திருப்புகழில்
சில ஐயங்கள்
2009-01-17
1)
நாவேறு
பாம ணத்த -
திருவேரகம்
தானான தான
தத்த தானான தான தத்த
தானான
தான தத்த தனதான
நாவேறு
பாம ணத்த பாதார மேநி னைத்து
.... நாலாறு
நாலு பற்று வகையான
.. நாலாரும்
ஆக மத்தின் நூலாய ஞான முத்தி
....
நாடோறு[ம்]
நானு ரைத்த
நெறியாக
நீவேறெ
னாதி ருக்க நான்வேறெ னாதி
ருக்க
....
நேராக
வாழ்வ தற்குன் அருள்கூர
.. நீடார்
ஷடாத ரத்தின் மீதேப ராப ரத்தை
.... நீகாணெ
னாவ னைச்சொல் அருள்வாயே
சேவேறும்
ஈசர் சுற்ற மாஞான போத புத்தி
.... சீராக
வேயு ரைத்த குருநாதா
.. தேரார்கள்
நாடு சுட்ட சூரார்கள் மாள
வெட்டு
....
தீராகு
காகு றத்தி மணவாளா
காவேரி
நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
.... காவார்சு
வாமி வெற்பின் முருகோனே
.. கார்போலு[ம்]
மேனி பெற்ற
மாகாளி வாலை சத்தி
....
காமாரி
வாமி பெற்ற பெருமாளே.
----
இப்பாடலைப்
பாடும்பொழுது பலரும் 'பாதாரமே
நினைத்து'
என்ற
இடத்தைப் 'பாதாரமே
நினைந்து'
என்று
பாடுகிறார்கள்.
அது ஏன்?
'தத்த'
என்ற
சந்தத்தைத் 'தந்த'
என்று
பாடுவது பிழை அன்றோ?
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-01-17
2)
அவனிதனி
லேபிறந்து -
திருவாவினன்குடி
தனனதன தான
தந்த தனனதன தான தந்த
தனனதன
தான தந்த தனதான
அவனிதனி
லேபிறந்து மதலையென வேத வழ்ந்து
.... அழகுபெற
வேநடந்து இளைஞோனாய்
.. அருமழலை
யேமி குந்து குதலைமொழி யேபு
கன்று
....
அதிவிதம
தாய்வ ளர்ந்து பதினாறாய்
சிவகலைகள்
ஆக மங்கள் மிகவுமறை யோதும்
அன்பர்
....
திருவடிக
ளேநி னைந்து துதியாமல்
.. தெரிவையர்கள்
ஆசை மிஞ்சி வெகுகவலை யாயு
ழன்று
....
திரியுமடி
யேனை உன்றன் அடிசேராய்
மவுனவுப
தேச சம்பு மதிய றுகு வேணி
தும்பை
....
மணிமுடியின்
மீத ணிந்த மகதேவர்
..
மனமகிழ
வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
.... மலைமகள்கு
மார துங்க வடிவேலா
பவனிவர
வேயு கந்து மயிலின்மிசை யேதி
கழ்ந்து
....
படியதிர
வேந டந்த கழல்வீரா
.. பரமபத
மேசெ றிந்த முருகனென வேயு
கந்து
....
பழநிமலை
மேல மர்ந்த பெருமாளே.
---
இப்பாடலில்,
சில இடங்களில்
புணர்ச்சியோடு நோக்கினால்
சந்தம் சிதைகிறதே.
'தவழ்ந்து
அழகுபெற வேநடந்து
இளைஞோனாய்'
'புகன்று
அதிவிதமதாய்'
'மனமகிழ
வேய ணைந்து
ஒருபுறம தாக வந்த'
இதைக்
காணும்பொழுது,
இவ்வகைப்
பாடல்களில்,
தேவைக்கேற்பப்
புணர்ச்சியை விட்டுவிடலாம்
என்று தோன்றுகிறதே.
எங்கு
இவ்வாறு ஒதுக்கலாம் என்பதற்கு
ஏதேனும் விதிமுறைகள்
உளவோ?
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
திருப்புகழில் சில ஐயங்கள்
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
2009-01-17
3)
தொங்கல்
சீர்களில் பல பாடல்களில்
'தனதான'
என்றும்
சில பாடல்களில் 'தனதானா'
என்றும்
குறிப்பிடக் காண்கிறேன்.
இதன் காரணம்
என்ன?
4)
சில
பாடல்களில் 'தனனதன'
என்றும்
வேறு சில பாடல்களில் 'தனதனன'
என்றும்
சில சந்தங்கள் குறிப்பிடக்
காண்கிறேன்.
இவற்றின்
வேறுபாடு என்ன?
(இயலிசையி
லுசித வஞ்சி -
திருச்செந்தூர்
தனனதன
தனன தந்தத் தனதான
இயலிசையி
லுசித வஞ்சிக் கயர்வாகி
.. இரவுபகல்
மனது சிந்தித்
துழலாதே
................................
வசனமிக
வேற்றி மறவாதே -
திருவாவினன்குடி
தனதனன
தாத்த தனதானா
வசனமிக
ஏற்றி மறவாதே
..
மனதுதுயர்
ஆற்றில் உழலாதே
.....................
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-01-17
5)
"தமரும்
அமரு மனையும் இனிய -
திருவாவினன்குடி"
தனன
தனன தனன தனன
தனன
தனன தனதான
தமரும்
அமரு[ம்]
மனையும்
இனிய
....
தனமும்
அரசும் அயலாகத்
..
தறுகண்
மறலி முறுகு கயிறு
....
தலையை
வளைய எறியாதே
கமல
விமல மரக தமணி
....
கனக
மருவும் இருபாதம்
.. கருத
அருளி எனது தனிமை
....
கழிய
அறிவு தரவேணும்
குமர
சமர முருக பரம
....
குலவு
பழநி மலையோனே
..
கொடிய
பகடு முடிய முடுகு
....
குறவர்
சிறுமி மணவாளா
அமரர்
இடரும் அவுணர் உடலும்
....
அழிய
அமர்செய் தருள்வோனே
.. அறமு
நிறமு மயிலு
மயிலு
....
மழகும்
உடைய பெருமாளே.
----
இப்பாடலில்
வரும் 'அறமு
நிறமு மயிலு
மயிலு'
என்ற தொடரில்
'அயிலும்
மயிலும்'
என்று
கொள்ளவேண்டுமா,
'மயிலும்
அயிலும்'
என்று
கொள்ளவேண்டுமா?
அல்லது
பாடுவோர்/படிப்போர்
சித்தப்படி முறையை
வைத்துக்கொள்ளலாமா?
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-01-17
6)
திருவெழுகூற்றிருக்கை
".........
ஒருவகை
வடிவினில் இருவகைத் தாகிய
..
மும்மதன்
தனக்கு மூத்தோ னாகி
..
நால்வாய்
முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
..
அறுகு
சூடிக் கிளையோன் ஆயினை
.........."
இந்த
இடத்தில் 'ஐந்துகைக்
கடவுள்'
என்று
வருகிறது.
'ஐந்தொகை',
'ஐம்புலம்',
'ஐங்கரம்'
என்பன போல
'ஐங்கை'
என்று
வரவேண்டுமோ?
அல்லது,
'ஐந்துகை'
சரி எனில்,
எப்பொழுது
எப்படிப் பிரயோகிக்க
வேண்டும்?
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
எனக்குத் தெரிந்து அத்தகைய விதி ஒன்றை யாப்பு நூல்களில் காண இயலாது.
திருப்புகழ் போன்ற வண்ணப் பாடல்கள்/துதிகள் இசைப்பதற்காக
எழுதப்பட்டிருப்பதால், சந்தக் குழிப்புக்கேற்பத் தேவையான இடங்களில்
புணர்ச்சியை விடலாம் என்று கொள்ளலாம்.
அனந்த்
> 2009/1/17 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars
இரண்டு வகையிலும் பிரித்துப் படித்தும் பாடியும் அப்படி அமைத்த திறத்தை
எண்ணி மகிழலாமே!
அனந்த்
> 5)
>
> "தமரும் அமரு மனையும் இனிய - திருவாவினன்குடி"
>
> தனன தனன தனன தனன
> தனன தனன தனதான
>
> தமரும் அமரு[ம்] மனையும் இனிய
> .... தனமும் அரசும் அயலாகத்
> .. தறுகண் மறலி முறுகு கயிறு
> .... தலையை வளைய எறியாதே
>
.... குறவர் சிறுமி மணவாளா
> அமரர் இடரும் அவுணர் உடலும்
> .... அழிய அமர்செய் தருள்வோனே
> .. அறமு நிறமு மயிலு மயிலு
> .... மழகும் உடைய பெருமாளே.
> ----
>
> இப்பாடலில் வரும் 'அறமு நிறமு மயிலு மயிலு' என்ற தொடரில் 'அயிலும் மயிலும்' என்று
> கொள்ளவேண்டுமா, 'மயிலும் அயிலும்' என்று கொள்ளவேண்டுமா? அல்லது பாடுவோர்/படிப்போர்
> சித்தப்படி முறையை வைத்துக்கொள்ளலாமா?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2009/1/17 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars
On Jan 17, 10:56 pm, ananth <gan...@gmail.com> wrote:
> >இவ்வகைப் பாடல்களில், தேவைக்கேற்பப் புணர்ச்சியை >விட்டுவிடலாம் என்று தோன்றுகிறதே. எங்கு இவ்வாறு >ஒதுக்கலாம் என்பதற்கு ஏதேனும் விதிமுறைகள் உளவோ?
>
> எனக்குத் தெரிந்து அத்தகைய விதி ஒன்றை யாப்பு நூல்களில் காண இயலாது.
> திருப்புகழ் போன்ற வண்ணப் பாடல்கள்/துதிகள் இசைப்பதற்காக
> எழுதப்பட்டிருப்பதால், சந்தக் குழிப்புக்கேற்பத் தேவையான இடங்களில்
> புணர்ச்சியை விடலாம் என்று கொள்ளலாம்.
>
வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் என்பவர் 19-ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தார்.
அவர் வண்ணத்தியல்பு, அறுவகை இலக்கணம் என்ற நூல்களை இயற்றினார்.
சிறிய புத்தகங்கள் அவை. பிடிஎப் செய்து இங்கே வைக்கலாம். பலருக்கும்
பயனாகும்.
வண்ணச்சரபம் 1 லட்சம் விருதம், வண்ணம் பாடியுள்ளார். பாதியை
அவரே குளத்திலும், கிணற்றிலும் எறி்ந்தார். மீதி சுமார் 50,000 வண்ணம்,
சாதா
விருத்தம் கோவை சிரவணம்பட்டி கௌமார மடத்தில் இருக்கிறது.
ஆர். கிருஷ்ணன், ப. வெ, நாகராஜராவ் இருவருக்கும் சம்பளம் கொடுத்து
சில வவருஷங்கள் அவற்றைக் காகிதத்தில் பெயர்க்க ஏற்பாடு
அருட்செல்வர் நா. மகாலிங்கம் செய்தார்கள். நான் ஒருமுறை
மடத்திற்குப் போய் கடகட என்று ஏடுகளைப் படித்தேன்
வண்ணச்சரபம் சுவாமிகள் ஏடு, காயிதம் இரண்டிலும்
முத்துமுத்தாக எழுதியயவர். ஏடு படிப்பது மிக சுலபம்.
பல தலங்களுக்கும் அங்குள்ள தெய்வதங்களுக்கும் பல பதிகங்கள்,
திருப்புகழ், ... பாடியவர். அவரது ஆங்கிலியர் அந்தாதி எல்லோரும்
இங்கே படிக்கணும் (தருவதாக உத்தேசம்). பாரதிக்கு முன்னோடி,
ஆங்கிலியர் ஆட்சியால் நேரும் வறுமை, அவர்கள்
அட்டூழியம் (உ-ம்: ஆவிறைச்சி, மது உண்ணும் களி- 'பார்ட்டிகள்')
எல்லாம் பாடியிருக்கிறார் சுவாமிகள். பாரதியார், நம் கவியோகி, இலந்தை
போல, வண்ணச்சரபமும் நெல்லைக்காரர்தான்.
அவர் பாடிய புலவர் புராணம் அழகானது (கதைகள் பல இருக்கும்,
அவருக்குத் தெரிந்ததைப் பாடினார்). உவேசா 3 தொகுதியாய்
அச்சுப்போட்டார்கள். கிடைப்பதில்லை.
7-8 வருஷம் முன்னாடி, அருட்செல்வர் நா.ம. ஒரே
புத்ததகமாய் அச்ச்சிட்டு வழங்கினார். தி.வே. கோபாலையரைக்
கொண்டு வெளியிடச் செயதார். எனக்குப் பத்திரிகையும்
நூலும் வந்தன.
ப. வெ. நாகராஜன் நான் பொள்ளாச்சி, கோவையில் இருக்கும்போது வருவார்,
பன்மொழி அறிந்தவர். தமிழ் பிரபந்தம், தலபுராணங்களில்
புலி. தெலுங்கு தாய்மொழி, அவரது பாட்டனார்தான்
மாம்பழக் கவி பாடிய பல புராணங்களை அந்தகக் கவிக்குப்
பொருள் சொன்னவர் - பின் மாம்பழக் கவி பாடியுள்ளார்.
------
ப. வெ. நா. போல ஏடுபடித்து சீர்பிரித்து புராணம், பிரபந்தம்
பதிப்பிற்குத் தயார்செய்ய தமிழ்நாட்டில் வேறு யாரும் இல்லை.
என் வருத்தமெல்லாம் ஒரு 10, 50 பேரை நல்ல
*உண்மையான* தமிழ்ப் புலமையுடன் தமிழ்நாடு
தயாரித்து அத்துறையில் ஏடு படிப்பிக்கவில்லை்யே
என்பதுதான். ப.வெ.நா. அவர்களுக்கும் உரிய மரி்யாதையை
நம் சமூகம் தரத் தவறிவிட்டது. வே.ரா. மாததவன் ப.வெ.நா. உதவியுடன்
தமிழில் தலபுராணங்கள் (2 தொகுதி)
எழுதியிருக்கிறார்.
உவேசா, எஸ். வையாபுரிப்பிள்ளை, மு/ரா. ராகவையங்கார், வே.ரா.
தெய்வசிகாமணிக்கவுண்டர்,
மு. அருணாசலம் பிள்ளை (மாயவரம்), ஔவை துரைசாமி, ப.வெ.நா,
வே.ரா.மாதவன், .... இவர்களைப் போல் ஏடு பதிக்க 7 கோடிப் பேர்
உள்ள சமூகம் ஒரு 50 பேரைத் தயார் பண்ணலையே.
அதில் அன்பும், உழைப்பும், தியாமும் செய்வோர் வவெகு சிலரே.
பசுபதியின் படிக்காசர் பாட்டுக்குப் பின்பாட்டு தான்
ஞாபகம் வருகிறது: வெறும் வாய்ப்பேச்சும், வம்புதும்புகளும்
தான் மக்களுக்கு இஷ்டமோ?
நிற்க,
ப.வெ.நா. வாழ்வுப் பணி தமிழின் வண்ணப் பாடல்களைத் தொகுத்தது.
அருட்செல்வர் சொல்லி டைப் அடித்து தஞ்ழை சரசுவதி மகாலில்
"வண்ணப் பெருந்திரட்டு" என்ற பெயரில் 800-பக்க புஸ்தகம்
அச்சடிக்க 3 வருஷம் முன் கொடுத்தார். என்ன ஆயிற்று
என்று கேட்டபோது சரசுவதி மகாலில் ஒரு அச்சகத்துக்குக்
கொடுத்தபோது தொலைத்து விட்டோம் என்று கிடப்பில்
போட்டு பல மாதங்கள் கழித்துச் சொன்னார்களாம்.
நல்ல வேளை ஒரு போட்டோ்காப்பி ப.வெ.நா. வைத்திருந்தார்.
"நீங்க கூப்பிட்டுச் சொல்லுங்கள்" என்றார்.
அப்போது சிவஞானம் என்ற ஐஏஎஸ் அதிகாரி
சரஸ்வதி மகாலுக்கு புது ஆபீசர். நான்
நம்பர் வாங்கித் தொலைபேசினேன்.
உங்கள் கையிலே வரும் ஆகஸ்ட் கொடுக்கிறோம் என்றார்.
பிறகு மமறந்துவிட்டது. உங்கள் இழையைப் பார்த்ததால்
ஞாபகம் வருது. தொலைபேசி
"வண்ணப் பெருந்திரட்டு" அச்சாகிவிட்டதா?
என்று கேட்டுச் சொல்வேன்.
----
புலவர் புராணம் நூல் எங்கே விற்பனைக்குக் கிடைக்கும்?
நூல் விவரம் தருகிறேன். வண்ணச் சசரபத்தின்
ஆங்கிலியர் அந்தாதி, வண்ணத்தியல்பு, அறுவகை இலக்கணம்
எல்லாம் 2009-க்குள் தருகிறேனே.
பழனியில் சித்திரகவி பழனிச்சாமிப் புலவர் என்ற
அமைதியான தமிழ் ஆழ்கடல் இருந்தார் (இப்போது
மறைந்துவிட்டார்). பழனி ஹைஸ்கூலில் தமிழ்ப்
பண்டிதர். பின்னர் கரூரில் சித்பவானந்தர் தொடங்கிய
சாரதா நிகேதன் ஆத்மானந்தரின் ஆதரவில்
இருந்தார் புலவர். என்னிடம் வருவார்,
ஒருமுறை அருட்செல்வரிடம் அழைத்துச் சென்றேன்.
அழகான உரை மாம்பழத்துக்கு பங்களாவில்
இருந்து எழுதுங்கள் என்றார் நா.ம.
2 வருஷம் எழுதினார், மாம்பழத்தின் பூட்டு
உடைக்க முடியாத பாடலுக்கு எல்லாம்
பூட்டுடைத்து. 2 தொகுதியாய் 1000 பக்கத்தில்
மமாம்பழத்தின் பாடல்களுக்கு உரை ஒரு
4-5 வருஷம் முன்னால் பொள்ளாச்சி
நா.க.ம. கல்லூரி வெளியீடாயிற்று.
பழனியில் ஒரு கல்யாண மண்டபத்தில்
சிறப்புச் செய்து வெளியிட்டார், வெளியீட்டு
விழாச் செலவை என் தந்தை ஏற்றார்.
பின்னர் 1,2 மாதத்தில் சித்திரகவி பனிச்சாமிப்
புலவர் மறைந்துவிட்டார்.
உவேசா மாம்பழக் கவியின் பாடல்களைத்
தேடித் தொகுத்து. வெளியிட்டார்.
அருட்செல்வர் நா. ம. கேட்டு வெளியான
சித்திரகவி உரை (2 தொகுதி) இங்கிருப்போர்
அனைவரும் படிக்கவேண்டும்.
சென்னையில் இருந்து வாஞ்சிநாதன்
போன்றோர் இருப்பது மகிழ்வடையச் செய்கிறது.
வெளியில் இருக்கும் பலரும்
அவர் போன்றோரிடம் பணம் அனுப்பி
இந்நூல்களைப் பெற்றுப் பயனடையலாமே.
அன்புடன்,
நா. கணேசன்
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -
திருப்புகழ் பற்றி ஒன்று சொல்ல ஆசை.
இன்னும் அருணகிரியாரின் பல திருப்புகழ்கள் ஏடுகளில்
கிடக்கின்றன - அச்சே பார்க்காமல், யாரும் அறியாமல்.
திருப்புகழ் நம் கையிலும், வாயிலும் திகழ
மூலகாரணம் ஒருவர்: வ. த. சுப்பிரமணிய பிள்ளை,
ஜெயங்கொண்டார், வள்ளலார், ஔவை துரைசாமி
போல கருணீகர் மரபு. பின்னர் அவர் மகன்
செங்கல்வராய பிள்ளை ஒன்றிரண்டு கண்டார்
- வ.சு.செ. அவர்களின் பெரிய வேலை
அருணகிரிக்கு உரைகண்டது. வ.சு.செ.
கிவாஜவின் உற்ற நண்பர், திருத்தணிப்
படி உற்சவப் பங்களிப்பு, வசுசெ தான்
சென்னைப் பல்கலையின் முதல் எம். ஏ.
மர்ரே கம்பெனி முதலாளி என்ன செய்தார்
தெரியுமா? கோடை விடுமுறையில்
எல்லா பள்ளி, கல்லூரி வாத்தியார்களையும்
(உண்மையாத் தமிழறிந்தோர் கம்பராமன்,
மு. சண்முகம்பிள்ளை, ....) கோடை விடுமுறையில்
தன் பங்களாவில் கூப்பிட்டு ஹவுஸ் அர்ரெஸ்ட்
மாதிரி செய்துவிடுவார். எபொழுதும் நல்ல உணவு விருந்து. பெரிய பண்டிதர்கள்
கூட்டம், எனவே செவிக்குணவிற்குக் கேட்கவே வேண்டாம்.
தமிழின் பழைய நூல்கள் எல்லாவற்றையும்
பதம் பிரித்து, தரிப்புக் குறிகளை இட்டு
பதிப்பு வெளியே வரும். தெபொமீ, வையாபுரி, ... வழிகாட்டலில்.
வெறும் ஒரே ரூபாய்க்கு சிலம்பு, கலி., ....
என்று தருமஞ் செய்தவர் ராஜமையங்கார்.
திருப்புகழுக்கு என்ன செய்யணும்? முதலில்
இருக்கும் சுவடியெல்லாம் ஸ்கான் செய்யணும்.
அதைப் பெரிய எழுத்தில், பெரிய கணித்திரையில்
புலவர்களை வித்வத் சதஸ் மாதிரிக் கூடச் செய்து
5 -10 பேர், படிக்க வைக்கணும்.
இல்லாத திருப்புகழைத் தொகுத்து அப்
புலவர்கள் படித்து வெளியிடலாம்.
இதை எவ்வாறு செய்வது?
இரண்டு வழிகள் எனக்குத் தென்படுகின்றன,
(1) பிரெஞ்சு இந்தாலஜி நிறுவனம்,
பணம், இத்துறையில் ஆர்வம் எல்லாம்
இருக்குமிடம். அவர்களிடம் சொல்வேன்,
வே. ரா. மாதவன், ப.வெ.நா, ...
போன்றோர் ரிட்டையர்ட், அவர்களை
அழைத்து புதுகையில் வைத்து
சம்பளம் கொடுத்து ஒரு 2 வருஷம்
எல்லா உதவியும் கொடுத்தால்
தட்டச்ச, ஏடுகள் படிக்க
திருப்புகழ் ஏடுகள் உள்ள
இடங்களுக்குச் செல்லக்
கார், தங்கல் செலவினங்கள், ...
முதலில் நாமறியா 40-50 திருப்புகழை
(மூலம்) வெளியிடலாம்.
(2) இங்கிருப்போர், திருப்புகழ் அன்பர்கள்,
செல்வந்தர்கள், ... ஒரு திருப்புகழ்
ஆய்வு ட்ரஸ்ட் அமைக்கலாம்.
எல்லோரும் பங்கி இரு/3 ஓய்வுபெற்ற
நல்ல உழைப்பு, புலமை உடைய
புலவர்களை வைத்துத் தமிழ்நாட்டு
மடங்கள் (எங்கெங்கு திருப்புகழ் சுவடிகள்
உள்ளன என்று ப.வெ. நா 5 தொகுடிகள்,
தமிழ்ச் சுவடி அட்டவணையில் உள்ளன)
எல்லாம் தேடினால் கிட்டும்.
செய்தால் என்னாலான உததவி,
பணம், அருட்செல்வரிடம் போய்
பேசணும்னா ஏற்பாடு எல்லாம்
செய்துதருவேன்.
ஒரு 40-50 புதுத் திருப்புகழாவது தேறும்.
உங்கள் சிந்தனைக்கு்ச் சமர்ப்பித்தது.
என்னுடன் பேச,
281-648-8636 (இல்லம்)
832-385-2885 (செல்)
வீட்டு முகவரி:
16923 Sky Harbor Ct.
Friendswood, TX 77546
(16923 விண்முக முன்றில்
நண்பர்வனம், டெக்சாசு)
பசுபதி
2009/1/17 Siva Siva <naya...@gmail.com>:
பொதுவாக, திருப்புகழைப் பாடுவோருக்கு வண்ணம் என்றால் என்ன? என்று
தெரிந்திருக்குமா என்பது ஐயமே. சந்தம் பிறழாமல் பாடுவதே பெரிய காரியம்.
சில சமயம், கேட்போருக்குப் பொருள் விளங்கச் சொற்களைப் பிரித்துப்
பாடும்போது, பாடலில் இல்லாத வண்ணங்கள் வர வாய்ப்பு உண்டு. (
புணர்ச்சியின் பின் வரும் வல்லினம்,பிரிக்கும் போது இடையினமாக மாறும் )
.
பாடலின் நோக்கம் பல; நடைமுறையில், சந்தம் முதல் இடம், வண்ணம் இரண்டாம்
பட்சம் தான். அருணகிரி கொடுத்த சந்தத்தையே அனுசரித்துப் பலரும்
பாடுவதில்லை.
அதைச் செய்தாலே போதும்.
பசுபதி
17-1-09
2009/1/17 Siva Siva <naya...@gmail.com>:
சந்தப் பாடல்களில் கடைசியில் வரும் குறிலும் ( லகு), நெடில் போல் இரண்டு
சந்த மாத்திரைகள்(குரு) பெறும்.
>
> 4)
> சில பாடல்களில் 'தனனதன' என்றும் வேறு சில பாடல்களில் 'தனதனன' என்றும் சில
> சந்தங்கள் குறிப்பிடக் காண்கிறேன். இவற்றின் வேறுபாடு என்ன?//
சந்தத்தைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றே. ( நான் வைத்திருக்கும்
நூலில், இயலிசை... தனதனன என்று தான் கொடுத்திருக்கிறது)
ஒரே பாடலில் சில 'தனதனன' சீர்கள் 2+3 ( உயர்-கருணை) என்று வரும்;
அதே பாடலில் , அதே சந்தக் குழிப்பில், 3+2 ( இரவு-பகல்) என்றும் வரும்.
அதனால், சொற்களுக்கு ஏற்ப, சில எழுத்துகளில் இசையில் அழுத்தம் சில சமயம்
மாறலாம். மேலும், அவ்வளவு துல்லியமாக எல்லாச் சீர்களையும் ஒரே
மாதிரியாக
2+3 என்றோ 3+2 என்றோ யாப்பது கடினம் தானே.
பசுபதி
18-1-09
இரண்டிற்கும் மரபு உள்ளது. 'மயிலு மயிலுந் துணை ' என்று சில முருக பக்தர்கள்
மடலை எழுதும்போது துவங்குவது உண்டு. சொல்லழகு உண்டு இந்தப் பழக்கத்தில்.
ஆனால், இந்தப் பாடலில் , எனக்குத் தெரிந்து, எல்லா உரையாசிரியர்களும்,
'அயிலும் மயிலும்' என்றுதான் எடுத்துக் கொண்டனர். ஏனென்றால்,
'வேலும், மயிலும் துணை' என்று சொல்வது பழம் மரபு. வேலுக்கு முதல் மரியாதை.
பசுபதி
18-1-09
வண்ணச் சரபம் பற்றி ஒரு கட்டுரை, புது நூல்:
http://groups.google.ca/group/santhavasantham/browse_thread/thread/a2a302b381a6477c/cdd62b69225b8a78
பார்க்கவும்.
மேலும், புலவர் புராணத்தைப் பற்றியும் பேசியுள்ளோம்.
( அந்த நூல் அனந்திடம் உள்ளது ) ( திகடச் சக்கரம்..இலக்கணம் பற்றிய
இழையில்)
'புலவர் புராணம்' நூலை (ஆர்.கிருஷ்ணன் தொகுப்பு ஆசிரியர்) கோவை,
இராமானந்த அறக் கட்டளை 1984-இல் வெளியிட்டனர் என்று என் குறிப்பு ஒன்று
சொல்கிறது.
'வண்ணத்தியல்பி'ன் முக்கிய விதிகளை ஏற்கனவே இங்கு
சுருக்கித் தந்துள்ளேன். 'வண்ணப் பாடல்' இழையில் சிவசிவா ஏற்கனவே
அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவருடைய 'ஆறிலக்கணம்' ... நான் பார்த்ததில்லை.
அவருடைய சித்திரக் கவிகள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன்.
பசுபதி
18-1-09
2009/1/18 naa.g...@gmail.com <naa.g...@gmail.com>:
>> ------
கோவையில் 4 தலைக்கட்டுக்கு முன் 300 ஏக்கர் நிலலம் கொடுத்துத்
துறவியாகி கௌமார மடலாயம் தோற்றுவித்த சாமி.
அவர் குகையில் தியானந்த்தில் இருக்கும் போது
மயில்கள் பறந்து முற்றத்தில் ஆடுமாம்.
இராமானந்த அடிகள் ட்ரஸ்ட் அருட்செல்வர் நா,ம. தோற்றுவித்தது.
> 'வண்ணத்தியல்பி'ன் முக்கிய விதிகளை ஏற்கனவே இங்கு
> சுருக்கித் தந்துள்ளேன். 'வண்ணப் பாடல்' இழையில் சிவசிவா ஏற்கனவே
> அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.
>
> அவருடைய 'ஆறிலக்கணம்' ... நான் பார்த்ததில்லை.
அறுவகை இலக்கணம்.
ஐந்திலக்கணம் தான் முன்பு. ஆறவது இலக்கணம்
சேர்த்து அறுவகை இலக்கணம் செய்தார் வண்ணச்சரபம்.
புலவர் புராணத்தில் முதல் படலம், பொதிகை மலை,
அகத்தியர் பற்றியயது. மிக அழகான பாடல்கள்.
யாராவது தட்டெழுதலாம்.
நா. கணேசன்
வர வேண்டியதில்லை. 'ஐந்துகை' என்று வரலாம்.
இத்தகைய சொற்புணர்ச்சிகளில் விகாரங்கள் தாம் வரவேண்டும் என்ற விதி இல்லை.
" இவ் விகாரங்களின்றிப் பொது விதி பற்றி, இரண்டு கழஞ்சு, மூன்று படி,
நான்கு பொருள், ஐந்து முகம், ஆறு குணம், ஏழு கடல், எட்டுத் திக்கு எனவும்
வருமெனக் கொள்க."
----ஆறுமுக நாவலர், 'இலக்கணச் சுருக்கம்' ----
//அல்லது, 'ஐந்துகை' சரி எனில்,
> எப்பொழுது எப்படிப் பிரயோகிக்க வேண்டும்?//
இதற்கு விதி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.
பசுபதி
20-1-09
2009-01-21
7)
கந்தர்
அலங்காரம் -
60:
சிந்திக்கிலேன்;
நின்று
சேவிக்கிலேன்;
தண்டைச்
சிற்றடியை
வந்திக்கிலேன்;
ஒன்றும்
வாழ்த்துகிலேன்;
மயில்
வாகனனைச்
சந்திக்கிலேன்;
பொய்யை
நிந்திக்கிலேன்;
உண்மை
சாதிக்கிலேன் ;
புந்திக்
கிலேசமும் காயக் கிலேசமும்
போக்குதற்கே.
இதில்
வரும் 'சிந்திக்கிலேன்',
'சேவிக்கிலேன்',
'வந்திக்கிலேன்',,,,
போன்ற
சொற்களின் இலக்கண விளக்கம்
என்ன?
'சிந்திக்ககில்லேன்'
என்பது
'சிந்திக்கிலேன்'
என்று
விகாரம் அடைந்ததா?
பாடுதல்
- இது
'பாடகிலேன்'
என்று
ஆகுமா,
'பாடுகிலேன்'
என்று
ஆகுமா?
அல்லது
இரண்டுமே சரியா?
(அப்பர்
தேவாரம் -
திருமுறை
4.1.1. -
"கூற்றாயினவாறு
விலக்ககிலீர்..."
சம்பந்தர்
தேவாரம் -
3.121.11 - "கல்லிசை
பூணக் .....
பாடல்
பத்தும் வல்லவர்மேல் தொல்வினை
சூழகிலாவே")
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2009-03-04
8)
இப்பாடலில்
பல இடங்களில் வல்லொற்று மிக
வேண்டிய இடங்களில் மிகாது
பயில்கிறதே.
அது
சந்தத்திற்காகவா?
இவ்வாறு
ஒற்று மிகாமல் வரும் வேறு
பாடல்களும் உளவோ?
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
867. திருத்தணிகை
தனதான
தனத்தன தான தனதான தனத்தன தான
தனதான
தனத்தன தான ..
தனதான
நிலையாத
சமுத்திர மான சமுசார துறைக்கணின்
மூழ்கி
......
நிசமான
தெனப்பல பேசி யதனூடே
...நெடுநாளு
முழைப்புள தாகி பெரியோர்க
ளிடைக்கர வாகி
......
நினைவால்நி
னடித்தொழில் பேணி துதியாமல்
தலையான
வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல
வேகி
......
சலமான
பயித்திய மாகி
தடுமாறித்
...தவியாமல்
பிறப்பையு நாடி யதுவேரை
யறுத்துனை யோதி
......
தலமீதில்
பிழைத்திட வேநி
னருள்தாராய்
கலியாண
சுபுத்திர னாக குறமாது தனக்குவி
நோத
......
கவினாரு
புயத்திலு லாவி
விளையாடிக்
...களிகூரு
முனைத்துணை தேடு மடியேனை
சுகப்பட வேவை
......
கடனாக
மிதுக்கன மாகு
முருகோனே
பலகாலு
முனைத்தொழு வோர்கள் மறவாமல்
திருப்புகழ் கூறி
......
படிமீது
துதித்துடன் வாழ
அருள்வேளே
...பதியான
திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி
வேறு
......
பவரோக
வயித்திய நாத
பெருமாளே.
2009-03-04
8)
இப்பாடலில் பல இடங்களில் வல்லொற்று மிக வேண்டிய இடங்களில் மிகாது பயில்கிறதே. அது சந்தத்திற்காகவா? இவ்வாறு ஒற்று மிகாமல் வரும் வேறு பாடல்களும் உளவோ?
2024-03-22
9)
நூல்களில் கீழ்க்காணும் பாடலை விநாயகர் துதியாக அருணகிரிநாதர் அருளியது என்று கொள்கின்றனர். ஆனால் இந்தப் பாடல் இடைச்செருகல் (Interpolation by an anonymous author) என்று எனக்குப் படுகின்றது. (i.e., அருணகிரிநாதர் பாடல் அன்று என்று தோன்றுகின்றது). இது குறித்துச் சில விஷயங்கள்:
இப்பாடலில் முருகன் குறிப்பு எதுவும் இல்லை. (விநாயகரைப் போற்றும் மற்ற 4 பாடல்களிலும் முருகன் குறிப்புகள் உள்ளன).
இப்பாடலில் விலைமாதர் வர்ணனை வருகின்றது. (விநாயகரைப் போற்றும் மற்ற 4 பாடல்களிலும் அத்தகைய வர்ணனை எதுவும் இல்லை).
இப்பாடலில் தன்னைப் படர்க்கையில் சுட்டுவது உள்ளது. ("அறிவீனன் இவனும்"). மற்றப்படி நான், அடியேனை, என்னை, முதலிய தற்சுட்டு எதுவும் இல்லை. இதுபோலத் தற்சுட்டு இன்றித் தன்னைப் படர்க்கையில் சுட்டுவது மட்டும் வரும் பாடல் திருப்புகழில் இல்லை என்று எண்ணுகின்றேன்.
இப்பாடலின் பிற்பகுதியின் பொருள் (கூறப்படும் வரலாறு) தமக்குத் தெளிவாகவில்லை என்று செங்கல்வராய பிள்ளை கூறியுள்ளார். வேறு எந்தத் திருப்புகழிலும் இது போலத் தெளிவின்மை இல்லை.
இப்பாடல் பெருமாளே என்று முடியாமல் முகவோனே என்று முடிகின்றது. (விநாயகரைப் போற்றும் மற்ற 4 பாடல்களும் பெருமாளே என்று முடிகின்றன).
V. Subramanian
----
https://kuganarul.blogspot.com/2018/05/blog-post_67.html
------------------------------------------------
(தனதனன தான தனதனன தான
தனதனன தான .. தனதான -- Syllabic pattern )
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
.. .. விசையன்விடு பாண .. மெனவேதான்
.. விழியுமதி பார விதமுமுடை மாதர்
.. .. வினையின்விளை வேதும் .. அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
.. .. கலவிதனில் மூழ்கி .. வறிதாய
.. கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
.. .. கழலிணைகள் சேர .. அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
.. .. இறைவன்மகள் வாய்மை .. அறியாதே
.. இதயமிக வாடி யுடையபிளை நாத
.. .. கணபதியெ னாம(ம்) .. முறைகூற
அடையலவர் ஆவி வெருவ-அடி கூர
.. .. அசலுமறி யாமல் .. அவரோட
.. அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
.. .. அறிவருளும் ஆனை .. முகவோனே.
---
2024-03-22
10)
நூல்களில் கீழ்க்காணும் பாடலை அருணகிரிநாதர் அருளியது என்று கொள்கின்றனர். ஆனால் இந்தப் பாடல் இடைச்செருகலோ (Interpolation by an anonymous author) என்ற ஐயம் எனக்கு வருகின்றது.
இது குறித்துச் சில விஷயங்கள்:
ஐயாஎ னக்கிரங்கி வாரையா - திருப்புகழில் வேறு எங்கும் "வாரையா" போன்ற பிரயோகம் உள்ளதா?
உன்றன் வீடு தா - திருப்புகழில் வேறு எங்கும் "உன் வீட்டைத் தா" போன்ற பிரயோகம் உள்ளதா?
யானுனைப்பொல் சிந்தையாக வேகளித்து - திருப்புகழில் வேறு எங்கும் "நான் உன்னைப் போல மனம் பெற அருள்க" என்பது போன்ற வேண்டுகோள் உள்ளதா?
கந்த வேளெ யாமெனப்ப ரிந்து அருள்வாயே - இப்பாடலில், "வாரையா" & "அருள்வாயே" என்று இரு தனித்தனி வேண்டுகோள்கள் உள்ளன. இப்படி வேறு ஏதேனும் பாடலில் வருகின்றதா?
காளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா - இங்கே "காளை - இடபம்" என்று பொருள் சொல்கின்றனர். திருப்புகழில் வேறு எப்பாடலிலேனும் "காளை = இடபம்" என்ற பொருளில் வருகின்றதா? (தேவாரத்தில் விடை, எருது, இடபம், ஏறு, சே, பெற்றம் என்றெல்லாம் வரும். காளை என்பது இளமையும் வலிமையும் உடைய ஆண்மகனுக்கே வரும் என்ற ஞாபகம்).
V. Subramanian
----
https://kaumaram.com/thiru/nnt0782_u.html
------------------------------------------------
(தான தான தத்த தந்த
தான தான தத்த தந்த
தான தான தத்த தந்த .. தனதான -- Syllabic pattern )
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய
மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல்
வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
வீடு தாப ரித்த அன்பர் ...... கணமூடே
மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே
காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே
காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா
சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே.
---
2024-03-22
9)
திருப்புகழில் சில ஐயங்கள்
2009-01-17
1)
நாவேறு பாம ணத்த - திருவேரகம்
தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த தனதான
நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
.... நாலாறு நாலு பற்று வகையான
.. நாலாரும் ஆக மத்தின் நூலாய ஞான முத்தி
.... நாடோறு[ம்] நானு ரைத்த நெறியாக
இப்பாடலைப் பாடும்பொழுது பலரும் 'பாதாரமே நினைத்து' என்ற இடத்தைப் 'பாதாரமே நினைந்து' என்று பாடுகிறார்கள். அது ஏன்? 'தத்த' என்ற சந்தத்தைத் 'தந்த' என்று பாடுவது பிழை அன்றோ?
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALz5qbx-rfhKug1wPObnNgHDAnLSNVRVoKrYf02CFsGQd1Po1w%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1JR0NaLmZCzArDirq5BBa3X-Tbbw7GFMYX0MQPpoZOYg%40mail.gmail.com.
இரண்டிற்கும் மரபு உள்ளது. 'மயிலு மயிலுந் துணை ' என்று சில முருக பக்தர்கள்
மடலை எழுதும்போது துவங்குவது உண்டு. சொல்லழகு உண்டு இந்தப் பழக்கத்தில்.
ஆனால், இந்தப் பாடலில் , எனக்குத் தெரிந்து, எல்லா உரையாசிரியர்களும்,
'அயிலும் மயிலும்' என்றுதான் எடுத்துக் கொண்டனர். ஏனென்றால்,
'வேலும், மயிலும் துணை' என்று சொல்வது பழம் மரபு. வேலுக்கு முதல் மரியாதை.
பசுபதி
18-1-09
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNWRvq0bRshpaYO2%3D3C%2B7siepQfjm8u7yf14kgid25yEQ%40mail.gmail.com.
சிவசிவா எழுதினார்:> உன்றன் வீடு தா - திருப்புகழில் வேறு எங்கும் "உன் வீட்டைத் தா" போன்ற பிரயோகம் உள்ளதா?கௌமாரம்.கொம் தளத்தில் கொடுத்துள்ள உரை பிழைப்பட்டது.”உன்றன் வீடு தா ... உனது மோக்ஷ வீட்டைத் தந்தருள்க.
பரித்த அன்பர் கணமூடே ... அன்பு நிறைந்த உன் அடியார்
திருக்கூட்டத்தில்”
2024-03-22
9)
நூல்களில் கீழ்க்காணும் பாடலை விநாயகர் துதியாக அருணகிரிநாதர் அருளியது என்று கொள்கின்றனர். ஆனால் இந்தப் பாடல் இடைச்செருகல் (Interpolation by an anonymous author) என்று எனக்குப் படுகின்றது. (i.e., அருணகிரிநாதர் பாடல் அன்று என்று தோன்றுகின்றது).
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALz5qbxPC1uUtb3jGtj0%2B0x9ggm_hoHfJ_Peuga3fptvRF4P%3Dw%40mail.gmail.com.
Thanks.Yes, praying for வீடு / முக்தி is normal.My question was more on the qualifier "உன்றன்" used with வீடு.
V. SubramanianOn Thu, Apr 4, 2024 at 7:42 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:உன்றன் வீடு தா - திருப்புகழில் வேறு எங்கும் "உன் வீட்டைத் தா" போன்ற பிரயோகம் உள்ளதா?I think in வஞ்சங்கொண்டும் திருப்புகழ் it comes.தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதிகொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயேதஞ்சந்தஞ்சம் சிறியேன் மதிகொஞ்சங்கொஞ்சம் துரையே அருள்தந்து என்று இன்பம் தரு வீடது தருவாயேசரண்யா
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/NCSuBJ5jkTw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP%3DNPO84MZZnBvVERr1M5uCb2xE6PgdxHQnJ_MVO6s9qA%40mail.gmail.com.
சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே - திருப்:42/8 அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் - திருப்:48/4 காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு காயம் விடாமல் உன்றன் நீடிய தாள் நினைந்து - திருப்:82/7 தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடி சேராய் - திருப்:110/4 மல சல சுவாச சஞ்சலம் அதால் என் மதி நிலை கெடாமல் உன்றன் அருள்தாராய் - திருப்:122/2 எஞ்சி மனம் உழலாமல் உன்றன் அன்பு உடைமை மிகவே வழங்கி - திருப்:180/7 கன பொருள் எலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய் - திருப்:195/4 கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு கபடனை ஆள உன்றன் அருள்கூராய் - திருப்:224/4 அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத - திருப்:352/1 தெளிந்து உன்றன் பழம் தொண்டு என்று உயர்வாக - திருப்:464/4 போகம் அதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உன்றன் பூ அடிகள் சேர அன்பு தருவாயே - திருப்:703/4 வால ரவி கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை தொலைந்திட உன்றன் அருள்தாராய் - திருப்:840/4 விஞ்சவே தரும் இளம் கொங்கையார் வினை கடந்து உன்றன் மேல் உருக என்று அருள்வாயே - திருப்:1103/4 சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் - திருப்:1249/2 மேல் உன்றனக்கே (1) உன்றனக்கே பரமும் என்றனக்கு ஆர் துணைவர் உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய் - திருப்:472/4 மேல் உன்றனது (2) மங்கிமங்கிவிட்டேனை உன்றனது சிந்தை சந்தோஷித்து ஆளுகொண்டு அருள - திருப்:457/3 என்றன் முந்துற தோணி உன்றனது சிந்தை தாராய் - திருப்:457/8 மேல் உன்றனை (1) மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம் உன்றனை நினைத்து அமைய அருள்வாயே - திருப்:616/5
On Thu, Apr 4, 2024 at 7:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:> My question was more on the qualifier "உன்றன்" used with வீடு.உன்றன் வீடு - உனது மோட்சம் என்றால் பொருள் சிறக்கவில்லை. உன்றன் வீடு தாபரித்த அன்பர் : வீடு - கோவில் (உ-ம்: அறுபடைவீடு).உன்தன், உன்றன் - இரண்டும் உள்ளது. சந்தத்திற்காகவா?
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் - திருப்:150/16
உன்தன் (5) இனி உன்தன் மலர்ந்து இலகும் பதம் அடைவேனோ - திருப்:14/8 மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து மங்காமல் உன்தன் அருள்தாராய் - திருப்:586/4 கொந்து ஆர் அரும்பு நின் தாள் மறந்து குன்றாமல் உன்தன் அருள்தாராய் - திருப்:587/4 வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே - திருப்:782/3 அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே - திருப்:1174/4 மேல் உன்தனை (1) தரித்த ஊரும் மெய் என மனம் நினையாது உன்தனை பராவியும் வழிபடு தொழிலது தருவாயே - திருப்:109/3,4 மேல் உன்றன் (14)
Thanks.Yes, praying for வீடு / முக்தி is normal.My question was more on the qualifier "உன்றன்" used with வீடு.
V. SubramanianOn Thu, Apr 4, 2024 at 7:42 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:உன்றன் வீடு தா - திருப்புகழில் வேறு எங்கும் "உன் வீட்டைத் தா" போன்ற பிரயோகம் உள்ளதா?I think in வஞ்சங்கொண்டும் திருப்புகழ் it comes.தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதிகொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயேதஞ்சந்தஞ்சம் சிறியேன் மதிகொஞ்சங்கொஞ்சம் துரையே அருள்தந்து என்று இன்பம் தரு வீடது தருவாயேசரண்யா
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/NCSuBJ5jkTw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP%3DNPO84MZZnBvVERr1M5uCb2xE6PgdxHQnJ_MVO6s9qA%40mail.gmail.com.
உன்றன் வீடு தா - திருப்புகழில் வேறு எங்கும் "உன் வீட்டைத் தா" போன்ற பிரயோகம் உள்ளதா?I think in வஞ்சங்கொண்டும் திருப்புகழ் it comes.
On Sat, Nov 16, 2024 at 10:05 AM Siva Siva <naya...@gmail.com> wrote:1. கீழ்க்காணும் பாடலில் சந்தக்குழிப்பு ஒவ்வோர் அடியிலும் ஒருமுறையே வருகின்றது.இஃது அருணகிரியார் பாடலா இடைச்செருகலா என்ற ஐயம் எழுகின்றது.
எனக்கு விளங்கவில்லை. ஒரே சந்தக் குழிப்பு ஒவ்வோர் அடியிலும் 3 முறை வருகிறதேதனனத்தன தானன தானனதனனத்தன தானன தானன
தனனத்தன தானன தானன ...... தனதான
2. அது மட்டுமன்றி இப்பாடலில் கூறப்பட்ட (& கூறப்படாத) செய்திகளை எண்ணும்பொழுது அந்த ஐயம் இன்னும் வலுப்பெறுகின்றது.3. By the way, normally the Sanskrit prefix ni ( nir. nis, etc) indicates negation / lack of of something - such as nirmala, nirguNa, etc.But in this song the word நிர்மூடனை comes - but instead of negating it seems to emphasize the quality. Does Sanskrit have such usages of the ni prefix?
The soul (ātmā) in its pure, nirupādhi state has no activities of the mind, the speech, and the body; it is nirdanda. It is one-only - nirdvandva, withoutinfatuation – nirmama, without-body – nihśarīra, independent – nirālamba, without-attachment - nirāga, without-fault — nirdosa, without-delusion – nirmūḍha, and without-fear – nirbhaya.
-------------
நிர்மூடன்/நிருமூடன் - முழுமூடன் என்னும் பொருளில் தமிழில் உள்ளது. திருப்புகழ், விவிலிய மொழிபெயர்ப்பு, கல்கி ... நாற்றம் என்பது நறுமணம். ஆனால், பொருள் மாறிவிட்டது. காலப்போக்கில் நிர்மூடன், நாற்றம் ... போல, எதிர்மறைப் பொருள் உண்டாகும் வார்த்தைகளைத் தொகுக்கலாம்.
MTL:
(1) நிர்மூடன் nirmūṭaṉ , n. < nir-mūḍha. Absolute fool, blockhead; முழுமூடன். நீணிதிதனைக் கண்டாணவமான நிர்மூடனை (திருப்பு. 44).
(2) நிர்மூடி nirmūṭi , n. < id. Fem. of நிர் மூடன். Stupid woman; மூடப்பெண். வாழும் மனைக்கு வங்காய் வந்தாயே நிர்மூடி (ஆதியூரவதானி. 9).
திருப்புகழ்:
(1) நிர்மூடனை - திருச்செந்தூர்:
https://www.kaumaram.com/thiru/nnt0029_u.html
(2) நிர்மூடனை - பழமுதிர்சோலை
https://kaumaram.com/thiru/nnt1314_u.html
இது நாமக்கல் அருகே உள்ள தலம் என வலையப்பேட்டை கிருஷ்ணன் கருதுகிறார். என் கருத்தும் அஃதே.
https://thirupugazhtemples.blogspot.com/2018/08/blog-post_2.html
(3) நிர்மூடன் - நிருமூடன் என்று ஆகிறது:
https://kaumaram.com/thiru/nnt0307_u.html
V. Subramanianதிருப்புகழ் 1197 வடிகட்டிய தேன் என (பொதுப்பாடல்கள்)வடிகட்டிய தேனென வாயினி
லுறுதுப்பன வூறலை யார்தர
வரைவிற்றிக ழூடலி லேதரு ...... மடவார்பால்
அடிபட்டலை பாவநிர் மூடனை
முகடித்தொழி லாமுன நீயுன
தடிமைத்தொழி லாகஎ நாளினி ...... லருள்வாயோ
பொடிபட்டிட ராவணன் மாமுடி
சிதறச்சிலை வாளிக ளேகொடு
பொருகைக்கள மேவிய மாயவன் ...... மருகோனே
கொடுமைத்தொழி லாகிய கானவர்
மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு
குடிலிற்குற மானொடு மேவிய ...... பெருமாளே.===On Thu, Apr 4, 2024 at 8:02 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPAid_soaVxdrBfjAnEecCQmRu5z7vxrrhbdjWFaimpHg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1WD4BLM3To3uy6oiYf3DtjUZrx4pb64AqKipvsYwVeqg%40mail.gmail.com.
நீங்கள் தந்த இரு பாடல்களும் இடைச்செருகல்கள் எனவே தோன்றுகிறது. புகழ்பெற்ற செய்யுள் நூல்களில் இடைச்செருகல்கள் காணப்படும்; பாடலாசிரியர் போலத் தாமும் கவிதை படைக்கும் திறனுள்ளவர் என்பதைப் பிறருக்குக் காட்டச் சில புலவர்கள் இவ்வாறு செய்வதுண்டு என்பார்கள்.அனந்த்
On Thu, Nov 21, 2024 at 9:39 AM Siva Siva <naya...@gmail.com> wrote:கீழ்க்காணும் பாடல் அருணகிரிநாதர் அருளியது அன்று என்று எனக்குத் தோன்றுகிறது. இடைச்செருகல் போல் தோன்றுகின்றது.1. இப்பாட்டில் முருகன், வேல், வள்ளி, சூரனை அழித்தது, இத்யாதி செய்திகள் இல்லை.2. அதுமட்டுமன்றிச், சந்தக்குழிப்பு அப்படியே ஓர் அரையடியாக வந்துள்ளது. இப்படி அருணகிரியார் அருளிய திருப்புகழ்ப் பாடல்களில் வேறு எங்கும் உண்டா?பனகப் படமிசைந்த (திலதைப்பதி)தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த ...... தனதான
......... பாடல் .........
பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
படர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற்
பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை
படுபுட் பவன முன்றி ...... லியலாரும்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1TqR%3DAEV%3DfKDMi_x2AKF143nC6X1Ueg8SLYaJ7zSX1ZQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMCxqEYYvujKoKeYMkW3xH1CTW5HGtbXTH9n6aLtLC-UQ%40mail.gmail.com.
VS: > 2. அதுமட்டுமன்றிச், சந்தக்குழிப்பு அப்படியே ஓர் அரையடியாக வந்துள்ளது.> இப்படி அருணகிரியார் அருளிய திருப்புகழ்ப் பாடல்களில் வேறு எங்கும் உண்டா?
சந்தக் குழிப்பு உள்ள திருப்புகழ்ப் பாடல்கள்:
(1) https://kaumaram.com/thiru/nnt0803_u.html
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த ...... தனதானா
தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
தனிமத் தளமு ழங்க ...... வருவோனே
....நா. கணேசன்
Thanks.V. SubramanianOn Fri, Nov 22, 2024 at 10:00 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:VS: > 2. அதுமட்டுமன்றிச், சந்தக்குழிப்பு அப்படியே ஓர் அரையடியாக வந்துள்ளது.> இப்படி அருணகிரியார் அருளிய திருப்புகழ்ப் பாடல்களில் வேறு எங்கும் உண்டா?
சந்தக் குழிப்பு உள்ள திருப்புகழ்ப் பாடல்கள்:
(1) https://kaumaram.com/thiru/nnt0803_u.html
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த ...... தனதானா
தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
தனிமத் தளமு ழங்க ...... வருவோனே
==> By the way, The above song is what I had mentioned in my question. As per my thinking & Anath's feedback, it appears as an இடைச்செருகல்.
2024-12-16
16)
பூத கலாதிகள் (பொதுப்பாடல்கள்)
கீழ்க்காணும் பாடல் அருணகிரிநாதர் அருளியதுதானா?
Some reasons for my doubt:
1. The request is in third person (படர்க்கை) & not in second person (முன்னிலை)
--- நாயகர் பாதமி ரண்டு ...... மடைவேனோ
2. இரண்டாம் பாதி முற்றிலும் அம்பாளின் நாமங்கள் / வர்ணனையாக வந்து முடிவில் அவள் பெற்ற பெருமாளே என்று கூறுகின்றது.
முருகனது வடிவம், செயல், வேல், மயில், வள்ளி, சூரனை அழித்தது, இத்யாதி விஷயங்களில் எதுவும் இப்பாடலில் இல்லை!
V. Subramanian
2024-12-19
ஆதிமுதல் நாளில் (கோடைநகர்)
"ஆதிமுதல் நாளில்" என்று தொடங்கும் பாடலில்
முதலடியில் - "என்றன் தாயுடலி" என்ற இடத்திலும்,
2-ஆம் அடியில் "உன்றன் பூவடிகள்" என்ற இடத்திலும்,
"தந்தந் தானதன" என்பது போலச் சந்தம் சற்றே மாறுபடுகின்றதோ?
ஏடுகளில் ஏதேனும் எழுத்துப்பிழை இருக்கக்கூடுமோ?
V. Subramanian
https://kaumaram.com/thiru/nnt0703_u.html
When I thought further about this, some potential phrasing that could fit the sandham in those places:
1 - முதலடியில்)
ஆதிமுத னாளில் எந்தை தாயுடலி லேயி ருந்து
2-ஆம் அடியில்)
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாதி ரண்டு
பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே
V. Subramanian
2024-12-22
18)
புலைய னான மாவீனன் (திருவண்ணாமலை)
"புலையனான மாவீனன்" என்று தொடங்கும் பாடலில்
முதலடியில் - "வினையி லேகு மாபாதன் பொறையி லாத" என்ற இடத்தில்
"தானாதந் தனன" என்பது போலச் சந்தம் சற்றே மாறுபடுகின்றதோ?
ஏடுகளில் ஏதேனும் எழுத்துப்பிழை இருக்கக்கூடுமோ?
For example, some potential phrasing such as ... மாபாவி பொறை... could fit the sandham in that place.
V. Subramanian
https://kaumaram.com/thiru/nnt0435_u.html
2025-03-10
19)
பரிவுறு நாரற்று (சேலம்)
"பரிவுறு நாரற் றழல்மதி" என்று தொடங்கும் பாடலில்
எல்லா அடிகளிலும் பொதுவாக மோனை அமையும் பல இடங்களில் மோனை இன்மையைக் காண்கின்றேன்.
X X X Y - என்ற சந்த அமைப்புள்ள பாடல்களில் அரையடிகள்தோறும் 1, 3-ஆம் X தொடக்கத்தில் மோனை வரும். ஆனால் இப்பாடலில் அப்படி இல்லை.
அக்காரணத்தால், இப்பாடல் வேறு ஒரு புலவரால் இயற்றப்பட்டிருக்குமோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகின்றது.
V. Subramanian
https://kaumaram.com/thiru/nnt0934_u.html
தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் ...... தனதான
பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
.. சிலைபொரு காலுற் ...... றதனாலே
பனிபடு சோலைக் குயிலது கூவக்
.. குழல்தனி யோசைத் ...... தரலாலே
மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
.. தனிமிக வாடித் ...... தளராதே
மனமுற வாழத் திருமணி மார்பத்
.. தருள்முரு காவுற் ...... றணைவாயே
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
.. தொடுகும ராமுத் ...... தமிழோனே
கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
.. திருவளர் சேலத் ...... தமர்வோனே
பொருகிரி சூரக் கிளையது மாளத்
.. தனிமயி லேறித் ...... திரிவோனே
புகர்முக வேழக் கணபதி யாருக்
.. கிளையவி நோதப் ...... பெருமாளே.
=========================
2024-12-22
2025-10-18
20)
முடித்த குழலினர் (திருத்தணிகை)
"முடித்த குழலினர்" என்று தொடங்கும் பாடலில்
திருமால் மருகன் என்ற குறிப்பைத் தவிர முருகன் புகழ் எதுவும் காண்கிலேன்.
முதற்பாதியிலும் விலைமாதர் வர்ணனையும் மற்றத் திருப்புகழ்ப் பாடல்களில் காண்பது போல இல்லையோ என்று தோன்றுகின்றது. (அதாவது, பெண்களின் அங்கவர்ணனையும் அவர்கள் செயல் வர்ணனையும் யாரோ ஒருவர் தம்மால் இயன்ற அளவில் ஏதோ எழுதியது போல இருக்கின்றது).
இக்காரணங்களால், இப்பாடல் வேறு ஒரு புலவரால் இயற்றப்பட்டிருக்குமோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகின்றது.
V. Subramanian
https://kaumaram.com/thiru/nnt0293_u.html
தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன ...... தனதான
......... பாடல் .........
முடித்த குழலினர் வடித்த மொழியினர்
.. .. முகத்தி லிலகிய ...... விழியாலும்
.. முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்
.. இளைத்த இடையினு ...... மயலாகிப்
படுத்த அணைதனி லணைத்த அவரொடு
.. .. படிக்கு ளநுதின ...... முழலாதே
.. பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன
.. .. பதத்து மலரிணை ...... யருள்வாயே
துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ
.. .. தொடுத்த சரம்விடு ...... ரகுராமன்
.. துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு
.. .. துலக்க அரிதிரு ...... மருகோனே
தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு
.. .. தழைத்த கதலிக ...... ளவைசாயத்
.. தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்
.. .. தழைத்த சரவண ...... பெருமாளே.
=========================
2025-03-10