சனிப் பிரதோஷப் பாட்டு
தனத்த தந்தன
தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
திருப்புகழ் (திருப்பரங்குன்றம்)
- ராகம்: ஸாவேரி
தாளம்: ஆதி
உனைத்தி
னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ......
தருள்மாறா
.
வதைத்த வெஞ்சினன் வதிகையி லுறைபவன்
… பறக்கும் விண்ணது நகரமு மிடிபட
… மனத்தி லும்பரும் முறையினில் வழிபடு …. மருளாளா
… வடிப்ப மென்றுயர் மொழியதன் வகையினை
… மடக்கு மன்பரின் வடிவமும் முசிதுற
… வழக்கி லொன்றிய வணைதலில் மனமகிழ் …. குணநேயா
உதைத்த அந்தகன் உயிரது மறுமுறை
… உயிர்ப்ப வந்தனை அமரரும் முறைசெய
… உவத்த லென்றொரு நிலையினில் மறையது…… புகல்வோனே
… உடற்சி முந்துற மகளவள் அழிபட
… உணர்ச்சி யங்கொரு பகையினை வழிசெய
… உளர்த்தல் நந்துற உலகினர் நலமதில் …. விழைவோனே
நதிக்கண் நம்பியர் மயர்வற மடமுற
… நயத்து வொன்றுவர் துயிலது முடனுற
… நடிப்பின் மன்னவன் சிகையினி லுதைதர …. மிகநோவார்
… நகட்ட லங்கிட நடமிடு மிறையவன்
… ஒதுக்க மங்கொள அடியரின் மனநிறை
… நயப்ப தொன்றிடு மமரரி னதிபதி …… அவர்காணார்
விதிர்ப்பில் நின்றனன் உதிரமும் விழிகொள
… விடப்பு நெஞ்சினில் விடுசியில் விதனமும்
… விடக்கு இன்புடன் அளிதலில் மகிழ்வுறு…. கணநாதா
… விதித்த நன்னெறி விதிதரு வினையென
… விகற்ப மன்றென உறுதியில் மிகைவரும்
… மிடுக்கில் விண்ணுற வழியது செயலருள் …. பெருமானே
பதம் பிரித்து:
வதைத்த வெஞ்சினன் வதிகையில் உறைபவன்
… பறக்கும் விண்ணது நகரமும் இடிபட
… மனத்தில் உம்பரும் முறையினில் வழிபடும் …. அருளாளா
… வடிப்பம் என்றுயர் மொழியதன் வகையினை
… மடக்கும் அன்பரின் வடிவமும் முசிதுற
… வழக்கில் ஒன்றிய வணைதலில் மனமகிழ் …. குணநேயா
உதைத்த அந்தகன் உயிரது மறுமுறை
… உயிர்ப்ப வந்தனை அமரரும் முறைசெய
… உவத்தல் என்று ஒரு நிலையினில் மறையது…… புகல்வோனே
… உடற்சி முந்துற மகளவள் அழிபட
… உணர்ச்சி அங்கு ஒரு பகையினை வழிசெய
… உளர்த்தல் நந்துற உலகினர் நலமதில் …. விழைவோனே
நதிக்கண் நம்பியர் மயர்வற மட*முற
… நயத்து ஒன்றுவர் துயிலதும் உடனுற
… நடிப்பின் மன்னவன் சிகையினில் உதைதர …. மிகநோவார்
… நகட்டல் அங்கு இட நடமிடும் இறையவன்
… ஒதுக்கம் அங்கொள அடியரின் மனநிறை
… நயப்பது ஒன்றிடும் அமரரின் அதிபதி …… அவர்காணார்
விதிர்ப்பில் நின்றனன் உதிரமும் விழிகொள
… விடப்பு நெஞ்சினில் விடுசியில் விதனமும்
… விடக்கு இன்புடன் அளிதலில் மகிழ்வுறு…. கணநாதா
… விதித்த நன்னெறி விதிதரு வினையென
… விகற்பம் அன்று என உறுதியில் மிகைவரும்
… மிடுக்கில் விண்ணுற வழியது செயலருள் …. பெருமானே
வதைத்த வெஞ்சினன் வதிகையில் உறைபவன்
… பறக்கும் விண்ணது நகரமும் இடிபட
… மனத்தில் உம்பரும் முறையினில் வழிபடும் …. அருளாளா
விண்ணில் பறந்து துன்பம் விளைத்த மூன்று நகரங்களையும் அழித்து (திரிபுர அசுரர்களை) சினம் கொண்டு வதைத்துத் திருவதிகைப் பதியில் உறையும் தேவர்கள் வழிபட நிற்கும் அருள் மிகுந்தோனே
வடிப்பம் என்றுயர் மொழியதன் வகையினை
… மடக்கும் அன்பரின் வடிவமும் முசிதுற
… வழக்கில் ஒன்றிய வணைதலில் மனமகிழ் …. குணநேயா
(தருமி என்ற புலவருக்காக) அழகுறத் தமிழில் மொழிந்ததைத் தவறு எனச்சுட்டி, மடக்கிய அன்பரான நக்கீரனின் வடிவம் கேடுற்ற நிலையிலும் ஒழுக்கத்தில் வளைதல் இல்லாத அவர்தம் மனம் மகிழும் குணத்தில் விருப்பு கொண்டவனே.
வடிப்பம் – அழகு, செப்பம்., மடக்கும் – முடக்கும்., வடிவம் – உடலழகு முசிதுற – கேடுற., வழக்கில் – ஒழுக்கத்தில்., வணைதல் - வளைதல்
உதைத்த அந்தகன் உயிரது மறுமுறை
… உயிர்ப்ப வந்தனை அமரரும் முறைசெய
… உவத்த லென்றொரு நிலையினில் மறையது…… புகல்வோனே
(காலால் உதைத்த எமதர்மனின் உயிர் மாய்ந்திட, அவருக்கு மறுபடியும் உயிரளிக்க தேவரிகள் வேண்டியதில் மனம் உவந்து அது செய்த நிலையில் வேதங்களை ஓதுபவனே)
… உடற்சி முந்துற மகளவள் அழிபட
… உணர்ச்சி அங்கு ஒரு பகையினை வழிசெய
… உளர்த்தல் நந்துற உலகினர் நலமதில் …. விழைவோனே
(சினம் முந்தி நின்ற தக்கன் அவனது மகளும் அழிந்துபட, அந்த உணர்ச்சி மிகுதலில் அது பகை மிகுதற்கு ஏதுவாகி அவனை அழித்து உலக நலனை வளர்ப்பதில் நாட்டமுற்றவனே)
உடற்சி – சினம்., மகள் – தக்கனின் மகள் – மனவுணர்வு.,உளர்த்தல் – உணரச் செய்தல்., நந்துற – விளங்கிட
நதிக்கண் நம்பியர் மயர்வற மட*முற
… நயத்து ஒன்றுவர் துயிலதும் உடனுற
… நடிப்பின் மன்னவன் சிகையினில் உதைதர …. மிகநோவார்
(கெடில நதியின் அருகில் வீரட்டானத்து இறைவனை வழிபட்டுப் பின்னர் சோர்வு நீங்க அருகிலுள்ள ஓர் மடத்தில் வந்த) சுந்தரர் விரும்பியபடி உறக்கம் கொள்ள, நடிப்பில் வல்லவரான இறைவனுமும் அவை தலையில் காலால் உதைத்திட, அவர் துன்புற்றார்.
நகட்டல் அங்கு இட நடமிடும் இறையவன்
… ஒதுக்கம் அங்கொள அடியரின் மனநிறை
… நயப்பது ஒன்றிடும் அமரரின் அதிபதி …… அவர்காணார்
(சுந்தரரின் வேண்டுதலுக்கு ஒப்ப) அவ்விடம் விட்டு நகர்ந்த நடனமாடும் இறைவன் அடியவரின் மனம் நிறைந்து அன்பின் உருவமாகிடும் மகாதேவன் என்றாலும், சுந்தரர் காண முடியாதாகினார்)
நதிக்கண் – (கெடில) நதிக்கு அருகே., நம்பியர் – நம்பி அரூரர் என்ப்படும் சுந்தரர்., மயர்வற – சோர்வினை நீக்கும் பொருட்டு., மடமுற – அங்கு அமைந்த மடத்தில் தங்க (புணர்ச்சியில் மகர ஒற்று கெட்டது).
நடிப்பில் மன்னன் – கூத்தெனும் நாடகத்தில் வல்ல இறைவன், (தூங்குகையில் காலால் சுந்தரரின்) சிகையினி லுதைதர- தலையில் உடைத்திட., நகட்டல் அங்கிட- (சுந்தரர்) இருந்த இடத்திலிருந்து நகர்ந்திட. நடமிடும் இறையவன்- நடனமாடும் இறைவன் ஒதுக்க மங்கொள – அவ்விடமிருந்து நகர்ந்திடவும்., நயப்பது ஒன்றிடும் – அன்பினில் உருவெடுத்த அமரின் அதிபதி – மகாதேவன்
விதிர்ப்பில் நின்றனன் உதிரமும் விழிகொள
… விடப்பு நெஞ்சினில் விடுசியில் விதனமும்
… விடக்கு இன்புடன் அளிதலில் மகிழ்வுறு…. கணநாதா
( சிவலிங்கத்தின் விழி இரண்டிலும் குருதி வழிந்தோட, அதைக் கண்டுநடுக்கமுற நின்ற கண்ணப்பன், அம்பு தைத்துக் துன்பம் கொண்டு பிளக்கும் நெஞ்சினனாய், தான் கொணர்ந்த இறைச்சியை ஆனந்தமுடன் அளித்தலில் மகிழ்கின்ற கணங்களுக்குத் த்லைவனே)
விதித்த நன்னெறி விதிதரு வினையென
… விகற்பம் அன்று என உறுதியில் மிகைவரும்
… மிடுக்கில் விண்ணுற வழியது செயலருள் …. பெருமானே
(சிறப்பினில் வந்தமைந்த கண்ணப்பனின் நன்னெறி முற்பிறவியின்
நல்வினையின் பயனின்றி வேறேதும் அல்ல என்ற உறுதியினால்
அவனுக்கு எடுப்பு மிக உடனடியாய் விண்ணேக வழிசெய்த பெருமானே)
விதிர்ப்பு – நடுக்கம்., உதிரமும் விழிகொள – (சிவபிரானின்) கண்களிலிருந்து உதிரம் பெருக., விடப்பு – பிளக்கும் விடுசி – அம்பு
விதனம் – வேதனை., விடக்கு – இறைச்சி., அளிதல் – அளித்தல் என்பதன் விகாரம். கணநாதா – கணங்களுக்குத் தலைவனே.,
விதித்த – சிறப்பித்து உரைத்த., விதிதரு வினை – முற்பிறவியினால் வந்த., விகற்பம் – வேறுபாடு. மிடுக்கினில் - எடுப்பாக
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
04/10/2025--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP6ML-1Hsn1GxrTYt3QpvzKJoaoJwCTQF%3DhVrxm%3DPzzgQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtvF7YKOfftgy%3D7nxv3bzWe%2BsT7syqof0MuV5LqVYA4mEg%40mail.gmail.com.

To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqth2n7PG%2B-yx%3DEfjEDokQqJFLh5C2eXCb7QnWUi_OOH35Q%40mail.gmail.com.
வண்ண விருத்தம் முயற்சி – 8 (ராம்)
சனிப் பிரதோஷப் பாட்டு
தனத்த தந்தன
தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
திருப்புகழ் (திருப்பரங்குன்றம்)
- ராகம்: ஸாவேரி
தாளம்: ஆதி
உனைத்தி
னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ......
தருள்மாறா
.
வதைத்த வெஞ்சினன் வதிகையில் நிலைகொடு
… பறக்கும் விண்ணது நகரமு மிடிபட
… மனத்தி லும்பரும் முறையினில் வழிபடு …. மருள்தேவே
… வடிப்ப மென்றுயர் மொழியதன் வகையினை
… மடக்கு மன்பரின் வடிவமும் முசிதுற
… வழக்கி லொன்றிய வணைதலில் மனமகிழ் …. குணநேயா
உதைத்த அந்தகன் உயிரது மறுமுறை
… உயிர்ப்ப வந்தனை அமரரும் முறைசெய
… உவத்த லென்றொரு நிலையினில் மறையது…… புகல்வோனே
… உடற்சி முந்துற மகளவள் அழிபட
… உணர்ச்சி யங்கொரு பகையினை வழிசெய
… உளர்த்தல் நந்துற உலகினர் நலமதில் …. விழைவோனே
நதிக்கண் நம்பியர் மயர்வற மட*முற
… நயத்து மங்கவர் துயிலற முனைகையில்
… நடிப்பின் மன்னவன் முடிதனி லுதைதர …. மிகநோவார்
… நகட்ட லங்கிட நடமிடு மிறையவன்
… ஒதுக்க மங்கொள அடியரின் மனநிறை
… நயப்ப தொன்றிடு மமரரி னதிபதி …… அவர்காணார்
விதிர்ப்பில் நின்றனன் உதிரமும் விழிகொள
… விடப்பு நெஞ்சினில் விடுசியில் விதனமும்
… விடக்கு மங்கவன் அளிதலில் மகிழ்வுறு…. கணநாதா
… விதித்த நன்னெறி விதிதரு வினையென
… விகற்ப மன்றென உறுதியில் மிகைவரும்
… மிடுக்கில் விண்ணக வழியது செயலருள்…. பெருமானே
பதம் பிரித்து:
வதைத்த வெஞ்சினன் வதிகையில் நிலைகொடு
… பறக்கும் விண்ணது நகரமு மிடிபட
… மனத்தில் உம்பரும் முறையினில் வழிபடு …. மருள்தேவே
… வடிப்பம் என்றுயர் மொழியதன் வகையினை
… மடக்கும் அன்பரின் வடிவமும் முசிதுற
… வழக்கில் ஒன்றிய வணைதலில் மனமகிழ் …. குணநேயா
உதைத்த அந்தகன் உயிரது மறுமுறை
… உயிர்ப்ப வந்தனை அமரரும் முறைசெய
… உவத்தல் என்று ஒரு நிலையினில் மறையது…… புகல்வோனே
… உடற்சி முந்துற மகளவள் அழிபட
… உணர்ச்சி அங்கு ஒரு பகையினை வழிசெய
… உளர்த்தல் நந்துற உலகினர் நலமதில் …. விழைவோனே
நதிக்கண் நம்பியர் மயர்வற மட*முற
… நயத்து மங்கவர் துயிலற முனைகையில்
… நடிப்பின் மன்னவன் முடிதனில் உதைதர …. மிகநோவார்
… நகட்டல் அங்கிட நடமிடு மிறையவன்
… ஒதுக்கம் அங்கொள அடியரின் மனநிறை
… நயப்பது ஒன்றிடும் அமரரின் அதிபதி …… அவர்காணார்
விதிர்ப்பில் நின்றனன் உதிரமும் விழிகொள
… விடப்பு நெஞ்சினில் விடுசியில் விதனமும்
… விடக்கும் அங்கவன் அளிதலில் மகிழ்வுறு…. கணநாதா
… விதித்த நன்னெறி விதிதரு வினையென
… விகற்பம் அன்று என உறுதியில் மிகைவரும்
… மிடுக்கில் விண்ணக வழியது செயலருள்…. பெருமானே.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
05/10/2025
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXbfMOYVHo8EK8qJs4FwDfeGpt4Pev4i-rtcrVMw7xHWkw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtvF7YKOfftgy%3D7nxv3bzWe%2BsT7syqof0MuV5LqVYA4mEg%40mail.gmail.com.
On Oct 5, 2025, at 20:16, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2645E1B7-9243-454D-B8A5-907F9BFDCFEA%40gmail.com.
On Oct 5, 2025, at 19:57, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BVDsyC2HTBNnL9VDFbm%3DCwQi0J5xmqKNE2OAezQO-aZJw%40mail.gmail.com.
On Oct 5, 2025, at 20:07, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNMSxhWtF6AaoBZ9Tq1Tyqj%2By1JaxskoK%3DbNmwuC7qhPg%40mail.gmail.com.