அடியனைப் பொருளாக்கும் அன்பும் அழகே!

9 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Apr 20, 2026, 2:56:56 AM (5 days ago) Apr 20
to santhav...@googlegroups.com
அடியேனின் இன்றைய எண்சீர் விருத்தம்

காணுமெப் பொருளிலும் உன்னைக் காட்டிக்
                       கற்பகம் மிஞ்சுமுன் நெஞ்சை நிறுத்தி
வேணுவின் கீதமென வாழ்வை யீந்து
                        வினைபல கொண்டாலும் வகையாய்த் தீர்த்துக்
கேணியின் நீரென்று யார்க்கும் ஆக்கிக்
                        கிளந்தெழும் வினையுந்தன் பதத்தில் கூட்டி
ஆணியாய் நின்றுலகை ஆட்டும் அரங்கா
                         அடியனைப் பொருளாக்கும் அன்பும் அழகே!


--
S. Parthasarathy

+91 98441 24542/9980794542

Parthasarathy S

unread,
Apr 21, 2026, 11:31:17 PM (4 days ago) Apr 21
to santhav...@googlegroups.com
21-04-26 செவாய்க்கிழமைஅடியேனின் இன்றைய எண்சீர் விருத்தம்

அடியனை உலகத்தில் ஆக்கும் முன்னம்
                ஐம்பெரும் பூதங்கள் அமையச் செய்துக்
கடிமலர் நான்முகனைத் தோற்று வித்துக்
                கரையிலா வேதமதை ஓது வித்துச்
செடிவினைக் கேற்றபடி உடலை யீயும்
                சீர்மிகு கலையதைத் தொடங்கி வைத்துப்
படிதனில் பற்றுவிடப் பாடம் தந்தாய்
               பரிவுடைப் பேரருளைப் பார்ப்பர் உளரோ?
2





--
S. Parthasarathy
 98441 24542/9980794542

Parthasarathy S

unread,
Apr 21, 2026, 11:33:00 PM (4 days ago) Apr 21
to santhav...@googlegroups.com
22-04-26 புதன்கிழமைஅடியேனின் இன்றைய எண்சீர் விருத்தம் - (அடியெனைப் பொருளாக்கும் அன்பும் அழகே!)

முன்னம் பிறவிதனில் முற்றுங் காத்து
              முனியா தென்செயலை முறுவல் பூத்துப்
பின்னும்  ஓர்பிறவி பேறாய்த் தந்த
                புண்ட ரீகக்கண் பூத்த புனிதா !
அன்னம் எனப்பிரித்தே அருந்த அறியேன்
                அருளால் அருமறையில் அதனைக் காட்டி
இன்னும் விரித்துரைக்க இதமாய்க் குருக்கள்
                என்முன் இருத்திட்டாய் ஏதுரைப் பேனே
! 3

Parthasarathy S

unread,
Apr 24, 2026, 2:30:38 AM (yesterday) Apr 24
to சந்தவசந்தம்
23-04-26 வியாழக்கிழமைஅடியேனின் இன்றைய எண்சீர் விருத்தம் - (அடியெனைப் பொருளாக்கும் அன்பும் அழகே!)

எடுத்த வென்பிறவி யேதும் அறியேன்
          இருந்தேன் என்பதையும் இப்போ தறிந்தேன்
தொடுத்த உன்கருணைத் தெரியும் வண்ணம்
           தோதாய் வாழ்க்கையைத் தகவில் தந்தாய்!
விடுத்த கருமங்கள் விட்டி(டு) என்று
            விரைந்து தாள்சேர வழியும் சொன்னாய்
மிடுக்கில் உலகெலாம் மீட்கும் மாலே
                மீளாப் பதங்கொள்ள மறுத்தல் உண்டோ? 4

Parthasarathy S

unread,
Apr 24, 2026, 2:34:11 AM (yesterday) Apr 24
to சந்தவசந்தம்
24-04-26 வெள்ளிக்கிழமைஅடியேனின் இன்றைய எண்சீர் விருத்தம் - (அடியெனைப் பொருளாக்கும் அன்பும் அழகே!)

உந்தியில் மலர்ந்தானுக் கீந்த வேதம்
           உத்தமன் இழந்திடவே மீட்ட தன்றும்
சொந்தமுன் என்றனுக்காய்ச் செய்த தன்றோ
            சொல்லது போதாதுன் கருணை பாட
இந்திரன் இழந்ததையும்  எனக்காய் மீட்டாய்
              என்சொல பாரதில் தருமம் காத்தாய்
மந்திரம் உணர்த்திடத் தானே வந்தாய்
                மற்றுன் எட்டெழுத்து மலிதல் எங்கே
5

Parthasarathy S

unread,
12:47 AM (11 hours ago) 12:47 AM
to santhav...@googlegroups.com
25-04-26 சனிக்கிழமைஅடியேனின் இன்றைய எண்சீர் விருத்தம் - (அடியெனைப் பொருளாக்கும் அன்பும் அழகே!)

வேதோ பநிஷத்தைக் கொடுத்த தன்றி

               விரிந்த இதிகாச புராணம் ஈந்தும்

ஆதா ரதருமமே இருத்தி யாங்கே

               அழகாய் விரித்திட குருக்கள் இட்டாய்

போதா தென்றிந்தப் பாரில் தோன்றிப்

               படாத பாடெல்லாம் பட்டாய் அன்றோ

பாதா ரவிந்தத்தின் பெருமை காட்டப்

               பாய்ந்து நான்பற்றப்  பெருமை யாமோ?                                   6


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/c53b96fd-f49c-4bcc-83ff-f4a51af0d43fn%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages