"காலம்" - (மீ.விசுவநாதன்)

6 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Jan 25, 2026, 1:57:37 PMJan 25
to Santhavasantham, M. Viswanathan
                     "காலம்"
                    (மீ.விசுவநாதன்)

குடியர சானநாள் கொண்டாட வேண்டும்;
நெடிதுயர்ந்த பண்பில் செழித்த படியென்றும்
மக்கள் மகிழ்ந்து மனமுயர்ந்து வாழ்ந்திடவே  
எக்கணமும் வேண்டுவே னின்று. ( வெண்பா எண்: 1054)  
                    (26.01.2026 00.25 am)

M. Viswanathan

unread,
Jan 29, 2026, 12:36:33 PMJan 29
to Santhavasantham, M. Viswanathan
                  "காலம்"
           (மீ. விசுவநாதன்)

எறும்பின் சிறுவயிற்றுக் கேற்றதுபோல் வைத்த
சிறுவாயில் கற்கண்டுத் தூளைச் சுறுசுறுப்பாய்
உண்டு களித்தல்போல் செல்லமாம் பேத்தியவள்
விண்டு சுவைத்தாள் கரும்பு. (1055) 29.01.2026

M. Viswanathan

unread,
Jan 30, 2026, 11:41:57 AMJan 30
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)
வெந்துள்ள நெல்லை விதைக்க முடியாது
சிந்தை பழுதானால் சீர்பொழுதும் கந்தைத்
துணியாய்க் கழிந்துவிடும்; எப்போதும் ஞானத்
துணிவான தொண்டே சுகம். (1056) 30.01.2026

இமயவரம்பன்

unread,
Jan 31, 2026, 7:33:02 AMJan 31
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Santhavasantham
கரும்பைச் சுவைத்த பேத்தியைப் போற்றி எழுதிய கவிதை இனிமை! 

M. Viswanathan

unread,
Jan 31, 2026, 11:12:08 AMJan 31
to இமயவரம்பன், Santhavasantham
நன்றி.

அன்பன்
மீ.விசுவநாதன்

M. Viswanathan

unread,
Jan 31, 2026, 1:52:03 PMJan 31
to இமயவரம்பன், Santhavasantham
"காலம்"
(மீ. விசுவநாதன்)

தடுக்கி விழுந்தால் தவறாமல் கைகள்
கொடுக்கும் கருணைக் குணமே தடுத்தாளும்
தெய்வப் பொழுதாம்! பிறர்துயர் நீக்குவதே
வையத்தில் மேலாம் பணி. (1057) 31.01.2026

ஆதிசக்தி தந்ததோர் வேலாலே சூரனைப்
பாதியாய்ச் செய்து மயிலாயும் சேவற்க்
கொடியாயும் ஆக்கிக் கொண்ட முருக(ன்) 
அடியார்கள் கொள்வார் அருள். (1058) 01.02.2026
(இன்று தைப்பூசத் திருநாள்)

M. Viswanathan

unread,
Feb 1, 2026, 8:23:35 PMFeb 1
to இமயவரம்பன், Santhavasantham
"காலம்"
(மீ. விசுவநாதன்)

"திரும்பிய பக்கமெலாம் தெய்வ அருளால்
அரும்பும் பொழுதே அமைதி இருக்கும்;
இரும்பின் கனமும் துரும்பாய் அமையும்
குருவருள் யானை பலம்." (1059) 02.02.2026

Ram Ramakrishnan

unread,
Feb 1, 2026, 8:31:37 PMFeb 1
to santhav...@googlegroups.com
“காலம்” கவிதைகள் கருத்துச் செறிவும் எளிய நடையுங் கொண்டு இனிக்கின்றன, 
திரு. மீ. வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-sFLYZUP8NW6f6zp%3DnFanbkxEicaJ4OtO%3DP7QjCisQp6w%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Feb 4, 2026, 1:13:13 PMFeb 4
to Santhavasantham
நன்றி.

அன்பன்,
மீ.வி.

M. Viswanathan

unread,
Feb 4, 2026, 10:46:10 PMFeb 4
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

கண்ணால் அறிவால் கருவத்தால் கொஞ்சமும்
திண்ணமாய்க் காண இயலாத கண்ணனை
வெண்ணைபோல் வெள்ளை உளத்தாலே காணலாம்
எண்ணத்தில் கொள்வோம் இதை. (1060) 05.02.2026

M. Viswanathan

unread,
Feb 6, 2026, 8:59:46 PM (12 days ago) Feb 6
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

"கற்கண்டுக் கட்டியாய்க் கற்ற  பயனாலே
சொற்கொண்டு நன்மைகள் செய்யலாம் -   பெற்ற 
பொழுதெல்லாம் பேசாப் பொருளாகக் கொண்டும்
பழுதின்றி வாழப் படி." (1062) 07.02.2026

M. Viswanathan

unread,
Feb 9, 2026, 2:09:31 AM (10 days ago) Feb 9
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

"பூவைப் பறித்ததைப் பூஜைக்கும் வைக்கலாம்
பூவைக்கும் சூட்டலாம்; அந்தந்தத் தேவை
அருமை அறிந்தே அழகுடன் செய்தால்
பெருகுமே என்றும் புகழ்."
      (1063) 09.02.2026

M. Viswanathan

unread,
Feb 9, 2026, 5:51:40 PM (9 days ago) Feb 9
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

கலங்கிக் தெளிகின்ற தண்ணீர்போல் உள்ளம்
கலங்கும் தெளியும்;  கவலை விலங்கை
உடைத்து எறியும் உறுதி யிருந்தால்
கிடைத்திடும் நிம்மதித் தேன்.  (1064) 10.02.2026

M. Viswanathan

unread,
Feb 9, 2026, 6:44:54 PM (9 days ago) Feb 9
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

கலங்கிக் தெளிகின்ற தண்ணீர்போல் உள்ளம்
கலங்கும் தெளியும்;  கவலை விலங்கை
உடைத்தே எறியும் உறுதி யிருந்தால்
கிடைத்திடும் நிம்மதித் தேன்.  (1064) 10.02.2026

M. Viswanathan

unread,
Feb 10, 2026, 5:26:43 PM (8 days ago) Feb 10
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

நந்தியா வட்டைப்பூப் போல்வெண்  விழிப்படலம்
சந்தியா காலக் கதிரவனாய்ச் செந்தீபோல்
மாற்றுகிற கோபத்தை மாற்றும் நகைச்சுவைதான் 
நுற்றாண்டு வாழ்வின் மருந்து. (1065)11.02.2026

M. Viswanathan

unread,
Feb 11, 2026, 8:20:06 PM (7 days ago) Feb 11
to Santhavasantham, M. Viswanathan
"காலம்"
(மீ. விசுவநாதன்)

கருவுக்குள் வாழ்வினைக் கட்டியவன்  தாயின்
உருவாய்த் தெரிகின்றான்; தந்தை, குருவாய்
 வழிகாட்டி உள்ளுக்குள் ஓங்கார நாதப்
பொழிவின் ஒலியாய் உளன். (1066) 12.02.2026

இமயவரம்பன்

unread,
Feb 11, 2026, 9:49:35 PM (7 days ago) Feb 11
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Santhavasantham
அருமை, திரு மீவி.

M. Viswanathan

unread,
Feb 11, 2026, 10:21:14 PM (7 days ago) Feb 11
to இமயவரம்பன், Santhavasantham
நன்றி.
அன்பன்,
மீ.வி.

M. Viswanathan

unread,
Feb 12, 2026, 9:05:46 PM (6 days ago) Feb 12
to இமயவரம்பன், Santhavasantham
"காலம்"
(மீ. விசுவநாதன்)

பார்க்கு(ம்)  இடங்கள் பராசக்தித் தோற்றமாய் 
யார்க்குத் தெரிகிறதோ அந்தநற் பேர்க்கு
மனக்கவலை நோயில்லை; மாறாக் கருணை
இனமகான் ஆவார் அவர். (1067) 13.02.2026

Ram Ramakrishnan

unread,
Feb 12, 2026, 9:25:11 PM (6 days ago) Feb 12
to santhav...@googlegroups.com
அருமை, திரு. மீ.வி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 12, 2026, at 21:05, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

M. Viswanathan

unread,
Feb 14, 2026, 11:53:09 AM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com

நன்றி.
மீ. வி. 

M. Viswanathan

unread,
Feb 15, 2026, 12:02:50 AM (4 days ago) Feb 15
to Santhavasantham
"காலம்"
(மீ. விசுவநாதன்)

கொட்டும் மழையும் கொடுமை வெயிலுமே
இட்டவன் அந்த இறைவனின் சட்டமே
என்பதை எண்ணினால் இல்லையே துன்பமே
அன்பால் நிறையும் அகம். (1068) 14.02.2026

வண்ணத்துப் பூச்சியாய் வட்ட மடித்தபடி
எண்ணத்தை ஓட விடாமலே திண்ணமாய்
ஓரிடம் நிற்க ஒருநொடி தந்தாலே
வேரடி அகந்தை விழும். (1069) 15.02.2026
Reply all
Reply to author
Forward
0 new messages