சொல்லாராய்ச்சி: துப்பு என்னும் நெய்
----------------------------
கர்நாடகத்தில், துப்ப என்றால் நெய். துப்ப தோசை என்றால் நெய்த்தோசை - உடுப்பி உணவகங்களில். சென்னையில் 'வுட்லண்ட்ஸ்' கிருஷ்ணராவ் கண்டுபிடித்துப் பிரபலப்படுத்தியது மசாலா தோசை, துப்பத்தில் சமைப்பதாகும். துப்பம் நெய் என்று பெரியாழ்வாரும் பாடியுள்ளார். பழந் தெலுங்கிலும் உண்டு. துப்பு/துப்பம் தாதுமூலம் என்ன என்றும், எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக ஆராய்ந்துள்ளனர்.
பெரியாழ்வார் திருமொழி:
செப்பு இள மென்முலைத் தேவகி நங்கைக்குச்
சொப்படத் தோன்றி தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
மரு. உ. வே. வெங்கடேஷ் வியாக்கியானம்:
https://www.youtube.com/watch?v=I8jr8yIYkUQடச்சு நாட்டின் பிராகிருத நிபுணர், ஹெர்மன் டீக்கன், துப்பம் திராவிடச் சொல் என முதலில் நிறுவிப் பின்னர், சிவப்பு வண்ணத்துடன் தொடர்புடையது என்று எழுதியுள்ளார். துப்பம், துய்யல் (பாயசம்) - இவை திராவிட சம்பந்தம் எனக் கன்னடியர்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளனர். எனவே, நெய்க்கும், சிவப்பு நிறத்துக்கும் தொடர்ப்பில்லை. துய்த்தலை மந்தி, வாகைத் துய் வீ, ... போன்ற சங்க இலக்கியத் தொடர்களைக் காட்டி, து(ய்)ப்ப- > துப்ப "நெய்" என விரிவாக எழுதியுள்ளேன். துய் எனப்படும் பொருள்களின் படங்களுக்கும், மத்தால் தயிர் கடையும்போது வெண்ணெய் துய்யாக மிதப்பதும், ஆய்வுக்கும் காண்க:
https://x.com/naa_ganesan/status/2018698948471386464மேலும், உசாத்துணை:
https://x.com/naa_ganesan/status/2018706474126479429Herman Tieken, “Middle-Indic tuppa, Tamil tuppu, and the relative chronology of several Śvetāmbara Jaina Texts”.
Bulletin d’Études Indiennes 13-14 (1995-1996), 415-429.
-------------------------------------------
tuppa "ghee" and its Dravidian root (dhātu)
--------------------------------------------
Tamil has um-/uv-/up- set of words connected with salt. (i) umaNar = salt traders; (ii) uvari = salty land; (iii) uppu = salt. Like this set, there are other sets where the second letters are -m-/-v-/-p-. Another classic example is: tum-/tuv-/tup- "red color". Examples, (i) tummi > tammi (tāmarai) = "red lotus", This tum- > tam- is in tāmra "copper", tambalam/tāmbūlam (betel leaf) etc., (ii) tuvara "smeared with red dye, blood" (iii) tuppu "coral, becoming red, rusting of iron".
https://groups.google.com/g/houstontamil/c/PP64Fq-E96c/m/a9YpQyhQBAAJDr. Herman Tieken has an article (1996) published where he argues for tuppu as a Dravidian word. He tries to connect with "red color", but tum-/tuv-/tup- "red color" is not the dhātu root for tuppa "ghee".
Herman Tieken, “Middle-Indic tuppa, Tamil tuppu, and the relative chronology of several Śvetāmbara Jaina Texts”.
Bulletin d’Études Indiennes 13-14 (1995-1996), 415-429.
https://archive.org/details/htieken-tuppa-ghee/page/422/mode/2upSeveral people consider tuppa "ghee" from Dravidian itself.
https://x.com/naa_ganesan/status/2018399412314312927H. Tieken did not mention tuppa "ghee" in old Telugu sources, but it does exist, see above.
tuy : the dhAtu-root of tuppa "ghee"
-----------------------------------------
Madras University Tamil Lexicon:
துய்² tuy , n. < துய்-. 1. Food; உணவு. துய் தானுறும் வாயினை (கந்தபு. தாரக. 159). 2. Cotton; பஞ்சு. துய்த்தலைமந்தியை (புறநா. 158). 3. Soft end of cotton thread; பஞ்சின் நுனி. (குறிஞ்சிப். 37, உரை.) 4. A soft part in the ears of corn, in the petals of flowers, etc.; கதிர் பூவிதழ் முதலிய வற்றின் மெல்லிய பகுதி. துய்த்தலைவாங்கிய . . . குரல் (குறிஞ்சிப். 37). 5. Softness; மென்மை. துய்ம்மயி ரடக்கிய சேக்கை (மலைபடு. 418). 6. Fibre; சிம்பு. துய்யறத் திரண்ட திண்கோல் (சீவக. 559). 7. Fibre covering the tamarind pulp; புளியம்பழத் தின் ஆர்க்கு. துய்த்தலைப் பழனின் (மலைபடு. 178). 8. Sharpness; கூர்மை. துய்யவை யங்கை வாங்கி (திருவாலவா. 38, 35).
= tuy² tuy , n. < tuy-. 1. Food; uṇavu. tuy tāṉuṟum vāyiṉai (kantapu. tāraka. 159). 2. Cotton; pañcu. tuyttalaimantiyai (puṟanā. 158). 3. Soft end of cotton thread; pañciṉ nuṉi. (kuṟiñcip. 37, urai.) 4. A soft part in the ears of corn, in the petals of flowers, etc.; katir pūvitaḻ mutaliya vaṟṟiṉ melliya pakuti. tuyttalaivāṅkiya . . . kural (kuṟiñcip. 37). 5. Softness; meṉmai. tuymmayi raṭakkiya cēkkai (malaipaṭu. 418). 6. Fibre; cimpu. tuyyaṟat tiraṇṭa tiṇkōl (cīvaka. 559). 7. Fibre covering the tamarind pulp; puḷiyampaḻat tiṉ ārkku. tuyttalaip paḻaṉiṉ (malaipaṭu. 178). 8. Sharpness; kūrmai. tuyyavai yaṅkai vāṅki (tiruvālavā. 38, 35).
Look at the Vākai tree's flower which has fibres on the top. It is described as "vaakait tuy vii". vākai = albizia lebbeck tree. Also, consider the fibers on the head of monkeys, Sangam literature calls them as "tuyt talai manti".
This root, tuy is used in a Kannada word also. "Kannada dictionary do not call tuppa as a loan word, it tells the word tuyyal (Kannada word for pāyasam) and tuppa are from same source." Ghee is an important ingredient for pāyasam. Let us look at some connected words in Kannada with tuppa (Kittel), basically they are all linked to *tuy-* root of Sangam Tamil texts.
(1) ತುಪ್ಪಟ tuppaṭa (p. 774)
ತುಪ್ಪಟ tuppaṭa. = ತುಪಟ, ತುಪ್ಪುೞ್, etc. wool (My.; Te. ತುಪ್ಪಟೆ), etc.
(2) ತುಪ್ಪೞ tuppaḻa (p. 774)
ತುಪ್ಪೞ tuppal̤a. = ತುಪ್ಪೞು. the plumage on some pigeon's legs (B. 3, 114), etc. ಪಕ್ಷಿಯ ತುಪ್ಪೞ (ಗಱಿ G.). see ಅಂಚೆದುಪ್ಪೞ.
(3) ತುಪ್ಪೞು tuppaḻu (p. 774)
ತುಪ್ಪೞು tuppal̤u. = ತುಪ್ಪುೞ್, etc. wool, fine, soft hair, as of cats (B. 3, 30). see ಕೊಣ್ಡಗುಱಿದುಪ್ಪೞ್.
(4) ತುಪ್ಪುೞ್ tuppuḻ (p. 774)
ತುಪ್ಪುೞ್ tuppul̤. -ೞು. = ತಿಪ್ಪುೞ್, ತುಪಟ, ತುಪ್ಪಟ, ತುಪ್ಪೞ, ತುಪ್ಪೞು, ತುಬಟ. a feather; the soft plumage, or down, of birds; the fine, soft hair of rabbits, etc. (ಪಕ್ಕಿಯ ರೋಮ Śmd. I, Śm. 30; ಖಗದ ರೋಮ Bhn. 7; ಗಱಿ Ct. I, 66; Cpr. 6. 96; 8, 101 va.; Te. ತುಪ್ಪುಡು; M. ತೂವಲ್, ತೊಪ್ಪಲ್, ತೊಪ್ಪೆ, ಚೊಪ್ಪೆ; T. ತೂವಿ; Tu. ತುಯಿ, ಸುಯಿ). ಮೊಲದ ತುಪ್ಪುೞು (ಶಶೋರ್ಣ, etc. Nr.).
It is from this Dravidian root, tu(y)ppa = tuppa "ghee" is formed. When curds are churned in a pot using churn-rod (mattu), a fluffy, fibrous butter floats on top of the buttermilk which resembles the tuy in Sangam texts. From this tuy "butter", tuyppu/tuppu "ghee, clarified butter" is made.
N. Ganesan
2-2-2026