தமிழ் தரும் தனிநிறைவு
(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
சிறகுவிரித்(து) அகல்வானில் பறந்து பாடித்
… திளைக்கின்ற தோர்வாழ்வுக் கேங்கும் நெஞ்சே!
வெறுமையெனும் எரிதழலுன் உணர்வை வாட்ட
… மீளும்வழி அறியாமல் உழல்வ தேனோ ?
எறிதிரைபோல் தமிழமுதம் உனக்குள் பொங்க
… இனித்திடுநற் கவிதையெலாம் இயற்று வாயேல்
விறுவிறென விசைத்துவரும் இடர்கள் ஓய்ந்து
… மிகுமகிழ்வே உனதுணர்வில் நிறைந்தி டாதோ?
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/F87DC6CB-57C3-4505-B505-5EBB64C528AA%40gmail.com.
On 22 Nov 2025, at 6:49 PM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/50F05FD4-1053-4835-9F3A-7C1948A484F7%40gmail.com.