சிவரூபம் - மீ. விசுவநாதன்

3 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Feb 14, 2026, 2:00:32 PM (4 days ago) Feb 14
to Santhavasantham, M. Viswanathan
"சிவரூபம்"
               (மீ. விசுவநாதன்)

செங்கதிர் வானம் சிவரூபம்
      சிரிகிற குழந்தை சிவஞானம் 
திங்களை அணிந்த மதிரூபன் 
    திறமையைக் கூட்டும் கலைவாணன் 
மங்கல உடுக்கை ஒலியாக 
     மன்னுயிர் மூச்சில் இசைவாணன்  
கங்கையை அள்ளி முடிகொண்டான் 
     கருணையை அள்ளிப் பிடியென்பான்.

ஆழியின் நீலம் அவன்கண்டம் 
  அடியவர்க் கமுதம் சிவநாமம் 
நாழிகைக் கணக்கில் அவன்காலன் 
   ஞானியர்  மனத்தில் தவச்சீலன் 
நாரண உருவில் தெரிகின்றான் 
   நஞ்சினை முறிக்கும் அமுதாவான் 
பூரண தத்வ மறையாவான்  
    புரிகிற போது சிவமாவான்.       

 (இன்று (15.02.2026) இன்று மகாசிவராத்திரி)
             (15.02.2026 12.05 am)

Ram Ramakrishnan

unread,
Feb 14, 2026, 2:06:19 PM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com
அற்புதம். ஆனந்துப் பெருவூற்று, நிலு. மீ.ஙி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-uZcSGqP5i6pNDDKLfTTyNMH2qXjMLELcQdy_7d8a_Tcg%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
Feb 14, 2026, 8:51:48 PM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com, M. Viswanathan, Santhavasantham
மிக மிக அருமை, திரு. மீவி!

(சிரிகிற = தட்டச்சு)

Kaviyogi Vedham

unread,
Feb 14, 2026, 9:13:21 PM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com
ys.  wonderful, 
   yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Feb 14, 2026, 10:14:02 PM (4 days ago) Feb 14
to santhav...@googlegroups.com, M. Viswanathan
மிகவும் அருமை! ஐயா! 
—- சத்ய வேழன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

M. Viswanathan

unread,
Feb 15, 2026, 10:42:22 AM (3 days ago) Feb 15
to Sai Ganesan H, Santhavasantham
நன்றி.

"சிரிக்கிற" தட்டச்சுப் பிழையைத் திருத்திக் கொண்டேன். சுட்டிக்காட்டிய அன்புக் கவிஞர் இமயவரம்பன் அவர்களுக்கு நன்றி.

அன்பன்,
மீ. விசுவநாதன்
15.02.2026 21.12 pm

Subbaier Ramasami

unread,
Feb 15, 2026, 10:47:21 AM (3 days ago) Feb 15
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு

On Sat, Feb 14, 2026 at 1:00 PM M. Viswanathan <meev...@gmail.com> wrote:
"சிவரூபம்"
               (மீ. விசுவநாதன்)

M. Viswanathan

unread,
Feb 15, 2026, 11:53:25 AM (3 days ago) Feb 15
to Santhavasantham
அன்புமிக்கக் கவி வேழம் அவர்களின் வாழ்த்துக்கு மகிழ்ச்சி. நன்றி.

அன்பன்,
மீ. விசுவநாதன்
15.02.2026 22.23 pm

Siva Siva

unread,
Feb 15, 2026, 11:59:50 AM (3 days ago) Feb 15
to santhav...@googlegroups.com
Nice.

/ கங்கையை அள்ளி முடிகொண்டான்  /

அவன் கங்கையை அள்ளவில்லையே. வானிலிருந்து அதுவன்றோ சடையில் வீழ்ந்தது.

/ தவச்சீலன் /

தவசீலன் .

V. Subramanian

N. Ganesan

unread,
Feb 15, 2026, 6:00:51 PM (3 days ago) Feb 15
to santhav...@googlegroups.com
 சிறப்பான பாடல், மீவி.

On Sun, Feb 15, 2026 at 10:53 AM M. Viswanathan <meev...@gmail.com> wrote:
அன்புமிக்கக் கவி வேழம் அவர்களின் வாழ்த்துக்கு மகிழ்ச்சி. நன்றி.

அன்புமிக்க கவிவேழம்

N. Ganesan

unread,
Feb 15, 2026, 6:13:31 PM (3 days ago) Feb 15
to santhav...@googlegroups.com
On Sun, Feb 15, 2026 at 10:59 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Nice.

/ கங்கையை அள்ளி முடிகொண்டான்  /

அவன் கங்கையை அள்ளவில்லையே. வானிலிருந்து அதுவன்றோ சடையில் வீழ்ந்தது.

அள்ளுதல் = நுகர்தல். அனுபவித்து முடியில் கொண்டான் எனச் சொல்லலாமா?
கங்கையை இவ்வாறு அள்ளுதலால், உமைநங்கை சினந்தாள்.

/ தவச்சீலன் /

தவசீலன் .

V. Subramanian

On Sat, Feb 14, 2026 at 2:00 PM M. Viswanathan <meev...@gmail.com> wrote:
"சிவரூபம்"
               (மீ. விசுவநாதன்)

செங்கதிர் வானம் சிவரூபம்
      சிரிகிற குழந்தை சிவஞானம் 
திங்களை அணிந்த மதிரூபன் 
    திறமையைக் கூட்டும் கலைவாணன் 
மங்கல உடுக்கை ஒலியாக 
     மன்னுயிர் மூச்சில் இசைவாணன்  
கங்கையை அள்ளி முடிகொண்டான் 
     கருணையை அள்ளிப் பிடியென்பான்.

ஆழியின் நீலம் அவன்கண்டம் 
  அடியவர்க் கமுதம் சிவநாமம் 
நாழிகைக் கணக்கில் அவன்காலன் 
   ஞானியர்  மனத்தில் தவச்சீலன் 
நாரண உருவில் தெரிகின்றான் 
   நஞ்சினை முறிக்கும் அமுதாவான் 
பூரண தத்வ மறையாவான்  
    புரிகிற போது சிவமாவான்.       

 (இன்று (15.02.2026) இன்று மகாசிவராத்திரி)
             (15.02.2026 12.05 am)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages