Fwd: [அன்புடன்] Fwd: அதிரை 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?

2 views
Skip to first unread message

kalam kader

unread,
May 3, 2010, 1:26:10 PM5/3/10
to


---------- Forwarded message ----------
From: Mani Manivannan <mmani...@gmail.com>
Date: 2010/4/25
Subject: [அன்புடன்] Fwd: அதிரை 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?
To: tamil_ulagam <tamil_...@googlegroups.com>, தாஜூதீன் <tjd...@gmail.com>
Cc: tamilmanram <tamil...@googlegroups.com>, tscii <ts...@yahoogroups.com>, அன்புடன் <anb...@googlegroups.com>


நண்பர்களே,
 
அதிரை உமர்தம்பியும், அவரைப் போன்ற இணைய முன்னோடிகள் பலரும் எந்த அரசின் துணையின்றியும், எந்த அமைப்பின் ஆதரவை எதிர்நோக்காமலும், தன்முனைப்பினாலேயே தொண்டாற்றியவர்கள்.
 
உமர்தம்பிக்கு அரசின் அங்கீகாரம் எதிர்பார்ப்பதோ, அல்லது அமைப்புகளின் அங்கீகாரம் எதிர்பார்ப்பதோ தவறல்ல.  ஆனால் அரசுகளும், அமைப்புகளும் இயங்கும் முறைகளும், வேகங்களும், இத்தகைய கோரிக்கைகளைப் பல மாதங்கள் முன்னரே உரிய இடங்களில் கொண்டு சேர்த்து முறையிட வேண்டியிருக்கும்.  இன்னும் இரு மாதங்களே மாநாட்டுக்கு இருக்கும் வேளையில் இத்தகைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்துக்குத் தான் கொண்டு சேர்க்கும்.
 
ஆனால், பயனர்களில் இருந்து எழுந்து ஏனைய பயனர்களுக்கு உதவி செய்ய முனைந்த உமர்தம்பிக்குப் பயனர்களே அங்கீகாரம் தருவதே முறையாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
 
இந்த இணைய மாநாட்டில், தமிழ் இணையத்துக்குத் தொண்டாற்றி வரும் முன்னோடிகளில் சிலருக்கு, அவர்களது தொண்டுகளைப் பாராட்டி, உமர்தம்பி பெயரால் ஒரு விருது அளிப்பது, அந்த முன்னோடிகளுக்கும் உமர்தம்பி அவர்களது நினைவுக்கும் நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும்.
 
இது மாநாட்டோடு ஒட்டி அமையலாம். மாநாட்டு அமைப்பாளர்கள், அரசு, உத்தமம் ஆகியவற்றின் ஆதரவு கூடக் கிடைக்கலாம்.  ஆனால், இது முழுக்க முழுக்கப் பயனாளர்கள் அமைப்புகளில் இருந்து வருவது, எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் செய்யக் கூடியது.
 
1995 முதல் தமிழ் எழுத்துகளில் இணையத்தில் கணித்தமிழ் வளர்ச்சிக்கு அடிகோலிய முன்னோடிகள் முதல் இப்போது தமிழ் விக்கிப்பீடியாவிலும் எண்ணற்ற கட்டுரைகள் படைத்துக் கொண்டிருப்பது வரை, பலர் தமிழுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
 
இது எனது தனிப்பட்ட கருத்து.  இதற்கு இருக்கும் ஆதரவைப் பொருத்து மாநாட்டுக்குள் நாம் ஏதேனும் செய்ய இயலும்.
 
என்ன சொல்கிறீர்கள்?
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
2010/4/20 Albert Fernando <albe...@gmail.com>
அன்பினிய நண்.சாபு மற்றும் 
நிலா மகேன் மற்றும் நண்பர்களுக்கு
வணக்கம்.
மறைந்த சகோதரர் உமர்தம்பி அவர்களை கவுரவிக்க வேண்டும்
என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அப்படி நடக்கும்பட்சத்தில் மிகமிக மகிழ்பவர்களில் நானும் ஒருவன்.
நண்பர் சாபு அவர்கள் எழுதியிருப்பதைப்பார்த்தால் எதோ நான் மனது வைத்தால் நடந்துவிடும் என்பது போல எழுதியுள்ளார்கள். ஆகா அப்படி ஒரு வல்லமை எனக்கிருந்தால் இந்நேரம் தூள் கிளப்பியிருக்க
மாட்டேனா?
 
ஆல்பர்ட் மனது வைத்தால் தமிழ் உலகத்திலேயே ஒன்றும் செய்ய இயலாது. அதுவும் அந்த மாநாட்டிலா? எல்லோரும் கோரிக்கை வைக்கவேண்டிய இடம் வேறு.
 
இங்கும் அதாவது தமிழ் உலகத்தில் ஆகப் பெரியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் அல்லவா மனது வைக்க வேண்டும். அவர்கள் மவுனமாக இருக்கிறார்கள்.
 
என்னைப்பொருத்த வரை என் குரலை உயர்த்திச் சொல்லுகிறேன்.
சகோதரர் உமர்தம்பி அவர்களை கவுரவிக்க வேண்டும்;அது இந்த மாநாட்டில் இல்லாவிட்டால் பின் எந்த மாநாட்டில்?
 
உரியவர்கள் செவிகளில் விழுந்து இதமாய் நுழைய வேண்டியவர்கள்
மனதில் இதற்கான கரு உருவாகி மாநாட்டில் வெளிப்படட்டும்.
 
சகோதரர் உமர்தம்பி அவர்கள் மறைந்த நேரத்தில் தமிழ் உலகம்
ஆறாத் துயருற்றது.  நான் இரண்டு வலைப்பதிவு ஏற்படுத்தி இயன்றவரை பதிவு செய்தேன்.
அதை மீண்டும் ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்.
 
முதலில் நம் தமிழ் உலக ஆஸ்தானக் கவிஞர்.புகாரி என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து தந்த கவிதையுடன் துவங்குகிறேன்.
ஆல்பர்ட்,
அமெரிக்கா. 


 
2010/4/18 sadayan sabu <sadaya...@gmail.com>

தமிழ் உலகத்தில் நண்பர் உமரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆல்பர்ட் அய்யா ஏதேனும் செய்ய முடிந்தால்

 
---------- Forwarded message ----------
From: தாஜூதீன் <tjd...@gmail.com>
Date: 2010/4/18
Subject: அதிரை 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?


அஸ்ஸலாமு அலைக்கும்,
 
தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன.
 
அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி ஒரு கோரிக்கையுடன் என் வலைப்பூவில் பதிவாகி உள்ளது, சகோதரர் அதிரைகாரன் எழுதியது சென்ற  பாருங்கள் http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html  தங்கள் கருத்தை பதியுங்கள், மற்ற தமிழ் இணைய ஆர்வளர்களுக்கும் உங்கள் தமிழ் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். முடிந்தால் உங்கள் வலைப்பூவிலும் பதியுங்கள், அதிக வாசகர்கள் வந்து செல்லும் வலைப்பூ தங்களுடையது.
 
கணினித்துறையில் தமிழுக்காக பல சேவை செய்த ஒரு இஸ்லாமிய தமிழருக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறிய அங்கீகார கிடைப்பதற்கான ஒரு முயற்சி (campaign)
 
மேலும் தகவலுக்கு என் ஈமெயில் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன் தாஜூதீன்
 

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
Reply all
Reply to author
Forward
0 new messages