எனது லிங்காஷ்டக மொழிபெயர்ப்பு முயற்சி - பகுதி 1

9 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Feb 16, 2026, 9:48:49 AM (2 days ago) Feb 16
to Santhavasantham
திரு. நிரஞ்சன் பாரதி அவர்கள் வேறோர் இழையில் இட்ட மிக அருமையான லிங்காஷ்டக மொழிபெயர்ப்பைப் பார்த்ததும் எனக்கும் இதை மொழிபெயர்த்துச் சந்த விருத்தமாக எழுத வேண்டும் என்று தோன்றியது. 
முதல் நான்கு ஸ்லோகங்களை எழுதிப் பார்த்தேன். இவை ஓரளவிற்குச் சரியாக இருந்தால் மேலும் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

எனது லிங்காஷ்டக மொழிபெயர்ப்பு முயற்சி - பகுதி 1
(சந்த விருத்தம் - மூன்றடி மேல் வைப்பு
முதல் மூன்று அடிகள் : தனதன/தானன தானன தானன தான
ஈற்றடி : தானன தானன தானன தான)

மலர்மிசை யோன்சுரர் மால்தொழு லிங்கம்
மலமறு வாளெழில் வாய்ந்திடு லிங்கம்
கலுழ்பிற வித்துயர் காய்ந்திடு லிங்கம்
சீருற வாழ்க சதாசிவ லிங்கம். (1)

(மலர்மிசையோன் = பிரமன்; 
வாளெழில் = வாள் + எழில் = ஒளிமிக்க அழகு;
கலுழ் = கவலையில் ஆழ்ந்துள்ள;)

பகவர் மகாமுனி வோர்பணி லிங்கம்
அகம்வளர் காமம் எரித்தருள் லிங்கம்
மிகுவிறல் ராவணன் வீறறு லிங்கம்
சீருற வாழ்க சதாசிவ லிங்கம். (2)

(பகவர் = தெய்வங்கள்/தேவர்கள்)

விரையவை பூசி மிளிர்ந்திடு லிங்கம்
விரிவுற ஞானம்வி ளக்கிடும் லிங்கம்
சுரரசுர் சித்தர்கள் தாம்தொழு லிங்கம்
சீருற வாழ்க சதாசிவ லிங்கம். (3)

(விரை அவை = வாசனை மிகுந்த பொருள்கள்;
அசுர் = அசுரர் என்பதன் கடைகுறை;)

மிக்கபொன் மாமணி வேய்ந்தொளிர் லிங்கம்
அக்கவின் நாகர சார்ந்திடு லிங்கம்
தக்கனின் வேள்வி தகர்த்திடு லிங்கம்
சீருற வாழ்க சதாசிவ லிங்கம். (4)

(அக்கவின் = அ + கவின் = அந்த அழகான;
நாகரசு = நாகராஜன்; 
ஆர்ந்திடு = அணிந்திடு;)

(தொடரும்)
- இமயவரம்பன்

Arasi Palaniappan

unread,
Feb 16, 2026, 1:00:41 PM (2 days ago) Feb 16
to சந்தவசந்தம்
மிக அருமை!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E32FDAFA-828A-4195-83A3-1604B68C65ED%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Feb 16, 2026, 1:55:51 PM (2 days ago) Feb 16
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, அண்ணலே!

- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Feb 16, 2026, 2:49:04 PM (2 days ago) Feb 16
to santhav...@googlegroups.com
மிக அருமை,திரு. இமயவரம்பன் 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 16, 2026, at 09:48, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

--

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Feb 16, 2026, 2:59:23 PM (2 days ago) Feb 16
to சந்தவசந்தம்
அருமை சிறப்பாக உள்ளது 

On Monday, February 16, 2026 at 8:18:49 PM UTC+5:30 இமயவரம்பன் wrote:
திரு. நிரஞ்சன் பாரதி அவர்கள் வேறோர் இழையில் இட்ட மிக அருமையான லிங்காஷ்டக மொழிபெயர்ப்பைப் பார்த்ததும் எனக்கும் இதை மொழிபெயர்த்துச் சந்த விருத்தமாக எழுத வேண்டும் என்று தோன்றியது. 
முதல் நான்கு ஸ்லோகங்களை எழுதிப் பார்த்தேன். இவை ஓரளவிற்குச் சரியாக இருந்தால் மேலும் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

எனது லிங்காஷ்டக மொழிபெயர்ப்பு முயற்சி - பகுதி 1
(சந்த விருத்தம் - மூன்றடி மேல் வைப்பு
முதல் மூன்று அடிகள் : தனதன/தானன தானன தானன தான
ஈற்றடி : தானன தானன தானன தான)

மலர்மிசை யோன்சுரர் மால்தொழு லிங்கம்
மலமறு வாளெழில் வாய்ந்திடு லிங்கம்
கலுழ்பிற வித்துயர் காய்ந்திடு லிங்கம்
சீருற வாழ்க சதாசிவ லிங்கம். (1)

- இமயவரம்பன்

இமயவரம்பன்

unread,
Feb 16, 2026, 5:44:04 PM (2 days ago) Feb 16
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்புடன் வாழ்த்திய திரு. ராம்கிராம், திரு. தங்கவேல் ஆகியோருக்கு மிக்க நன்றி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 16, 2026, 8:02:11 PM (2 days ago) Feb 16
to santhav...@googlegroups.com
அருமையாக அமைந்திருக்கிறது.
அனந்த்

இமயவரம்பன்

unread,
Feb 16, 2026, 10:07:33 PM (2 days ago) Feb 16
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு. அனந்த்!

GOPAL Vis

unread,
Feb 16, 2026, 10:47:40 PM (2 days ago) Feb 16
to santhav...@googlegroups.com
அற்புதமாக அமைந்திருக்கிறது! 
தத்ப்ரணமாமி என்பது நமஸ்காரம் செய்வதைக் குறிக்கும் என்பதால், நான்காம் அடி சேவடி/சீரடி போற்றி என்பது போல  இருக்கலாமோ என்று தோன்றியது. போற்றி என்பதும் நமாமி என்பதற்கு இணை இல்லை என்றாலும், திருவடியைப் போற்றுவது அதையே குறிக்கும் என்று எண்ணுகிறேன். மேலும், தமிழ் அருச்சனைகளில் நம: என்னும் இடத்தைப் போற்றி பற்றி இருக்கிறது என்பதால், வாசிப்பவர்கள் மனத்தில் போற்றி நம: என்னும் உணர்வைத் தரும் என்றும் எனக்குப் பட்டது. 
பணிவுடன் 
கோபால். 

On Mon, Feb 16, 2026 at 8:18 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
திரு. நிரஞ்சன் பாரதி அவர்கள் வேறோர் இழையில் இட்ட மிக அருமையான லிங்காஷ்டக மொழிபெயர்ப்பைப் பார்த்ததும் எனக்கும் இதை மொழிபெயர்த்துச் சந்த விருத்தமாக எழுத வேண்டும் என்று தோன்றியது. 
முதல் நான்கு ஸ்லோகங்களை எழுதிப் பார்த்தேன். இவை ஓரளவிற்குச் சரியாக இருந்தால் மேலும் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

எனது லிங்காஷ்டக மொழிபெயர்ப்பு முயற்சி - பகுதி 1
(சந்த விருத்தம் - மூன்றடி மேல் வைப்பு
முதல் மூன்று அடிகள் : தனதன/தானன தானன தானன தான
ஈற்றடி : தானன தானன தானன தான)

மலர்மிசை யோன்சுரர் மால்தொழு லிங்கம்
மலமறு வாளெழில் வாய்ந்திடு லிங்கம்
கலுழ்பிற வித்துயர் காய்ந்திடு லிங்கம்
சீருற வாழ்க சதாசிவ லிங்கம். (1)

(மலர்மிசையோன் = பிரமன்; 
வாளெழில் = வாள் + எழில் = ஒளிமிக்க அழகு;
கலுழ் = கவலையில் ஆழ்ந்துள்ள;)
....................

Niranjan Bharathi

unread,
Feb 16, 2026, 11:47:09 PM (2 days ago) Feb 16
to santhav...@googlegroups.com
இலக்கிய நயம் மிகுந்த செழுமையான மொழிபெயர்ப்பு ஐயா. வாழ்த்துகள்.

சுரரசுர் சித்தர்கள் தாம்தொழு லிங்கம்

என்ற வரியில் சித்தர்கள் என்ற சொல் சந்தத்திற்குள் உட்காரவில்லை. 

இமயவரம்பன்

unread,
Feb 17, 2026, 4:05:41 AM (yesterday) Feb 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி திரு. கோபால்.  

தத்ப்ரணமாமி என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் “போற்றி” என்று தெளிவுபட விளக்கியமைக்கு மிக்க நன்றி! ஈற்றடியைச் “சீரடி போற்றி சதாசிவ லிங்கம்.” என்று மாற்றுகிறேன்.

- இமயவரம்பன் 

இமயவரம்பன்

unread,
Feb 17, 2026, 4:20:32 AM (yesterday) Feb 17
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்புக்கு மிக்க நன்றி, திரு. நிரஞ்சன்! சமஸ்கிருத ஞானம் அவ்வளவாக இல்லாத எனக்குத் தங்களுடைய சிறப்பான மொழிபெயர்ப்பே உறுதுணையுமாக இருந்து ஊக்குவித்தது என்பதால் அதற்கும் என் மனமார்ந்த நன்றி.

நீங்கள் சொல்வதுபோல் “சித்தர்கள்” என்பது பாடும்போது சந்தத்தில் பொருந்தாமல் இருப்பதாகத் தோன்றுகிறது. அதனால் அந்த வரியை இவ்வாறு மாற்றுகிறேன் :

“சுரரசுர் சித்தர் குழாம்தொழு லிங்கம்”

- இமயவரம்பன் 
Reply all
Reply to author
Forward
0 new messages