On 3 Nov 2025, at 7:21 PM, M. Viswanathan <meev...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-vBijoTtObZpoaUmdPcVP56BZfukmqg4W%3DnytLr_4V9aQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E4A40D85-4169-4B10-9DA2-BEFB3B0EEA25%40gmail.com.
--
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXabSgbo1j8E-izyo5FX-bbYgw1R7FXe5aZq-HnnOE3aJQ%40mail.gmail.com.
கவிமாமணி செல்லப்பன் அவர்கள் மண்ணகத்தில் நிறைவாழ்வு வாழ்ந்து தனது 99ம் வயதில்விண்ணகம் சென்றுவிட்டார். இன்னும் கொஞ்சநாள்கள் இருந்திருந்தால் நூறுவயதை எட்டியிருப்பார். அவர் கவியரங்கங்களில் கவிதைகளை படிக்கும் நேர்த்தியே தனி. கம்பீரமான குரல். 1971ம் ஆண்டு முதலே எனக்கு அவரொடு பழக்கம். அவர் மரபுக்கவிதைக்குப் பரிசு கொடுப்பதற்கென நிறுவியுள்ள அறக்கட்டளையின் முதல் பரிசை தொடங்கிய ஆண்டே பெற்றவன் நான் .
கவிதையென வாழ்நாள் களம்கண்ட மேலோர்
அவைசிறக்கப் பாடல் அளித்தார்- தவறாத
நல்லொழுக்கம் கொண்ட நற்கவிஞர் போற்றுபுகழ்
வல்லாங்கு நிற்கும் மதிப்பு.
பழக இனியர், பரிவுமிகக்
கொண்டோர்
விழைவைத் தமிழில் விடுத்தோர்- தொழிலெனவே
பாரதி சொன்னபடி பாவோடு வாழ்ந்தகவி
பேரும் புகழும் பெரிது.
பண்ணமைந்த சொற்களிலே கவிதைகளை யாத்து,
பண்பாடு குலையாத எண்ணங்கள் கோத்து
விண்ணதனை மண்ணுக்கு வரவாக்கு மாறு
விளங்குமிறைப் பனுவல்பல யாத்ததிவர் பேறு
கண்கவரும் காட்சியெலாம் கவிதைகளாய் மாறும்
கருத்தாழம் மனம்கவரும், கவிதைநயம் மீறும்
விண்ணதனை அணிசெய்யச் சென்றுள்ளார் இன்று
மேவு புகழ் எந்நாளும் விளங்கிடுக நன்று
அகவலிவர் காலடியில் அடிமையென நிற்கும்
ஆசிரிய விருத்தங்கள் புதுவுத்தி கற்கும்
புகலரிய வெண்பாக்கள் வடிவமைதி பெற்றுப்
பூரிப்புக் கொண்டின்னும் பருத்திடுமோர் சுற்று
தகவுடனே சிந்துப்பா, சந்தங்கள் யாவும்
தாளகதி தவறாமல் இவர்கவியில் மேவும்
இகலெதுவும் இல்லாத செல்லப்பன் நாமம்
என்றைக்கும் நிலவிடுக இறையடிக்கீழ் சேமம்
பழகுவதற் கினியரிவர், பண்பாளர், நல்லார்
பண்படுத்தும் சொல்லுடையார், புண்படுத்தச் சொல்லார்
பழிவரினும் நெறிதவறார், உழைப்பதிலே சோரார்
பாராட்டும் மனமுடையார், ஒருதலையாய்ப் பாரார்
மொழியினிலே தெளிவுடையார், முனைமுறியா வாறு
மூண்டுவரும் பாடல்களை யாப்பதிவர் பேறு
இழையுமெழில் புதுவயலார் செல்லப்பன் கீர்த்தி
எந்நாளும் இம்மண்னில் நிற்கும் நல் நேர்த்தி
வெல்லப்பண் பாடும் மிகச்சிறந்த பாவாணர்
செல்லப்பன் பற்றியென்ன செப்புவது? – நல்லப்பன்
சொல்தேர்ந்து பாடுகிற சூக்குமங்கள் தேர்ந்தகவி
வெல்லட்டும் கொள்ளட்டும் விண்.
இலந்தை
3-11-2025
--
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBA62BdMOtsa7mw9MXNqJPmNunttsE-0MLfCA-0NCgPnuQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hi-aPDr49Z%2BsuPU-qjB5qLoMphoxKT1b500MV8phUZU5w%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBA62BdMOtsa7mw9MXNqJPmNunttsE-0MLfCA-0NCgPnuQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNM53cERK9tznTcyxehwLx-g7C_4NuZCoW9i5cU-qncOmA%40mail.gmail.com.
On Nov 3, 2025, at 21:59, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBA62BdMOtsa7mw9MXNqJPmNunttsE-0MLfCA-0NCgPnuQ%40mail.gmail.com.