பைந்தமிழ்ச் சோலையில் ஒரு வெண்பாப் போட்டி:
" வெறுங்கையில் போட்ட முழம் "
என்ற பழமொழியை அதே முறையிலேயே ...எந்த எழுத்தும் மாற்றாமல் (சீர்களை அடிகளில் உடைக்கலாம்) வெண்பா. அமைய வேண்டும்.பழமொழி நான்கடிகளில் எதில் வேண்டுமானாலும் அமையலாம்.
நான் எழுதிய வெண்பா:
பூவில் மணமும் பொலிவும் நிறத்தழகும்
மேவிநமை இங்கு வியக்கவைக்கும் - ஆவதென்ன?
ஏட்டுச் சுரைக்காய்தான் என்பேன், வெறுங்கையில்
போட்டமுழம் கானல்நீர் போல்!
—தில்லைவேந்தன்.
….
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hiu%2BZ%2BmhW6q4M3feYT56oavCZLm7BQ3LSu%3DaG7_H0gHAQ%40mail.gmail.com.
அருமை