கூறிடத்தான் வேண்டுவதோ?

5 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
May 11, 2026, 11:15:46 AM (22 hours ago) May 11
to santhavasantham

கூறிடத்தான் வேண்டுவதோ?

 

முதுமை கூட இனியதுதான்
 மூளை பணியில் சிறக்குமெனில்
பதுமை போல இருந்துவிடின்
 பயணம் வீணாய்ப் போகாதோ?
பதியும் புதுமைப் பதிவுகளும்
  பதிந்த நினைவும் சிதையாமல்
உதவ வேண்டும் வாராகி
   உள்ளத் துக்குள் உறைந்தருள்வாய்

எடுத்த எடுப்பில் எழுதுபவன்
   இளைத்துப் போக விடலாமா?
படித்த படிப்பு தொடராகப்
   பயன்படட்டும் வாராகி
தொடுத்துக் கொண்டே இருந்தால்தான்
    சொற்கள் தாமாய் வந்தொளிரும்
கொடுத்துக் கொண்டே இருப்பவளே
     கூற வும்நான் வேண்டுவதோ?

இனிப்புத் தின்னக் கூடாதாம்
     என்ன கொடுமை? அதனால் தான்
இனிக்க இனிக்கக் கவிதைகளில்
     இறங்கிச் சுவைக்கப் பார்க்கின்றேன்
இனிக்கும் கவிதை நோயில்லை
     இதமாய நோயைச் சரிசெய்யும்
மனித்தப் பிறவி உயரத்தில்
      வதியச் செய்வாய் வாராகி

தனிமை கூட இன்பந்தான்
       சத்தி யத்தில் தோய்ந்துவிடின்
நினைவில் “நான்யார்?” எனவூன்றி
       நிமிர்ந்தி ருக்கச் செய்வாயே
கனவில் கூடக் கவிதை தரும்
       கார ணத்தி வாராகி
நனவு சிறந்து விளங்குகிற
       ஞானம் வேண்டும் அருள்வாயே!
       “

Ram Ramakrishnan

unread,
May 11, 2026, 11:21:06 AM (22 hours ago) May 11
to santhav...@googlegroups.com
வாராகியிடம் வேண்டும் முறை அற்புதம், தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On May 11, 2026, at 20:45, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBMZjJp62Jq8SaRjOBQKZ8u3CF%3Dc-wAChs4DcP24u1t4g%40mail.gmail.com.

Siva Siva

unread,
May 11, 2026, 12:30:33 PM (21 hours ago) May 11
to santhav...@googlegroups.com
இனிய வேண்டுகோள்.

உள்ளத் துக்குள் உறைந்தருள்வாய் /

உள்ளத் துள்ளே உறைந்தருள்வாய்?

படிப்பு தொடராகப் /

படிப்புத் தொடராகப்



இதமாய நோயைச் சரிசெய்யும் /

இதய நோயைச் சரிசெய்யும் ?


V. Subramanian




On Mon, May 11, 2026 at 11:15 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

கூறிடத்தான் வேண்டுவதோ?

 ...

Swaminathan Sankaran

unread,
May 11, 2026, 1:40:49 PM (20 hours ago) May 11
to santhav...@googlegroups.com
அருமையான கவிதை.
நம்மைப் போன்ற 80களில் 'உலா' வருபவர்களுக்கு 
ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் கவிதை.

சங்கரன் 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
May 11, 2026, 2:57:03 PM (19 hours ago) May 11
to santhav...@googlegroups.com
நன்றி

On Mon, May 11, 2026 at 1:40 PM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
அருமையான கவிதை.

Subbaier Ramasami

unread,
May 11, 2026, 2:59:14 PM (19 hours ago) May 11
to santhav...@googlegroups.com
நன்றி

இதமாய்  என்றிருக்க வேண்டியது இதமாய என்று வந்துவிட்டது. 

இலந்தை

--

Subbaier Ramasami

unread,
May 11, 2026, 3:00:06 PM (19 hours ago) May 11
to santhav...@googlegroups.com
நன்றி

On Mon, May 11, 2026 at 11:21 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
வாராகியிடம் வேண்டும் முறை அற்புதம், தலைவரே.

அன்பன்
Reply all
Reply to author
Forward
0 new messages