Beauty or Fantasy? / கவினோ, கற்பனையோ?

4 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 7, 2025, 9:00:52 PM8/7/25
to santhav...@googlegroups.com
Thirty years ago, while commuting to work in Suburban electric train, I wrote this poem:

         Beauty or Fantasy?

She wore a golden yellow saree
With border of a reddish hue.
Rembrandt's portrait straight from gallery ?
Angelo's sculpture turning true?

She drifted like a ballet dancer
Smiling as a morning flower.
The sharp two eyes made her a lancer
Fighting for her beauty's power.

Her sigh was music,speech was sweet song.
Looks were hooks fishing out young hearts.
Her tresses long formed a cloudy throng.
Waist,a bow sending Cupid's darts.

She came,vanquished,vanished very soon.
No maiden of this earth was she.
Was she an angel or heaven's boon,
Or my day-dream or fantasy?

                   —Natarajan Ramaseshan

                 *************

இந்த ஆங்கிலக் கவிதையின் கருத்தைத் தழுவித் தமிழில் இன்று எழுதிய கவிதை இது:

     கவினோ, கற்பனையோ?

மஞ்சள் உடையில் வந்த மங்கை,
   மாலை மலர்ந்த மதியின் தங்கை!
கொஞ்சும் எழில்தான் கம்பன் தமிழோ?
   கூறும் செஞ்சொல் கண்ணன் குழலோ?
வஞ்சி நடந்தால் அன்னம் நாணும்;
     வளரும் குழலோ முகிலைப் பூணும்.
விஞ்சும் விழிகள் கயலின் இணையோ?
      விடுக்கும் பார்வை மாரன் கணையோ?


வந்தாள், வென்றாள், உடனே விரைந்தாள்;
    மாய மாக எங்கோ மறைந்தாள்.
இந்த உலகின் பெண்ணோ அல்லள்,
     யாரோ? எவளோ? என்ன சொல்ல?
அந்த வானின் தேவ தையோ?
     அமரர் வரமோ? அறியேன் ஐயோ!
முந்தும் என்றன் பகற்க னாவோ?
       மூள்ம னத்துக் கற்ப னையோ?

                            —தில்லைவேந்தன்.
..

Ram Ramakrishnan

unread,
Aug 7, 2025, 9:48:20 PM8/7/25
to santhav...@googlegroups.com
அருமை.

முப்பது வருடக் காதல் முதல்தரக் கவிதைகள்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hjGOBPwmVMf3GDGd3o0SffXizJS3RNJyAYcY2meo1i7fw%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 7, 2025, 10:00:27 PM8/7/25
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

      —தில்லைவேந்தன்.
..

Anand Ramanujam

unread,
Aug 7, 2025, 10:21:21 PM8/7/25
to santhav...@googlegroups.com
A beautifully composed line — “She came, vanquished, vanished very soon.”
It instantly brought to mind Julius Caesar’s famed Latin phrase “Veni, vidi, vici” — “I came, I saw, I conquered.”


"வந்தாள், வென்றாள், உடனே விரைந்தாள்;
    மாய மாக எங்கோ மறைந்தாள்.”

தமிழாக்கமும் மிக அருமை! 

On Aug 7, 2025, at 9:00 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

She came,vanquished,vanished very soon.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 7, 2025, 10:31:30 PM8/7/25
to santhav...@googlegroups.com
அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி திரு இமயவரம்பன் 

                               —தில்லைவேந்தன்.
Reply all
Reply to author
Forward
0 new messages