மாவடு

5 views
Skip to first unread message

Siva Siva

unread,
Mar 12, 2026, 8:00:14 AM (2 days ago) Mar 12
to santhavasantham

Another vegetable veNbA!

8)

2026-03-10

மாவடு

----------------

(வெண்பா)

கொல்லையில் மாமரத்தில் கொத்துக்கொத் தாவடுக்கள்

ஒல்லைநன் மாவடு ஊறுகாய் - இல்லிலென

எண்ணினேன் எச்சரிக்கை இன்றிக் கடும்புயல்

நண்ணமர(ம்) மொட்டைமறு நாள்.

பதம் பிரித்து:

கொல்லையில் மாமரத்தில் கொத்துக்கொத்தா வடுக்கள்;

ஒல்லை நன்-மாவடு ஊறுகாய் இல்லில் என

எண்ணினேன்; எச்சரிக்கை இன்றிக் கடும்புயல்

நண்ண, மர(ம்) மொட்டை மறு-நாள்.

V. Subramanian

Arasi Palaniappan

unread,
Mar 12, 2026, 10:43:58 AM (2 days ago) Mar 12
to சந்தவசந்தம்
மாவடு ஊறுகாய் -

குற்றியலுகரத்தால் தளை?

மாவடு வூறுகாய்?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMwySNCbVpnaR0fWqMDxXehJhh_xU-ToQWzDRXpF6bNRQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Mar 12, 2026, 11:21:59 AM (2 days ago) Mar 12
to santhav...@googlegroups.com
நல்ல வினா.

வடு - முற்றியலுகரம்.
One can add any qualifiers before - but it is still mutRiyalugaram.

உதாரணமாக:
மாவடு - மாவடுவை.
மாவடை / மாவட்டை என்று சொல்லோம்.

அரிவாட்டாய நாயனார் புராணம் #16

நல்லசெங் கீரை தூய
    மாவடு அரிசி சிந்த
அல்லல்தீர்த் தாள வல்லார்
   அமுதுசெய் தருளும் அப்பே
றெல்லையில் தீமை யேனிங்
   கெய்திடப் பெற்றி லேனென்
றொல்லையி லரிவாள் பூட்டி
   ஊட்டியை அரிய லுற்றார்

வி. சுப்பிரமணியன்

Arasi Palaniappan

unread,
Mar 12, 2026, 11:41:36 AM (2 days ago) Mar 12
to சந்தவசந்தம்
👍🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Mar 12, 2026, 11:43:31 AM (2 days ago) Mar 12
to santhav...@googlegroups.com
அருமை! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

OAGAI NATARAJAN

unread,
Mar 13, 2026, 2:10:51 PM (15 hours ago) Mar 13
to santhav...@googlegroups.com

Siva Siva

unread,
Mar 13, 2026, 2:58:23 PM (15 hours ago) Mar 13
to santhav...@googlegroups.com
Thanks.

Reply all
Reply to author
Forward
0 new messages