யாரேதான்
வீசிவிட்டார் இந்த விதம்?
வெட்டப் படாதவிந்த விந்தைமிகு பொன்மலையை
கொட்டிக் கிடக்கும் கொலுவழகை- எட்டுகதிர்
பீய்ச்சி அடித்துப் பிறங்கவைக்கும் பேரொளியைக்
காய்ச்சா அமுதத்தைக் காண்
பாறையில்
இந்தப் பரவசமா? பொன்கதிர்கள்
ஊறவைத்த பாண்ட ஒளிப்பிழம்பா?- சாறெடுத்துப்
பூசி மெழுகிவிட்ட பொற்சிலையா, யாரேதான்
வீசிவிட்டார் இந்த விதம்?

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBK5DZ%2BamKWTiC_to7o8rwAx-sEs1M6eOfwJDWYgCCg%3Dw%40mail.gmail.com.
--