Another vegetable veNbA!
19) -- 2026-04-08 -- புடலங்காய்
உடலங்காய் கோடையில் ஓர்வளை வில்லாப்
புடலங்காய் கொண்டில் புகுந்தேன் - மடநங்காய்
நல்லவிலை என்றேன்நான் நாரிமுற்றல் வாங்குமெனச்
சொல்லவிலை யென்றாள் துணிந்து.
பதம் பிரித்து:
உடலம் காய்- கோடையில் ஓர் வளைவில்லாப்
புடலங்காய் கொண்டு இல் புகுந்தேன்; "மடநங்காய்,
நல்ல விலை" என்றேன் நான்; நாரி, "முற்றல் வாங்கும் எனச்
சொல்லவிலை" என்றாள் துணிந்து.
உடலம் - உடம்பு;
வளைவில்லா - 1. வளைவு (கோணல்) இல்லாத; 2. வளைக்கும் வில் போலத் திடமான (வில்லா - வில்லாக; ஆதல் - ஒத்தல்);
முற்றல் - மிகவும் முற்றிய காய்;
வாங்கும் - வாங்குங்கள்;
V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO3MK2cwR7VfAuY3ymOBZ1ZLXQLkLbpp4uZd9fc4aZWUw%40mail.gmail.com.
நல்லவிலை என்றாலும் நையப் புடைப்பதொக்கச்
சொல்லடி வாங்குமெங்கள் சுந்தரரே- அல்லலுற்று
உச்சிவெயில் வேளையிலே ஊரடங்கிப் போகையிலே
பச்சைப் புடலையால் பாடு.
On 13 Apr 2026, at 7:44 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
--