கூறிடத்தான் வேண்டுவதோ?
முதுமை
கூட இனியதுதான்
மூளை பணியில் சிறக்குமெனில்
பதுமை போல இருந்துவிடின்
பயணம் வீணாய்ப் போகாதோ?
பதியும் புதுமைப் பதிவுகளும்
பதிந்த நினைவும் சிதையாமல்
உதவ வேண்டும் வாராகி
உள்ளத் துக்குள் உறைந்தருள்வாய்
எடுத்த
எடுப்பில் எழுதுபவன்
இளைத்துப் போக விடலாமா?
படித்த படிப்பு தொடராகப்
பயன்படட்டும் வாராகி
தொடுத்துக் கொண்டே இருந்தால்தான்
சொற்கள் தாமாய் வந்தொளிரும்
கொடுத்துக் கொண்டே இருப்பவளே
கூற வும்நான் வேண்டுவதோ?
இனிப்புத்
தின்னக் கூடாதாம்
என்ன கொடுமை? அதனால் தான்
இனிக்க இனிக்கக் கவிதைகளில்
இறங்கிச் சுவைக்கப் பார்க்கின்றேன்
இனிக்கும் கவிதை நோயில்லை
இதமாய நோயைச் சரிசெய்யும்
மனித்தப் பிறவி உயரத்தில்
வதியச் செய்வாய் வாராகி
On May 11, 2026, at 20:45, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBMZjJp62Jq8SaRjOBQKZ8u3CF%3Dc-wAChs4DcP24u1t4g%40mail.gmail.com.
படிப்புத் தொடராகப்
இதய நோயைச் சரிசெய்யும் ?
V. Subramanian
கூறிடத்தான் வேண்டுவதோ?
...
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN1r8XUWyqbS2uYS3hKEWJfpnpsG4gQ9mMCL%3Dw1v5J7yg%40mail.gmail.com.
அருமையான கவிதை.
--
வாராகியிடம் வேண்டும் முறை அற்புதம், தலைவரே.அன்பன்