கவியரங்கம் 62 வெண்பா வித்தகம் - கருவூர் இனியன்

18 views
Skip to first unread message

கவிஞர் இனியன்

unread,
Jun 30, 2026, 10:19:13 AM (3 days ago) Jun 30
to சந்தவசந்தம்

இலந்தையார் தந்த ஈற்றடிகள் சிலவற்றுக்கு

அடியேன் புனைந்த வெண்பாக்கள்.

பண்ணளந்த மன்னன் பரந்தாமன் மூவடியால்

மண்ணளந்த விண்ணளந்த மாயோன்உன் -எண்ணத்துள்

தண்ணமு தாகவே தானமர்ந் துள்ளானே

கண்ணைமூ டிக்கொண்டு காண்.                 1

யார்க்கும் தெரியாமல் அம்கள்ளை மாந்தியே

வேர்கள் அரித்திட்ட வேம்புபோல் - சோர்வதை

ஊர்க்குறு மாக்கள் உவகை பெருகிட

பார்ப்பாரே பார்ப்பாரே பார்.                          2

 ஞாலமும் கைகூடும் நாம்செய் தவத்தாலே

காலம் கனியும் கடுந்தவத்தால் - சாலவும்

ஞானம் வரும்போது நாம்சென் றழைத்திட
வானம் இறங்கி வரும்.                                  3

 எடுக்கும் கபாலி எதையேனும் கொஞ்சம்

கொடுப்பதைக் காவலர் கொள்வார் - விடுவார்

திருடன் அதனால் திருந்தவே இல்லை

நெருப்பை அணைக்காத நீர்.                         4

இரும்பல மாரி இதற்குள் ஒளிந்த

ஒருசிறு பேழை ஒருகை நுழைந்ததும்

அந்தோ! அதற்கும் அடுத்தோர் குறும்பேழை!

பொந்துக்குள் இன்னுமோர் பொந்து.      5

 தொட்டால் சுடுமாம் சுடரார் நெருப்பென்பர்

விட்டு வெளியூர் விரைந்தால் சுடுகிறதே

பாசமாய் வந்த பணிமொழியாள் என்னவள்

நேசமாய் வந்த நெருப்பு.                                 6

மழலை மொழிகள் விழட்டும் செவியில்

விழுநீர் அருவி விரைந்து தரையிலே

மோதும் ஒலிவந்து மோதும் செவியிலே

காதுக்கு வேண்டாம் கதவு.                        7

 அளவிலாச் செல்வம் அவருக் கிருக்கும்

வளங்கள் அகன்ற வறியோர் எவரையும்

எண்ணார்; சிறிதும் இரக்கமே இல்லாத

கண்ணெல்லாம் ஆகுமோ கண்.        8

அவமானம் ஆகா! அதைநான் மறந்தேன்!

அவளை நினைந்தேன் அடடா! மறுத்தாள்!

மறந்தேன் அழகுடன் மற்றொருத்தி வாய்த்தாள்!

மறதியும் கூட வரம்.                                    9

 வேளை இதுவே விழைகநீர்ச் சேமிப்பு

நாளை உலகினில் நல்லமுதாம் நீருக்குப்

பஞ்சமும் வந்திடும் பாராய் மனத்திலே

கொஞ்சமே னும்மிதைக் கொள்.               10

அந்நாளில் ஓர்நாள் அகத்தில் சினம்முற்றி

எந்நாளும் ஆறா இழிசொல்லை வீசினோம்

பேயென்றேன் உன்னை; பெரும்பாய்ச்சல் நாய்தானே

நீயென்றேன் நீயென்றாய் நீ.                      11

-கருவூர் இனியன்.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 30, 2026, 10:28:24 AM (3 days ago) Jun 30
to சந்தவசந்தம்
மழலை மொழிகள் விழட்டும் செவியில்
மிகவும் சிறந்த வரிகள் 

On Tuesday, June 30, 2026 at 7:49:13 PM UTC+5:30 கவிஞர் இனியன் wrote:

இலந்தையார் தந்த ஈற்றடிகள் சிலவற்றுக்கு

அடியேன் புனைந்த வெண்பாக்கள்.

Sai Ganesan H

unread,
Jun 30, 2026, 10:30:21 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
அருமை, ஐயா! 
நீயென்றேன்…. வரிகளுக்குத் தங்களின் வித்தியாசமான  கற்பனை அபாரம்! 
‘ஞானம் வரும்போது வானம் இறங்கி வரும்’ நான் மிகவும் ரசித்த வரிகள்! 

—- . சத்ய வேழன் H சாயி கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/71c2c6b7-d98d-4802-ac1f-2e7ba49ca386n%40googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Jun 30, 2026, 10:33:41 AM (3 days ago) Jun 30
to சந்தவசந்தம்
இனியர் படைத்தநல் 
வெண்பாக்கள் யாவும் 
இனிய மிகவினிய வே!

--

Siva Siva

unread,
Jun 30, 2026, 11:18:25 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
புனைபெயருக்கு ஏற்றாற்போல இனிய பாடல்கள்.

சில கருத்துகளைக் கீழ்க் காண்க.

வி. சுப்பிரமணியன்

On Tue, Jun 30, 2026 at 10:19 AM கவிஞர் இனியன் <agrp...@gmail.com> wrote:

இலந்தையார் தந்த ஈற்றடிகள் சிலவற்றுக்கு

அடியேன் புனைந்த வெண்பாக்கள்.

பண்ணளந்த மன்னன் பரந்தாமன் மூவடியால்

மண்ணளந்த விண்ணளந்த மாயோன்உன் -எண்ணத்துள்

தண்ணமு தாகவே தானமர்ந் துள்ளானே

கண்ணைமூ டிக்கொண்டு காண்.                 1

யார்க்கும் தெரியாமல் அம்கள்ளை மாந்தியே

வேர்கள் அரித்திட்ட வேம்புபோல் - சோர்வதை

ஊர்க்குறு மாக்கள் உவகை பெருகிட

பார்ப்பாரே பார்ப்பாரே பார்.                          2

==> இப்பாடலில் கூறவரும்  கருத்து என்ன?

 ஞாலமும் கைகூடும் நாம்செய் தவத்தாலே

காலம் கனியும் கடுந்தவத்தால் - சாலவும்

ஞானம் வரும்போது நாம்சென் றழைத்திட
வானம் இறங்கி வரும்.                                  3

==> நாம் சென்று அழைத்திட ==> எங்குச் சென்று?
 
 எடுக்கும் கபாலி எதையேனும் கொஞ்சம்

கொடுப்பதைக் காவலர் கொள்வார் - விடுவார்

திருடன் அதனால் திருந்தவே இல்லை

நெருப்பை அணைக்காத நீர்.                         4

==> கபாலி என்று பெயரிட்ட காரணம் என்ன?
எடுக்கின்ற கள்வன் ?

இரும்பல மாரி இதற்குள் ஒளிந்த

ஒருசிறு பேழை ஒருகை நுழைந்ததும்

அந்தோ! அதற்கும் அடுத்தோர் குறும்பேழை!

பொந்துக்குள் இன்னுமோர் பொந்து.      5

==> / அந்தோ / - இங்கே இச்சொல் என்ன உணர்ச்சியைக் குறிக்கின்றது?

 தொட்டால் சுடுமாம் சுடரார் நெருப்பென்பர்

விட்டு வெளியூர் விரைந்தால் சுடுகிறதே

பாசமாய் வந்த பணிமொழியாள் என்னவள்

நேசமாய் வந்த நெருப்பு.                                 6

மழலை மொழிகள் விழட்டும் செவியில்

விழுநீர் அருவி விரைந்து தரையிலே

மோதும் ஒலிவந்து மோதும் செவியிலே

காதுக்கு வேண்டாம் கதவு.                        7

 அளவிலாச் செல்வம் அவருக் கிருக்கும்

வளங்கள் அகன்ற வறியோர் எவரையும்

எண்ணார்; சிறிதும் இரக்கமே இல்லாத

கண்ணெல்லாம் ஆகுமோ கண்.        8

அவமானம் ஆகா! அதைநான் மறந்தேன்!

அவளை நினைந்தேன் அடடா! மறுத்தாள்!

மறந்தேன் அழகுடன் மற்றொருத்தி வாய்த்தாள்!

மறதியும் கூட வரம்.                                    9

==> யுவதி மறதி வசதி! :)
 
 வேளை இதுவே விழைகநீர்ச் சேமிப்பு

நாளை உலகினில் நல்லமுதாம் நீருக்குப்

பஞ்சமும் வந்திடும் பாராய் மனத்திலே

கொஞ்சமே னும்மிதைக் கொள்.               10

அந்நாளில் ஓர்நாள் அகத்தில் சினம்முற்றி

எந்நாளும் ஆறா இழிசொல்லை வீசினோம்

பேயென்றேன் உன்னை; பெரும்பாய்ச்சல் நாய்தானே

நீயென்றேன் நீயென்றாய் நீ.                      11

==> That is reflection!

Ram Ramakrishnan

unread,
Jun 30, 2026, 3:33:06 PM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
இனிமையும் எளிமைமையும் ஒருங்கே அமைந்த சிறப்பு மிக்க கவிதைகள் இனியனாரே.

வீட்டுச் சண்டையை வெளிக் கொணர்ந்த இந்தக் கைவிடை எனக்குப் பிடித்தது

//  அந்நாளில் ஓர்நாள் அகத்தில் சினம்முற்றி

எந்நாளும் ஆறா இழிசொல்லை வீசினோம்

பேயென்றேன் உன்னைபெரும்பாய்ச்சல் நாய்தானே

நீயென்றேன் நீயென்றாய் நீ//          

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jun 30, 2026, 7:40:18 PM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
புதியதோர் நோக்கில் புலப்பட்ட வெண்பாப்
புதையல் இனியன் புதைத்தார்- அனைத்துமே
ஆச்சர்ய மானவைதாம்  அள்ளிக் கொடுக்கொன்றோம்
பேச்சரிய எம்பாராட் டு

இலந்தை

On Tue, Jun 30, 2026 at 10:19 AM கவிஞர் இனியன் <agrp...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Govindaraju Arunachalam

unread,
Jul 1, 2026, 8:14:24 AM (2 days ago) Jul 1
to santhav...@googlegroups.com

என் வெண்பாக்களைப் படித்துப் பின்னூட்டம் அளித்த இலந்தையார், சிவசிவா, இராம் இராமகிருஷ்ணன், சாய் கணேஷ், அரசி பழனியப்பன், காஞ்சிபுரம் தங்கவேல் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

 வழக்கம்போல் சிவசிவா அவர்கள் சில வினாக்களைத் தொடுத்துள்ளார். அவற்றையும் எனது மறுமொழியினையும் காண்க.

யார்க்கும் தெரியாமல் அம்கள்ளை மாந்தியே

வேர்கள் அரித்திட்ட வேம்புபோல் - சோர்வதை

ஊர்க்குறு மாக்கள் உவகை பெருகிட

பார்ப்பாரே பார்ப்பாரே பார்.                         

==> இப்பாடலில் கூறவரும்  கருத்து என்ன?

‘மது அருந்துவதை நிறுத்துக. மதுவருந்தி நீ பொதுவெளியில் விழுந்து கிடப்பதைச் சிறுவர்கள் பார்ப்பார்; நகைப்பார்; அதை நீ பார்’ என்பதே இப் பாடலின் கருத்து.

 ஞாலமும் கைகூடும் நாம்செய் தவத்தாலே

காலம் கனியும் கடுந்தவத்தால் - சாலவும்

ஞானம் வரும்போது நாம்சென் றழைத்திட
வானம் இறங்கி வரும்.                                  3

==> நாம் சென்று அழைத்திட ==> எங்குச் சென்று?

துரியாதீத நிலைக்குச் சென்று வானுறையும் தெய்வத்தை அழைத்திட எனப் பொருள் கொண்டேன்.

 எடுக்கும் கபாலி எதையேனும் கொஞ்சம்

கொடுப்பதைக் காவலர் கொள்வார் - விடுவார்

திருடன் அதனால் திருந்தவே இல்லை

நெருப்பை அணைக்காத நீர்.                         4

==> கபாலி என்று பெயரிட்ட காரணம் என்ன?

எடுக்கின்ற கள்வன் ?

திரைப்படங்களில் திருடன் கபாலி எனும் பெயரில் வந்ததைப் பார்த்ததன் தாக்கமே இந்த கபாலி. எனினும் எடுக்கின்ற கள்வன் என்னும் தொடர் மிகப்பொருத்தம். மூலப் பாவில் மாற்றிக் கொண்டேன்.

இரும்பல மாரி இதற்குள் ஒளிந்த

ஒருசிறு பேழை ஒருகை நுழைந்ததும்

அந்தோ! அதற்கும் அடுத்தோர் குறும்பேழை!

பொந்துக்குள் இன்னுமோர் பொந்து.      5

==> / அந்தோ / - இங்கே இச்சொல் என்ன உணர்ச்சியைக் குறிக்கின்றது?

எதுகைக்காக இடப்பட்டதே யன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!

-கருவூர் இனியன்.

Siva Siva

unread,
Jul 1, 2026, 9:00:56 AM (2 days ago) Jul 1
to santhav...@googlegroups.com
Thanks.

Please see below for some follow-up thoughts.

V. Subramanian

On Wed, Jul 1, 2026 at 8:14 AM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:

என் வெண்பாக்களைப் படித்துப் பின்னூட்டம் அளித்த இலந்தையார், சிவசிவா, இராம் இராமகிருஷ்ணன், சாய் கணேஷ், அரசி பழனியப்பன், காஞ்சிபுரம் தங்கவேல் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

 வழக்கம்போல் சிவசிவா அவர்கள் சில வினாக்களைத் தொடுத்துள்ளார். அவற்றையும் எனது மறுமொழியினையும் காண்க.

யார்க்கும் தெரியாமல் அம்கள்ளை மாந்தியே

வேர்கள் அரித்திட்ட வேம்புபோல் - சோர்வதை

ஊர்க்குறு மாக்கள் உவகை பெருகிட

பார்ப்பாரே பார்ப்பாரே பார்.                         

==> இப்பாடலில் கூறவரும்  கருத்து என்ன?

‘மது அருந்துவதை நிறுத்துக. மதுவருந்தி நீ பொதுவெளியில் விழுந்து கிடப்பதைச் சிறுவர்கள் பார்ப்பார்; நகைப்பார்; அதை நீ பார்’ என்பதே இப் பாடலின் கருத்து.

==> Oh. Thanks.
 குறுமாக்கள்? குறுமக்கள்?

உவகை - இன்னொருவரை எள்ளி நகையாடும்பொழுது வரும் உணர்ச்சிக்கும் இச்சொற்பிரயோகம் உண்டா?

 ஞாலமும் கைகூடும் நாம்செய் தவத்தாலே

காலம் கனியும் கடுந்தவத்தால் - சாலவும்

ஞானம் வரும்போது நாம்சென் றழைத்திட
வானம் இறங்கி வரும்.                                  3

==> நாம் சென்று அழைத்திட ==> எங்குச் சென்று?

துரியாதீத நிலைக்குச் சென்று வானுறையும் தெய்வத்தை அழைத்திட எனப் பொருள் கொண்டேன்.

==> Thanks. 

 எடுக்கும் கபாலி எதையேனும் கொஞ்சம்

கொடுப்பதைக் காவலர் கொள்வார் - விடுவார்

திருடன் அதனால் திருந்தவே இல்லை

நெருப்பை அணைக்காத நீர்.                         4

==> கபாலி என்று பெயரிட்ட காரணம் என்ன?

எடுக்கின்ற கள்வன் ?

திரைப்படங்களில் திருடன் கபாலி எனும் பெயரில் வந்ததைப் பார்த்ததன் தாக்கமே இந்த கபாலி. எனினும் எடுக்கின்ற கள்வன் என்னும் தொடர் மிகப்பொருத்தம். மூலப் பாவில் மாற்றிக் கொண்டேன்.

==> Thanks. 

இரும்பல மாரி இதற்குள் ஒளிந்த

ஒருசிறு பேழை ஒருகை நுழைந்ததும்

அந்தோ! அதற்கும் அடுத்தோர் குறும்பேழை!

பொந்துக்குள் இன்னுமோர் பொந்து.      5

==> / அந்தோ / - இங்கே இச்சொல் என்ன உணர்ச்சியைக் குறிக்கின்றது?

எதுகைக்காக இடப்பட்டதே யன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!

==> I appreciate the openness.

வந்த ததனுள்ளே மற்றோர் குறும்பேழை!

Will some such phrasing fit what you wanted to convey?

Govindaraju Arunachalam

unread,
Jul 1, 2026, 10:39:00 AM (2 days ago) Jul 1
to santhav...@googlegroups.com

Very happy to see your further queries.

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் – புறம் 94. மாக்கள் என்னும் சொல் சிறுவர்கள் என்ற பொருளில் வந்துள்ளதால் நானும் ‘மாக்கள்’ என்று அமைத்தேன்.

உவகை – உங்கள் கருத்து சரியே.

ஊர்க்குறு மாக்கள் உனையவர் சுற்றியே என மாற்றினேன்.

நீங்கள் பரிந்துரைத்த ‘வந்த ததனுள்ளே மற்றோர் குறும்பேழை’ எனும் அடியை அவ் வெண்பாவில் அமைத்தேன்.

இரும்பல மாரி இதற்குள் ஒளிந்த

ஒருசிறு பேழை ஒருகை நுழைந்ததும்

வந்த ததனுள்ளே மற்றோர் குறும்பேழை!

பொந்துக்குள் இன்னுமோர் பொந்து.

   என் கவிதையை மெருகேற்றுவதில் நீங்கள் செய்யும் உதவியை என்றும் மறவேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Siva Siva

unread,
Jul 1, 2026, 12:04:08 PM (2 days ago) Jul 1
to santhav...@googlegroups.com
Happy to be of some help.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Jul 1, 2026, 6:04:38 PM (2 days ago) Jul 1
to santhav...@googlegroups.com
மாக்கள் - விலங்குகள் என்னும் பயன்பாடு இலக்கியத்தில் உண்டு

Ram Ramakrishnan

unread,
Jul 1, 2026, 10:26:40 PM (2 days ago) Jul 1
to santhav...@googlegroups.com
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்

திருக்குறள்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 1 Jul 2026, at 6:04 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

sudha's creations

unread,
Jul 1, 2026, 11:33:16 PM (2 days ago) Jul 1
to santhavasantham
ரொம்ப அற்புதமாக இருக்கிறது, இனியன் சார்
 சுதா வேதம்

Govindaraju Arunachalam

unread,
Jul 2, 2026, 4:15:36 AM (yesterday) Jul 2
to santhav...@googlegroups.com
உங்கள் பாராட்டில் மகிழ்ந்தேன். மிக்க நன்றி அம்மா. 

rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

On Thu, 2 Jul 2026 at 9:03 AM, sudha's creations <sudhave...@gmail.com> wrote:
ரொம்ப அற்புதமாக இருக்கிறது, இனியன் சார்
 சுதா வேதம்

--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gu1vxdYO9nrn4cfuQWWoZvMAcL3wfZnE_9fUrdwGHBARQ%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCLaiEgxRAtXBCo%3DzcRxXdeyLzMBNpwfiog5ns6_NUw4A%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/A1F286CF-5CCC-4FEA-825A-FCD6B5BD6D37%40gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages