On Saturday, February 6, 2016 at 1:11:19 AM UTC-8, ruthraa e.paramasivan wrote:
அன்புள்ள திரு கணேசன் அவர்களே
கர்நாடகாவில் அரசாங்க சின்னமாய் அந்த "கண்ட பேரண்ட பட்சி"யாய்
காட்சிப்படுகிறதே அந்த "இருவாய்"க்குருவியின் சின்னம் தான் அது என்றால் நம் தமிழ் தொன்மையில் தான் கன்னட மொழி மரபு இருந்திருக்குமோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு.
வழியாக சிந்து சமவெளிக்கு, அதன் முடிவில் வருவது. சரபம் என்னும் வடிவை அடக்கிய கண்டபேரண்ட பக்ஷி என்னும்
புராணங்கள் எழுந்துள்ளன.
-----------------------
ஆனால், இருவாச்சி/இருவாய் என்னும் பறவை யினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகுதி.
மேற்குத்தொடர்ச்சி மலை என்னும் சஹ்யாத்ரியை எல்லையாகக் கொண்ட கேரளாவின்
மாநிலப் பறவை இந்த இருவாய்/இருவாய்ச்சி. இருபுறமும் கூர்மையான வாய்/வய் கொண்ட
adze-axe-னினால் பெயர் பெறும் பறவை இது. முந்தைய மடலில் இருவாச்சி எனும் முல்லை ஜாதியின்
கூர்மையான நுனி கொண்ட பூவிதழ்களைக் காட்டியுள்ளேன். இருவாச்சி/இருவாய் ஆய்தமும்,
இருவாச்சி முல்லையும் ஒப்பிட்டால் புரிந்துகொள்ளலாம்.
அடுத்து, இருவாச்சி குருவியை - ஹார்ன்பில்லை - குலச்சின்னமாகக் கொண்ட வேட்டுவர் பற்றி
விளக்க சாகாடை (காடை), பனங்காடை குருவிகளை குலச் சின்னங்களாகக் கொண்ட வெள்ளாளர்
பற்றி குறிப்பிடுகிறேன்.
ஒரு வினா:
பஃறுளி - பறுளி ஆறு என்கின்றனர் குமரி மாவட்டத்தில். அஃது - அது, இஃது - இது.
பல் (தந்தம்) கொண்ட, யானையோடு விலங்கியலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு
முன் தொடர்பிருந்த விலங்கு பஃறி = பன்னி/பன்றி. பல்+தி = பஃறி, பன்னி/பன்றியிலும்
உள்ள சொல் பல் (=தந்தம்). சலாகை என்னும் மூத்த ஒருத்தலில் தந்தம் உண்டு பஃறிக்கு.
அதுதான் வராக அவதாரம். சில்/சிறு > சின்னம் “icon", அஃது, இஃது, உஃது, பஃறி, பஃறுளி (=பல் துளி)
... போல சில் + ந (n-pratya) = சிஃனம் என வடமொழியில் உள்ள தமிழ்ச்சொல்லா?
பஃறி/பஃனி = பன்னி என ஆகிவிட்டது. சிஃநம் = சின்னம், தமிழின் ஆய்தம் இன்னும்
வடமொழி வைத்துள்ளதோ?
நா. கணேசன்