(இப்பாடலை எனது உறவினர் ஒருவர் அன்புடன் பாடித் தந்திருக்கிறார். அவரது இனிமையான குரலில் கேட்க :
(குறிப்பு: மனத்தில் தோன்றியவுடன் எழுதித் தந்ததால் சில இலக்கண விதிகளைப் பின்பற்றவில்லை)
ஜெகம் புகழ்ந்திடும்
திருவள்ளூர் அதைத்
தினமும் பாடிடுவோம் - அங்குத்
திகழும் நாகணைத் துயிலும் ராகவன்
அருளை நாடிடுவோம்
(சரணம்)
கொடிய நோயையும்
கரைய வைத்திடும்
கருட வாகனனாம் - மனக்
குறைகள் தீர்த்தருள்
புரியும் வைத்திய
வீர ராகவனாம் (ஜெகம் புகழ்ந்திடும்) 1.
உடைந்த நெஞ்சையும்
உயர வைத்திடும்
உறுதி நாட்டிடுவான் - நம்முள்
உறையும் வல்லிருள்
மறைய வைத்திடும்
ஒளியும் காட்டிடுவான் (ஜெகம் புகழ்ந்திடும்) 2.
எழில் விளங்கிடும்
விழி இரண்டினில்
அருள் பொழிந்திடுவான் - மலர்த்
திரு வசித்திடும்
உளம் மகிழ்ந்து பொன்
வளம் வழங்கிடுவான் (ஜெகம் புகழ்ந்திடும்) 3.
ஒலி முழங்கிட
ஒளிரும் சங்குடன்
சுழலும் சக்கரத்தான் - எங்கும்
துயர் ஒழிந்திட
நலம் மிகுந்திடத்
திகழும் பொற்பதத்தான். (ஜெகம் புகழ்ந்திடும்) 4.