--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
புரிதல் என்றால் செய்தல் என்று பொருள். எ.கா: தயை புரிதல்
புரிதல் என்றால் தெரிந்துகொள்ளுதல் என்ற பொருளில் பலரும் பயன்படுத்துகிறார்கள்.
வழக்கில் ஏறிவிட்டது. புரிந்துகொண்டால் சரி.
இலந்தை
புரிதல் என்றால் செய்தல் என்று பொருள். எ.கா: தயை புரிதல்
புரிதல் என்றால் தெரிந்துகொள்ளுதல் என்ற பொருளில் பலரும் பயன்படுத்துகிறார்கள்.
வழக்கில் ஏறிவிட்டது. புரிந்துகொண்டால் சரி.
இலந்தை
2010/8/27 Siva Siva <naya...@gmail.com>
ஓர் ஐயம்.
இணையத்தில் பலரும் 'புரிதல்' என்ற ஒரு சொல்லை 'understanding' என்ற பொருளில் பிரயோகிப்பதைக் காண்கிறேன். இது சரியா?
இலக்கியங்களில் இப்பொருளில் என்ன சொல்லை ஆண்டிருக்கிறார்கள்?
உணர்தல், உணர்ச்சி, ,,, போன்ற சொல்லைப் பிரயோகிக்கவேண்டுமோ?
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
உணர்ச்சி uṇarcci - Consciousness, perception, understanding, knowledge, feeling; உணர்கை.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நர்மதாவின் தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்
புரிதல்- செய்தல், விரும்புதல், உண்டாக்கல், கொடுத்தல், வருந்திடல், கண்டுபிடித்தல், சொல்லுதல், ஒத்துக்கொள்ளுதல், அசைத்தல்
to make, to desire, to produce, to give, to suffer, to investigate, to say, to accept, to shake
27-8-10 அன்று, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> எழுதியது:
> --
> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> பெறுகிறீர்கள்:
> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> santhavasanth...@googlegroups.com.
> இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது
ஒருவருக்கு. நீங்களே உலகமாக இருக்கலாம்.
DR.K.SOTHITHASAN
புரிந்த விளக்கம்புரிதல் -- செய்தல்; செய்கை என்பதனோடு சம்பந்தமுள்ள விதத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகிறது.understanding என்பது மனோகாரியம். மனத்தினால் செய்யும் செயல்.இதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாமா? ஏதோ எதேச்சையாகத் தற்காலத் தமிழில் இந்த விதமான பயன்பாடு வந்துவிட்டது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதற்கு ஏதேனும் ஆதரிக்கும் விதமாக இலக்கியப் பயன்பாடு இருக்கிறதா?என்றால்உண்டு என்பதே விடை. புரிதல் என்ற வினைச்சொல் புறச்செய்கை என்பதற்கு மட்டும் பயன்படுத்தப் படாமல், மனத்தின் செயலான விருப்பம், தியானம், இறைஞ்சுதல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.உதாரணங்கள் பல என்று சொல்லலாம்படி இருக்கின்றன.முதல் உதாரணம் --இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.(5)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நகுபோலியன்
பி.கு. சபாஷ் ஹரி கி., சபாஷ் பார்த்தசரதியாரே, 'ஆஷ்டுக்குஷ்டி வேஷ்டியத்
திங்கறது, ஓஷ்டு ஒஷ்டு' என்கிற [சாமிநாததேசிக?] அநுகூல
சத்துருக்களால்தான் சம்ஸ்கிருததுக்கு அவதி வந்தது!
ஸ்புரித்தல் -க்கும் புரிதலுக்கும் தொடர்பே இல்லை. ஸ்புர்=sparkle [and
its hence-derived nuances].
-----------------------------------------------------------------------------------------
On Aug 29, 11:09 am, Parthasarathy Krishnan <paakila...@gmail.com>
wrote:
> 'ஸ்புரிதல்' என்ற சொல்லிலிருந்து புரிதல் வந்தது என்பது போன்ற விளக்கம் எல்லாமே
> வடமொழியிலிருந்து வந்தது என்ற எண்ணத்தை உருவாக்கும் முயற்சியோ என எண்ணத்
> தோன்றுகிறது.
>
> இங்கே ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்: (இதுவும் பேராசிரியர் நாகநந்தி
> சொன்னத்துதான்)
> மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தமிழன் தண்ணீருக்குப் பெயர்
> கண்டுபிடித்திருக்க மாட்டானா? அதனால் தான் "ஈர்" என்ற வேர்ச்சொல்லைக் கொண்டு
> நீர் என்ற சொல்லை உருவாக்கினான். இந்த நிலையில், தண்ணீருக்கு ஜலம், அப்பு,
> தீர்த்தம் எனப் பல பெயர்கள் கொண்ட வடமொழி கூடுதலாகத் தமிழிலிருந்து நீர் என்ற
> சொல்லையும் எடுத்துக் கொண்டது. இந்நிலையில், தமிழின் சொல்லான நீர்
> வடமொழியிலிருந்து வந்தது என்று இடைக்காலத்தில் சொல்லிவந்தார்கள்.
> இது போல் பல உள்ளன. வழு வழுப்பாகக் கடலில் கிடைக்கும் பொருளுக்கு "ப வழம்"
> என்று பெயர் வைத்தான் தமிழன். அதை பிரவாளம் என்று மாற்றி வடமொழி
> பயன்படுத்துகிறது.
> இதழ் தரும் முத்தம் போல் முத்தும் கடலில் கண்டான் தமிழன். அது ஸம்ஸ்க்ருதத்தில்
> 'முக்த" என ஆயிற்று.
> இவற்றையும் வடமொழியிலிருந்து வந்ததாகச் சொல்ல முயன்றார்கள்.
>
> இப்படி எல்லாம் சொல்வது பொறி விளங்காயிலிருந்து வெல்லம் தயாரித்தது போல்
> ஆகும்.
> ஒரு பெரியவரின் பெயரை அவரது பேரனுக்கு வைக்கிறார்கள். அந்தக் குழந்தை பேசத்
> தெரிந்ததும், தாத்தாவின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறது. அப்போது
> சொல்லும்: "என் பெயரைத் தானே தாத்தாவுக்கு வைத்திருக்கிறார்கள்?". இது எப்படி
> இருக்கு? அது போல்தான் பல சொற்கள் வடமொழியிலிருந்து வந்தன என்று கூறுவதும்.
> பாகி
>
> 2010/8/29 Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>
>
>
>
>
>
> > அப்படிப்போடு ராசா!.. ரொம்ப இலக்கண சுத்தமாகப் புரிந்துகொண்டு எழுதியுள்ளாய்..
> > பாராட்டத்தக்கது. வாழ்க!
> > யோகியார்
>
> > 2010/8/28 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> > *புரிந்த விளக்கம்*
>
> >> புரிதல் -- செய்தல்; செய்கை என்பதனோடு சம்பந்தமுள்ள விதத்தில் சாதாரணமாகப்
> >> பயன்படுத்தப் படுகிறது.
>
> >> understanding என்பது மனோகாரியம். மனத்தினால் செய்யும் செயல்.
>
> >> இதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாமா? ஏதோ எதேச்சையாகத் தற்காலத் தமிழில்
> >> இந்த விதமான பயன்பாடு வந்துவிட்டது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதற்கு ஏதேனும்
> >> ஆதரிக்கும் விதமாக இலக்கியப் பயன்பாடு இருக்கிறதா?
>
> >> என்றால்
>
> >> உண்டு என்பதே விடை. புரிதல் என்ற வினைச்சொல் புறச்செய்கை என்பதற்கு மட்டும்
> >> பயன்படுத்தப் படாமல், மனத்தின் செயலான விருப்பம், தியானம், இறைஞ்சுதல்
> >> ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
>
> >> உதாரணங்கள் பல என்று சொல்லலாம்படி இருக்கின்றன.
>
> >> முதல் உதாரணம் --
>
> >> இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
> >> பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.(5)
>
> > --
> > நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> > இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> > santhavasanth...@googlegroups.com.
> > இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
> --
> Paaki- Hide quoted text -
>
> - Show quoted text -
பி.கு. சபாஷ் ஹரி கி., சபாஷ் பார்த்தசரதியாரே, 'ஆஷ்டுக்குஷ்டி வேஷ்டியத்
திங்கறது, ஓஷ்டு ஒஷ்டு' என்கிற [சாமிநாததேசிக?] அநுகூல
சத்துருக்களால்தான் சம்ஸ்கிருததுக்கு அவதி வந்தது!
நகுபோலியனாரே.
நம்பர் 1: பார்த்தசாரதி அப்பா பெயர். கிருஷ்ணன் என்பது எழுதியவர் பெயர். பேசாம. பாகி என்றே சொல்லிவிடலாம். அவரும் பாகியானாகத்தான் இருக்க விரும்புகிறார். (பாகி+யான்.)
நம்பர் 2: ஆஷ்டு குஷ்டி. பாரதிதாசருடையது. அனுகூல சத்ருவா இல்ல பிரதிகூல மித்திரனா....நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் உங்கள் சாய்ஸ்.....
ஓர் ஐயம்.
இணையத்தில் பலரும் 'புரிதல்' என்ற ஒரு சொல்லை 'understanding' என்ற பொருளில் பிரயோகிப்பதைக் காண்கிறேன். இது சரியா?
இலக்கியங்களில் இப்பொருளில் என்ன சொல்லை ஆண்டிருக்கிறார்கள்?
உணர்தல், உணர்ச்சி, ,,, போன்ற சொல்லைப் பிரயோகிக்கவேண்டுமோ?
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
புரிந்த விளக்கம்
புரிதல் -- செய்தல்; செய்கை என்பதனோடு சம்பந்தமுள்ள விதத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகிறது.understanding என்பது மனோகாரியம். மனத்தினால் செய்யும் செயல்.இதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாமா? ஏதோ எதேச்சையாகத் தற்காலத் தமிழில் இந்த விதமான பயன்பாடு வந்துவிட்டது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதற்கு ஏதேனும் ஆதரிக்கும் விதமாக இலக்கியப் பயன்பாடு இருக்கிறதா?என்றால்உண்டு என்பதே விடை. புரிதல் என்ற வினைச்சொல் புறச்செய்கை என்பதற்கு மட்டும் பயன்படுத்தப் படாமல், மனத்தின் செயலான விருப்பம், தியானம், இறைஞ்சுதல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.உதாரணங்கள் பல என்று சொல்லலாம்படி இருக்கின்றன.முதல் உதாரணம் --இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.(5)
இங்கே புரிதல் -- விரும்புதல் என்பது முதற்பொருளாகவும், புரிதல் -- எப்பொழுதும் சொல்லுதல் என்பதி இரண்டாவது பொருளாகவும் பரிமேலழகரால் சொல்லப் பட்டிருப்பதை அவர்தம் உரையில் காணலாம்.புகழ் புரிந்தார் மாட்டு -- இறைவனது மெய்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.புரிதல் -- எப்பொழுது சொல்லுதல்.இரண்டாவது உதாரணம் --விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார் (143)தீமை புரிந்து ஒழுகுவார் -- பாவம் செய்தலை விரும்பி ஒழுகுவார் என்பது பரிமேலழகரின் உரை. இங்கு விரும்புதல் என்னும் மனத்தின் நிகழ்வு மட்டுமே புரிந்து என்பதற்குப் பொருளாகக் கூறப்பட்டிருக்கிறது.’புரிதல்’ என்பதே மனத்தின் நிகழ்ச்சியாகிய ’விரும்புதல்’ என்னும் பொருளில் ஆளப்பட்ட இடங்களும் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் உண்டு.தொல்காப்பியம், மெய்ப்பாட்டியலில் சூத்திரம் 257 --“புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடுதகுமுறை நான்கே ஒன்றென மொழிப.”இதில் ‘புகுமுகம் புரிதல்’ என்பதற்கு “ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட வழித் தன்னை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சி” என்று உரை வரைகிறார் பேராசிரியர். மேலும் விளக்குவதற்காக அவர் கூறுவது, “புரிதல் என்பது மேவுதல் என்றவாறு; அஃதாவது, தலைமகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாறாம்”.சங்க இலக்கியமும் ’புரிந்த’ என்பதற்கு புறச்செய்கை, மனத்தின் நிகழ்வு என்ற இரு பொருளிலும் ஆண்டிருக்கிறது.புரிந்த -- புறச்செய்கை“பெண்கொலை புரிந்த நன்னன் போல” (குறுந்தொகை 292)புரிந்த -- உள்ள நிகழ்ச்சி“வன்புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து நம்வயிற் புரிந்த கொள்கையொடு” (நற்றிணை 59)குறுந்தொகை ’புரிந்த’ என்பதை உள்ள நிகழ்ச்சிச் சொற்களுடன் ஒரு கோவையாக்கியே ஆட்சி செய்கிறது இந்த இடத்தில் --“நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி” (குறுந்தொகை 400)ஆனால் இந்தக் காரணங்களால் தறகாலத் தமிழில் புரிதல் என்பதற்கு understanding என்ற பொருளில் ஆட்சி ஏற்பட்டதா என்றால் இல்லை.இப்படித் தங்களுக்கு இலக்கிய, இலக்கணங்களின் பக்கபலம் உண்டு என்பதே தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் பெரிதும் தெரியாது.இருந்தாலும் ‘புரிதல்’ என்பது தற்காலத் தமிழின் தாந்தோணியான சொல்லாட்சி என்று நினைத்து ஒதுக்குவோர் ‘புரிந்துகொள்ளுதல்’ என்று பயன் படுத்தலாம்.‘புரிதல்’ என்பதையே பயன் கொள்ள நினைப்போர் இவ்வாறு இலக்கிய, இலக்கண ஆதாரம் தமக்குச் சார்பாகச் சொல்லிக்கொள்ளவும் உண்டு என்பதை உணர்ந்து நிம்மதி அடையலாம்.--அவரவர் ‘புரிதல்’ அவரவர் பயனே -- :--))))ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
"கொல்" என்றான் ஓராள்
"கொளுத்து" என்றான் வேறோராள்.கல்லொன்று வீழ்ந்துகழுத்தொன்று வெட்டுண்டுபல்லோடு உதடுபறந்து சிதறுண்டுசில்லென்று செந்நீர் தெறிந்துநிலம் சிவந்துமல் லொன்று நேர்ந்துமனிசர் கொலையுண்டார்.ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர்வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப்பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோஉட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்றமக்களுடைய மதத்தினைக் கண்டபடி.முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டுவந்தவனின் சுற்றம்அதோ மண்ணிற் புரள்கிறது! ”
Memorandum of Understanding - ஓர்மை ஒப்பந்தம், ஓர்ப்பொப்பந்தம்நா. கணேசன்