வாராகி அந்தாதி

2,466 views
Skip to first unread message

Subbaiyar Ramasami

unread,
Jun 15, 2017, 10:25:26 PM6/15/17
to santhav...@googlegroups.com
சூசகம் என்ற தலைப்பில் இட்ட இடுகையில் வாராகி அந்தாதி பற்றிச் சொல்லியிருந்தேன். இப்பொழுது அவ்வந்தாதியை வாரம் ஒன்றுக்கு ஐந்து  வீதம்  இங்கே இடுகிறேன். 15 வது பாடலிலிருந்து 37ம்   பாடல்வரை  மூல மந்திரத்தின் 113 அட்சரங்களும் அங்கங்கேவரிசைப்படி ஒளிந்து கொண்டிருக்கும் .. உபாசகர்கள் கண்டு பிடிக்கலாம். மற்றவர்கள் கண்டுபிடிக்கச் சிரமப்படவேண்டாம்.  அங்கங்கே வடமொழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். சூசகம் கிடைத்துத் தொடரப்படும் அந்தாதி இது. 

                                                          காப்பு

சூசகமாய் என்னைத் தொடரவைத்தாள் வாராகி
வாசகமாய் இங்கே வனைகின்றேன் - யாசகமாய்
வார்த்தைகளை வேண்டுகிறேன், வள்ளல் கணபதியே
நேர்த்திகளை நீயே நிகழ்த்து.

                                                        நூல்

வாராஹி  அந்தாதி

உலகங்கள் கோடி ஒருநிலை யோடே உருளுகையில்
விலகுங்கள் என்றந்த வீதியில் ஓலம் விளைவதில்லை
கலகங்கள் தீரக் கருத்துடன் என்றும் கனிந்தவெற்றித்
திலகங்கள் இட்டுச் சிரிப்பவள் வாராகி தெய்வதமே                1

வதமே புரிவாள், வழிவழி தீமை வனைபவரும்
பதமே பணியும் பரிசினை நெஞ்சில் பதித்திடுவாள்
இதமே புரிவாள், எமக்குப் பிழைசெய் எதிரிகளை
அதமே புரிவாள் அடியருக் கென்றென்றும் ஆனந்தமே!              2

ஆனந்த மார்க்கம் அவளது மார்க்கம், அணைந்துவிடின்
தானெந்த மார்க்கமும் சார்ந்திட வேண்டாம் தரியலர்தம்
ஊனந்த மாக உலர்த்திடும் தேவியை உற்றவர்க்கு
வானந்த வீதி வசப்படும் வாராகி வாழ்த்துவளே!                    3

வாழ்த்திட வாயும் வணங்கிடக் கைகளும் வந்துமுன்பு
தாழ்த்திடச் சென்னியும் தந்தநம் தாய்பதம் சார்ந்துமனம்
ஆழ்த்திட வேறே அதனினும் மேனிலை யாதுளதோ?
ஊழ்த்தடை யில்லை உறுதி உறுதி உறுதியிதே!                     4

உறுதி தளரா உளமும் உணர்ந்தே உரைத்திடுநா
மறதி அடையா வகையும் பெறவே வரந்தருவாள்
அறுதியிட் டன்னை அபயம் எனவே அடைந்துவிடின்
இறுதி வருநாள் எமபயம் போக்கி எதிர்நிற்பளே!                     5

தொடரும் 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 15, 2017, 10:40:59 PM6/15/17
to சந்தவசந்தம்
தெய்வீகப் பாடலை இங்குப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

அனந்த்

-- 

Pas Pasupathy

unread,
Jun 16, 2017, 7:59:10 AM6/16/17
to Santhavasantham
நன்றி. ( மறைந்த அமரர் ஜெயபாரதி இன்றிருந்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.) 

2017-06-15 22:25 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
சூசகம் என்ற தலைப்பில் இட்ட இடுகையில் வாராகி அந்தாதி பற்றிச் சொல்லியிருந்தேன். இப்பொழுது அவ்வந்தாதியை வாரம் ஒன்றுக்கு ஐந்து  வீதம்  இங்கே இடுகிறேன். 15 வது பாடலிலிருந்து 37ம்   பாடல்வரை  மூல மந்திரத்தின் 113 அட்சரங்களும் அங்கங்கேவரிசைப்படி ஒளிந்து கொண்டிருக்கும் .. உபாசகர்கள் கண்டு பிடிக்கலாம். மற்றவர்கள் கண்டுபிடிக்கச் சிரமப்படவேண்டாம்.  அங்கங்கே வடமொழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். சூசகம் கிடைத்துத் தொடரப்படும் அந்தாதி இது. 

Siva Siva

unread,
Jun 16, 2017, 8:27:41 AM6/16/17
to santhavasantham
அழகு!

/தரியலர்தம் ஊனந்த மாக உலர்த்திடும் தேவியை/
உலர்த்திடும் = ?
ஒருவேளை - உலத்தல் - உலப்பித்தல் - என்ற அடிப்படையில் "உலப்பிக்கும்" என்று சொல்லவந்தீர்களோ?

2017-06-15 22:25 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Kaviyogi Vedham

unread,
Jun 16, 2017, 9:44:39 AM6/16/17
to santhavasantham
அற்புதம் இலந்தை!,
 மிக எளிமை, மிக அழகு, வலிமை நிறைந்த சொற்கள். படிக்க ஆநந்தம். தொடர்க. பாரா யணம் செய்வோம்,
 யோகியார்

2017-06-15 22:25 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Vis Gop

unread,
Jun 16, 2017, 11:02:38 AM6/16/17
to santhav...@googlegroups.com

மிக அருமை. சமீபத்தில் நானும் ஒரு அந்தாதி எழுதி இருப்பதால் அரிச்சுவடி க்கும் அறிவு மு தி ர் ச் சி க்கும் உள்ள வித்தியாசம் புரிகிறது. குறிப்பாக எதுகை. திரு அனந்த் அவர்கள் எதுகை இவ்வாறு அமைய வேண்டும் என்று ஆலோசனை தந்தும் இந்த அளவுக்கு அழகாக அமைக்க முடியவில்லை.

முதல் இரண்டு வரிகள் அருமை.

வதமே புரிவாள்: எதை/யாரை என்று விளங்கவில்லை. எப்படிப் பொருள் கொள்ள வேண்டும்?

ஒவ்வொரு பாடலிலும் கடைசி வாக்கியம் மிக உறுதியாகப் பேசுகிறது. தெய்விகம் தெரிகிறது.

நன்றியுடன் கோபால்.

Subbaiyar Ramasami

unread,
Jun 16, 2017, 11:49:37 AM6/16/17
to santhav...@googlegroups.com
வாராஹி வழிபாட்டில் இரண்டு உண்டு. ஒன்று அநுக்கிரஹம். இன்னொன்று நிக்ரஹம். நிக்ராஹாஷ்டகம் 
அநுக்கிரஹாஷ்டகம் என்று இரண்டு அஷ்டகங்கள் இருக்கின்றன.  நிக்ரஹ்ாமாக  இருக்கும் போது வதம், அநுக்ரஹமாக வேண்டும் போது இதம்

இலந்தை

--

Subbaiyar Ramasami

unread,
Jun 16, 2017, 11:58:20 AM6/16/17
to santhav...@googlegroups.com
வாராஹி மாலை என்ற  ஒரு பாடலில்  நெட்டுடலை உரிப்பாள், படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே  என்று வருகிறது. எனவே உலர்த்திடும் சரிதான். இப்படி இருப்பதனாலே வாராஹி கொடுந்தெய்வம் என்று நினைத்துவிடவேண்டாம். அவள் அரசி. பகைவர்களிடம் கடுமை. அடியரிடம்  அன்பின் பொழிவு. இரண்டும் அபரிமிதம். இராஜராஜ சோழன் போருக்குச் செல்லும் போது அவளை வேண்டிக்கொண்டுதான் செல்வானாம்.  தஞ்சைப் பிரஹதீஸ்வரர் கோவிலில் வாராஹிக்கென்று தனிச் சன்னதி இருக்கிறது. திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி வாராஹியின் அம்சம் என்று சொல்லப்படுகிறது. 

இலந்தை

--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 16, 2017, 12:13:41 PM6/16/17
to சந்தவசந்தம்
OTL-ல் காண்பது: 
1ularttu-talto dry, air, desiccate
கழக அகராதியில் ’உலர்த்தல்’ இல்லை.

M. Viswanathan

unread,
Jun 16, 2017, 2:48:50 PM6/16/17
to Santhavasantham
மிகமிக அற்புதம்.
மீ.வி.

Ramamoorthy Ramachandran

unread,
Jun 17, 2017, 8:28:29 AM6/17/17
to santhav...@googlegroups.com
தேவி திருப்பாடல்கள் தொடர்ந்து திசையெங்கும் ஒளி வீசி விளங்கும். எளியேன் பாராயணம் செய்து பயன் பெறுவேன். நன்றி - புலவர் இராமமூர்த்தி.

--

N. Ganesan

unread,
Jun 17, 2017, 9:10:01 AM6/17/17
to சந்தவசந்தம்

On Friday, June 16, 2017 at 9:13:41 AM UTC-7, ananth wrote:
OTL-ல் காண்பது: 
1ularttu-talto dry, air, desiccate
 
This is a typo. The correct entry is "ularttu-tal".
 
கழக அகராதியில் ’உலர்த்தல்’ இல்லை.

MTL  entry gives an example:
உலர்த்து-தல் ularttu-   5 v. tr. caus. ofஉலர்-. [M. ularttu.] To dry, air, desiccate;உலரச்செய்தல். நனைந்த வான்றுகி லுலர்த்திய (சேதுபு. கந்த. 41).  

NG

N. Ganesan

unread,
Jun 17, 2017, 9:22:10 AM6/17/17
to சந்தவசந்தம்
On Friday, June 16, 2017 at 8:58:20 AM UTC-7, கவிமாமணி wrote:
வாராஹி மாலை என்ற  ஒரு பாடலில்  நெட்டுடலை உரிப்பாள், படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே  என்று வருகிறது. எனவே உலர்த்திடும் சரிதான். இப்படி இருப்பதனாலே வாராஹி கொடுந்தெய்வம் என்று நினைத்துவிடவேண்டாம். அவள் அரசி. பகைவர்களிடம் கடுமை. அடியரிடம்  அன்பின் பொழிவு. இரண்டும் அபரிமிதம். இராஜராஜ சோழன் போருக்குச் செல்லும் போது அவளை வேண்டிக்கொண்டுதான் செல்வானாம்.  தஞ்சைப் பிரஹதீஸ்வரர் கோவிலில் வாராஹிக்கென்று தனிச் சன்னதி இருக்கிறது. திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி வாராஹியின் அம்சம் என்று சொல்லப்படுகிறது. 

இலந்தை

உலர்த்து- தமிழிலும் மலையாளத்திலும் உள்ளது. பட்டனார் எழுதிய பகவத்கீதைக்கு ஏற்பட்ட உரையில் ஆன்மாவை உலர்த்துதல் பற்றி உள்ளது.
MTL  entry gives an example:
உலர்த்து-தல் ularttu-   5 v. tr. caus. ofஉலர்-. [M. ularttu.] To dry, air, desiccate;உலரச்செய்தல். நனைந்த வான்றுகி லுலர்த்திய (சேதுபு. கந்த. 41).  

------------

உளர்தல் என்னும் சொல் கலித்தொகையில் காண்கிறோம். உளர்த்து/உணர்த்து (உணக்கு/உணங்கு-)
உளர்தல் To spread out and drag the fingers through, as in drying wet hair; தலை மயிர் ஆற்றுதல். கூந்தல் உளர (கலித். 105).
உணத்து-தல் uṇattu-, 5 v. tr. corr. of. உலர்த்து-. 1. To cause to dry; காயவிடுதல். நெல்லை யுணத்தினான். Vul. 2. To emaciate, the body; to attenuate; வற்றுவித்தல். மெய்யுணத் தலும் (தைலவ. தைல. 110).

சங்கத் தமிழ் ஆகிய உளர்தல் இக்காலத்தில் உலர்தல் என வழங்குகிறது. அள்ளைக்கை/அல்லக்கை, புள்ளாங்குழல்/ புல்லாங்குழல் (புள் = துளை), ... போல உளர்தல்/உலர்தல்.
விள்- விண்ணு/விண்டு/விஷ்ணு போல, உள்- (< சுள்-/சுடு-) உண்ணம்/உஷ்ணம் 

நா. கணேசன்
 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 17, 2017, 9:32:19 AM6/17/17
to சந்தவசந்தம்
பட்டனார் எழுதிய பகவத்கீதைக்கு ஏற்பட்ட உரையில் ஆன்மாவை உலர்த்துதல் பற்றி உள்ளது.

பக். 107:

பக். 108

NG

Subbaiyar Ramasami

unread,
Jun 17, 2017, 9:37:35 AM6/17/17
to santhav...@googlegroups.com
அருமையான செய்திகள்.

NG

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 17, 2017, 9:45:37 AM6/17/17
to சந்தவசந்தம்

On Friday, June 16, 2017 at 4:59:10 AM UTC-7, பசுபதி wrote:
நன்றி. ( மறைந்த அமரர் ஜெயபாரதி இன்றிருந்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.) 

மரு. ஜெயபாரதி அவர்களின் எழுத்து என நினைக்கிறேன்:

வராகி மாலை:

Subbaiyar Ramasami

unread,
Jun 17, 2017, 10:03:30 AM6/17/17
to santhav...@googlegroups.com
வாராகி மாலையை யார் எழுதியது என்பதிலே ஐயங்கள் உண்டு. இராஜராஜ சோழனின் படைத்தளபதி எழுதியதாகச் சொல்பவர்களும் உண்டு. இராஜைராஜ சோழன் வாராஹியை வணங்கியிருக்கிறான்.   

நேற்று எழுத்தாளர் பால குமாரனின் பேஒன்றை யுடியூபில் கேட்க நேர்ந்தது. அவரைத்தாக்க 400 பேருக்கு மேல் அவர் வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள் சொன்னபடி அவர் மன்னிப்புக் கேட்டு அவர்களை அனுப்பிய பின் அவர் வாராஹி மூலமந்திரம் உச்சாடனம் செய்ய   தாக்க வந்தவர்களில் பலர் அவர் வீட்டிற்கு வந்து தமது செயலுக்கு வருந்தியதாகவும் சொன்னார்.

வாராகி மாலையை மனத்திடமில்லாதவர்கள் படித்தால் கொஞ்சம் பயம் வரும்.  ஆனால் பயப்படத் தேவையில்லை. 
பலாப்பழச் சுளைபோல் வாராகி அருள். 

--

Subbaiyar Ramasami

unread,
Jun 18, 2017, 9:34:53 AM6/18/17
to santhav...@googlegroups.com

நின்றெதிர் தீமை நிகழ்ந்திடும் முன்னே நிறுத்துபவள்
கன்றெதிர் கண்டு கசியும் பசுவெனக் காக்கின்றவள்
மன்றெதிர் வாதம் வருமுனர் மாற்றம் வழங்குபவள்
வென்றெதிர் நிற்பவள், வித்தகி, வாராகி வீரியளே!             6

வீரி, எதிலும் விரைந்து செயல்படும் வீறுடையாள்
சூரி, பயங்கரி, சூலி, புடைத்தெழு சூக்குமத்தாள்.
நாரி, நலந்தரு நாயகி, மங்கலை நாநிலத்தே
மூரி அரிமிசை முந்திடு வாள்சினம் மூண்டெழவே!            7

எழவைப்பாள், என்றும் எமக்கு நலம்புரிந் தேதிலரை
விழவைப்பாள், வீழ்த்தி விழுந்தோர் மனத்தில் விழிப்புணர்த்தித்
தொழவைப்பாள், பக்தி சுடர மனத்தைத் துளைந்ததனை
உழவைப்பாள், பைரவி, உன்னதம் தந்தே உயர்த்துவளே!       8

உயர்த்துவள் வாசவி உத்தண்டி, வாராகி உத்தமியாள்
வியர்த்தம் எதுவும் விளையும் முனமதை வேரருப்பாள்
அயர்த்திடும் போதஸ்வ ரூடா  உடனே  அருள்புரிவாள்
முயற்சிகள் நன்றாய் முடிப்பாள் வராக முகத்தினளே!               9

முகத்திலே தந்தம் ,முகர்ந்திடும் மூக்குடன் மூவிழியும்
தகத்தகச் சோதி இரத்ன மகுடத் தனிச்சிறப்பும்
தகர்க்கும் உலக்கையும் சங்குடன் சக்ரம் தனிமழுவும்
அகத்தில்  சுரந்திடும் அன்பும் துலங்கும் அருளவளே!     

Saranya Gurumurthy

unread,
Jun 18, 2017, 10:06:07 AM6/18/17
to santhav...@googlegroups.com
அன்புள்ள இலந்தை ஐயாவிற்கு, 

அடியேனின் அன்பு வணக்கங்கள். அம்பாளின் அருளால் தாங்கள் இட்ட பாடல்களைப் படித்து வருகிறேன். ஒவ்வொரு பாடலிலும், வாராகி ஸ்வரூபமான ஆனைக்கா அன்னை,அகிலாண்டேஸ்வரியைக் காண்கிறேன். மிக்க நன்றி. 

குறிப்பாக பத்தாம் பாடலைப் படித்ததும் மனக்கண்ணில் நின்றாள் அன்னை ஒய்யாரமாக! 

அன்புடன், 
சரண்யா. 

Siva Siva

unread,
Jun 18, 2017, 11:19:59 AM6/18/17
to santhavasantham
2017-06-18 9:34 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

நின்றெதிர் தீமை நிகழ்ந்திடும் முன்னே நிறுத்துபவள்
கன்றெதிர் கண்டு கசியும் பசுவெனக் காக்கின்றவள்
மன்றெதிர் வாதம் வருமுனர் மாற்றம் வழங்குபவள்
வென்றெதிர் நிற்பவள், வித்தகி, வாராகி வீரியளே!             6

--> /காக்கின்றவள்
"காக்கிறவள்" என்பது இலக்கணப்படி சரியா? அப்படியெனில், ஏன் அதனைப் பிரயோகிக்கவில்லை?

வீரி, எதிலும் விரைந்து செயல்படும் வீறுடையாள்
சூரி, பயங்கரி, சூலி, புடைத்தெழு சூக்குமத்தாள்.
நாரி, நலந்தரு நாயகி, மங்கலை நாநிலத்தே
மூரி அரிமிசை முந்திடு வாள்சினம் மூண்டெழவே!            7

--> /நாநிலத்தே
Typo?

எழவைப்பாள், என்றும் எமக்கு நலம்புரிந் தேதிலரை
விழவைப்பாள், வீழ்த்தி விழுந்தோர் மனத்தில் விழிப்புணர்த்தித்
தொழவைப்பாள், பக்தி சுடர மனத்தைத் துளைந்ததனை
உழவைப்பாள், பைரவி, உன்னதம் தந்தே உயர்த்துவளே!       8

--> /மனத்தைத் துளைந்ததனை உழவைப்பாள்/
/மனத்தைத் துளைந்து/  = ?

உயர்த்துவள் வாசவி உத்தண்டி, வாராகி உத்தமியாள்
வியர்த்தம் எதுவும் விளையும் முனமதை வேரருப்பாள்
அயர்த்திடும் போதஸ்வ ரூடா  உடனே  அருள்புரிவாள்
முயற்சிகள் நன்றாய் முடிப்பாள் வராக முகத்தினளே!               9

--> /வேரருப்பாள்
Typo?

--> /அயர்த்திடும் போதஸ்வ ரூடா/
அஸ்வரூடா? அஸ்வாரூடா?

Subbaiyar Ramasami

unread,
Jun 18, 2017, 6:22:20 PM6/18/17
to santhav...@googlegroups.com
 /காக்கின்றவள்
"காக்கிறவள்" என்பது இலக்கணப்படி சரியா? அப்படியெனில், ஏன் அதனைப் பிரயோகிக்கவில்லை?-  
ஓசைக்காக
எதுகையோடு இந்த ன்ற ஓசையைக் கூட்டுகிறது.  
இரண்டு சொற்களும் இலக்கணப்படி சரிதான்.

--> /நாநிலத்தே
Typo?   ஆமாம். தட்டச்சுப் பிழை நானிலம் என்றுதான் இருக்கவேண்டும். சுட்டியதற்கு நன்றி.  

/மனத்தைத் துளைந்ததனை உழவைப்பாள்/
/மனத்தைத் துளைந்து/  = ? தண்ணீருக்குள்  நெளிந்து வளைந்து செல்வதைத் துளைந்து என்று சொல்வார்கள். அதைப்போல கட்டியான மனத்தை மிருதுவாக்கித் துளைந்து உழுவதற்குப்பக்குவமாகச்செய்தி அப்படிப்பக்குவப்பட்ட மனத்தில் சாதகனை உழவைக்கிறாள் என்று பொருள். துளைத்து என்றால்  ஒரு பொந்து விழுமே தவிர நிலம் பக்குவப்படாது

Subbaiyar Ramasami

unread,
Jun 18, 2017, 6:25:41 PM6/18/17
to santhav...@googlegroups.com
அஸ்வாரூடா சரிதான். விஸ்வம் +உற்பத்தி- விஸ்வோற்பத்தி என்பது போல. திரு. கோபால் இதனை விளக்குக!
-> /அயர்த்திடும் போதஸ்வ ரூடா/
வேரறுப்பாள் என்றிருக்கவேண்டும்

Subbaiyar Ramasami

unread,
Jun 22, 2017, 9:58:22 PM6/22/17
to santhav...@googlegroups.com
 வாரம் ஒருமுறை என்பது சற்று நீண்ட இடைவெளியாகத் தெரிவதால் இனி இர்ண்டு நாள்களுக்கு ஒரு முறை மூன்று பாடல்களாக இடுகிறேன்.
11-12-13

அவளே தளபதி ஆவாள் அவளே அணித்தலைவி
அவளே அமர்க்களத் தேறிப் பகையை அதிரவைப்பாள்
அவளே பிரத்யக்ஷ  வாராகி, தேவிக் கணுக்கமவள்
அவளே லலிதை அணிநகர் வாயில் அமர்பவளே!              11

அமர்க்களம் உற்றிடில் ஆயிரம் ஆயிரம் ஆகநிற்பாள்
தமர்க்கு நலஞ்செயும் தன்மையி னாளருட் சாதனையாள்
எமனவன் முன்வரின் எம்மவன் என்றே எதிர்நிற்பவள்
எமக்கினி வேறெது வேண்டும் நம் அன்னை இருக்கையிலே!   12

இருக்கும் பொழுதும் இனிய பொழுதாய் இயங்கிடவே
உருக்க முடனே உளத்தினில் வாராகி ஓங்கவிடு
தருக்கமே இல்லை சலனங்கள் இல்லை சரிவருநல்
பெருக்கம் நிறையும் பிணியிலை என்றைக்கும் பீடுகளே!       13

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 22, 2017, 10:35:39 PM6/22/17
to சந்தவசந்தம்
அற்புதம்!

அனந்த்

Saranya Gurumurthy

unread,
Jun 22, 2017, 10:37:50 PM6/22/17
to santhav...@googlegroups.com
வணக்கம். நன்று. ஒரு ஐயம். 
/எமனவன் முன்வரின் எம்மவன் என்றே எதிர்நிற்பவள்
/

எதிர்நிற்பவள் - இந்த இடம் மட்டும் கனிச்சீர் வருகிறதே. அல்லது எதிர்நிற்பாள் என்று வருமா? 

சரண்யா. 

Subbaiyar Ramasami

unread,
Jun 22, 2017, 11:52:53 PM6/22/17
to santhav...@googlegroups.com
கட்டளைக் கலித்துறையில் அடியின் கடைசிச்சீரில் எப்பொழுதாவது  வரலாம்.   
எ.கா.     தலையலங்  காரம் புறப்பட்டதே.

கடைசிச்சீர் விளங்காய்ச் சீராக வரவேண்டும். எதிர்நிற்பாள் என்றிருந்தால் புளிமாங்காய்ச்சீராகிவிடும். அப்படி வரக்கூடாது

இலந்தை

--

Saranya Gurumurthy

unread,
Jun 23, 2017, 12:03:19 AM6/23/17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா. புரிந்தது. காய்ச்சீர்கள், வெண்டளை முதலியவற்றைக் கவனித்துள்ளேன். விளங்காய்ச் சீர் தான் வரவேண்டும் என்பதை இன்றுதான் அறிந்தேன். நன்றி.

சரண்யா.
--
Regards,
Saranya

Siva Siva

unread,
Jun 23, 2017, 9:03:40 AM6/23/17
to santhavasantham
2017-06-22 21:58 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
 வாரம் ஒருமுறை என்பது சற்று நீண்ட இடைவெளியாகத் தெரிவதால் இனி இர்ண்டு நாள்களுக்கு ஒரு முறை மூன்று பாடல்களாக இடுகிறேன்.
11-12-13

அவளே தளபதி ஆவாள் அவளே அணித்தலைவி
அவளே அமர்க்களத் தேறிப் பகையை அதிரவைப்பாள்
அவளே பிரத்யக்ஷ  வாராகி, தேவிக் கணுக்கமவள்
அவளே லலிதை அணிநகர் வாயில் அமர்பவளே!              11

அமர்க்களம் உற்றிடில் ஆயிரம் ஆயிரம் ஆகநிற்பாள்
தமர்க்கு நலஞ்செயும் தன்மையி னாளருட் சாதனையாள்
எமனவன் முன்வரின் எம்மவன் என்றே எதிர்நிற்பவள்
எமக்கினி வேறெது வேண்டும் நம் அன்னை இருக்கையிலே!   12

-> / எம்மவன் /
"எம்தமர்" என்பதும் பொருந்தக்கூடும்.

இருக்கும் பொழுதும் இனிய பொழுதாய் இயங்கிடவே
உருக்க முடனே உளத்தினில் வாராகி ஓங்கவிடு
தருக்கமே இல்லை சலனங்கள் இல்லை சரிவருநல்
பெருக்கம் நிறையும் பிணியிலை என்றைக்கும் பீடுகளே!       13

--> /தருக்கமே இல்லை
"தருக்கமும் இல்லை" என்பதும் பொருந்தக்கூடும்.

Subbaiyar Ramasami

unread,
Jun 23, 2017, 9:44:07 AM6/23/17
to santhav...@googlegroups.com
எம்தமர்" என்பதும் பொருந்தக்கூடும்.

உண்மைதான். ஆண்பெண் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் பொருந்தும். எம்மவன் என்றால் ஆணை மட்டும்தான் குறிக்கும். மாற்றிக்கொள்கிறேன்.

தருக்கமும் இல்லை" என்பதும் பொருந்தக்கூடும்.  தருக்கங்கள் என்பது இன்னும் பொருந்தும் அடுத்துச் சலனங்கள் என்று வருவதால் ஓசை சிறக்கும்

நன்றி

இலந்தை

--

Vis Gop

unread,
Jun 23, 2017, 9:55:14 AM6/23/17
to santhav...@googlegroups.com
மன்னிக்கவும். இப்போதுதான் இதைப் பார்த்தேன்.
அஸ்வாரூடா என்பதே சரி. அஸ்வ .. குதிரை. பின்பாதி 'ஆருஹ்' (ஏறு) என்கிற வேரிலிருந்து வருகிறது. அஸ்வ+ஆ .. அஸ்வா.
பணிவுடன் கோபால்.

Sent from my iPad

Subbaiyar Ramasami

unread,
Jun 23, 2017, 11:09:58 AM6/23/17
to santhav...@googlegroups.com
அஸ்வாரூடா என்பதுதான் சரியென்றாலும் இலக்கணங் கருதி   அஸ்வரூடா என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன். poetic license.
ilanthai

Subbaiyar Ramasami

unread,
Jun 24, 2017, 10:23:14 AM6/24/17
to santhav...@googlegroups.com
மேற்கொண்டு ஆய்வு செய்தபோது அஸ்வாரூடா தனித்தேவதையென்று வாராகியோடு சேர்த்து எண்ணக்கூடாது என்றும் குதிரைமீதில் ஊரும் வாராகி வேறு என்றும் சொல்லப்படுகிறது. எனவே  அந்த டியை இப்படி மாற்றுகிறேன்

அயர்த்திடும் போதரிக் னீயாள்  உடனே அருள்புரிவாள்

அரிக்னீ  என்பது வாராகியின் நாமங்களில் ஒன்று

On Sat, Jun 24, 2017 at 8:21 AM, Mail Delivery Subsystem <mailer...@google.com> wrote:
Error Icon

Message not delivered

There was a problem delivering your message to santhavasantham+msgappr@googlegroups.com. See the technical details below.
The response was:

Could not validate your confirmation code.

Final-Recipient: rfc822; santhavasantham+msgappr@googlegroups.com
Action: failed
Status: 5.0.0
Diagnostic-Code: smtp; Could not validate your confirmation code.
Last-Attempt-Date: Sat, 24 Jun 2017 07:21:41 -0700 (PDT)

---------- Forwarded message ----------
From: Subbaiyar Ramasami <kavim...@gmail.com>
To: "சந்தவசந்தம்" <santhavasan...@googlegroups.com>
Cc: 
Bcc: 
Date: Sat, 24 Jun 2017 08:21:40 -0600
Subject: Re: வாராகி அந்தாதி
மேற்கொண்டு ஆய்வு செய்தபோது அஸ்வாரூடா தனித்தேவதையென்று வாராகியோடு சேர்த்து
எண்ணக்கூடாது என்றும் குதிரைமீதில் ஊரும் வாராகி வேறு என்றும்
சொல்லப்படுகிறது. எனவே  அந்த டியை இப்படி மாற்றுகிறேன்

அயர்த்திடும் போதரிக் னீயாள்  உடனே அருள்புரிவாள்

அரிக்னீ  என்பது வாராகியின் நாமங்களில் ஒன்று

2017-06-24 8:14 GMT-06:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

> மேற்கொண்டு ஆய்வு செய்தபோது அஸ்வாரூடா தனித்தேவதையென்று வாராகியோடு சேர்த்து
> எண்ணக்கூடாது என்றும் குதிரைமீதில் ஊரும் வாராகி வேறு என்றும்
> சொல்லப்படுகிறது. எனவே  அந்த டியை இப்படி மாற்றுகிறேன்
>
> அயர்த்திடும் போதரிக் னீயாள்  உடனே அருள்புரிவாள்
>
> அரிக்னீ  என்பது வாராகியின் நாமங்களில் ஒன்று
>
> 2017-06-24 8:14 GMT-06:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
>
>> இன்றிலிருந்து வாராகியின் ஆஷாட நவராத்திரி தொடங்குகிறது.  இதில் முதல் ஐந்து
>> நாட்கள் அநுக்ரக நாள்கள். இவ்வைந்து நாட்களும் தொடர்ந்து வாராகி அந்தாதியில்
>> சில பாடல்களை இடுகிறேன்.
>>
>>
>> பீடு பெருக்கும், பிணிக்குமிவ் வாழ்வின் பிடியகன்றே
>> கூடு விழுந்திடக் கூட்டினில் மீண்டும் குறுகிவிடா
>> வீடு கிடைக்கும், விழைவுடன் வாராகி மெல்லியலின்
>> ஈடறி யாத  இணையடி போற்ற எழுமின்களே             14
>>
>>
>> மின்னலை ஏவி விளையாடு கின்றவள் வித்தையிலே
>> முன்னிலை சேர்க்கும

Subbaiyar Ramasami

unread,
Jun 24, 2017, 10:24:26 AM6/24/17
to santhav...@googlegroups.com

இன்றிலிருந்து வாராகியின் ஆஷாட நவராத்திரி தொடங்குகிறது.  இதில் முதல் ஐந்து நாட்கள் அநுக்ரக நாள்கள். இவ்வைந்து நாட்களும் தொடர்ந்து வாராகி அந்தாதியில் சில பாடல்களை இடுகிறேன்.

பீடு பெருக்கும்பிணிக்குமிவ் வாழ்வின் பிடியகன்றே

கூடு விழுந்திடக் கூட்டினில் மீண்டும் குறுகிவிடா
வீடு கிடைக்கும்விழைவுடன் வாராகி மெல்லியலின்

ஈடறி யாத  இணையடி போற்ற எழுமின்களே             14

மின்னலை ஏவி விளையாடு கின்றவள் வித்தையிலே

முன்னிலை சேர்க்கும் முதல்வி அடுபொறி மோதல்களின் 
புன்னிலை தாழ்த்திப் பொருள்நிலை காட்டிப் புனிதநெறிக் 
கன்னலை ஊட்டிக் கருத்தினில் நிற்பாள் கனிவுடனே!               

2017-06-24 8:14 GMT-06:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
இன்றிலிருந்து வாராகியின் ஆஷாட நவராத்திரி தொடங்குகிறது.  இதில் முதல் ஐந்து நாட்கள் அநுக்ரக நாள்கள். இவ்வைந்து நாட்களும் தொடர்ந்து வாராகி அந்தாதியில் சில பாடல்களை இடுகிறேன்.

பீடு பெருக்கும்பிணிக்குமிவ் வாழ்வின் பிடியகன்றே

கூடு விழுந்திடக் கூட்டினில் மீண்டும் குறுகிவிடா
வீடு கிடைக்கும்விழைவுடன் வாராகி மெல்லியலின்

ஈடறி யாத  இணையடி போற்ற எழுமின்களே             14

மின்னலை ஏவி விளையாடு கின்றவள் வித்தையிலே

முன்னிலை சேர்க்கும் முதல்வி அடுபொறி மோதல்களின் 
புன்னிலை தாழ்த்திப் பொருள்நிலை காட்டிப் புனிதநெறிக் 
கன்னலை ஊட்டிக் கருத்தினில் நிற்பாள் கனிவுடனே!               

2017-06-24 8:12 GMT-06:00 Vis Gop <vis...@gmail.com>:

நன்று. அரிக்னீ என்றால் விரோதியை அழிப்பவள் என்று பொருள். தங்களுக்குத் தெ ரி ந் திரு க்கும்.

திருத்திய மடல் என் தனி அஞ்சலுக்கு வந்திருக்கிறது. SVக்கு உரியதானால் மீண்டும் அனுப்ப வேண்டும்.

பணிவுடன் கோபால்.

On Jun 24, 2017 7:09 PM, "Subbaiyar Ramasami" <kavim...@gmail.com> wrote:
மேற்கொண்டு ஆய்வு செய்தபோது அஸ்வாரூடா தனித்தேவதையென்று வாராகியோடு சேர்த்து எண்ணக்கூடாது என்றும் குதிரைமீதில் ஊரும் வாராகி வேறு என்றும் சொல்லப்படுகிறது. எனவே  அந்த டியை இப்படி மாற்றுகிறேன்

அயர்த்திடும் போதரிக் னீயாள்  உடனே அருள்புரிவாள்

அரிக்னீ  என்பது வாராகியின் நாமங்களில் ஒன்று

2017-06-24 0:04 GMT-06:00 Vis Gop <vis...@gmail.com>:
அயர்த்திடும் போதஸ்வ ரூடா  உடனே  அருள்புரிவாள்

"அயர்த்திடப் போதஸ்வ ரூபா உடனே  அருள்புரிவாள்
" பொருந்த வாய்ப்புண்டா?

Siva Siva

unread,
Jun 24, 2017, 10:29:27 AM6/24/17
to santhavasantham
Posting this message in the original thread:

2017-06-24 10:23 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
மேற்கொண்டு ஆய்வு செய்தபோது அஸ்வாரூடா தனித்தேவதையென்று வாராகியோடு சேர்த்து எண்ணக்கூடாது என்றும் குதிரைமீதில் ஊரும் வாராகி வேறு என்றும் சொல்லப்படுகிறது. எனவே  அந்த டியை இப்படி மாற்றுகிறேன்

அயர்த்திடும் போதரிக் னீயாள்  உடனே அருள்புரிவாள்

அரிக்னீ  என்பது வாராகியின் நாமங்களில் ஒன்று
-------------

Subbaiyar Ramasami

unread,
Jun 25, 2017, 9:10:46 AM6/25/17
to santhav...@googlegroups.com

இனிவரும் 21 பாடல்கள் மந்திர எழுத்துகள் கொண்டிலங்கும். 

கனிவுடன் ஐம்கிளௌம் ஐம்மெனும் மந்திரக் காப்பினையே
தனியிருந் தேசரி யான சமயம் தனில்நினைந்தே
இனிதே நமோவென ஏத்திப் பகவதி இணையடிகள்
மனத்தில் இருத்த வழங்குவள் வார்த்தாளி வார்த்தைகளே!!      16

வார்த்தாளி என்று வழங்கும் பெயரின் வகைப்படியே
வார்த்தைகள் ஆள வகுப்பாள் எதிரியை வாதத்திலே
வார்த்தை தடுமாற வைப்பாள், அடியர் மயக்கிருளைத்
தூர்த்தருள் செய்வாள், தொழுதென்றும் சொல்லுக தோத்திரமே!   17

தோத்திரம் செய்து தொழுது பணியத் துணைநிற்பவள்
யாத்திரைப் போதினில் வாராகி வாராகி அச்சமின்றிக்
காத்தருள்என்றிடக் காக்கும் வழித்துணைக் காரியவள்
ஏத்திப் புகழ மகிழ்வள் வராக எழில்முகியே!                   18        

வராக முகியே, வராக முகியே மகிழ்ந்திசைக்கும்
இராகம் அறியேன், எனினும் உருகி இலகுமனம்
பராவி நெகிழ்ந்து பரவசத் தாழ்ந்து பணியுமிந்தச்
சராசரி என்னையும் தாங்குகஎன்பேன் தயைபுரியே!           19   

புரியும் செயல்கள் புனிதப் படவே புரிகுவையேல்
அரியள் அந் தேயந் தினியாள் அருள்வாள், அகம்நெகிழ்ந்தே
உருக, ”வருந்தேல் இருந்தினிக் காப்பேன் உறுதியென்பாள்
பெருமைகள் யாவும் பெரிதும் கடந்த பெரியவளே!             20

Siva Siva

unread,
Jun 25, 2017, 12:21:09 PM6/25/17
to santhavasantham
2017-06-25 9:10 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

இனிவரும் 21 பாடல்கள் மந்திர எழுத்துகள் கொண்டிலங்கும். 

கனிவுடன் ஐம்கிளௌம் ஐம்மெனும் மந்திரக் காப்பினையே
தனியிருந் தேசரி யான சமயம் தனில்நினைந்தே
இனிதே நமோவென ஏத்திப் பகவதி இணையடிகள்
மனத்தில் இருத்த வழங்குவள் வார்த்தாளி வார்த்தைகளே!!      16

வார்த்தாளி என்று வழங்கும் பெயரின் வகைப்படியே
வார்த்தைகள் ஆள வகுப்பாள் எதிரியை வாதத்திலே
வார்த்தை தடுமாற வைப்பாள், அடியர் மயக்கிருளைத்
தூர்த்தருள் செய்வாள், தொழுதென்றும் சொல்லுக தோத்திரமே!   17

-->  /வாதத்திலே/
வாதினிலே என்பது அதே பொருள் தருமா?

தோத்திரம் செய்து தொழுது பணியத் துணைநிற்பவள்
யாத்திரைப் போதினில் வாராகி வாராகி அச்சமின்றிக்
காத்தருள்என்றிடக் காக்கும் வழித்துணைக் காரியவள்
ஏத்திப் புகழ மகிழ்வள் வராக எழில்முகியே!                   18        

வராக முகியே, வராக முகியே மகிழ்ந்திசைக்கும்
இராகம் அறியேன், எனினும் உருகி இலகுமனம்
பராவி நெகிழ்ந்து பரவசத் தாழ்ந்து பணியுமிந்தச்
சராசரி என்னையும் தாங்குகஎன்பேன் தயைபுரியே!           19   

--> /இலகுமனம்/  = ?

புரியும் செயல்கள் புனிதப் படவே புரிகுவையேல்
அரியள் அந் தேயந் தினியாள் அருள்வாள், அகம்நெகிழ்ந்தே
உருக, ”வருந்தேல் இருந்தினிக் காப்பேன் உறுதியென்பாள்
பெருமைகள் யாவும் பெரிதும் கடந்த பெரியவளே!             20

--> /பெருமைகள் யாவும் பெரிதும் கடந்த பெரியவளே/  = ?

Subbaiyar Ramasami

unread,
Jun 25, 2017, 4:09:10 PM6/25/17
to santhav...@googlegroups.com
இலகுதல்- ஒளிவிடுதல், விளங்குதல்

பெருமைகள் என்று சொல்லப்படுகிற பெருமைகள் யாவும் கடந்த பெரியவள் என்று பொருள்

பெரிதினும் பெரிது.
வாதினிலே சரியாக இருக்கும். 

Siva Siva

unread,
Jun 25, 2017, 10:10:28 PM6/25/17
to santhavasantham
/இலகுமனம்/
ஒருவேளை "இளகுமனம்" என்றீர்களோ என்று எண்ணினேன்.
"இலகு" - மனத்தின் கனம் இறங்கியது என்றும் பொருள்கொள்ளலாமோ என்றும் எண்ணினேன்.

Thanks for the clarification.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 25, 2017, 10:40:17 PM6/25/17
to சந்தவசந்தம்

வராக முகியேவராக முகியே மகிழ்ந்திசைக்கும்
இராகம் அறியேன்எனினும் உருகி இலகுமனம்
பராவி நெகிழ்ந்து பரவசத் தாழ்ந்து பணியுமிந்தச்
சராசரி என்னையும் தாங்குக” என்பேன் தயைபுரியே!           19   

அவள் தயை புரியப் படிப்போரை உருகவைக்க இவ்வரிகளே போதும். 

அனந்த்

Subbaiyar Ramasami

unread,
Jun 26, 2017, 1:14:44 AM6/26/17
to santhav...@googlegroups.com

பெரிய செயல்கள் பெருமை கொடுத்திடப் பீடுதரும்
அரிய செயல்கள் எளிதாய் அடைந்திட ஐம்நமஹ
உரிய முறையில் உதவிடும், தீமை ஒழிந்திடவே
தரியலர் கண்டஞ்சம் பேகரம் பற்றுவள் ஜம்பினியே!           21

இனிமை
, கடுமை இரண்டும் கலந்த எரிகணையே
மனமோ கவலை விழுஹே துவினை மறித்தருள்வாய்
முனிவை மறத்தில் முகிழ்க்கும் பெருந்திறல் மோஹினியே
இனியிவ் வுலகில் அமைதி நிலவ இனிதருளே!                     22

அருள்தரும் ஹஸ்தம் அளிகுணம் காட்டும் அறமலவோ
அரும்பெரும் பேறுகள் அள்ளிக் கொடுக்கும் அகமலவோ
கிரிசக் கரத்தில் கிடுகிடு வென்றே கெலிப்பவளே
திரிமனஸ் தம்பினி  சர்வ உலகும் திரிபவளே!                     23

பவளக் கொடியே, பராபட்ட ரீகா படைத்தலைவி
துவள விடாமல் தொழுபவர் வாழத் தொடுப்பவளே
குவளை நிறத்தாய் கொடுமனத் துஷ்டர் கொடுக்கறுத்தே
புவனம் புரக்கும் புனிதப் பெரும்புகழ்ப் பூரணியே!               24

 அணிசேர் அரக்கர் அலறி நடுங்கி அவதியுறப்

பணிசெய் படைகளைப் பார்வையொன் றாலே பகடையெனத்
துணிவாய் இயங்கச் சுடர்ப்பிர காசம் தொடுப்பவளே
பிணிசேர் விசுக்ரன் பெரும்படை மாய்த்த பெருந்திறலே!        25

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 26, 2017, 11:41:01 AM6/26/17
to சந்தவசந்தம்
”பகடையெனத் துணிவாய் இயங்க..” - இங்கு, பகடை என்பதை எவ்வாறு பொருள் கொள்ள வேண்டும்?

அனந்த்

Vis Gop

unread,
Jun 26, 2017, 12:29:11 PM6/26/17
to santhav...@googlegroups.com

எனக்கோர் ஐயம். நம: என்ற வடமொழிச் சொல் தமிழில் நம என்றுதானே வரும்?  விஸர்கம் எனப்படும் : , ஹ என்ற ஒரு தனி எழுத்தாகக் கருதப் படுவதுண்டா?

பணிவுடன் கோபால்.

Subbaiyar Ramasami

unread,
Jun 26, 2017, 1:39:23 PM6/26/17
to santhav...@googlegroups.com
அவள்து கண்ணசைவில்  பகடைக்காய்களை நகர்த்துவது போல படைகள் இயங்கும் படி நகர்த்துகிறாள். அப்படி இயங்கும் படைகள் அவள் கண் பார்வை  பட்டதாலே பிரகாசம் பெறுகின்றன என்று பொருள். இதில் மூல மந்திர எழுத்துகள் அடங்கியுள்ளன.

Subbaiyar Ramasami

unread,
Jun 26, 2017, 1:42:35 PM6/26/17
to santhav...@googlegroups.com
மூலமந்திரத்தில் ஐந்து இடங்களில் நம: வரும் . அதனால்தான்  ஒலிக்குறிப்பும் எண்ணிக்கையும் சரியாக வருவதற்காக ஐம்நமஹ என்று போட்டேன்.
நம: என்பதை நமஹ என்றுதான் எழுதவேண்டும். இங்கே ஹ அலகுபெறும்.  இதுவும் கவிஞனுக்குக்கொடுக்கப்பட்டுள்ள அனுமதி. 

Siva Siva

unread,
Jun 26, 2017, 8:47:29 PM6/26/17
to santhavasantham
2017-06-26 1:14 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

பெரிய செயல்கள் பெருமை கொடுத்திடப் பீடுதரும்
அரிய செயல்கள் எளிதாய் அடைந்திட ஐம்நமஹ
உரிய முறையில் உதவிடும், தீமை ஒழிந்திடவே
தரியலர் கண்டஞ்சம் பேகரம் பற்றுவள் ஜம்பினியே!           21

இனிமை
, கடுமை இரண்டும் கலந்த எரிகணையே
மனமோ கவலை விழுஹே துவினை மறித்தருள்வாய்
முனிவை மறத்தில் முகிழ்க்கும் பெருந்திறல் மோஹினியே
இனியிவ் வுலகில் அமைதி நிலவ இனிதருளே!                     22

அருள்தரும் ஹஸ்தம் அளிகுணம் காட்டும் அறமலவோ
அரும்பெரும் பேறுகள் அள்ளிக் கொடுக்கும் அகமலவோ
கிரிசக் கரத்தில் கிடுகிடு வென்றே கெலிப்பவளே
திரிமனஸ் தம்பினி  சர்வ உலகும் திரிபவளே!                     23

--> "அலவோ"
ஒருமையில் அன்றோ என்று வரவேண்டுமோ?

பவளக் கொடியே, பராபட்ட ரீகா படைத்தலைவி
துவள விடாமல் தொழுபவர் வாழத் தொடுப்பவளே
குவளை நிறத்தாய் கொடுமனத் துஷ்டர் கொடுக்கறுத்தே
புவனம் புரக்கும் புனிதப் பெரும்புகழ்ப் பூரணியே!               24

 அணிசேர் அரக்கர் அலறி நடுங்கி அவதியுறப்

பணிசெய் படைகளைப் பார்வையொன் றாலே பகடையெனத்
துணிவாய் இயங்கச் சுடர்ப்பிர காசம் தொடுப்பவளே
பிணிசேர் விசுக்ரன் பெரும்படை மாய்த்த பெருந்திறலே!        25

Subbaiyar Ramasami

unread,
Jun 27, 2017, 12:23:01 AM6/27/17
to santhav...@googlegroups.com
அல்லவோ என்பது அலவோ என்று சுருங்கியிருக்கிறது

--

Vis Gop

unread,
Jun 27, 2017, 3:08:53 AM6/27/17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
கோபால்.

Subbaiyar Ramasami

unread,
Jun 27, 2017, 8:33:19 AM6/27/17
to santhav...@googlegroups.com

திறலே, திறல்களின் சேர்தொகுப் பேபெருஞ் சீற்றமுளாய்
மறம்சேர் விசுக்ரன் வலிமிகு துஷ்டன் மடமடென
அறப்போர் விடுத்தே அமர்புரி போதில் அவனையுடன்
இறக்கப் புரிந்தாய், இமையவர் போற்றி இசைத்தனரே!               26

இசைத்தனர் தேவர், “எமைக்காத் தவளே, எதிரிலியே
திசைத்தளம் எங்கும் திரிதரு பஞ்சமித் தெய்வதமே
தசைத்திரள் கொள்தண்ட நாதா, அரிக்னீ, தயவுடையோய்
புசித்திடும் பேய்க்கும் விடாத பசிப்பிணி போக்கினையே!       27

போக்கியம் நல்கும் புரந்தரி, போத்ரிணி, போற்றுகிறோம்
பாக்கியம் பெற்றனம் நாமெனப் பாரில் பரவுகிறார்
ஆக்கினை செய்வாய் அதட்டிப் பரிவுடன் ஆதரிப்பாய்
காக்கிறாய், சர்வமும், வேறெமக் கேதும் கதியிலையே!        28

கதியெனத் தேவர் கழல்பணிந்  தாரம்மை காட்சிதந்தாள்
துதிசெய ஏற்புள ஆஷாட மாதம் துலங்குகிற
விதிநவ ராத்திரி வேண்டிப் பரவி விழவெடுக்கச்
சதிவரு சர்வ சழக்குகள் நீக்குவள் சத்தியமே!                 29

சத்திய வாக்குத் தருவாள் அதற்குத் தமைத்தகுந்த
உத்தம னாக உயர்த்துதல் வேண்டும், உனதுசித்தம்
நித்தியம் நோக்கி நிகழ்த்துதல் வேண்டும், நினைவவளைப்
பத்திர மாகப் பதித்திடல் வேண்டும் பலித்திடவே!             30

Siva Siva

unread,
Jun 27, 2017, 8:47:16 AM6/27/17
to santhavasantham
2017-06-27 8:33 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

திறலே, திறல்களின் சேர்தொகுப் பேபெருஞ் சீற்றமுளாய்
மறம்சேர் விசுக்ரன் வலிமிகு துஷ்டன் மடமடென
அறப்போர் விடுத்தே அமர்புரி போதில் அவனையுடன்
இறக்கப் புரிந்தாய், இமையவர் போற்றி இசைத்தனரே!               26

இசைத்தனர் தேவர், “எமைக்காத் தவளே, எதிரிலியே
திசைத்தளம் எங்கும் திரிதரு பஞ்சமித் தெய்வதமே
தசைத்திரள் கொள்தண்ட நாதா, அரிக்னீ, தயவுடையோய்
புசித்திடும் பேய்க்கும் விடாத பசிப்பிணி போக்கினையே!       27

--> /பஞ்சமித் தெய்வதமே/  = ?

/நாதா/ = ?

Saranya Gurumurthy

unread,
Jun 27, 2017, 9:32:21 AM6/27/17
to santhav...@googlegroups.com
பஞ்சமி என்பது வாராகிக்குரிய சிறப்புப் பெயர் என நினைக்கிறேன். பஞ்சமி திதி சிறப்பு என்று கேள்விபட்டுள்ளேன். 

தண்டநாதை, தண்டநாதா, தண்டினி போன்றவை வாராகியின் மற்ற பெயர்கள்.

சரண்யா. 

Subbaiyar Ramasami

unread,
Jun 27, 2017, 10:36:24 AM6/27/17
to santhav...@googlegroups.com
சரண்யா விடைகொடுத்துவிட்டார்,

தெய்வம் தெய்வதம்  இரண்டும் பயன்பாட்டில் உள்ளவைதான்.

Subbaiyar Ramasami

unread,
Jun 27, 2017, 11:44:27 PM6/27/17
to santhav...@googlegroups.com

பலித்திடும் சித்தி படைத்திடும் மந்திரம் பல்முறையே
ஒலித்திட வேண்டும் உபாசனைப் பேறதன் உன்னதமே!
சலித்தெது நல்ல ததைப்பெறும் தன்மைகள் தாமருள்வாய்
சிலிர்க்கும் விஷுக்திக்கு மேலுயர் ஆக்ஞையின் தேவதையே!  31

தேவதை உன்றன் திருமுகம் ஞானத் தெளிவளிக்கும்
ஆவத னைத்தும் அறமே நினைக்கதி யாயடைந்தால்
காவலில் மிக்கநின் இராஜ்ஜியம் எஃகின் கனவுறுதி
மேவிடும், எல்லாம் விசித்திரம், வாராகி வித்தகியே!                32

வித்தக மாய்ப்பல அஸ்த்திரம் கைகளில் வீற்றிருக்க
எத்தனை லாகவ மாக அவற்றை இயக்குகிறாய்
மெத்தவே தம்பனம் செய்தே எதிரிகள் வீழ்த்துகிறாய்
அத்தகு சாதனை அலற அடிக்கும்  அவர்களையே!             33

களையைக் களைந்து கதிரை வளர்க்கும் கதிப்பொருளே
களைப்பே இலாது களத்தே பொருதும் கடுந்திறலே
விளைத்த செயலில் விதிர்த்த  படைகள் வியப்படைந்தே
வளைய வருவார் குருகுரு என்றே வணங்குவரே!             34

வணங்குவர் தேவர் சகல உயிர்கள் மனமுணர்ந்தே,
இணங்குவர் சீக்கிரம் பாதம் தொழுதிட ஏதிலர்கள்,
பிணங்குவர் தம்மையும் வஸ்யம் புரிந்திடும் பெற்றியினைச்
சுணங்குதல் இன்றி எனக்களிப் பாயருட் தூயவளே!            35

Saranya Gurumurthy

unread,
Jun 28, 2017, 12:30:38 AM6/28/17
to santhav...@googlegroups.com
அற்புதம்! ஆனந்தம்!!

// சிலிர்க்கும் விஷுக்திக்கு மேலுயர் ஆக்ஞையின் தேவதையே!  31

விஷுக்திக்கு = விஷுத்திக்கு? 

சரண்யா. 

Vis Gop

unread,
Jun 28, 2017, 1:04:26 AM6/28/17
to santhav...@googlegroups.com
किरिचक्र – रथारुढ – दण्डनाथा – पुरस्कृता
லலிதா சஹஸ்ர நாமம்.
கோபால்.

Vis Gop

unread,
Jun 28, 2017, 1:10:28 AM6/28/17
to santhav...@googlegroups.com
விசுத்தி என்று நினைக்கிறேன். (विशुद्धि)  [not विषुध्धि]
கோபால்.

Vis Gop

unread,
Jun 28, 2017, 1:17:15 AM6/28/17
to santhav...@googlegroups.com
காவலில் மிக்கநின் இராஜ்ஜியம் எஃகின் கனவுறுதி
 இராஜ்ஜியம் என்பதில் 'இ' யை விட்டுப் படிக்கவேண்டுமோ?
கோபால்.

2017-06-28 9:14 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
. . .

Subbaiyar Ramasami

unread,
Jun 28, 2017, 8:36:30 AM6/28/17
to santhav...@googlegroups.com
ஆமாம். ஒரு மந்திரச்சொல்லைப் போட எனக்கு அந்த ஜி  தேவைப்படுகிறது
இலந்தை

--

Subbaiyar Ramasami

unread,
Jun 28, 2017, 8:37:15 AM6/28/17
to santhav...@googlegroups.com
விசுத்தி என்று மாற்றிவிடுகிறேன்

Siva Siva

unread,
Jun 28, 2017, 8:44:48 AM6/28/17
to santhavasantham
/காவலில் மிக்கநின் இராஜ்ஜியம்/
காவல் மலிநின் இராஜ்ஜியம் ?

2017-06-28 8:36 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
ஆமாம். ஒரு மந்திரச்சொல்லைப் போட எனக்கு அந்த ஜி  தேவைப்படுகிறது
இலந்தை

2017-06-27 23:17 GMT-06:00 Vis Gop <vis...@gmail.com>:
காவலில் மிக்கநின் இராஜ்ஜியம் எஃகின் கனவுறுதி
 இராஜ்ஜியம் என்பதில் 'இ' யை விட்டுப் படிக்கவேண்டுமோ?
கோபால்.

2017-06-28 9:14 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
. . .

தேவதை உன்றன் திருமுகம் ஞானத் தெளிவளிக்கும்
ஆவத னைத்தும் அறமே நினைக்கதி யாயடைந்தால்
காவலில் மிக்கநின் இராஜ்ஜியம் எஃகின் கனவுறுதி
மேவிடும், எல்லாம் விசித்திரம், வாராகி வித்தகியே!                32

--

Subbaiyar Ramasami

unread,
Jun 28, 2017, 9:44:15 AM6/28/17
to santhav...@googlegroups.com
காவல் மலி நின் இராஜ்ஜியம் நன்றாக இருக்கிறதே. அப்படியே மாற்றிவிடுகிறேன்

--

Subbaiyar Ramasami

unread,
Jun 28, 2017, 9:51:59 AM6/28/17
to santhav...@googlegroups.com
கோபால் இ  யை விட்டுப் படிக்கவேண்டுமோ என்று கேட்ட போது தளை தட்டுவதை நான் கவனிக்கவில்லை. பொதுவாக   இராஜ்ஜியம் என்பதைப் படிக்கும் போது  ராஜ்ஜியம் என்றுதான் படிப்போம். அதனால் என் காது தளைதட்டலை எடுத்துச்சொல்லவில்லை.  என்றாலும்  இலக்கணத்தில் இப்படி சொல்லுக்குமுன் வரும் இ, உ,   போன்றவற்றை விட்டுவிட்டு அலகிடவேண்டும் என்று சொல்லப்படவில்லை.  அதைச் சேர்த்தேதான் அலகிடுகிறார்கள். .  சிவசிவா காவல் மல்ந்த என்று சொன்ன பிறப்பாடுதான் அதைக் கவனித்தேன்.

கோபால் சிவசிவாவுக்கு   நன்றி. ஒரு பிழை தவிர்க்கப்பட்டிருக்கிறது.

Vis Gop

unread,
Jun 28, 2017, 11:44:30 AM6/28/17
to santhav...@googlegroups.com

On Jun 28, 2017 7:21 PM, "Subbaiyar Ramasami" <kavim...@gmail.com> wrote:
என் காது தளைதட்டலை எடுத்துச்சொல்லவில்லை.  

அருமை!
கோபால்.

Subbaiyar Ramasami

unread,
Jun 29, 2017, 9:10:14 AM6/29/17
to santhav...@googlegroups.com

தூய மனத்துடன் ஐம்கிளௌம் இட்டகம் தூண்டிவிடின்
மாயம் விலகும், மனமருள் பெட்டக மாய் நெருக்கத்
தாயம் கிடைக்கும் டகடக வென்றே சடுதியிலே
நேயம் கொடுக்கும், நிறைந்திடும் வாழ்க்கையில் நிம்மதியே!   36

மதியைத் துலக்கி மனத்தினில் ஹூம்காரம் வந்தொலிக்க
விதியை மயக்கி அதுவிடும் அஸ்த்திரம் வீழ்ச்சியுற
அதிசயம் கூட்டி அருள்தரும் வாராகி அம்மையடி
துதிசெயப் பட்டெனச் சூழ்ந்திடும் ஞானம் சுடர்விடுமே!         37

சுடரே, திருவே, துகளரு கட்டிளஞ் சுந்தரியே
தொடராய் உனதருள் சூக்கும மந்திரம் சொல்பவர்க்கே
இடரே வராமல் எதிர்வந்து காக்கின்ற எம்மரசி
குடரில் பிறவாப் பெருநெறி கூட்டிடக் கோரிக்கையே!                38

கோரிக்கை வைத்தேன், குறிப்பெதிர் பார்த்துக் குறையிரந்தேன்
யாரிக்கை பற்றி அழைத்துன் அருகில் அமரவைப்பார்
சேரிக்கை கூப்பித் தெரிந்தவை  சொல்லிச் செபித்திடினும்
பாரிக்கை என்றனின் பக்தன்கை என்றே பரிந்துரையே!               39

உரைக்க உரைக்க உருப்பெறும் மந்திரம், உழைத்துமிக
அரைக்க அரைக்க அருமணம் சந்தனத் தாவதுபோல்
கரைக்கக் கரைக்கக் கரம்வரும் சித்தி, கடந்துபினும்
சுரக்கச் சுரக்கத் துரிய நிலைக்கவள் தூக்குவளே!               40

--

Vis Gop

unread,
Jun 29, 2017, 10:06:02 AM6/29/17
to santhav...@googlegroups.com

ஐம்கிளௌம் .....ஐம்கிலௌம்?

டகடக வென்றே ....தமகுணம் நீக்கிச் என்பது போல் இருந்தால் சிறக்குமோ?

குறையிரந்தேன்?

பணிவுடன் கோபால்.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
>> To post to this group, send email to santhav...@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To post to this group, send email to santhav...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 29, 2017, 3:01:49 PM6/29/17
to சந்தவசந்தம்
 ஐம்க்லௌம் (ग्लौं) என்று இருக்க வேண்டும்.

Subbaiyar Ramasami

unread,
Jun 29, 2017, 3:28:42 PM6/29/17
to santhav...@googlegroups.com
ஐகிலௌம் என்றே மாற்றிவிடுகிறேன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Jun 29, 2017, 3:31:46 PM6/29/17
to santhav...@googlegroups.com
தொடக்கம்

12. நோற்றார் பெருமை

இவறன்மை கண்டும் உடையாரை யாரும் 
குறையிரந்துங் குற்றவேல் செய்ப - பெரிதுந்தாம் 
முற்பகல் நோலாதார் நோற்றாரைப் பின்செல்லல் 
கற்பன்றே கல்லாமை யன்று

குறையிரத்தல் - தன் குறை தீர வேண்டுதல்.

நின்று வேண்டுதல்

Subbaiyar Ramasami

unread,
Jun 29, 2017, 4:34:16 PM6/29/17
to santhav...@googlegroups.com
மூல மந்திரத்தில் ட:ட:ட:ட:   என்று நான்கு ட: தொடர்ச்சியாக வரும். அவற்றைத்தான் இட்டகம்  பெட்டகம், டகடக என்பதில் மறைமுகமாகக் குறித்திருக்கிறேன்.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
>> To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
> To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

> For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 29, 2017, 5:45:43 PM6/29/17
to santhavasantham
2017-06-29 9:10 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

தூய மனத்துடன் ஐம்கிளௌம் இட்டகம் தூண்டிவிடின்
மாயம் விலகும், மனமருள் பெட்டக மாய் நெருக்கத்
தாயம் கிடைக்கும் டகடக வென்றே சடுதியிலே
நேயம் கொடுக்கும், நிறைந்திடும் வாழ்க்கையில் நிம்மதியே!   36

அடி 2-இல் 1-5 மோனை இன்மை? 

மதியைத் துலக்கி மனத்தினில் ஹூம்காரம் வந்தொலிக்க
விதியை மயக்கி அதுவிடும் அஸ்த்திரம் வீழ்ச்சியுற
அதிசயம் கூட்டி அருள்தரும் வாராகி அம்மையடி
துதிசெயப் பட்டெனச் சூழ்ந்திடும் ஞானம் சுடர்விடுமே!         37

சுடரே, திருவே, துகளரு கட்டிளஞ் சுந்தரியே
தொடராய் உனதருள் சூக்கும மந்திரம் சொல்பவர்க்கே
இடரே வராமல் எதிர்வந்து காக்கின்ற எம்மரசி
குடரில் பிறவாப் பெருநெறி கூட்டிடக் கோரிக்கையே!                38

--> /துகளரு
துகளறு?

--> /வராமல்/
"வாராமல்" என்றுதானே வரும்?

/எம்மரசி/
எம்மரசீ?

/கோரிக்கையே/
"கோருவனே" என்பதும் பொருந்துமோ?

கோரிக்கை வைத்தேன், குறிப்பெதிர் பார்த்துக் குறையிரந்தேன்
யாரிக்கை பற்றி அழைத்துன் அருகில் அமரவைப்பார்
சேரிக்கை கூப்பித் தெரிந்தவை  சொல்லிச் செபித்திடினும்
பாரிக்கை என்றனின் பக்தன்கை என்றே பரிந்துரையே!               39

உரைக்க உரைக்க உருப்பெறும் மந்திரம், உழைத்துமிக
அரைக்க அரைக்க அருமணம் சந்தனத் தாவதுபோல்
கரைக்கக் கரைக்கக் கரம்வரும் சித்தி, கடந்துபினும்
சுரக்கச் சுரக்கத் துரிய நிலைக்கவள் தூக்குவளே!               40

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 29, 2017, 7:56:57 PM6/29/17
to சந்தவசந்தம்
> அடி 2-இல் 1-5 மோனை இன்மை? 
மாயம்  விலகும்,  மனமருள்  பெட்டக  மாய்நெருக்கத் - என்று பிரிக்க வேண்டும்.

"கோருவனே" என்பதும் பொருந்துமோ? - அடுத்து வரும் பாடல் கோரிக்கை வைத்தேன் என்று தொடங்கி அதை ஒட்டிய அடி எதுகை அமைக்கப் பட்டுள்ளது.

உரைக்க உரைக்க உருப்பெறும் மந்திரம்உழைத்துமிக
அரைக்க அரைக்க அருமணம் சந்தனத் தாவதுபோல்
கரைக்கக் கரைக்கக் கரம்வரும் சித்திகடந்துபினும்
சுரக்கச் சுரக்கத் துரிய நிலைக்கவள் தூக்குவளே

மிக அருமை, குறிப்பாக இறுதி அடி முத்தாய்ப்பு.! 

அனந்த்

Subbaiyar Ramasami

unread,
Jun 29, 2017, 8:02:20 PM6/29/17
to santhav...@googlegroups.com
நன்கு கவனித்திருக்கிறீர்கள். நன்றி

மோனையில் பலவகை உண்டு.  வகையுளி வருகின்ற போது வருகின்ற  சொற்றொடரின் முதலெழுத்து மோனையெழுத்தாய் அமைவது உண்டு. 
அவ்வகையில் இங்கே மோனை அமைந்திருக்கிறது. இன்னொரு வகை மோனையில் சொல்லின் இடையில் மோனை எழுத்து உட்கார்ந்து  அந்த இடத்தில் தாளம் விழுந்தால் அது மோனையாகிவிடும். அப்படியொரு மோனையையும் இந்த அந்தாதியில் ஓரிடத்தில் அமைத்திருக்கிறேன். இதைப்பற்றிச் சந்தவசந்தத்தில் முன்னரே விவாதித்திருக்கிறோம். பசுபதி கூட அதைப்பற்றி  எழுதியுள்ளதாக நினைவு.
மாயம் விலகும்மனமருள் பெட்டக  மாய்நெருக்கத்
துகளறு   - அச்சுப்பிழை
வராமல் - பேச்சு வழக்கு
இடரேதும் வாரா தெதிர்நின்று   என்றும் மாற்றலாம். 
கோருவனே என்றும் சொல்லலாம்.
எம்மரசி-   அண்மைவிளி

--

Vis Gop

unread,
Jun 30, 2017, 4:07:26 AM6/30/17
to santhav...@googlegroups.com
'டகடக' இயல்பாக இல்லைபோல் தோன்றுகிறதே. கடகட போடலாமோ?
தாயமும் தந்து கடகட வென்று சடுதியிலே
நேயம் கொடுக்கும் . . . . . . ?
பணிவுடன் கோபால்.

Hari Krishnan

unread,
Jun 30, 2017, 5:15:20 AM6/30/17
to சந்தவசந்தம்

2017-06-30 13:37 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:
டகடக' இயல்பாக இல்லைபோல் தோன்றுகிறதே. கடகட போடலாமோ?
தாயமும் தந்து கடகட வென்று சடுதியிலே
நேயம் கொடுக்கும் . . . . . . ?
பணிவுடன் கோபால்.

2017-06-30 2:04 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
மூல மந்திரத்தில் ட:ட:ட:ட:   என்று நான்கு ட: தொடர்ச்சியாக வரும். அவற்றைத்தான் இட்டகம்  பெட்டகம், டகடக என்பதில் மறைமுகமாகக் குறித்திருக்கிறேன்.

அங்கே உள்ள ட:--வுக்குச் சமமாக டக.  (என்று நினைக்கிறேன்.  சரியா என்று இலந்தைதான் சொல்ல வேண்டும்.)

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Subbaiyar Ramasami

unread,
Jun 30, 2017, 7:33:37 AM6/30/17
to santhav...@googlegroups.com
ஹரி சொல்வது சரி.

இதைபயன்படுத்துமுன் எனக்கும் அந்த ஐயம் வந்தது.    ஆய்ந்து பார்த்ததில் இது பல இடங்களிலும் , பேச்சுவழக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.  பல கதைகளிலும் (கல்கியின் சோலைமலை இளவரசி)  சுலோகங்களிலும், பயன்படுத்தப்பட்டுள்ளது. 
இலந்தை

--

Subbaiyar Ramasami

unread,
Jun 30, 2017, 8:24:50 AM6/30/17
to santhav...@googlegroups.com

தூக்கிடும் அந்நிலை சொப்பனத் தூடே தொடங்கிடினும்
போக்கிடும் போது புனிதப் புலத்திடம் போட்டுவைப்பாள்
வாக்கிடும் யாவும் வசப்படும், அன்னை மனமுவந்தே
ஆக்கிடும் யாவும் அவள்பரம் , அன்னையின் ஆக்கினையே!          41

ஆக்கினை என்றே அறிந்தனை
, பின்னும் அதைமறந்து
போக்கினை யாயின் பொறுத்திட மாட்டாள் புகலுமருள்
வாக்கினைத் தந்தாள், வரத்தினைத் தந்தாள் வழிமொழியும்
நாக்கினைத் தந்தாள் நமக்கினி வேறெது நானிலத்தே!               42

நிலத்தை அகழ்ந்து நெகிழ்த்திக் கிழங்கெடு நேர்த்தியுள

பலத்தைப் பொருந்திய பற்கள் படைத்தவள், பாழ்படுமும்
மலத்தை உடையேன் மமதை அகழ்ந்து மணிபுரச் செம்
புலத்தில் இருக்கப் புரிவாள் கவிதை புனைந்திடவே!           43

புனைவுகள் உன்திருப் பொன்னடி போற்றிப் புகழ்ந்திடவும்

நினைவுகள் என்றும் நினது புகழை நிகழ்த்திடவும்
கனவுகள் உள்ளும் கனிந்தருள் செய்யும் கருப்பொருளே
உனைமகிழ் வூட்டிடும் உத்தியும்  சற்றே உதவுகவே!               44

உதவிடும் எண்ணம் உளபொழு தேபோய் உதவிடவும்

எதுவரி னும்நின திச்சை எனமுனம் ஏற்றிடவும்
சதமென நின்பதம் சார்ந்து பணிந்து தழைத்திடவும்
விதவித மாக விருதுகள் கூடவும் வேண்டினனே!              45

Siva Siva

unread,
Jun 30, 2017, 8:49:07 AM6/30/17
to santhavasantham
Thanks for the clarifications.

/பெட்டக மாய்நெருக்கத்/

பெட்டகமாய் = பெட்டகம் + ஆய் = பெட்டகம் ஆகி.

அவ்வாறெனின், இவ்விடத்தில் வகையுளி இல்லைபோல் தோன்றுகின்றதே.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

2017-06-29 20:02 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
நன்கு கவனித்திருக்கிறீர்கள். நன்றி

மோனையில் பலவகை உண்டு.  வகையுளி வருகின்ற போது வருகின்ற  சொற்றொடரின் முதலெழுத்து மோனையெழுத்தாய் அமைவது உண்டு. 
அவ்வகையில் இங்கே மோனை அமைந்திருக்கிறது. இன்னொரு வகை மோனையில் சொல்லின் இடையில் மோனை எழுத்து உட்கார்ந்து  அந்த இடத்தில் தாளம் விழுந்தால் அது மோனையாகிவிடும். அப்படியொரு மோனையையும் இந்த அந்தாதியில் ஓரிடத்தில் அமைத்திருக்கிறேன். இதைப்பற்றிச் சந்தவசந்தத்தில் முன்னரே விவாதித்திருக்கிறோம். பசுபதி கூட அதைப்பற்றி  எழுதியுள்ளதாக நினைவு.
மாயம் விலகும்மனமருள் பெட்டக  மாய்நெருக்கத்
துகளறு   - அச்சுப்பிழை
வராமல் - பேச்சு வழக்கு
இடரேதும் வாரா தெதிர்நின்று   என்றும் மாற்றலாம். 
கோருவனே என்றும் சொல்லலாம்.
எம்மரசி-   அண்மைவிளி

2017-06-29 15:45 GMT-06:00 Siva Siva <naya...@gmail.com>:

2017-06-29 9:10 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

தூய மனத்துடன் ஐம்கிளௌம் இட்டகம் தூண்டிவிடின்
மாயம் விலகும், மனமருள் பெட்டக மாய் நெருக்கத்
தாயம் கிடைக்கும் டகடக வென்றே சடுதியிலே
நேயம் கொடுக்கும், நிறைந்திடும் வாழ்க்கையில் நிம்மதியே!   36

அடி 2-இல் 1-5 மோனை இன்மை? 

Siva Siva

unread,
Jun 30, 2017, 8:55:40 AM6/30/17
to santhavasantham
2017-06-30 8:24 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

தூக்கிடும் அந்நிலை சொப்பனத் தூடே தொடங்கிடினும்
போக்கிடும் போது புனிதப் புலத்திடம் போட்டுவைப்பாள்
வாக்கிடும் யாவும் வசப்படும், அன்னை மனமுவந்தே
ஆக்கிடும் யாவும் அவள்பரம் , அன்னையின் ஆக்கினையே!          41

ஆக்கினை என்றே அறிந்தனை
, பின்னும் அதைமறந்து
போக்கினை யாயின் பொறுத்திட மாட்டாள் புகலுமருள்
வாக்கினைத் தந்தாள், வரத்தினைத் தந்தாள் வழிமொழியும்
நாக்கினைத் தந்தாள் நமக்கினி வேறெது நானிலத்தே!               42

-->  /அதைமறந்து/
இலக்கியத்தில் அதனை என்றே வருமோ?
அவ்வாறெனின், "அதுமறந்து" என்றே சொல்லலாமோ?

நிலத்தை அகழ்ந்து நெகிழ்த்திக் கிழங்கெடு நேர்த்தியுள

பலத்தைப் பொருந்திய பற்கள் படைத்தவள், பாழ்படுமும்
மலத்தை உடையேன் மமதை அகழ்ந்து மணிபுரச் செம்
புலத்தில் இருக்கப் புரிவாள் கவிதை புனைந்திடவே!           43

--> /பற்கள் படைத்தவள்
"பற்கள் உடையவள்" என்றால் இன்னும் தெளிவாகுமோ?

புனைவுகள் உன்திருப் பொன்னடி போற்றிப் புகழ்ந்திடவும்

நினைவுகள் என்றும் நினது புகழை நிகழ்த்திடவும்
கனவுகள் உள்ளும் கனிந்தருள் செய்யும் கருப்பொருளே
உனைமகிழ் வூட்டிடும் உத்தியும்  சற்றே உதவுகவே!               44

உதவிடும் எண்ணம் உளபொழு தேபோய் உதவிடவும்

எதுவரி னும்நின திச்சை எனமுனம் ஏற்றிடவும்
சதமென நின்பதம் சார்ந்து பணிந்து தழைத்திடவும்
விதவித மாக விருதுகள் கூடவும் வேண்டினனே!              45

Vis Gop

unread,
Jun 30, 2017, 9:19:13 AM6/30/17
to santhav...@googlegroups.com

மிக்க நன்றி. கோபால்.

Subbaiyar Ramasami

unread,
Jun 30, 2017, 11:47:02 AM6/30/17
to santhav...@googlegroups.com
பெட்டக மாய்  என்பது வகையுளிதான்.

--

Subbaiyar Ramasami

unread,
Jun 30, 2017, 6:03:28 PM6/30/17
to santhav...@googlegroups.com
பல்லோடு உடை   என்னும்  சொல்லைச்  சேர்க்க விரும்பவில்லை. படைத்த
 என்றாலும் உடைய என்ற பொருளுண்டு

அதுமறந்து  என்பது  நல்ல யோசனை.

Subbaiyar Ramasami

unread,
Jul 1, 2017, 7:56:45 AM7/1/17
to santhav...@googlegroups.com

வேண்டுவ தெல்லாம் மிகத்திடம் கொண்டுள மேனிநலம்
பாண்டமி திங்கே அதன்பணி தானே பரிந்துசெயல்
ஆண்டிடும் நெஞ்சத் தமைதி இனிய அகமகிழ்ச்சி
ஈண்டென் செயலால் இறைநிலை எய்தல், இவையருளே!      46

இவையவை என்றிவண் ஏதெது கேட்பினும் என்னிறையே
அவையவை தம்மை அளிப்பது பற்றி அறிந்தவள்நீ
எவைஎவை நன்மை எனக்கென நீமனம் எண்ணுவையோ
அவைஅவை  நன்றே அளித்திடு கேட்க அறிந்திலனே!              47

அறிந்திலேன் அம்மா அறிவெனும் ஒன்றை, அறிந்தவரை
அறிந்தேன் எனவே அகந்தைப் பிடியில் அகமகிழ்ந்தேன்
மறைந்தவை பாதி மறதியில் மீதி வழிந்துவிட
உறைந்தவை தம்மை உளவென எப்படி ஓதுவனே!               48

ஓதும் படிக்கே ஒருமொழி இன்றே உளதெதுவும்
மீதம் இலைதான், அதில்பெருங் காயம் விழுந்திருந்த
போதம் உளது, பொருந்து மணமும் பொலிகிறது
ஆதர வாயதை பற்றி   எழவுன் அருளுளதே!                 49

தேடித் திரியாச் சிறப்புள என்னையும் தேடவைத்தாய்
வாடி அலைந்தே வனத்தில் புகுந்து வருந்தவிலை
மூடித் திறந்துயிர் மூச்சை அடக்க முயலவில்லை
பாடித் தொழுதேன், பணிந்தேன் அடைந்தாய் பரவசமே!         50

Vis Gop

unread,
Jul 1, 2017, 11:58:18 AM7/1/17
to santhav...@googlegroups.com

50ம் பாடல்
அடைந்தேன் பரவசமே?

Saranya Gurumurthy

unread,
Jul 2, 2017, 2:38:13 AM7/2/17
to santhav...@googlegroups.com
49th பாடல்-

போதம் உளதுபொருந்து மணமும் பொலிகிறது
ஆதர வாயதை பற்றி   எழவுன் அருளுளதே!                 49

பொலிகிறது 
ஆதர - 

இது பொலிகிற தாதர... என்று ஆகுமோ?  அப்படியெனில் அடியின் ஈற்றுச் சீர் விளங்காய் இல்லாமல் போகும் என்று நினைக்கிறேன். 

ஆதர வாயதை பற்றி   எழவுன் அருளுளதே!    =  ஆதர வாயதைப் பற்றி?

சரண்யா. 

Subbaiyar Ramasami

unread,
Jul 2, 2017, 7:04:03 AM7/2/17
to santhav...@googlegroups.com
கூர்ந்து கவனித்துள்ளீர்கள் . நன்றி.     அடியின் இறுதியில் குற்றியலுகரம் வந்து அடுத்த அடியில் உயிர் எழுத்து வந்தால் இரண்டையும் படிப்பதற்குள் சற்றே இடைவெளி கிடைத்து விடுவதால் குற்றியலுகப்பிழை இல்லை என்று எனது ஆசான் கூறியுள்ளார். பொலிகிறது என்னும் சொல்லை அடுத்துக் கமா போட்டால் போதும். என்றாலும் பொலிகிறதே என்று மாற்றிவிடுகிறேன    ஆ தர வாயதைப்      ப் அவசியம் வேண்டும்

--

Subbaiyar Ramasami

unread,
Jul 2, 2017, 7:09:18 AM7/2/17
to santhav...@googlegroups.com

பரவச மாய்க் கரு மேகம் நிறத்தைப் பகிர்ந்தளிக்க
ஒருவச மான கருங்குழல் மேலே ஒயிலசைய
உருவச மான கரண்டகத் தோற்ற ஒளிமகுடம்
திருவச மாகத் திருமுடி மேலெழில் சேர்க்கிறதே!             51

சேரும் அழகுச் சிகாமணி மேலொளி சிந்திநிற்கச்
சீரும் சிறப்பும் திகழும் பவளம் திகழ்வரிசை
சாரும் விளிம்பில் தனியழ கேற்றத் தழைவயிரம்
ஆரும் ஒளிதரும் அன்னை சிரசில் அணிமுடியே!              52

 முடிந்த வரையில் முகவெழில் சொல்ல முயலுகிறேன்
படிந்துள நெற்றியில் கஸ்தூரிப் பொட்டு, பகைவர்களைத்
தடிந்த வயிரப் படையெனும் பற்கள் தகைமுகிலைக்
கடைந்த நிறமுகம் கம்பீ ரம்பெரும் கச்சிதமே!                                                         53

கச்சித மாகக் கதவடை யாவிரு காதுகளும்
எச்சரிக் கையாய் எதிரி அசைவை எடுத்துரைக்கும்
நிச்சய மாய்மூ விழிகளில் ரௌத்திரம், நேசம்வரும்
வச்சிர மூக்கு வருவன மோந்து வழங்கிடுமே!                 54

வழங்கும் அளவில் வனப்பெழில் காட்டும் மணிக்கழுத்து
முழங்கும் குரலில் முனிவைக் கலக்கும் , மொழியதிரும்
விழுங்கும் திருவாய் விரும்பிக் கனிவும் மிகவிளம்பும்
ஒழுங்கில் அமைதோள் இயங்கும் மலைக்கும் உயரத்திலே!    55

Saranya Gurumurthy

unread,
Jul 2, 2017, 8:38:42 AM7/2/17
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா.

சரண்யா.

Subbaiyar Ramasami

unread,
Jul 3, 2017, 8:35:57 AM7/3/17
to santhav...@googlegroups.com
உயர்ந்து விளங்கும் உரங்கொள் கரங்களில் உற்றிருந்தே
இயங்கும் படைகள் இயக்கிடும் தேவி இலாகவத்தில்
தியங்கும் பகைவர் திரிரதம் கண்டு சிலும்பிடுவர்

மயங்கும் உலகம் வலதிடப் பாக வலிமையிலே!                        56

வலிவுடை வாளம்பு சக்கரம் சாட்டை வளர்கதையும்
வலப்புறக் கைகளில் வாகாய் இயங்க, வருமிடத்தே
கிலிதரும் சங்கொடு தாமரை சூலம் வில் கேடயமும்
பொலிவுற ஓர்புலி வாகனம் ஏறுவள் போயமர்ந்தே!! 57

தேவை கருதி உலக்கை கலப்பை  திருக்கரங்கள்
மேவிட அங்குசம் பாசம் எடுப்பள் மிளிர்கரங்கள்
ஏவிடும் ஆயுதம்  என்னவெப் போதென் றெவரறிவார்
பூவும் ஒருபடை ஆகிடும் அன்னையின் போர்க்களத்தே!                 58

போர்க்களத் தில்லாத போதில் அபயம் பொருந்துகரம்
வார்த்தாளி காட்டி வரம்தரு வாளவள் வள்ளலெனச்
சாத்திரம் கற்றவர் சாற்றுவர் உண்டிங்குச் சான்றுபல
காத்திடு வாளவள் கைராசி நெஞ்சில் கருதிடவே!                       59

திடமும், பரப்பும் திரட்சிச் செழுமையும் சேர்ந்துயர்ந்த

இடமும் உடைய எழில்கொங்கை மீதில் இனியரத்ன
வடமும், ஒளிரும் மணிபொதி மாலை வரிசைகளும்
அடர்கச்சை பூண்ட அழகும் உரைக்க அரியனவே!                       60

--

Siva Siva

unread,
Jul 3, 2017, 5:13:11 PM7/3/17
to santhavasantham
2017-07-03 8:35 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
உயர்ந்து விளங்கும் உரங்கொள் கரங்களில் உற்றிருந்தே
இயங்கும் படைகள் இயக்கிடும் தேவி இலாகவத்தில்
தியங்கும் பகைவர் திரிரதம் கண்டு சிலும்பிடுவர்

மயங்கும் உலகம் வலதிடப் பாக வலிமையிலே!                        56

வலிவுடை வாளம்பு சக்கரம் சாட்டை வளர்கதையும்
வலப்புறக் கைகளில் வாகாய் இயங்க, வருமிடத்தே
கிலிதரும் சங்கொடு தாமரை சூலம் வில் கேடயமும்
பொலிவுற ஓர்புலி வாகனம் ஏறுவள் போயமர்ந்தே!! 57

தேவை கருதி உலக்கை கலப்பை  திருக்கரங்கள்
மேவிட அங்குசம் பாசம் எடுப்பள் மிளிர்கரங்கள்
ஏவிடும் ஆயுதம்  என்னவெப் போதென் றெவரறிவார்
பூவும் ஒருபடை ஆகிடும் அன்னையின் போர்க்களத்தே!                 58

போர்க்களத் தில்லாத போதில் அபயம் பொருந்துகரம்
வார்த்தாளி காட்டி வரம்தரு வாளவள் வள்ளலெனச்
சாத்திரம் கற்றவர் சாற்றுவர் உண்டிங்குச் சான்றுபல
காத்திடு வாளவள் கைராசி நெஞ்சில் கருதிடவே!                       59

திடமும், பரப்பும் திரட்சிச் செழுமையும் சேர்ந்துயர்ந்த

இடமும் உடைய எழில்கொங்கை மீதில் இனியரத்ன
வடமும், ஒளிரும் மணிபொதி மாலை வரிசைகளும்
அடர்கச்சை பூண்ட அழகும் உரைக்க அரியனவே!                       60

--> /இனியரத்ன வடமும்
"இரத்தினநல் வடமும்" / "இரத்தினத்து வடமும்" போன்ற சொற்றொடரும் பொருந்துமோ?

Subbaiyar Ramasami

unread,
Jul 3, 2017, 7:47:05 PM7/3/17
to santhav...@googlegroups.com
இரத்தினங்கள் வடமும் என்று மாற்றிக்கொள்கிறேன்

Subbaiyar Ramasami

unread,
Jul 4, 2017, 12:38:15 AM7/4/17
to santhav...@googlegroups.com
அரிதினும் அரியள் அரியின் வராஹ அமரினிலே
பெரிய அளவில் பொருதே உதவிய பெற்றியினாள்
உரிய திருமலர் நாபியும் வீர ஒளிவயிறும்
விரியும்கம் பீரமும் வீரமும் எங்ஙன் விளம்புவதே! 61

விளம்ப இயலா விரைவும் பொலிவும் மிகவலிவும்
வளமும் வடிவும் வதிதிருக் கால்கள் வனப்பதையும்
முளரி நிகர்த்த முழுமதிப் பாதங்கள் மொய்ம்பினையும்
உளத்தில் பதித்தே ஒருமுக மாய்த்தினம் உன்னுகவே! 62

உன்னை அறிய உணர்த்திடு பாதம், உயர்மறைச்சொல்
தன்னைக் கடந்து தழைத்திடு பாதம், தகதகென
மின்னைக் கரைத்து விளங்கிடு பாதம், மிகநலஞ்செய்
அன்னையின் பாதம் அகம்பதி, ஞான அருள்பெறவே! 63

பெறவே றுளதோ, பிறங்கிடு நூபுரம் பேறுபெற்றே
நெறிசேர் பதத்தில் நிறையணி யாக நிறைந்திருக்கும்
பொறிசேர் அழகைப் புகழ்ந்து வணங்கிடப் போய்ப்பெறவோர்
அறமும் உளதோ? அவள்பதம் நல்கும் அனைத்தையுமே! 64

அனைத்தும் அவளின் அருளென எண்ணி அனுதினமும்
நினைத்து மனத்தில் நிறைத்து, ஜபங்கள் நெறிமுறையே
தினைத்துணை யாகச் செயினும் உறுதித் திறமுணர்ந்தே
பனைத்துணை யாகப் பலன்கள் கொடுப்பாள் பரிவுடனே!

Siva Siva

unread,
Jul 4, 2017, 7:14:21 PM7/4/17
to santhavasantham
2017-07-04 0:38 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
அரிதினும் அரியள் அரியின் வராஹ அமரினிலே
பெரிய அளவில் பொருதே உதவிய பெற்றியினாள்
உரிய திருமலர் நாபியும் வீர ஒளிவயிறும்
விரியும்கம் பீரமும் வீரமும் எங்ஙன் விளம்புவதே! 61

விளம்ப இயலா விரைவும் பொலிவும் மிகவலிவும்
வளமும் வடிவும் வதிதிருக் கால்கள் வனப்பதையும்
முளரி நிகர்த்த முழுமதிப் பாதங்கள் மொய்ம்பினையும்
உளத்தில் பதித்தே ஒருமுக மாய்த்தினம் உன்னுகவே! 62

--> /முழுமதிப் பாதங்கள்/  = ?

உன்னை அறிய உணர்த்திடு பாதம், உயர்மறைச்சொல்
தன்னைக் கடந்து தழைத்திடு பாதம், தகதகென
மின்னைக் கரைத்து விளங்கிடு பாதம், மிகநலஞ்செய்
அன்னையின் பாதம் அகம்பதி, ஞான அருள்பெறவே! 63

பெறவே றுளதோ, பிறங்கிடு நூபுரம் பேறுபெற்றே
நெறிசேர் பதத்தில் நிறையணி யாக நிறைந்திருக்கும்
பொறிசேர் அழகைப் புகழ்ந்து வணங்கிடப் போய்ப்பெறவோர்
அறமும் உளதோ? அவள்பதம் நல்கும் அனைத்தையுமே! 64

அனைத்தும் அவளின் அருளென எண்ணி அனுதினமும்
நினைத்து மனத்தில் நிறைத்து, ஜபங்கள் நெறிமுறையே
தினைத்துணை யாகச் செயினும் உறுதித் திறமுணர்ந்தே
பனைத்துணை யாகப் பலன்கள் கொடுப்பாள் பரிவுடனே!

Subbaiyar Ramasami

unread,
Jul 4, 2017, 10:45:52 PM7/4/17
to santhav...@googlegroups.com
பூரணச்சந்திரன் போல ஒளிரும்  பாதங்கள்.  என்று பொருள்.  

என்றாலும் போர்க்களத்தில் புரட்டி எடுக்கும் அம்மையின் பாதத்தை முளரிக்கு ஒப்பிடுதல் கூடச் சரியிலைதான்.  மென்மையும் வன்மையும் சேர்ந்த பாதங்கள்.
  
வளியின் விரைவும் வயிரமும் கொள்பத மாண்பினையும்  என்று மாற்றுகிறேன்

--

Subbaiyar Ramasami

unread,
Jul 5, 2017, 7:58:54 AM7/5/17
to santhav...@googlegroups.com
வரும் சனிக்கிழமை வாராகி அந்தாதி அரங்கேற்றம் சிக்காகோவில் நடைபெறுகிறது. அதற்குமுன் அன்பர்கள் பார்வைக்கு இடவேண்டும் என்பதால்  10  பாடல்கள் இடுகிறேன்.

பரியில் அரியில் கரியில் புலியில் பருந்ததனில்
எருமை தனில்பல வாகனம் ஏறிடும் ஏந்திழையாள்
உரிமை யுடனே உளம்நினை வோருக் குதவிடுவாள்
உரிய முறையில் உயர்வு பெறுவர் உபாசகரே!                          66

உபாசனை தந்த உயர்குரு போற்ற, உவந்தவள் நல்
உபாயம் கனவில் உரைப்பாள் வழிகள் உணர்த்திடுவாள்
கபாலம் பிரம்பு கரத்தினில் ஏந்திக் கடுகிவந்தே
அபாயம் விலக்கி அருள்வாள் அடியருக் காதரவே!                      67

தரவென ஓர்கை அபயம் பிடித்திடும் தண்ணளியை, 
புரவெனச் சொல்லிப் புனிதத் திருப்பதம் போற்றிசெய்தே
இரவினில் பூசை புரிபவர் மூலத் திருக்குமந்த     
அரவை எழுப்புவள் ஆக்ஞைக்கு மேலே அனுப்புவளே                   68 
   
புவனம் கொணர்ந்து புதுப்பொலி வூட்டிய பூரணியை
மவுனம் இருந்து மனத்துள் ஜபம்செய்து மந்திரத்தைக்
கவனத் துடனே கருத்தில் இருத்திக் கசிந்துருகித்
தவனமும் மஞ்சள் சிவப்பு  மலர்களும் சாத்துகவே                            69

சாகச மோயிலை தந்திர மோயிலை சாதனையாய்த்
தேகசம் பந்தத் துடன்புரி செய்கைச் சிறப்புகளோ
ஆகுமென் றெண்ணி அதன்வழி சித்தி அடைவதினும்
ஏகம் அவள்பெயர் எண்ணிச் ஜபம்செய எய்திடுமே!                     70

எய்த நினைப்பவை ஏதும், முயற்சி  எதுவுமின்றி
எய்தும் எனமனம் எண்ணிட வேண்டாம், எடுத்தசெயல்
செய்யும் பொழுதினில் சிக்கல் இலாதவள் செய்திடுவாள்
பொய்யும் புரட்டும் புரிய நினைத்தால் பொசுக்குவளே!                   71

பொசுக்கென எல்லாம் புலப்படும் என்றால் புலப்படுமா?
நசுக்கிடும் ஐம்பொறி நாட்டியம் தன்னை நனியடக்கி
வசப்படு வென்றே மனத்தைப் பிடிக்குள் வரவழைக்க    

விசுக்கிரன் தன்னை விழவைத்த அன்னையை வேண்டுகவே!            72

வேறிலை அன்னை வியன்லலி தாபர மேஸ்வரியாள்
மாறிலை என்பதை மாதா செருகளம் மீதுரைத்தாள்
கூறுகள் இல்லை குழுக்களும் இல்லை குறித்துடலில்
வீறுகொண் டொன்றாய் விளங்கிடும் சக்தி விகற்பங்களே!               73

கற்ப நெடுநாள்  கணக்கிட ஒண்ணாக்  ககனவெளி
அற்புதத் திற்கே அசைவும் இயக்கமும் யாரளித்தார்?
முற்பட முற்பட முற்படு கின்ற முதற்தலைவி
சிற்பரை ஞானத் திரிபுரை பக்கம் திகழ்பவளே!                          74

திகழ்கின்ற ஸ்ரீபுரப் பூபுரம் வாழும் திருவுடையாய்
புகழ்கின்ற சொல்லில் பொருளாய் இருக்கும் புனிதவதி
நிகழ்கின்ற யாவும் நெறிமா றிடாமல் நிகழ்த்திடுவாய்
அகழ்கின்ற தன்மை அறிவாய் உனக்கே அடைக்கலமே!                 75

Siva Siva

unread,
Jul 5, 2017, 8:19:45 AM7/5/17
to santhavasantham
2017-07-05 7:58 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
வரும் சனிக்கிழமை வாராகி அந்தாதி அரங்கேற்றம் சிக்காகோவில் நடைபெறுகிறது. அதற்குமுன் அன்பர்கள் பார்வைக்கு இடவேண்டும் என்பதால்  10  பாடல்கள் இடுகிறேன்.

பரியில் அரியில் கரியில் புலியில் பருந்ததனில்
எருமை தனில்பல வாகனம் ஏறிடும் ஏந்திழையாள்
உரிமை யுடனே உளம்நினை வோருக் குதவிடுவாள்
உரிய முறையில் உயர்வு பெறுவர் உபாசகரே!                          66

--> /பரியில் அரியில் கரியில் புலியில் பருந்ததனில்
எருமை தனில்பல வாகனம்/

"பரியில் வாகனம் ஏறிடும்" என்பன போன்ற பிரயோகங்களை எப்படிப் பொருள்கொள்ளவேண்டும்?
"இல்" என்ற உருபு இன்றி இப்பட்டியல் இருந்தால், "எனப்பல வாகனம்" என்று சொல்லலாம்.

பரிமேல் அரிமேல் கரிமேல் புலிமேல் பருந்ததன்மேல்
எருமை மிசைமகிழ்ந் தேறி வருகின்ற ஏந்திழையாள்

உபாசனை தந்த உயர்குரு போற்ற, உவந்தவள் நல்
உபாயம் கனவில் உரைப்பாள் வழிகள் உணர்த்திடுவாள்
கபாலம் பிரம்பு கரத்தினில் ஏந்திக் கடுகிவந்தே
அபாயம் விலக்கி அருள்வாள் அடியருக் காதரவே!                      67

தரவென ஓர்கை அபயம் பிடித்திடும் தண்ணளியை, 
புரவெனச் சொல்லிப் புனிதத் திருப்பதம் போற்றிசெய்தே
இரவினில் பூசை புரிபவர் மூலத் திருக்குமந்த     
அரவை எழுப்புவள் ஆக்ஞைக்கு மேலே அனுப்புவளே                   68 

--> /தண்ணளியை, புரவெனச்
இங்கே இடையில் வல்லொற்று மிகுமன்றோ?

புவனம் கொணர்ந்து புதுப்பொலி வூட்டிய பூரணியை
மவுனம் இருந்து மனத்துள் ஜபம்செய்து மந்திரத்தைக்
கவனத் துடனே கருத்தில் இருத்திக் கசிந்துருகித்
தவனமும் மஞ்சள் சிவப்பு  மலர்களும் சாத்துகவே                            69

சாகச மோயிலை தந்திர மோயிலை சாதனையாய்த்
தேகசம் பந்தத் துடன்புரி செய்கைச் சிறப்புகளோ
ஆகுமென் றெண்ணி அதன்வழி சித்தி அடைவதினும்
ஏகம் அவள்பெயர் எண்ணிச் ஜபம்செய எய்திடுமே!                     70

எய்த நினைப்பவை ஏதும், முயற்சி  எதுவுமின்றி
எய்தும் எனமனம் எண்ணிட வேண்டாம், எடுத்தசெயல்
செய்யும் பொழுதினில் சிக்கல் இலாதவள் செய்திடுவாள்
பொய்யும் புரட்டும் புரிய நினைத்தால் பொசுக்குவளே!                   71

--> /எய்த நினைப்பவை ஏதும்
ஒருமை பன்மை மயக்கமோ? 
நினைக்கும் எதுவும்? நினைக்கின்ற  யாவும்?

பொசுக்கென எல்லாம் புலப்படும் என்றால் புலப்படுமா?
நசுக்கிடும் ஐம்பொறி நாட்டியம் தன்னை நனியடக்கி
வசப்படு வென்றே மனத்தைப் பிடிக்குள் வரவழைக்க    

விசுக்கிரன் தன்னை விழவைத்த அன்னையை வேண்டுகவே!            72

வேறிலை அன்னை வியன்லலி தாபர மேஸ்வரியாள்
மாறிலை என்பதை மாதா செருகளம் மீதுரைத்தாள்
கூறுகள் இல்லை குழுக்களும் இல்லை குறித்துடலில்
வீறுகொண் டொன்றாய் விளங்கிடும் சக்தி விகற்பங்களே!               73

-->  செருகளம்? செருக்களம்?

கற்ப நெடுநாள்  கணக்கிட ஒண்ணாக்  ககனவெளி
அற்புதத் திற்கே அசைவும் இயக்கமும் யாரளித்தார்?
முற்பட முற்பட முற்படு கின்ற முதற்தலைவி
சிற்பரை ஞானத் திரிபுரை பக்கம் திகழ்பவளே!                          74

-> /முதற்தலைவி
"முதற்றலைவி"?

Subbaiyar Ramasami

unread,
Jul 5, 2017, 9:08:03 AM7/5/17
to santhav...@googlegroups.com
பரிமேல் அரிமேல் கரிமேல் புலிமேல் பருந்ததன்மேல்
எருமை மிசைமகிழ்ந் தேறி வருகின்ற ஏந்திழையாள்-------- திருத்தம் சிறப்பு
தண்ணளியை பக்கத்தில் கமா போட்டிருக்கிறேன் பார்த்தீர்களா? 

தரவென ஓர்கை அபயம் பிடித்திடும் தண்ணளியை,    என்பதைத் தண்ணளியைத் தரவென ஓர்கை அபயம் பிடித்திடும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். தண்ணளியைப் என்று வலிமிகுந்தால் தண்ணளியைப் புர என்று சொல்வதாக ஆகிவிடும். எனவே இப்பொழுது இருப்பது சரிதான்.
எய்த நினைப்பவை எல்லாம் என்று மாற்றிக் கொள்ளலாம்.
செருகளம் - வினைத்தொகை    சரி
செரு நடக்கும் இடம்   செருக்களம்   -  - இதுவும் சரி. இரண்டுமே இலக்கியப்பயன்பாட்டில் உள்ளன.  செருக்கள வஞ்சி என ஒரு சிற்றிலக்கியம் உண்டு  .  திருமுறைகளில் செருக்களப் பயன்பாடு உள்ளது. எனவே செருக்களம் என்று மாற்றிக்கொள்கிறேன்.

Subbaiyar Ramasami

unread,
Jul 5, 2017, 12:45:43 PM7/5/17
to santhav...@googlegroups.com

அடைக்கலம் என்றிட அன்னை அளிக்கும் அபயநெறி
படைக்கல மாகப் பரிந்து புரக்கும் பலன்கொடுக்கும்
தடைப்படும் எல்லாம் தகர்த்திடும், பக்தி தனையறியாக்
கடைப்படு வோருக்கும் காரிய சித்திகள் கைவருமே!                    76

வரும்படி கூடும், மனத்தில் வெறுத்த மனிதர்களும்
வரும்படி வேண்டி மகிழ்ந்தே அழைப்பர், மறைந்திருந்த
அரும்படிப் பெல்லாம் அகம்படும், அன்னை அருளிருந்தால்
கரும்படி பற்றிக் கடித்துச் சுவைக்கும் கணக்கதுவே!                           77

கணக்கின் தொடக்கம் கணக்கின் முடிப்பு கணக்கிடையில்
இணக்கம் சுணக்கம், பிணக்கம், எனவே இயக்கமெலாம்
வணக்கம் எனவே மமதை அடக்கி வணங்குகையில்
மணக்க மணக்க வதிந்திட வாராகி மாற்றுவளே!                        78

மாற்றுப் பெயர்கள் பலவுள, பாரில் வழங்குவன
போற்றும் சமயஸங் கேதா சிவையருள் போத்ரினியாள்
ஏற்றுசங் கேதா மகாசேனை ஆக்ஞாசக் ரேஸ்வரியாள்
சாற்றப் பெயர்பல ஆயிரத் தின்மேல் தகவுடனே!                        79

தகவுடன் உன்மத்த பைரவி யாகத் தயைபுரிவாள்
பகர்ந்திடும் சொப்பனந்தன்னில் தகவல் பரிந்தளிப்பாள்
திகைத்திடும் வண்ணம் மறைத்தருள் செய்வாள் திரஸ்கரிணி
வகைவகை அங்க உபாங்க பிரத்யங்க மாகவந்தே!                      80

வந்தே குழப்பி மயக்கும் வினாக்கள் மனத்தெழுப்ப
சந்தே கமெலாம் சரிவரத் தீர்த்தே தயைபுரிவாள்
அந்தே அந்தினி யாள்நமை என்றைக்கும் ஆதரிப்பாள்
சிந்தா  மணியில்லம் சேர்ந்து வதிதலும் சித்திக்குமே!                   81

சித்தில் மயங்கிச் செயலினை வேறு திசைதிருப்பப்
புத்தி மயங்கும் பொருளும் மயங்கும் புனிதவருள்
முத்தியை நோக்கி முதலடி என்றே முனைந்ததனைப்
பத்திர மாகவுள் பக்கம் திருப்பப் பகல்வருமே!                          82

வருமே பதிந்த வழித்தடம், முன்பவ் வழிநடந்தோர்
தருபோ தனையில் சரியாய் நடக்கும் தகுதிவரும்
பெருமோ கவலைப் பிணிதீர்ந் துவிடும் பிறப்பிறப்பு
வருமோ இனியும்?, வரவேற் புளதவள் வாசலிலே!                      83

வாசல் வரையிலும் வந்து படியில் வழுக்கிவிழும்
ஊசல் மனத்தவர் ஓங்கிப் புரியும் உபாசனையில்
பூசல் இருக்கும், புனிதம் இராது, பொசுங்குகிற
வாசம் வருகையில் யார்தான் போடுவர் வாயினிலே!                    84

வாய்மணக் கும்படி மந்திரம் சொல்லி மனத்திலிறை
போய்மணக் கும்படி புத்தி செலுத்திப் புனிதமுள
பூமணக் கும்படி பூசைகள் செய்தால் புகழுடனே
நீமணக் கும்படி நின்னை உயர்த்துவள் நிச்சயமே!                       85

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 5, 2017, 1:10:50 PM7/5/17
to சந்தவசந்தம்
அன்னையின் பல்வேறு பெயர்களைப் பாடல்களில் பொருத்தும் அழகு அருமை. 

அனந்த்
மறைத்தருள் செய்வாள் - மறைந்தருள் செய்வாள்?; மனத்தெழுப்ப*ச் சந்தேக;
பெருமோ கவலை - பெருமோர் கவலை?

Siva Siva

unread,
Jul 5, 2017, 1:15:32 PM7/5/17
to santhavasantham
2017-07-05 12:45 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

அடைக்கலம் என்றிட அன்னை அளிக்கும் அபயநெறி
படைக்கல மாகப் பரிந்து புரக்கும் பலன்கொடுக்கும்
தடைப்படும் எல்லாம் தகர்த்திடும், பக்தி தனையறியாக்
கடைப்படு வோருக்கும் காரிய சித்திகள் கைவருமே!                    76

வரும்படி கூடும், மனத்தில் வெறுத்த மனிதர்களும்
வரும்படி வேண்டி மகிழ்ந்தே அழைப்பர், மறைந்திருந்த
அரும்படிப் பெல்லாம் அகம்படும், அன்னை அருளிருந்தால்
கரும்படி பற்றிக் கடித்துச் சுவைக்கும் கணக்கதுவே!                           77

கணக்கின் தொடக்கம் கணக்கின் முடிப்பு கணக்கிடையில்
இணக்கம் சுணக்கம், பிணக்கம், எனவே இயக்கமெலாம்
வணக்கம் எனவே மமதை அடக்கி வணங்குகையில்
மணக்க மணக்க வதிந்திட வாராகி மாற்றுவளே!                        78

--> /வணங்குகையில்
வணங்குதிரேல்? 

மாற்றுப் பெயர்கள் பலவுள, பாரில் வழங்குவன
போற்றும் சமயஸங் கேதா சிவையருள் போத்ரினியாள்
ஏற்றுசங் கேதா மகாசேனை ஆக்ஞாசக் ரேஸ்வரியாள்
சாற்றப் பெயர்பல ஆயிரத் தின்மேல் தகவுடனே!                        79

--> /பெயர்பல ஆயிரத் தின்மேல்
பெயர்கள்பல் லாயிரத் தின்மேல்?

தகவுடன் உன்மத்த பைரவி யாகத் தயைபுரிவாள்
பகர்ந்திடும் சொப்பனந்தன்னில் தகவல் பரிந்தளிப்பாள்
திகைத்திடும் வண்ணம் மறைத்தருள் செய்வாள் திரஸ்கரிணி
வகைவகை அங்க உபாங்க பிரத்யங்க மாகவந்தே!                      80

வந்தே குழப்பி மயக்கும் வினாக்கள் மனத்தெழுப்ப
சந்தே கமெலாம் சரிவரத் தீர்த்தே தயைபுரிவாள்
அந்தே அந்தினி யாள்நமை என்றைக்கும் ஆதரிப்பாள்
சிந்தா  மணியில்லம் சேர்ந்து வதிதலும் சித்திக்குமே!                   81

--> /வினாக்கள் மனத்தெழுப்ப சந்தே கமெலாம்.../
வினாக்கள் மனத்திலெழச் சந்தேகம் எல்லாம்....?

சித்தில் மயங்கிச் செயலினை வேறு திசைதிருப்பப்
புத்தி மயங்கும் பொருளும் மயங்கும் புனிதவருள்
முத்தியை நோக்கி முதலடி என்றே முனைந்ததனைப்
பத்திர மாகவுள் பக்கம் திருப்பப் பகல்வருமே!                          82

வருமே பதிந்த வழித்தடம், முன்பவ் வழிநடந்தோர்
தருபோ தனையில் சரியாய் நடக்கும் தகுதிவரும்
பெருமோ கவலைப் பிணிதீர்ந் துவிடும் பிறப்பிறப்பு
வருமோ இனியும்?, வரவேற் புளதவள் வாசலிலே!                      83

-->  /பெருமோ கவலைப் பிணிதீர்ந் துவிடும் பிறப்பிறப்பு/
பெருமோகம் என்ற பிணியும் ஒழியும் பிறப்பிறப்பு ?

Kaviyogi Vedham

unread,
Jul 5, 2017, 2:42:56 PM7/5/17
to santhavasantham
ஆம்.. மிக அழகாக ஒரு மயில்போல் ஒயிலாய் நடக்கிறது உம் அந்தாதி. 
 கடைசிக் கண்ணி களில்   சிவா சொல்வதுபோல் செய்தால் மெருகேறுமே
 
எய்த நினைப்பவை ஏதும்முயற்சி  எதுவுமின்றி
எய்தும் எனமனம் எண்ணிட வேண்டாம்எடுத்தசெயல்

செய்யும் பொழுதினில் சிக்கல் இலாதவள் செய்திடுவாள்
பொய்யும் புரட்டும் புரிய நினைத்தால் பொசுக்குவளே!  
 இவ்வரிகள் எனக்கு மிகப்பிடித்தவரிகள்
 வாழ்க வாராஹி அந்தாதிக் காவலர்!
 யோகியார் .   

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Subbaiyar Ramasami

unread,
Jul 5, 2017, 4:38:05 PM7/5/17
to santhav...@googlegroups.com
--> /வணங்குகையில்
வணங்குதிரேல்? -         ஏற்றுக்கொள்கிறேன்

--> /பெயர்பல ஆயிரத் தின்மேல்
பெயர்கள்பல் லாயிரத் தின்மேல்?- மிகப் பொருத்தம்

--> /வினாக்கள் மனத்தெழுப்ப சந்தே கமெலாம்.../
வினாக்கள் மனத்திலெழச் சந்தேகம் எல்லாம்....?  - இதுவும் அருமை

-->  /பெருமோ கவலைப் பிணிதீர்ந் துவிடும் பிறப்பிறப்பு/
பெருமோகம் என்ற பிணியும் ஒழியும் பிறப்பிறப்பு ?-    முதற்சீர்கள் எல்லாம் ஈரசைச்சீர்களாக இருக்க அதில் காயச்சீரை நுழைத்தால் விட்டுத் தெரியும். எனவே பெருமோகம் பயன்படாது.  ஆனால்  பெருமோ கமெனும் பிணியும் ஒழியும் என மாற்றலாம்

நன்றி

It is loading more messages.
0 new messages