The Road Not Taken - தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி

16 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jan 4, 2026, 8:36:16 AM (4 days ago) Jan 4
to santhavasantham
Robert Frost என்னும் அமெரிக்கக் கவிஞர் எழுதிய The Road Not Taken என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி.  முதலில் ஆங்கிலக் கவிதை வரிகளையும் அதன்பின் தமிழ் வரிகளையும் அளித்துள்ளேன். 

The Road Not Taken 
By Robert Frost
பயணிக்கப்படாத பாதை 
ராபர்ட் ஃப்ரோஸ்ட்
தமிழ்க் கவியாக்கம் - இமயவரம்பன் 
(நிலைமண்டில ஆசிரியப்பா)

Two roads diverged in a yellow wood,

நிறைந்த மஞ்சள் நிறந்திகழ் வனத்தினில்
இரண்டு பாதைகள் பிரிந்தன என்முன்;

And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

ஒருவனாய், அந்தோ, இரண்டிலும் என்னால்
பயணம் செய்திடல் இயலா தெனவே,
பாதைகள் பிரியும் வீதி வளைவின் 
தாழ்புதர்ச் செறிவைத் தாண்டிய பகுதியில்
விழிகட் கெட்டிய தொலைவில் நோக்கி
நீண்ட நேரம் நின்றேன்; 

Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;

பின்னர்,
தரத்தில் தன்மையில் நிகர்க்குமிவ் விரண்டினில்,
மிகுந்த புல்லொடும் குறைந்த தேய்வொடும்
சிறப்பெனத் தோன்றுமவ் வழித்தடம் எடுத்தேன்;

Though as for that the passing there
Had worn them really about the same,

இருப்பினும், நிசத்தில் இரண்டும் சமமாய்ப்
போக்கு வரத்தால் தேய்ப்புற் றிருந்தன;

And both that morning equally lay
In leaves no step had trodden black.

கால்பட்டுக் கருகாத் தாழ்தழை படர்ந்தே
சாலைகள் இரண்டுமக் காலையில் விளங்கின; 

Oh, I kept the first for another day!
விடுத்த அந்த முதல்வழி ஒருநாள் 
எடுக்கக் கருதியே இருந்தேன்

Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.

எனினும்,
ஒருவழி முடிவுற மறுவழி தொடர்வதால்
தொடங்கிய முதல்வழித் திரும்புதல் அரிதே;

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:

பற்பல் லாண்டின் பிற்படும் ஒருநாள்
நெட்டுயிர்த்(து) இப்படிச் செப்புவேன் இதனை:

Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,

இரண்டு பாதைகள் பிரிந்திடும் வனத்தில்
போய்வரல் குறைந்த தோர்வழி நடந்தேன்;

And that has made all the difference.

அனைத்து மாற்றமும் விளைத்ததிங் கதுவே. 

- இமயவரம்பன் 

Arasi Palaniappan

unread,
Jan 4, 2026, 8:43:19 AM (4 days ago) Jan 4
to சந்தவசந்தம்
அருமை அருமை 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/EB4228E7-36CD-4450-9A7C-B7DF1B4A004D%40gmail.com.

Kaviyogi Vedham

unread,
Jan 4, 2026, 10:49:58 AM (4 days ago) Jan 4
to santhav...@googlegroups.com
attagasam.  nalla mozipeyarppu. vazga imayam. 
yogiyar

இமயவரம்பன்

unread,
Jan 4, 2026, 12:20:35 PM (4 days ago) Jan 4
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்புடன் வாழ்த்திய அரசியாருக்கும் யோகியாருக்கும் மிக்க நன்றி

On Jan 4, 2026, at 10:49 AM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:



Subbaier Ramasami

unread,
Jan 4, 2026, 10:40:51 PM (4 days ago) Jan 4
to santhav...@googlegroups.com
மொழிமாற்றம் சிறப்பு.

இலந்தை

On Sun, Jan 4, 2026 at 7:36 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
Robert Frost என்னும் அமெரிக்கக் கவிஞர் எழுதிய The Road Not Taken என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி.  முதலில் ஆங்கிலக் கவிதை வரிகளையும் அதன்பின் தமிழ் 




I

Girija Varadharajan

unread,
Jan 4, 2026, 11:15:07 PM (4 days ago) Jan 4
to santhav...@googlegroups.com
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய் . 

இந்தப் பாடலில் ஒரு சிறு ஐயம். உள்ளத்தை உறுத்திக்கொண்டே இருப்பதால் கற்றிந்த சான்றோர்கள் நிறைந்த இந்த அவையில் இதை இட்டு,  இந்த ஐயத்தைத் தீர்த்துக்கொள்ள விழைகின்றேன். 
ஐயம் இதுதான். ”கூசும் மலர்ப்பாதம்” என்பதற்குத் தக்க பொருள் யாது?  
இவன் காலைப் பற்றுவதற்குத் தங்களுக்குச் சற்றும் தகுதியில்லை என எண்ணிப் பெருமானின் பாதத்தை வணங்க விண்ணோர்கள் கூசுகிறார்களா? –
அல்லது இப்படி எல்லா விண்ணோர்களும் (அக்கினி, வாயு,வருணன், இந்திரன், யமன் என எல்லா முப்பத்து முக்கோடி விண்ணோரும் வந்து தன்னை வணங்க, எளிவந்த பிரானாகிய பெருமான் அதனால் கூச்சம் கொள்கின்றானா? கூசும் பாதம் உடையவனாகிறானா? 
கூசுபவர்கள் விண்ணோர்களா?
 
அல்லது கூசுபவன் பெருமானா?   

  வரதராஜன் -சிங்கப்பூர்

Saranya Gurumurthy

unread,
Jan 4, 2026, 11:27:58 PM (4 days ago) Jan 4
to சந்தவசந்தம்
வணக்கம் ஐயா.

அடியேனுக்குத் தோன்றியதை இடுகிறேன். பிழை இருப்பின் பொறுத்தருளவும்.

கூசும் மலர்ப் பாதம் என்ற வரியில் பெருமானே கூச்சம் கொள்கிறான் என்று தான் தோன்றுகிறது. 

எல்லாத் தேவர்களும் தங்களுக்கு பிரச்சினை என்றால் வந்து இறைவன் பாதத்தைப் பற்றுகிறார்கள். அதனால் அவர்கள் வந்தாலே இறைவனுக்கு "ஓ.. இவர்களுக்கு என்ன பிரச்சனையோ?" என்று யோசிக்கிறாராம். ஆனால் மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், இறைவனிடம் எதையும் வேண்டாமல் அந்த இறைவனே தனக்கு வேண்டும் என்று வேண்டுவதால், அவனே தானாக வந்து அருள்கிறார் (தந்தருள தந்தருளி)என்று வைத்துக் கொள்வது சிறப்பாகத் தோன்றுகிறது. 

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி.. நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி.. நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே...

முருகா சரணம்.

Regards,
Saranya

Girija Varadharajan

unread,
Jan 5, 2026, 1:28:21 AM (4 days ago) Jan 5
to santhav...@googlegroups.com
நன்றி சரண்யா


From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of Saranya Gurumurthy <saranya.g...@gmail.com>
Sent: Monday, January 5, 2026 12:27:41 PM
To: சந்தவசந்தம் <santhav...@googlegroups.com>
Subject: Re: திருவெம்பாவையில் ஒர் ஐயம்
 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jan 5, 2026, 1:40:25 AM (4 days ago) Jan 5
to santhav...@googlegroups.com

தண்டபாணி தேசிகர் - உரையில்:

திருவெம்பாவை - 2 – பாசம் பரஞ்சோதிக்கு:


விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதம்


விண்ணோர்கள் தாம் செய்த பசுபுண்ணிய விசேடத்தால் வினைப்போகம் தீரும்வரையில் போகபூமியில் போகதனுவோடு பிறந்து பதவிகளில் இருப்பவர்கள். அவர்களுக்கும் பதவியாகிய மலம் இருப்பதால், தாமே தம்மை அனைவரும் வணங்கல் வேண்டும் என்ற முனைப்புடையவர்களாதலின் இறைவன் திருவடியை வணங்கியுய்ய நாணுகின்றார்கள் என்பாள் 'விண்ணோர்கள் ஏத்தக் கூசும் பாதம்' என்றாள். இப்பொருளால் திருவடி மெய்யன்பர் பொய்யன்பர் அனைவரையும் ஆட்கொள்ளும் அருள்வடிவினதாக இருந்தும் தேவர்கள் தம் அறியாமையால் கூசுகின்றார்கள் என்றவாறு. அவ்வண்ணம் தேவர்கள் வணங்க நாணத்தை அடையும் திருவடியென நாணுதலைத் திருவடியின் செயலாகக் கூறுவாரும் உளர். வானவர்கள் வாழ்த்துவதும் மனம் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாம் தொழவேண்டியாதலின், அவர்களுடைய பொய்ம்மையான காமியப்பயனைக் கருதிய வணக்கத்தைக் கண்டு இறைவன் நாணி நக்கு நிற்பர் ஆதலின் நாணுதலாகிய அவர் செயலை அடியின் செயலாக்கிக் கூறுதலும் அமையும்.

==

இமயவரம்பன்

unread,
Jan 5, 2026, 5:42:05 AM (3 days ago) Jan 5
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, தலைவரே

Ram Ramakrishnan

unread,
Jan 5, 2026, 8:32:15 AM (3 days ago) Jan 5
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமையான கருத்து. மொழிமாற்றித்்தமிழில் இட்ட கவிதை மிகச் சிறப்பு, திரு. இமயவரம்பன் 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 5, 2026, at 05:42, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

மிக்க நன்றி, தலைவரே

On Jan 4, 2026, at 10:40 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

மொழிமாற்றம் சிறப்பு.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Jan 5, 2026, 11:29:44 AM (3 days ago) Jan 5
to santhav...@googlegroups.com
  அட.   ஏன்   இப்படியெல்லாம் சுற்றி   வளைத்துக்   கஷ்டப்படுகின்றீர்கள்.? என் ஆசான்  சொல்லித்தந்தபடி..  கண் கூசும்  அளவுக்கு    ஒளி  மிக்க  மலரைப்போன்று  அல்லது  மென்மையான பாதம்  என்றே  பொருள்.  வேறு  விபரீத   அர்த்தம் கொளவேண்டா.. தியானத்திலும் இதே எனக்கு   வந்தது.
 யோகியார்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Jan 5, 2026, 11:35:28 AM (3 days ago) Jan 5
to santhav...@googlegroups.com
அட..   அபத்தமாக  இல்லை. பெருமான்  எண்ணற்ற அமுதசுரபிகள்  கையில்   வைத்துள்ளவன். அவனா  ஐய்யய்யோ இவர்கள் வரம் கேட்க   வந்துவிட்டார்களே  என்றா    கூசுபவன். இப்படி  அவன் எண்ணினால்..(?)- பாடுபவர்க்குச்  சிறுமை அன்றோ?அவன்  என்ன நம்  போன்றமனிதனா? என்ன!,.. பிறர்க்கு   இப்படியே  கற்பிக்காதீர். ப்ளீஸ்.
  யோகியார்

Ram Ramakrishnan

unread,
Jan 5, 2026, 11:53:28 AM (3 days ago) Jan 5
to santhav...@googlegroups.com
அடியேனுடைய கருத்தும் இதே.

“கண் கூசும் ஒளியுடைய பாதங்கள்” என்ற பொருள் சரியெனவே தோன்றுகின்றது.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

இமயவரம்பன்

unread,
Jan 5, 2026, 12:06:02 PM (3 days ago) Jan 5
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம் 

Saranya Gurumurthy

unread,
Jan 5, 2026, 10:18:34 PM (3 days ago) Jan 5
to சந்தவசந்தம்
நமஸ்காரம் கவியோகி ஐயா.

மிக்க நன்றி. புரிந்து கொண்டேன். என் போன்ற அறிவிலிக்கு, தவறு என்று ஒன்று செய்தால் தான் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். 

குன்றே அனைய குற்றங்கள் குணமாம் என்றே நீ கொண்டால்
என்தான் கெட்டது? இரங்கிடாய் எண்டோள் முக்கண் எம்மானே

என்ற மாணிக்கவாசகரின் வரிகளையே மறுமொழிகிறேன்.

மன்னிக்க வேண்டும்‌.

இறைவனுக்குப் பல்லாண்டு பாடி வாழ்த்துதற்கு நமக்கு தகுதி இருக்கிறதா? எனினும் அவன் மேல் உள்ள அன்பு, உரிமை, யாருடைய கண்ணாவது அவன் மேல் பட்டு அவனுக்கு ஏதாவது ஆனால் என்ன செய்வது என்ற பதட்டம் பெரியாழ்வாரைப் பல்லாண்டு பாட வைத்தது. 

"அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா!" என்ற ஆண்டாளின் வரிகளில் இறைவனைக் கோபித்துக்கொள்ளாமல் அருள்வாயாயக என்கிறாள். அவன் எதற்குக் கோபித்துக்கொள்ளப் போகிறான்? இருப்பினும் அன்பு மேன்மையால் இறைவனும் நம் போன்றவனே என்ற எண்ணம் வந்தது. ஆதலால் சக மனிதர்களிடம் முறையிடுவது போல் பாடுகிறாள் என்பதும் என் கருத்து. 

அதேபோல் இறைவன் மேல் உள்ள உரிமை, அவன் அடியார்களுக்கு மட்டுமே அருள்வான் என்ற possessiveness இவ்வாறு என்னை யோசிக்க வைத்தது. இதில் வேறெந்த எண்ணமும் (தேவர்கள் தரம் தாழ்ந்தவர் என்றோ இறைவன், அவன் சக மனிதன் போல் என்றோ) இல்லை.

மீண்டும் எனது மன்னிப்பை முன் வைக்கிறேன்.

சரண்யா 

On Mon, Jan 5, 2026, 22:05 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
அட..   அபத்தமாக  இல்லை. பெருமான்  எண்ணற்ற அமுதசுரபிகள்  கையில்   வைத்துள்ளவன். அவனா  ஐய்யய்யோ இவர்கள் வரம் கேட்க   வந்துவிட்டார்களே  என்றா    கூசுபவன். இப்படி  அவன் எண்ணினால்..(?)- பாடுபவர்க்குச்  சிறுமை அன்றோ?அவன்  என்ன நம்  போன்றமனிதனா? என்ன!,.. பிறர்க்கு   இப்படியே  கற்பிக்காதீர். ப்ளீஸ்.
  யோகியார்

On Mon, Jan 5, 2026 at 1:28 AM Girija Varadharajan <girij...@hotmail.com> wrote:
நன்றி சரண்யா


 

Kaviyogi Vedham

unread,
Jan 5, 2026, 10:31:31 PM (3 days ago) Jan 5
to santhav...@googlegroups.com
ok   pl  leave it, my   blessings to  yu  madam, i  just  explained  position only  after a  little meditation on  Him. wish yu  a   happy new   year
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Saranya Gurumurthy

unread,
Jan 6, 2026, 1:30:18 AM (3 days ago) Jan 6
to சந்தவசந்தம்
Thank you Sir.

Regards,
Saranya
Reply all
Reply to author
Forward
0 new messages