“அஞ்செழுத்தி லேபிறந்து அஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தி லோரெழுத் தறிந்துகூற வல்லிரேல்
அஞ்சலஞ்ச லென்றுநாத னம்பலத்தி லாடுமே.”
இங்கே “பாவிகாள்” என்று முன்னிலையில் விளிப்பதால் “வல்லவர்களாக நீங்கள் இருந்தால்” என்று பொருள் தருகின்ற “வல்லிரேல் “ என்னும் சொல்லே இங்குப் பொருந்தும் என்று எனக்குத் தோன்றுகிறது. வல்லிர் = வல்லீர்- குறுகல் விகாரம்.
(வல்லர் என்பது படர்க்கைச் சொல்லாதலின் “பாவிகாள்” என்னும் முன்னிலைச் சொல்லுக்கு, “அவர்கள் வல்லவர்கள் ஆக இருந்தால்” என்று பொருள் தருகின்ற “வல்லரேல்” என்னும் சொல் பொருந்தாது என்பது என் கருத்து)