’அம்மன் தரிசனம்’ மாத இதழில் 2001-ல் வெளியாணது.
உ
திருச்சிற்றம்பலம்
அங்கயற்கண்ணியந்தாதி
(அனந்த்)
*******
காப்பு
நெஞ்சக் குடிலினில் நீயெழுந் திந்தநன் னேரமுன்னைக்
கொஞ்சிக் குலவிக் களிப்புறுந் தாயினைக் கும்பிடயான்
அஞ்சித் துவங்கிடு மிந்தவந் தாதிக் கருள்புரிவாய்
குஞ்சர மாயுருக் கொண்டடி யாருளங் கொண்டவனே
அந்தாதி
1. தாயாய் நினைத்துன தாளடைந் தேற்குநின் தண்ணருளை
ஓயா தளித்திவ் வறிவிலா ஏழையும் உன்புகழை
வாயால் வழுத்திட வாய்ப்பளித் தாய்தன் வடிவழகில்
மாயா வினோதனச் சொக்கனை விஞ்சிய மாணிக்கமே!
2. மாணிக்க மேகலை பூணும்அம் மேனி மரகதமாம்
ஆணிமுத் தாமெங்கள் ஆச்சி எயிற்றணி ஆங்கவள்தன்
வேணி மணியொளிர் சோதிவிண் மீனையும் விஞ்சுமெனப்
பாணி யமர்ந்தவப் பைங்கிளி பேசிடப் பார்த்தனனே
3. பார்க்கு மிடமெங்கும் பார்வதி நீதோன்றிப் பாசமுடன்
ஈர்க்கும் விதத்தினை எண்ணி இறுமாந் தெனைமறந்தேன்
யார்க்கு மெதுவு மளித்திடும் யாமளை யம்மவடி
யேற்குமிவ் வானந்த மன்றிமற் றேது மினியெதற்கே
4. இனிக்குந் தமிழ்கொண் டிசைப்போர்க் கென்றுமுன் இன்னருளைத்
தனித்துத் தருநற் றருவே குருபரன் சாற்றுபுகழ்
பனிக்கும்ப வெற்பின் புரவலன் பெற்ற பசுங்கொடியே!
கனிக்கு நிகர்மொழி கொஞ்சுங் கிளிவளர் கோமளமே!
5. கோமக ளாகவுன் செவ்வியைக் கண்டோர் குவலயத்தே
மாமது ராபுரி மாதுனை யன்றி மனத்தகத்தில்
தாமொரு தெய்வ மெவரையும் போயினித் தாங்கிலரே
ஆமவர் சூழலில் அம்மைநீ ஆக்கி(டு) அடியனையே
6. அடிநாள் தொடுத்தியான் ஆலவாய் மாநகர் ஆலயத்துன்
அடியே துணையென தம்மவென் றாரும் அறிந்திடுமா(று)
அடியேன் அரற்றிய காலையில் அஞ்சிடேல் ஆரையு(ம்)நான்
அடியே னெனச்சொன்ன அற்புதம் நெஞ்ச மகலரிதே
7. அரியின் இளையளே ஆங்குள்ள தேவர்கள் ஆனபலர்
வரிசை வகுத்துன்றன் வாயிலில் வந்து வணங்குகையில்
பரிசென உன்கரம் பற்றிய சொக்கப் பரமனவன்
கரிசனத் தோடுநின் காலிற் கழல்சுட்டிக் காட்டுவனே
8. காட்டுப் புலியுரி கட்டிக்கை யோட்டினில் காலமெல்லாம்
ஈட்டு முணவினை இன்னுமோர் பெண்ணுக்கும் ஈந்துடலம்
வாட்ட மடைந்திட்ட வேளையில் வந்தது வான்மழையாய்
நாட்டுக் கரசியுன் நாயக னென்ற நலமவற்கே
9. நிலைதள ராதுன் நினைவென்றன் நெஞ்சம் நிறுத்தியொரு
மலைபெயர்ந் தாலு மயங்கா தியானுன் மகிமையிலே
அலைகடற் சேர்ந்திட்ட ஆறென ஒன்றுமவ் வானந்தநாள்
தொலைவினில் இல்லென்று சொல்திரு வாணி தொழுபவளே
10. தொழுவோர்க் கருளத் துடிக்கின்ற தாய்பதம் தொட்டுணர்ந்தேன்
பழுதா மவள்புகழ் பாடாப் பொழுதென்று; பார்பதங்கள்
முழுதும் படைத்துப் புரந்து முடித்தவள் மூடியருள்
பழுத்தெம்மை ஆட்கொளும் பாங்கினைப் பத்தர் பகர்ந்திடுமே
11. இடுவார் வரம்பல தேவரும் ஈசனும் இந்திரனும்
நெடுநாள் தவம்புரிந் தேத்துவர்க் கிங்(கு)அனை நீயெனைப்போல்
படுபாவி யாயொரு புண்ணியம் செய்திலாப் பாமரற்கும்
மடுவாய்ச் சுரந்தவர் மாசறுப் பாயெங்கள் மாதரசே
12. மாதங்கி யென்று மதாலசை யென்றுனை மாதவத்தோர்
வேதம் முழங்கி விளித்திடு(ம்) வேளையில் விம்மிவிம்மி
ஓதவங் கேது மறிந்திடா(து) ஓரத்தில் நிற்கையிலுன்
பாதங் கிடைத்திடப் பண்ணிநீ யென்னையும் பாலித்தயே
13. பால்வண்ணன் பக்கலில் பச்சைப் பசேலென்று பார்வதியுன்
மேல்வண்ணஞ் சேர்கையில் வெண்பனி மேனியன் விண்ணவரை
மால்வண்ணங் கொண்டன மென்று மயக்கிடு வேளையில்நின்
கால்வண்ணச் சாந்தது காட்டிக் கொடுத்திடும் கள்ளத்தையே
14. கள்ளக் குறத்தி கனிந்தொரு பாலுன்றன் கால்பிடிக்கத்
தள்ளி யமர்ந்துதெய் வானையுந் தான்மறு தாள்பிடிக்கப்
புள்ளி மயிலோன் பொறுமையில் லாதந்தப் பூவையர்க்கு
மெள்ளச் சமிஞ்ஞை விடுத்திடும் வேடிக்கை வேண்டுவையே
15. வைகுந்த வாசன் மகிழ்திரு மாதும் மலரயன்நா
வைகுமவ் வாணியும் வேண்டித் தொழுதிட வானவர்தம்
செய்கை சிறந்திடச் சென்னிமண் தாழ்த்தியுன் சீர்புகழக்
கைகுவித் தேழையுன் காலடி நிற்பதைக் கண்டுகொள்ளே
16. கொள்ளேன் பலவாய்த் தனமதைக் கொட்டிக் கொடுப்பினும்நீ
உள்ளே இலாத உளத்தினர் நட்பை உயர்சிமையப்
புள்ளே புனிதப் பெருந்தவத் தோர்விழை பூரணமே
கள்ளே கதம்பப் பொழிலினில் வாழ்கின்ற கற்பகமே
17. பகர்ந்திட வொண்ணாப் பரமென நிற்கு(ம்)நீ பாரினிலிந்
நகர்வந் தருளும் நலம துணர்ந்துவென் னாளுமுன்னை
அகந்தனி லாக்கு மனுபவ மெய்திடு மானந்தமிச்
சகந்தனில் ஏழைக்குந் தந்திடு வாய்பரா சத்தியளே
18. சத்துவ ஞானமாய்த் தற்பர வத்துவாய்ச் சாற்றுதிரு
வித்தியா பீடம் விளங்கிடு மீனாக்கி வேண்டுவர்க்கு
நித்திய மான நிலையளித் தாட்கொளும் நேர்த்தியையப்
பத்தரே யன்றியிப் பாரினி லியார்க்கும் புகலரிதே.
19. தேனின் சுவைநிகர்த் தீந்தமிழ்ப் பாடல் சிறக்கவொரு கோனின் மகளாய்க் குவலயம் வாழக் குறித்தவுனை
வானின் உறைவோர் வழுத்தி மகிழ்ந்திட வாய்ப்பிலதால்
ஏனிப் புவியில் சனித்தில மென்றவ ரேங்குவரே
20. ஏங்கு மடியேன் இதயத் துடிப்பினில் என்றுமுயர்ந்
தோங்கிடு மந்திர ஓசை பயந்திடும் உள்ளொளியால்
வீங்கு மகந்தையை வேரொ டெறிந்தர விந்தபதம்
யாங்கினி எய்துமென் றன்புடன் காட்டி யருள்புரியே
21. அருளினை யன்றவ் வரன்தன் மிடர்பற்றி ஆலமென்னும்
பெருவிடம் மேனியுட் போகா வணமாய்ப் பிறிதுமங்குத்
திருவுளங் கொண்டவன் தேகந் தனிலுடன் சேர்ந்தவன்மேல்
ஒருவகை யின்னலு மொட்டாது காத்தனை உத்தமியே
22. உத்தியஃ தாமே உலகெலா மாளும் உமையுனையே
நித்தியம் கண்டுபே ரின்பநல் லாற்றிலே நீந்துதற்குப்
பத்தியில் பாவியே ஆயினும் புத்திரன் பாரெனயான்
கத்தியுன் காலடி வீழ்ந்தும் புரண்டும் கதறுதலே
23. கதவம் திறந்திடுங் காலையுன் கோயிலில் காத்திருந்துன்
உதய மலரா மொளிர்முகங் கண்டிட ஓடிவந்தென்
இதயம் கரையநின் இன்னருள் தாவென் றிறைஞ்சியதும்
உதறலா காதென ஓவென் றழுததும் ஓர்ந்திடம்மே
24. அம்மா எனஇவ் வடியேன் அழைக்கையில் அன்புடனே
அம்மா தவரறி யாதவ ரும்பொருள் ஆனவளே
அம்மான் மகள்மகிழ் ஆறு முகனொடும் ஆனையொடும்
அம்மா அடியனு முன்மக னாமென் றணைத்தருளே
25. அணைத்தொரு காலினை அன்றுவான் தூக்கிநின் றாடினவர்க்
கிணையென ஆட லியல்வதே யாயினு மீசனுக்குத்
துணையெனக் காட்டவே தோற்றதாய் உன்பதந் தூக்கிலளாய்ப்
பிணைத்தனை பெண்ணின் பெருமையைத் தேவிநின் பேருடனே.
26. ஓடினேன் நின்னைவிட் டூர்பல சென்றிவ் வுலகமெல்லாந்
தேடினேன் வேறொரு செல்வமும் வேண்டுஞ் சுகங்களும்பின்
வாடினேன் என்றன் மனத்திலோர் இன்பமும் வாய்த்திலனாய்
நாடினேன் மீண்டுமுன் நற்பதம் ஆலவாய் நாயகியே
27. நாதம் முழங்கிட நான்மதிற் கூடலில் நன்குகற்றோர்
தேதி குறித்துன் திருமணம் நேர்ந்திடுஞ் சித்திரையில்
மோதித் திரளுநல் மாந்தரின் காட்சிகண் முன்ன(ம்)நிற்கப்
பாதந் தலையொடு பாய்ந்திடும் பத்திப் பரவசமே
28. பரவும் அடியவர் பார்த்து மகிழ்ந்திடப் பற்பலராய்ச்
சுரரும் முனிவரும் சூழ்ந்து துதித்திடச் சுந்தரனாம்
வரன்கை தனில்புனல் மாயவன் வார்த்திட மாதுமையுன்
கரமலர் கொண்டிடுங் காட்சி கயிலையில் காண்பரிதே.
29. அரிதன் இளையளே அன்றொரு நாளவன் அன்புடன்சீர்
வரிசை கொணர்ந்து மடங்கிய தெண்ணிநீ வாட்டமுறக்
கரிசனம் பொங்கியக் கண்ணுதற் காதலன் கைத்தலத்தே
பரிசாய் அளித்தனன் பாடிக் களிதரப் பைங்கிளியே
30. கிளியுடன் முத்துடைக் கொண்டையும் கெம்புக் கிரீடமுமாய்
ஒளிரும் மரகத ஓவிய மாய்நிற்கும் உன்னெழிலில்
களியும் கரையிலாக் காதலும் கொண்டதால் காலனையும்
நெளியும் படிசெயும் நெஞ்சினைத் தந்தனை நின்மகற்கே
31. கற்கு மடியவர் கண்டிடு வாருனைக் காற்றிலசை
நெற்குள் மணியென நீலத் திரைக்கடல் சிப்பியதன்
பற்குள் ஒளிந்து பளிச்சிடும் முத்தெனப் பல்லறிஞர்
சொற்குள் ஒளிரும் சுடரெனத் தோன்றிடும் சோதியென்றே
32. சோதிக்க வேண்டிநீ தந்திட்ட பொல்லாத் துயரமென்னைப்
பாதிக்க வொட்டாதுன் பாத மலரடி பற்றிநிற்பேன்
ஆதிக்கங் கொண்டனை அண்ட மனைத்தும் அடியனிதைச்
சாதிக்க வைத்த திறங்கண்டு போற்றுவன் தாயுனையே
அவையடக்கம்
இச்சையாய் எல்லாச் செயலுமாய் ஞானமாய் எங்குநிறை
சச்சிதா னந்தச் சொரூபிநீ என்றுனைச் சாற்றுதற்கே
இச்சிறு பாடலை ஏழையேன் யாத்தனன் என்மொழியைத்
துச்சமா யெண்ணிடா தேற்றருள் மாம துரைமணியே.
*****************
அரியும் அரனும்
தேரில்நல் ஆசான் திருவோடு காப்பார்தம்
பேரிலே கண்ணர் பெரும்பசியர் வான்புரக்க
ஆழி யுறைவிடம் கொண்டிடுவார் அன்புடையோர்
வாழத்தாம் தூதாய் வழிநடப்பார் மாட்டார்
அரிவைஉடல் வைத்திடுவார் ஆடவல்லார் ஆமிங்(கு)
அரியும் அரனென்று அறி.
.......
’அம்மன் தரிசனம்’ மாத இதழில் 2001-ல் வெளியாணது.
உ
திருச்சிற்றம்பலம்
![]()
அங்கயற்கண்ணியந்தாதி
(அனந்த்)
*******
காப்பு
நெஞ்சக் குடிலினில் நீயெழுந் திந்தநன் னேரமுன்னைக்
கொஞ்சிக் குலவிக் களிப்புறுந் தாயினைக் கும்பிடயான்
அஞ்சித் துவங்கிடு மிந்தவந் தாதிக் கருள்புரிவாய்
குஞ்சர மாயுருக் கொண்டடி யாருளங் கொண்டவனே
அந்தாதி
1. தாயாய் நினைத்துன தாளடைந் தேற்குநின் தண்ணருளை
ஓயா தளித்திவ் வறிவிலா ஏழையும் உன்புகழை
வாயால் வழுத்திட வாய்ப்பளித் தாய்தன் வடிவழகில்
மாயா வினோதனச் சொக்கனை விஞ்சிய மாணிக்கமே!
2. மாணிக்க மேகலை பூணும்அம் மேனி மரகதமாம்
ஆணிமுத் தாமெங்கள் ஆச்சி எயிற்றணி ஆங்கவள்தன்
வேணி மணியொளிர் சோதிவிண் மீனையும் விஞ்சுமெனப்
பாணி யமர்ந்தவப் பைங்கிளி பேசிடப் பார்த்தனனே
3. பார்க்கு மிடமெங்கும் பார்வதி நீதோன்றிப் பாசமுடன்
ஈர்க்கும் விதத்தினை எண்ணி இறுமாந் தெனைமறந்தேன்
யார்க்கு மெதுவு மளித்திடும் யாமளை யம்மவடி
யேற்குமிவ் வானந்த மன்றிமற் றேது மினியெதற்கே
4. இனிக்குந் தமிழ்கொண் டிசைப்போர்க் கென்றுமுன் இன்னருளைத்
தனித்துத் தருநற் றருவே குருபரன் சாற்றுபுகழ்
பனிக்கும்ப வெற்பின் புரவலன் பெற்ற பசுங்கொடியே!
கனிக்கு நிகர்மொழி கொஞ்சுங் கிளிவளர் கோமளமே!
5. கோமக ளாகவுன் செவ்வியைக் கண்டோர் குவலயத்தே
மாமது ராபுரி மாதுனை யன்றி மனத்தகத்தில்
தாமொரு தெய்வ மெவரையும் போயினித் தாங்கிலரே
ஆமவர் சூழலில் அம்மைநீ ஆக்கி(டு) அடியனையே
6. அடிநாள் தொடுத்தியான் ஆலவாய் மாநகர் ஆலயத்துன்
அடியே துணையென தம்மவென் றாரும் அறிந்திடுமா(று)
அடியேன் அரற்றிய காலையில் அஞ்சிடேல் ஆரையு(ம்)நான்
அடியே னெனச்சொன்ன அற்புதம் நெஞ்ச மகலரிதே
7. அரியின் இளையளே ஆங்குள்ள தேவர்கள் ஆனபலர்
வரிசை வகுத்துன்றன் வாயிலில் வந்து வணங்குகையில்
பரிசென உன்கரம் பற்றிய சொக்கப் பரமனவன்
கரிசனத் தோடுநின் காலிற் கழல்சுட்டிக் காட்டுவனே
’அம்மன் தரிசனம்’ மாத இதழில் 2001-ல் வெளியாணது.
’அம்மன் தரிசனம்’ மாத இதழில் 2001-ல் வெளியாணது.
கலைமகள் அந்தாதி
காப்பு
கொள்ளை அழகுடைய குஞ்சரமே! கண்ணுதலான்
பிள்ளைப் பெருமானே! பேதையிங்கு – வெள்ளைக்
கலையணிந்தாள் சீரைக் கவிபாட நின்தாள்
தலைபணிந்தேன் செய்வாய் தயை
செய்யுள்
1. வெண்பா வனத்தில் மகிழ்ந்து விளையாடும்
பெண்மானாய்ப் பேசும் பசுங்கிளியாய்ப்- பண்ணிசைப்போர்
கண்ணிற்குக் காணுங் கலைமகளே கற்பனையாம்
மண்ணிற்கு நீயே மழை.
2. மழைகொள் முகில்வரவால் மண்மகிழ்ந் தாங்குத்
தழைப்பதுபோல் உள்ளந் தளிர்க்கும் – பிழையின்றிக்
கற்றுத் தெளிந்து கவிபாடும் ஆற்றலைநீ
முற்றும் எனக்களித்தக் கால்
3. காலென்னும் கஞ்சமலர் கெஞ்சிடுமென் கண்முனொரு
காலேனுங் காட்டல் கடிதாமோ? – காலனையே
காலாற் கடிந்தோனும் கைகுவித்துக் கும்பிடுநற்
காலிணையோய் காப்பாய் கனிந்து.
4. கனியே கலைஞர்க்குக் கற்கண்டே காற்றி
லினிதே மிதக்கு மிசையே – தனியே
முனிவர்தாம் துய்க்கும் முடிபே தனியேற்
கினியார் துணையுள ரிங்கு
5. இங்கிதமாய் வெள்ளன்னம் ஏறு மிளங்கொடியே
தங்குவையென் னுள்ளத் தடாகத்தில்- அங்குநீ
ஆடி அசையும் அழகையான் எந்நாளும்
பாடி மகிழும் படி
6. படித்தில்லேன் பாரதியுன் பத்தனைப் போல
நடித்தேனும் நல்லன செய்யேன் – துடிக்கின்றேன்
அன்னையே என்றுன் அருள்பெற்றுப் பாடிடுவேன்
நின்னடியின் நீழற்கீழ் நின்று
7. நின்றென் மனக்குகையில் நித்திய மாயொளிரும்
ஒன்றுநீ யென்றே உணரவைத்தாய் – சென்றினித்
தேடித் தொழவேறு தெய்வமிலை தேர்ந்துன்னைப்
பாடியான் வந்ததற்கப் பால்
8. பாலனவெண் பட்டுடுக்கும் பாரதியிப் பாவலனென்
பாலுனது பார்வை படவருள்வாய் பாங்குடனப்
பாற்கடலிற் பாம்பணையோன் பாம்பணிவோன் பாடியன்
பாற்புகழும் பாவாய் பரிந்து.
9. பரிவோ டழைத்தென்னைப் பாடவைத்(து) உன்றன்
கரிசனமிவ் வேழைக்கும் காட்டிப் – பரிசாய்
அளித்திட்டாய் அன்னையுனை என்னுள்ளே கண்டு
களிகூர ஞானமெனும் கண்
10. கண்ணிருந்து மாங்கெழுதக் கோலிருந்தும் கற்பகமுன்
தண்ணருள் தானிலையேல் தாரணியில்- பண்ணழகு
பொங்கிவரும் பாக்கள் புலவோர்தம் கைவழியே
எங்ங னிழியு மியம்பு.
முடிப்பு
பண்போடு யாம்யாத்த பாமாலை யாமிந்த
வெண்பாக்கள் பூண்டெம் வினைதீர்ப்பாய்- கண்பார்வை
எங்கள்மேல் வீழ்த்திஎமக் கென்றும் அருள்புரிவாய்
மங்களமே நீதான் மகிழ்ந்து
அனந்த், அக்டோபர் 8, 2001
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கருத்துச் சொன்னதற்கு நன்றி. இப்பாடல் 2001-ல் எழுதப்பட்டு அச்சிலும் வெளிவந்தபடியால், நீங்கள் சுட்டிய மாற்றுச் சொற்களை தற்போது பயன்படுத்துவது சாத்தியமன்று.கழல் பற்றி முன்பு பேசியுள்ளோம். மீனாக்ஷியைப் பொருத்தவரையில் அவள் திக்விஜயம் செய்து மன்னர்களை வெல்லுங்கால் வீரக்கழலணிந்தாள் என்றோ அல்லது தனது உடலில் சிவ பெருமானின் பாகத்தில் கழல் அணிந்தாள் என்றோ கொள்லலாம்.அனந்த்
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி இடப் பக்கத்துச்- சிலம்பும் வலப் பக்கத்து வீரக் கழலும் ஒலிக்கும் சிறிய அடிகளையும், வலம்படு கொற்றத்து வாய் வாட் கொற்றவை - மேலான வெற்றியையும் வினை வாய்க்கப் பெறும் வாளினையுமுடைய கொற்றவை ; இடப்பாகம் கொற்றவையும் வலப்பாகம் சிவபெருமானும் ஆய உருவமாகலான் 'சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி' என்றார். வலம்-மேன்மை. |
| 1916. | நொம்பைந்து புடைத்தொல்கு |
11. பொ-ரை: பந்து நோகுமாறு அதனைப் புடைத்துக்கொண்டு
பாதங்களில் அணிந்த நூபுரம் ஒலிக்க அழகிய பந்துகளும் கழற்
சிக்காய்களும் கொண்டு விளையாடி மகளிர் ஆரவாரிக்கும் அழகிய
காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப்பாடல்கள்
பத்தையும் எமக்குப் பற்றுக் கோடு எனக்கருதிச் சாய்க்காட்டு
இறைவனை ஏத்து வார்க்கு இடர்கள் கெடும்.
கு-ரை: நொம்-நோகும். பைந்து-பந்து. “தண்மலர் நறும்
பைந்து ஊழ் அறிந்து உருட்டா” (பெருங். மகத 8-64) புடைத்து-
(பந்து) அடித்து. ஒல்கு-தளரும். நூபுரம் - (பாதக்) கிண்கிணி, சிலம்பு.
அம்பந்து-அழகிய பந்து. கழல்-பெண்கள் விளையாடும் கழற்காய்.
அரவம்-ஓசை. எம்பந்தம்- எம்முடைய பற்று (க் கோடு). ஏத்துவார்-
பாராயணம் புரிபவர்.
கணேசனின் கழல் விளக்கம் சிறப்பு! -புலவர் இராமமூர்த்தி.
--
2009-ல் சிவசிவா ஒரு தேவாரத்தைச் சுட்டிக்காட்டினார்:ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனு மித்தனை யல்லது
பேசு மாறறி யாளொரு பேதையே.இதற்கு உரை தவறாக இருக்கிறது என எண்ணுகிறேன். இளம்பெண்கள்ஊஞ்சல் ஆடுவதும், கழற்சிக்காய் விளையாடுவதையும் குறிக்கும் பாடல் இது.வீரக் கழல் அணிவதை இத் தேவாரம் பேசவில்லை.நூற்றுக்கணக்கான பாடல்களில் பெண்கள் கழல் விளையாட்டு வருகிறது:
| பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய மலைச்செல்வி பிரியாமேனி அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தா னமரர்தொழ வமருங்கோயில் தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறு மிறைவனது தன்மைபாடிக் கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங் கழுமலமே. |
2009-ல் சிவசிவா ஒரு தேவாரத்தைச் சுட்டிக்காட்டினார்:ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனு மித்தனை யல்லது
பேசு மாறறி யாளொரு பேதையே.
இதற்கு உரை தவறாக இருக்கிறது என எண்ணுகிறேன். இளம்பெண்கள்ஊஞ்சல் ஆடுவதும், கழற்சிக்காய் விளையாடுவதையும் குறிக்கும் பாடல் இது.வீரக் கழல் அணிவதை இத் தேவாரம் பேசவில்லை.