கா):

தாகம் தணிக்குமோ

கடல்நீர்

வெட்டிப்பேச்சு (செந்தமிழினியன்)

என்பதில், மூன்றாமடி தணிக்காது எனப்பதில் தருவதோடு, வெட்டிப் பேச்சும் அத்தகையதே என்பதை இணைத்துணர்த்துகின்றது.

உவமை:

புதுப்புது உவமைகளைக் கையாளும் உத்தியையும் துளிப்பாவில் காண்கிறோம்.

(எ-கா):

கவிதைகள் எழுத

நல்ல தாள்

பனிப்புகை (மித்ரா)

என்பதில் பனிப்புகை வெண்தாளாக நிற உவமை ஆக்கப்பட்டுள்ளது.

(எ-கா):

நெருப்புதான் பெண்

அம்மாவிற்கு அடிவயிற்றில்

மாமியாருக்கு அடுப்படியில் (அறிவுமதி)

என்னும் கவிதையில், மணமாகும்வரை கவனித்து வளர்க்க வேண்டியிருப்பதால் தாய்க்கு அடி வயிற்றில் கட்டிய நெருப்பாகவும், சமையல் அறையிலேயே இருத்தப்படுவதாலும்,வரதட்சணைக் கொடுமை காரணமாகச் சமையலறை அடுப்பு வெடித்து அழிய நேர்வதாலும் மாமியாருக்கு அடுப்படி

நெருப்பாகவும் அமைகிறாள் பெண்.

உருவகம்:

பொருளும் உவமையும் வெவ்வேறு அல்ல என்பது உருவகம்.

(எ-கா):

இடியின் திட்டு

மின்னலின் பிரம்படி

அழுதது வானக்குழந்தை (பல்லவன்)

என்பதில் இடி திட்டாகவும், மின்னல் பிரம்படியாகவும், மழை அழுகையாகவும், மேகம் தண்டிக்கப்படும் குழந்தையாகவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளன.

(எ-கா):

பள்ளிக்குப் போகாத சிறுமி

செல்லமாய்க் குட்டும்

ஆலங்கட்டி மழை (அறிவுமதி)

என்னும் கவிதையில் ஆலங்கட்டி மழை ஆசிரிய நிலையில் கருதப்பட்டுக் குட்டுவதாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது.

இனி அடுத்த கட்டுரையில் சென்றியூ எனப்படும் நகைதுளிப்பா பற்றிக் கூறுகிறேன்.

(தொடரும்)

----- Original Message -----
Sent: Wednesday, February 08, 2012 1:45 AM
Subject: Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

Raja.Tyagarajan

unread,
Feb 7, 2012, 3:23:22 PM2/7/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
துளிப்பாக்களை அடுத்து சென்றியூ எனப்படும் நகைதுளிப்பாக்களைப் பற்றிய கட்டுரை இஃது.


சென்றியூ எனப்படும் நகைதுளிப்பா

இதுவரை ஹைக்கூ என்கிற துளிப்பாக்களைப் பற்றிச் சொன்னேன். இப்போது நகைத்துளிப்பா (சென்றியூ) பற்றி கூறுகிறேன். இவையும் நான் சென்னைப் பல்கலைக் கழக பாடங்கள், பல நூல்களில் இருந்து அறிந்தேன்.

நகைதுளிப்பா (சென்றியூ): துளிப்பாவை அடுத்துச் சிறந்திருப்பது நகைதுளிப்பாவாகும். ஜப்பானின் சென்றியூ என்னும் கவிதை வகையே தமிழில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஹைக்கூவின் அங்கத வடிவம் சென்றியூ. ஹைக்கூ இயற்கை உலகில் பார்வை செலுத்துகிறது எனில், மக்கள், பொருள், சம்பவங்கள் ஆகியவற்றின் மீதான பார்வையைக் குறிப்பது சென்றியூ எனலாம். 5+7+5=17 என்னும் அசைகள் அமைப்போடு ஒழுங்கு வகைப்பட்டு ஒவ்வொரு கவிதையும் இருக்கும். சென்ரியு கவிதைகள் நடுத்தர மக்களின் அனுபவம், உணர்வு போன்றவற்றைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை அலுப்பை அகற்றும் சாதனமாக அமைந்து சுய அறிவுக்கு ஏற்றதாக அமைகின்றன. இவை மறைபொருள் தன்மை உடையனவாய் இருப்பதால் ஒரே சமயத்தில் ஒன்றிரண்டு என்று கொஞ்சம்

கொஞ்சமாகப் படிப்பதே பயனளிப்பதாக அமையும்.

மூன்றடி, தலைப்பு இல்லாமை என்பன ஹைக்கூ, சென்றியூ என்னும் இரண்டிற்குமான ஒற்றுமைப் பண்புகள். படிம அழகு, தத்துவச் சார்பு, இயற்கைத் தரிசனம் போன்ற கூறுகள் ஹைக்கூவில் சிறப்பிடம் பெறுகின்றன. அன்றாட வாழ்வைப் படம் பிடித்தல் ;ஆழமற்றிருத்தல்; வேடிக்கை, விடுகதை, நகைச்சுவை போன்ற தன்மைகளுடன் பொன்மொழி போன்றிருத்தல் ஆகியவை சென்றியூவின் தனிச் சிறப்பாகும். நகை துளிப்பாவைத் தமிழுக்கு அறிமுகம் செய்துள்ள ஈரோடு தமிழன்பனின் ‘ஒரு வண்டி சென்றியூ’ என்னும் நூலிலிருந்து சில கவிதைகளை அரசியல், உறவுகள், கடவுள், குழந்தையுள்ளம் என்னும் தலைப்புகளிலான எடுத்துக் காட்டுகளை அவரது நூலில் காணலாம்.  சில எடுத்துக் காட்டுகள் கீழே:

கவிஞர் ஈரோடு தமிழன்பனின் “ஒரு வண்டி சென்றியூ” என்ற நூலிலிருந்து சென்றியூ எனப்படும் நகைதுளிப்பாக்களுக்கான எடுத்துக் காட்டுகள் கீழே:- (நன்றி: சென்னை பல்கலைக் கழக பாடங்கள்)

அரசியல்:

அரசியல்வாதி ஆவதற்கென்று தனித்தகுதி தேவையில்லை. எப்படிப்பட்டவர்களும் அதில் சென்று

முன்னேறி விடலாம் என்பதை,

அது வராவிட்டால் இது

இது வராவிட்டால் அது

எதுவும் வராவிட்டால் அரசியல் (ப.66)

என்னும் கவிதையில் நையாண்டி செய்கிறார் கவிஞர்.

கட்சிகள்தோறும் காணப்படும் கூட்டங்கள், தானே திரண்டனவல்ல ; திரட்டப்பட்டனவேயாகும். இதனை,

ஆயிரம் பேரோடு

வேட்பு மனுத்தாக்கல்

ஐம்பது வாக்குகள் (ப.30)

என்னும் கவிதையில் பட்டவர்த்தனமாக்கியுள்ளார்.

‘மன்னன் எப்படி, மக்கள் அப்படி’ என்பார்கள். பொறுப்பான பதவியில் உள்ள அமைச்சர் பெரு மக்களே, தாங்கள் கூடும் பொதுச்சபையில் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில்லை என்றால், இவர்களால் ஆளப்படும் நாடு என்னாவது?

சட்டம் ஒழுங்கைக்

காப்பாற்ற முடியவில்லை

சட்டசபையில் (ப.31)

என்பது அதைச் சுட்டும் கவிதை.

பதவியிலிருக்கும்வரை அதிகார தோரணையில் தன் விருப்பப்படி நடப்பவராகவும் மக்களைப் பற்றிக்

கவலைப்படாதவராயும் இருப்பவர், வீட்டுக்கு அனுப்பப்பட்டதும் நாட்டைப் பற்றிச் சிந்திக்கிறார்.

பதவி இழந்த அமைச்சர்

அறிக்கை

இனி நாட்டுக்கு உழைப்பேன் (ப-63)

என்னும் கவிதை அது பற்றியதாகும்.

அரசியல்வாதிகளாகிய கட்சித் தலைவர்கள் சுய நலவாதிகள் ;தொண்டர்கள் அப்பாவிகள் என்பதை,

கட்சி தொண்டர்களுக்கு

காசு குடும்பத்துக்கு

தலைவர் மரணமுறி (ப.92)

என்னும் கவிதை புலப்படுத்துகின்றது.

உறவுகள்:

இன்றைய வாழ்வில் உறவுகள், பணத்தையே குறியாகக் கொண்டுள்ளன. மனைவியின் எண்ணமும் அதுவாக இருப்பதே வியப்பு ; கசப்பான உண்மை.

வழியனுப்ப வந்த மனைவி

கண்ணீரோடு சொன்னாள்

பணம்அனுப்ப மறந்திடாதீங்க (ப.97)

என்பது அது சார்பான கவிதை.

அண்ணன் தம்பி உறவும்கூடப் பொருளாதாரத்தை மையமிட்ட நிலையில் ஐயப்பாட்டிற்கு உரியதே என்பதை,

அயர்ந்த தூக்கத்தில் அண்ணன்

தம்பிவைத்தான் தலைமாட்டில்

ஊதுவத்தி (ப.58)

என்னும் கவிதை உணர்த்தும். ‘ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி’ என்னும் பழமொழிக் கருத்துடையது இது.

கடவுள்:

வழிபாட்டிடம், வணிக இடமாகி விட்டது. நல்ல உள்ளம் படைத்தவர்களும் பொருளாசைக்கு அடிமைப்பட்டுப் பண்பு குன்றி விடுகின்றனர் என்பதை,

குருக்களாகி விட்ட கடவுள்

மறுபடியும் கடவுளாகவில்லை

தட்டுநிறைய காணிக்கை (ப.27)

எனக் கடவுள்மேலிட்டுக் குறிப்பிடுகின்றார்.

குழந்தையுள்ளம்:

வெளியுலகிற்குச் சென்று விளையாட விரும்பும் குழந்தையை வீட்டில் அடைத்துப் பழைய கதைகளைத் திணித்தல் கூடாது. அனுபவமே தலைசிறந்த கல்வி. கதைகள் கட்டுச் சோறு போன்றன.

கதை வேண்டாம்

கதவைத் திறந்துவிடு

குழந்தை அடம் (ப.77)

என்னும் கவிதை இக்கருத்தை உணர்த்துகின்றது. சொல்புத்தி விடுத்துச் சுயபுத்தியுடன் வாழும் குழந்தையே சாதிக்கவல்லதாகும்.

இனி அடுத்த கட்டுரையில் லிமரைக்கூ என்னும் இயைதுளிப்பாக்கள் பற்றிக் கூறுகிறேன்.

(தொடரும்)

 
----- Original Message -----
Sent: Wednesday, February 08, 2012 1:49 AM
Subject: Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

அன்புடையீர்

Raja.Tyagarajan

unread,
Feb 7, 2012, 3:28:55 PM2/7/12
to santhav...@googlegroups.com
அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
துளிப்பா/ நகைதுளிப்பா அடுத்து இறுதியாக லிமரைக்கூ எனப்படும் இயைதுளிப்பா பற்றிய கட்டுரை இஃது.
 
லிமரைக்கூ எனப்படும் லிமரைக்கூ
 

இதுவரை ஹைக்கூ (துளிப்பா), சென்றியூ (நகைதுளிப்பா) இவற்றைப் பற்றி நான் பல நூல்களில் இருந்தும், சென்னை பல்கலைக் கழக பாடங்களில் இருந்தும் அறிந்தவற்றை முந்திய கட்டுரைகளில் பகிர்ந்தேன். இந்தக் கட்டுரையில், லிமரைக்கூ என்கிற இயைதுளிப்பாக்கள் அல்லது இயைபுத் துளிப்பாக்கள் பற்றி கூறுகிறேன். (நன்றி சென்னை பல்கலைக் கழகப் பாடங்கள்)

இயைபுத் துளைப்பாக்கள் என்னும் லிமரைக்கூ என்பது வேறொன்றும் இல்லை. நம்முடைய மரபுக்கடையில், தொடை இலக்கணத்தில் வரும் இயைபுத் தொடை போன்றதே. (எ-கா), நந்தவனத்தில் ஒராண்டி, நாலாறுமாதமாய் குயவனை வேண்டி, கொண்டுவந்தாதொரு தோண்டி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி. இந்தபாடலில் வரும் ஆண்டி/ வேண்டி/ தோண்டி/ தாண்டி என்ற சொற்களில் பயில்வது இயைபு.

இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ): அங்கதத்தோடு மூன்றடிக் கவிதையில் முதலடியின் ஈற்றுச் சீரும் மூன்றாமடியின் ஈற்றுச் சீரும் இயைபுத் தொடை அமையப் பாடப்படுவது இயைபுத் துளிப்பா. இதன்

இரண்டாமடி ஏனைய இரண்டடியையும் விட நீண்டிருத்தல் சிறப்பு.

(எ-கா): ஈரோடு தமிழன்பனின் ”சென்னிமலை கிளியோபாத்ராக்கள்” என்னும் நூல் இத்தன்மைத்தாகும். அந்நூற் கவிதைகளில் சிலவற்றை முரண்பாடு, சுயநலம், பொய், தன்பலம் அறியாமை என்னும் தலைப்புகளில் இப்போது காண்போம்.

முரண்பாடு:

சொல்லொன்று, செயலொன்றாய் மனிதன் வாழ்கின்றான். ‘ஊருக்குத்தான் உபதேசம்’ என்பது அவன் கொள்கையாக இருக்கின்றது.

(எ-கா):

பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடு கோழி
மீன் நண்டு வகையே அதிகம் (ப.28)

என்னும் கவிதை அதனைப் புலப்படுத்துகின்றது.சொல்லை வைத்து அன்பைப் புரிந்து கொள்ள முடியாத காலமிது. நண்பனைப் போல் பழகும் உட்பகையாளர் பலர் நாட்டில் உள்ளனர். இதனை,

வார்த்தைகள் பாசவெள்ளம்
நண்பர்க்கு நண்பர் தோண்டுவதோ வெட்டிப்
புதைக்க ஆழப் பள்ளம் (ப.41)

இக்கவிதை நன்குணர்த்தும்.

சுயநலம்:

தம் இன்பத்திற்காகப் பிறர்க்குத் துன்பம் தருதல் தகுதியுடையதாகாது.

புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய் இரண்டும்
விற்றால் வாழ்வில் சிறப்பாய் (ப.18)

என்னும் கவிதை. சமுதாயத்திற்குத் தீங்கு தருவதை தடைசெய்யாமல், தீங்கு என்று அறிவுறுத்துவதோடு நின்று, அத்தீங்குப் பொருள்களை உற்பத்தி செய்தும் வணிகம் செய்தும் வாழ்வோரைச் சிறப்புறச் செய்வதாய் அரசு விளங்குவதைச் சுட்டிக் காட்டுகின்றது.

பொய்:

மனிதர்கள் பலர், இல்லறத்தின் வேராம் மனைவியை விட்டுவிட்டுத் தகாத நெறி ஒழுகுதலையும் அதற்காகப் பொய் பேசுதலையும் இயல்பாகக் கொண்டு வாழ்கின்றனர். அவர்களை,

மணக்கும் மதுரைமல்லி
வாங்கிப் போனான் காதலிக்கு
மனைவி பேரைச் சொல்லி (ப.56)

என்னும் கவிதை அடையாளம் காட்டுகிறது.

தன்பலம் அறியாமை: ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பார்கள். உலகில் தன் வாழ்வெல்லாம் துன்பம் என்றும், பிறர்வாழ்வெல்லாம் இன்பம் என்றும் கருதி மயங்குவோர் பலர். தரமாகக் கவிதை எழுதி இருந்தும், எதுகைமோனை வரம்போடு எழுதுவது தான் கவிதை என்று பிறர் கருதுவதை விரும்பியவன், யாப்புக் கற்க முயன்றதாக,

கவிதை எல்லாம் விற்றான்
கைக்கு வந்த காசைக் கொண்டு
தேமா புளிமா கற்றான் (ப.91)

என்னும் கவிதையில் எடுத்துரைக்கின்றார் தமிழன்பன்.

துளிப்பாக்கள் பற்றி நான் அறிந்தவற்றை இந்தக் கட்டுரைகளில் இயன்றவரை எடுத்துரைத்து இருக்கிறேன். 90 விழுக்காடு அனைத்துமே சென்னை பல்கலைக் கழக பாடங்களில் நான் படித்தது. மேலும் சிலவற்றை ஈரோடு தமிழன்பன் நூல்களில் இருந்தும் அறிந்தேன். அனைவர்க்கும் என்னுடைய உளமார்ந்த நன்றி, இந்தக் குறிப்புகளை எழுத உதவியமைக்கு.

(முற்றும்)

----- Original Message -----
Sent: Wednesday, February 08, 2012 1:53 AM
Subject: Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 9

அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 

Subbaraman NV

unread,
Feb 7, 2012, 8:21:41 PM2/7/12
to santhav...@googlegroups.com
Thanks in tons. Here are ten:

HAIKU on FOG-MIST

Nature's fine gift-mist
Manifestation of God
People enjoy swift!

Life's pain and pleasures
Sure disappear like mist
Why, then, tears and cheers!

Cool beautiful fog
Lifting to joys of heaven
Pleasant act of God!

Nature's gift is mist
Gracing the humanity
Much lighter than trust!

Mist in autumn's midst
Pleasant to see and enjoy
Never Nature's twist!

Grand misty weather
Morning walk made a pleasure
For HIM a feather!

Sorrow is a phase
To be taken in its stride
As fog in the grass!

Mist is sure mystic
Love and hate, the mist of life
Life- a mist and mystic!

Man to love and live
Mistful earth and mystic world
Till death one should give!

Mist- matter of joy
To enjoy all one's life
Pleasure- nature's ploy!


Within the limits of modesty, I would like to share a statement made by Dr.Kazuyosi Ikeda, PhD;D.Sc; D.Litt; D.Cult; D.Envir.Sc
A world renowned Haikuist:

".......................................The poet Subbaraman's haiku are exactly haiku originating in Japan. But in Japan, there is no concept of rhyme; thus his rhymed haiku surpass Japanese haiku in beauty. The beauty of both the contents and the form of his haiku is worth esteeming very  highly......................."

I am also glad to share with you that my profile has entered the Registry of the Haiku Foundation in US.

Sorry, for interfering with the fine intellectual discussion on Haiku by great authorities on the Art of Writing Short Verse.

Ramesh Ph.D.,

unread,
Feb 7, 2012, 9:48:17 PM2/7/12
to santhav...@googlegroups.com
வணக்கம் ஐயா. 

தங்களின் விரிவான தகவல்கள் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்... தற்போது காண்பவர்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.

விரிவாகப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.


நன்றி

Subbaier Ramasami

unread,
Feb 8, 2012, 5:16:22 AM2/8/12
to santhav...@googlegroups.com
அருமையான பாடல்கள். Life's pain and pleasures
Sure disappear like mist
Why, then, tears and cheers!  எனக்கு மிகவும் பிடித்தது.   வாழ்த்துகள்       அன்புடன்   இலந்தை

2012/2/8 Subbaraman NV <nvsubb...@gmail.com>

Subbaraman NV

unread,
Feb 8, 2012, 11:38:44 PM2/8/12
to santhav...@googlegroups.com
இலந்தையார் அவர்களுக்கு மிக்க நன்றி.
என்.வி.சுப்பராமன்

2012/2/8 Subbaier Ramasami <elan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Feb 9, 2012, 12:38:41 AM2/9/12
to santhav...@googlegroups.com
ஆகா..எல்லா ஹைக்கூ வகையும் படித்து மகிழ்ந்தேன்.
மிக சுவாரச்யமாகத்தான் இருக்கிற்து.. உங்க எல்லாருடைய ஆராய்ச்சியும்,,வாழ்க
யோகியார்
****************************
Reply all
Reply to author
Forward
0 new messages