வாழலே பிறந்தோம்!

4 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 18, 2025, 10:29:41 PM (4 days ago) Oct 18
to santhav...@googlegroups.com
. வாழவே பிறந்தோம்!

ஊடகம் ஓய்வு கொள்ள
   ஓரிரு நாள்கள் மெள்ளப்
பாடிடும் பறவை கேட்போம்
   பனித்துளி கையில் சேர்ப்போம்
ஆடிடும் மலர்வ னப்பை
   அணில்களின் வரவைப் பார்ப்போம்
நாடியே நம்மை நோக்கி
    நகர்ந்திடும் இனிமை ஏற்போம்!


கீழைவான் கதிரோன் தீட்டும்
   கேழொளிர் ஓவி யத்தை,
ஆழிவான் படகு மேகம்
   அசைந்துசெல் அழகை,வண்ணம்
ஏழினில் வில்வ ளைக்கும்
   இயற்கையின் எழிலைக் காண்போம்
வாழவே பிறந்தோம் இங்கு
     மகிழ்ந்திட உறுதி பூண்போம்!

                     —தில்லைவேந்தன்.

..

K.R. Kumar

unread,
Oct 19, 2025, 1:25:36 AM (4 days ago) Oct 19
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு, தில்லை வேந்தன்.

பிகு: மடலின் தலைப்பில் ஒரு தட்டச்சுப் பிழை, "வே" க்குப் பதிலாக "லே" என்றிருக்கிறது.

குமார்(சிங்கை)
 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hg2BwkgSDjNv4VkfBM4PFuVous-4FPgaM7CCE4BdBSrtw%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 19, 2025, 1:27:58 AM (4 days ago) Oct 19
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு குமார்(சிங்கை)

            - தில்லைவேந்தன்
.

Arasi Palaniappan

unread,
Oct 19, 2025, 2:00:01 AM (4 days ago) Oct 19
to சந்தவசந்தம்
மிக அருமை.

--

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 19, 2025, 2:06:23 AM (4 days ago) Oct 19
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

    —தில்லைவேந்தன்
Reply all
Reply to author
Forward
0 new messages