வெங்கைக் கோவைச் செய்யுள் (Re: பயிற்சி இல்லாமலேயே ??)

39 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 28, 2010, 4:44:17 PM11/28/10
to மின்தமிழ், santhav...@googlegroups.com

படித்தவுடன் புரிந்தால் சீவைணவத்தில் ஆழ்வார் பாசுரங்களுக்கு
இத்தனை ஈடுகள் ஏன் தோன்றவேண்டும்?

இன்னொரு உதாரணம் காட்டுகிறேன். 17-ஆம் நூற்றாண்டில்
பெஸ்கியை எதிர்த்தவர் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள்.
அவர் செய்த ஏசுமத நிராகரணம் போன்ற நூல்களை
பிரிட்டிஷ் கலெக்டர் வால்ட்டர் எல்லியட் போன்றோர்
ஏடுகளை வாங்கி அழித்துவிட்டனர் என்பார்கள்.
எல்லியட் தான் தேம்பாவணியை பெஸ்கி எழுதினார்
என்று பெஸ்கி செத்து 100 வருஷம் கழித்து கிறித்துவம்
இந்தியாவில் வளர்தற்காக அச்சிட்டவர். உண்மையில்
பாடல் நூல் செய்தவர் சுப்ரதீபக் கவிராயர் அவர்கள்.

மிக ஆழமாகத் தமிழறிந்தவர் சிவப்பிரகாச அடிகளுக்கு
மணிமேகலை நூல் கிடைத்தது. படித்துப் பார்த்தார்,
விளங்கவில்லை. வெங்கைக் கோவையில்
பாடியுள்ளார்:
கொந்தார் குழல் மணிமேகலை நூல் நுட்பம் கொள்வதெங்ஙன்?
(முழுப்பாடலும் வெங்கைக் கோவையில் இருக்கிறது.
அழகான சிலேடைச் செய்யுள். யாராவது பார்த்து பாட்டைத்
தருக. நன்றி)

பயிற்சியில்லாமல் பழந்தமிழ் நூல்களை விளங்கமுடியாது.
ஜைந நூல்களுக்கு எத்தனையோ பேர் 2 முறை
உரை எழுத வேண்டி இருந்தது. ஏன் தெரியுமா?
பொருள் விளங்கவில்லை.

ஏ. கே. ராமநுஜன் Poems of Love & War-ல் சொல்வது
20-ஆம் நூற்றாண்டு உரையில்லாமல் சங்க இலக்கியங்கள்
தனக்கு விளங்கா என்பதே. சாமிநாதையரும் இதனைச்
சொல்லியிருக்கிறார். முதலில் சங்க இலக்கியங்கள்
என்ன பொருள் என்றே புரியாமல் திகைத்த
தருணங்கள் பல.

பழமையான க்ரந்தச் சுவடிகளில்
திருப்பாவை, திருவெம்பாவை நூல்கள்
கிடைக்கின்றன. அவை என்ன என்று
முதலில் விளங்கா. செம்மொழி க்ரந்த
லிபியில். படிக்க, படிக்கப் புரிந்துகொள்ள
இயல்கிறது. பழங்கன்னடம் (ஹள கன்னடம்)
நாயன்மார் கதைகளை ரகளெ என்னும்
யாப்பில் தருகிறது, அவற்றை கிரந்தத்தில்
எழுத முடியும். தொன்மையான தொடர்ச்சியுடைய
க்ரந்த த்ராவிட லிபி தமிழரின் ஒரு மரபுச்
செல்வம். விரும்புவோர் படிக்க உதவ வல்லது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 28, 2010, 6:52:48 PM11/28/10
to மின்தமிழ், santhav...@googlegroups.com

On Nov 28, 4:15 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:


> On Nov 28, 10:44 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > மிக ஆழமாகத் தமிழறிந்தவர் சிவப்பிரகாச அடிகளுக்கு
> > மணிமேகலை நூல் கிடைத்தது. படித்துப் பார்த்தார்,
> > விளங்கவில்லை. வெங்கைக் கோவையில்
> > பாடியுள்ளார்:
> > கொந்தார் குழல் மணிமேகலை நூல் நுட்பம் கொள்வதெங்ஙன்?
> > (முழுப்பாடலும் வெங்கைக் கோவையில் இருக்கிறது.
> > அழகான சிலேடைச் செய்யுள். யாராவது பார்த்து பாட்டைத்
> > தருக. நன்றி)
>

> Interesting bit of information - a top notch Tamil scholor like
> சிவப்பிரகாச அடி who was schooled in traditional tamil teaching could
> not understand Manimekalai.
>
> Vijayaraghavan


வெங்கைக் கோவை

பாங்கி தலைமகளவயவத்தருமைசாற்றல்

மந்தா கினியணி வேணிப்பி ரான்வெங்கை மன்னவநீ
கொந்தார் குழன்மணி மேகலை நூனுட்பங் கொள்வதெங்கன்
சிந்தா மணியுந் திருக்கோ வையுமெழு திக்கொளினும்
நந்தா வுரையை யெழுதலெவ் வாறு நவின்றருளே

நா. கணேசன்


Here is the whole poem, which I posted 9 years ago.

From naga ganesan@... Fri Apr 12 08:05:04 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agat...@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 1); 12 Apr 2002 15:05:04 -0000


--- In agathiyar@y..., "naga_ganesan" wrote:
>
>

[...]
>
> ------------
>
>
> ஒரு தலைவனுக்கு ஒருத்தியிடம் காதல் அரும்பிவிட்டது.
> அவளின் தோழி சென்று அவளின் அங்க விசேடங்களைப்
> பேசுகிறாள். தலைவன் அந்தப் பாங்கியிடம் உருகுகிறான்.
> பனங்கருக்கால் செய்த கோவேறு கழுதை மேலேறி
> மடல் ஊர்வேன் என்கிறான்.
> (பெண்ணுக்கு மடல் ஏறி தன் காதலை வெளிப்படையாகச்
> சொல்லும் உரிமை தமிழில் இல்லை. தொல்காப்பியம்
> காண்க. ஆழ்வார் அம்மரபை மாற்றுகிறார்.)
>
> அப்படி மடல் ஊர்பவன் தன் கையில் ஒரு சித்திரத்தைக் கொடி
> பிடிப்பான். அந்தக் கொடியில் காதலியின் படத்தை
> வரைந்திருப்பான். தோழி அந்தத் தலைவியின் அழகை
> விளக்குமுகமாகச் சொல்கிறாள். "தலைவ, நீவிர்
> அவள் தலையில் இருக்கும் நெற்றிச் சுட்டியை வேண்டுமானால்
> எழுதி விடலாம், ஏன்? அவளது முக சௌந்தரியம் படத்தில்
> கொண்டுவந்து விடமுடியும். முக்கியமாகக் கொவ்வைச்
> செவ்விதழ். ஆனால், மேகலை ஆபரணம் அணிந்து
> நூல் போல இருக்கிற இடையழகைச் சித்திரத்தில்
> ஏற்றுவது எங்கனம்?!"
>
> நான் மிகவும் விருப்புற்ற தமிழ்ப் பாடல்களில் இதுவொன்று.
> சிவப்பிரகாச சுவாமிகள் (ஏற்கனவே இவர் பாடல்கள்
> சிலபற்றி எழுதியிருக்கிறேன்) திரு வெங்கைக் கோவையில்
> வருவது. பாடலைப் படியுங்கள். நான் மேலே சொல்வதுதான்
> பொருள். ஆனால் சுவாமிகள் மணிமேகலை என்னும் நூலைப்
> படிக்கச் சிரமப்பட்டிருக்கிறார் என்பதும் விளங்குகிறதல்லவா?
> வேறு சில நூல்கள் பெயரும் கவனிக்கவும்.
>
> பாங்கி தலைமகளவயவத்தருமைசாற்றல்
>
> மந்தா கினியணி வேணிப்பி ரான்வெங்கை மன்னவநீ
> கொந்தார் குழன்மணி மேகலை நூனுட்பங் கொள்வதெங்கன்
> சிந்தா மணியுந் திருக்கோ வையுமெழு திக்கொளினும்
> நந்தா வுரையை யெழுதலெவ் வாறு நவின்றருளே
>

SUBBAIER RAMASAMI

unread,
Nov 29, 2010, 12:19:52 AM11/29/10
to santhav...@googlegroups.com

மணிமேகலை நூலின் பிற்பகுதி சமயக் கருத்துகள் நிறைந்தது. தமிழ் தெளிவாகத் தெரிந்தாலும் சமயக்கருத்துகளை உள்வாங்கிக் கொள்வது கடினம்தான். நான் ஒருகாலத்தில் சங்க நூல்களை விரும்பிப் படித்தேன்.  மற்ற நூல்களை உரையுடன் படித்துத் தெளிந்தேன். ஆனால் மணிமேகலையின் பிற்பகுதியில் திணறினேன்.

தற்காலத்தில் அதற்குப் பல உரைகள் வந்துவிட்டன.

 

இலந்தை



2010/11/28 N. Ganesan <naa.g...@gmail.com>
>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Reply all
Reply to author
Forward
0 new messages