உன்னோடு வாழ்தல் அரிது.

9 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 21, 2025, 10:45:19 PM (4 days ago) Nov 21
to சந்தவசந்தம்
ஒன்றை நினையெனின்வே றொன்றை நினைத்திடுவாய்
ஒன்றை நினையா திருவெனின்அஃ(து) உன்னுவாய் - புன்நினைப்பை*
உன்னா திருவென்றால் உன்னுவாய் பாழ்மனமே
உன்னோடு வாழ்தல் அரிது. 

(புன் நினைப்பு = கீழ்ப்பட்ட எண்ணம்; ஔவையார் பெருமாட்டியின்  ”நல்வழி’ நூலில் ஒருநாள் உணவை  ஒழியென்றால்.. என்று தொடங்கும் செய்யுளை ஒட்டி அமைந்தது. )

அனந்த் 21-11-2025

Arasi Palaniappan

unread,
Nov 22, 2025, 12:08:12 AM (4 days ago) Nov 22
to சந்தவசந்தம்
மிக அருமை!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia3uWOcjyzhSg%3DQUCTw26a8QNARc9QEPkScF2Jy7BUkGUw%40mail.gmail.com.

Swaminathan Sankaran

unread,
Nov 22, 2025, 12:08:49 AM (4 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
மிகவும் உண்மை.
யோகா முடிவில் தியானம் (meditation) செய்யும் பொழுது எவ்வளவு தான் முயன்றாலும் பாழும் மனம் 'ஒன்றில்' 
நிலைத்து நிற்பதில்லை. 'ஆடி மேகம் போல' இங்கும் அங்கும் அலைந்து கலைந்து போகிறது என்பது தான் 
நான் கண்ட யதார்த்தம்!

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia3uWOcjyzhSg%3DQUCTw26a8QNARc9QEPkScF2Jy7BUkGUw%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 22, 2025, 12:09:49 AM (4 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
அருமை பேராசிரியர் அனந்த் 

    — தில்லைவேந்தன்

--

Lalitha & Suryanarayanan

unread,
Nov 22, 2025, 12:27:55 AM (4 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
மிக அருமை ஐயா.

நன்றி.
சிவசூரி

On Sat, Nov 22, 2025 at 9:15 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

KKSR

unread,
Nov 22, 2025, 1:02:59 AM (4 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
அருமை அண்ணா! நலந்தானே? மன்னி சௌக்கியமா?

கவிதையில் தோய்ந்த சிந்தை👇

ஒன்றில் நிலையா(து) உடலைக் கெடுக்கும(து)
ஒன்றை அடக்குதற்(கு) ஒன்றுண்டோ? - ஒன்றே
உருவாகி ஊனில் உயிராகி நின்றான்
திருவிளை யாடல் தெளி!

அன்புடன்
சுரேஜமீ
22.11.2025 காலை 10:02



Sent from Mobile


--

இமயவரம்பன்

unread,
Nov 22, 2025, 5:02:14 AM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை திரு. அனந்த்.

பாரதியின் இவ்வரிகள் நினைவுக்கு வருகின்றன:

“நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
…….
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னோடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;”

இமயவரம்பன்

unread,
Nov 22, 2025, 5:08:55 AM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
சுரேஜமீயாரின் கவிதை அருமை.

Ram Ramakrishnan

unread,
Nov 22, 2025, 5:23:10 AM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
அருமை, அனந்த் ஜீ.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Nov 22, 2025, at 09:15, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--

Kaviyogi Vedham

unread,
Nov 22, 2025, 10:47:19 AM (3 days ago) Nov 22
to santhav...@googlegroups.com
  இல்லை ஸ்வாமி..  ஒரு   கட்டத்தில் அந்த அலைதல் நின்றுவிடும். ஒன்றும்.மனம்..
 நாம  ஜபமும் எடுத்துக்கொள்க.ஓர் மை  சித்தியாகும். வாழ்த்துக்கள்
, யோகியார்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 22, 2025, 3:13:56 PM (3 days ago) Nov 22
to சந்தவசந்தம்
வேறொரு இழையில் சிவசிவா சுட்டியபடி, 2-ஆம் சீரை மாற்றியமைத்த வடிவம்:

ஒன்றை நினையெனின்வே றொன்றை நினைத்திடுவாய்

ஒன்றை நினைத்ததன்பின் ஓடுவாய்- ஒன்றையுமே

உன்னா நிலையுறவும் ஒவ்வாய்என் புன்மனமே

உன்னோடு வாழ்தல் அரிது.

(புன் நினைப்பு = கீழ்ப்பட்ட எண்ணம்; ஔவையார் பெருமாட்டியின்  ”நல்வழி’ நூலில் ஒருநாள் உணவை  ஒழியென்றால்.. என்று தொடங்கும் செய்யுளை ஒட்டி அமைந்தது. )

…. அனந்த் 22-11-2025

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 22, 2025, 3:25:31 PM (3 days ago) Nov 22
to சந்தவசந்தம்
மனத்தின் ’லீலைகள்’ பற்றிய என் பாடல் பற்றிக் கருத்துக் கூறிய அன்பர்களுக்கு என் நன்றி.

அனந்த்

Govindaraju Arunachalam

unread,
Nov 23, 2025, 9:03:35 AM (2 days ago) Nov 23
to santhav...@googlegroups.com

பேராசிரியர் அனந்த் அவர்களின் அருமையான வெண்பாவைத் தொடர்ந்து யான் எழுதிய வெண்பா.

 

என்னை அலைக்கழித்(து) ஏதேதோ செய்கின்றாய்

முன்னை நடந்ததில் மூழ்குவாய் – பின்னொருநாள்

என்னிடம் சொல்லாமல் ஏகுவாய் என்மனமே

உன்னோடு வாழ்தல் அரிது.

 

-கருவூர் இனியன்

Reply all
Reply to author
Forward
0 new messages