Please highlight any errors or other potential defects.
இவ்வமைப்பைக் கலிவிருத்தம் என்று கருதலாமா? அன்றேல், மூன்றடிமேல் வைப்பு என்று கொள்ளலாமா?
2015-12-24
லிங்காஷ்டகம்
-
என்
மொழிபெயர்ப்பில்
--------------------------------------------
("தானன தானன தானன தானா" என்ற சந்தம்.
முதற்சீர் தனதன என்றும் வரலாம்)
(ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்மமுராரிசுரார்சிதலிங்கம்)
1)
நான்முகன் நாரணன் வான்தொழும் ஈசன்
ஊனமி லாஒளி யாய்த்திகழ் ஈசன்
வான்பிணி தீர்த்தருள் நல்கிடும் ஈசன்
.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்
வான் - தேவர்;
ஊனம் - குறைவு; குற்றம்;
வான்பிணி - பெரும்பிணி - பிறவிப்பிணி;
2)
பன்முனி வான்அடி வாழ்த்திடும் ஈசன்
மன்மத னைப்பொடி ஆக்கிய ஈசன்
முன்னவு ணன்கரு வம்தகர் ஈசன்
.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்
பன்முனி வான் - பல் முனி வான் - பல முனிவர்களும் தேவரும்;
முன் அவுணன் கருவம் தகர் - முன்னம் அரக்கனான இராவணனுடைய கர்வத்தை அழித்த;
நான் பணிகின்றதும் அப்பு அணி ஈசன் - நான் வணங்குவதும் கங்காதரனாகிய ஈசனையே; (அப்பு - நீர்);
3)
சந்தனம் மாமல ரால்தொழும் ஈசன்
சிந்தைம யக்கைஅ றுத்தருள் ஈசன்
அந்தரர் சித்தரெ லாம்பணி ஈசன்
.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்
சிந்தை மயக்கை அறுத்து அருள் - மனமயக்கத்தைத் தீர்த்துத் தெளிவை அளித்து அருளும்;
அந்தரர் - தேவர்கள்;
4)
பொன்மணி மார்புவி ளங்கிடும் ஈசன்
பன்னக நாணைஅ ரைக்கணி ஈசன்
முன்னொரு வேள்வித கர்த்தருள் ஈசன்
.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்
பொன் மணி மார்பு விளங்கிடும் - 1) பொன்னும் மணியும் மார்பில் விளங்குகின்ற; 2) பொன் போல் அழகிய மார்பு விளங்குகின்ற;
பன்னக நாணை அ\ரைக்கு அணி - பாம்பை அரைநாணாக அணிகின்ற; (பன்னகம் - பாம்பு);
முன் ஒரு வேள்வி தகர்த்து அருள் - முன்னர் (தக்கன் செய்த) ஒரு யாகத்தை அழித்த;
5)
குங்கும சந்தனம் ஏற்றருள் ஈசன்
பங்கய மாலைஉ கந்தருள் ஈசன்
தங்கிய முன்வினை சாய்த்தருள் ஈசன்
.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்
பங்கய மாலை உகந்து அருள் - தாமரைமாலையை விரும்பி ஏற்கின்ற;
தங்கிய முன்வினை - சஞ்சிதம்; (தங்குதல் - to remain; to exist);
சாய்த்து அருள் - அழித்து அருள்கின்ற; (சாய்த்தல் - கெடுத்தல் - To destroy);
6)
பல்லிமை யோர்கணம் முன்பணி ஈசன்
நல்லுளம் அன்பொடு நாடிடும் ஈசன்
எல்லியொர் கோடிநி கர்த்தொளிர் ஈசன்
.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்
பல் இமையோர் கணம் முன் பணி - பல தேவகூட்டங்கள் வணங்குகின்ற; ("பல தேவர்களும் பூதகணங்களும் வணங்குகின்ற" என்றும் பொருள்கொள்ளலாம்);
நல் உளம் அன்பொடு நாடிடும் - நல்ல உள்ளம் உடையோர் பக்தியோடு போற்றுகின்ற;
எல்லி ஒர் கோடி நிகர்த்து ஒளிர் - ஒரு கோடி சூரியர்கள் போல் ஒளிவீசுகின்ற; (எல்லி - சூரியன்);
7)
எண்மல ரால்தொழு தேத்திடும் ஈசன்
எண்ணிலி அண்டமெ லாம்படை ஈசன்
மண்ணினர் எண்கலி தீர்த்தருள் ஈசன்
.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்
எண்மலரால் தொழுது ஏத்திடும் - அஷ்டபுஷ்பங்களால் வழிபாடு செய்யப்பெறுகின்ற;
(அகமலர்கள் எட்டு, புறமலர்கள் எட்டு. அப்பர் தேவாரம் - 5.54.1 - "எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி");
எண்ணிலி அண்டம் எலாம் படை - எண்ணற்ற அண்டசராசரங்களைப் படைக்கின்ற;
மண்ணினர் எண்கலி தீர்த்து அருள் - மனிதர்களுடைய எட்டு வகையான தரித்திரங்களைத் தீர்த்து அருள்கின்ற; (கலி - தரித்திரம்);
8)
வானவ ருங்குரு வுந்தொழும் ஈசன்
வானல ரால்அடி வாழ்த்திடும் ஈசன்
மானமி லங்கிய வான்பொருள் ஈசன்
.. நான்பணி கின்றதும் அப்பணி ஈசன்
வானவரும் குருவும் தொழும் - தேவர்களும் தேவகுருவும் தொழுகின்ற;
வான் அலரால் அடி வாழ்த்திடும் - தேவலோகத்துப் புஷ்பங்களால் திருவடியைப் போற்றுகின்ற;
மானம் இலங்கிய வான் பொருள் - மேன்மை விளங்கிய பரம்பொருள்; (மானம் - உயர்வு; பெருமை); (வான் பொருள் - எட்டாத பொருள்) (திருவாசகம் - திருச்சாழல் - 10 - "தானந்தம் இல்லான் ... வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ");
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Super Sir!
--
--
குறையா? சிவசிவா! நினைத்துப் பார்க்க முடியுமா? அற்புதம்!சிந்தனைக்கு:ஈசாஷ்டகமாகத் தெரிகிறது. 'லிங்க' வடிவம் எங்கும் குறிக்கப் படவில்லை. தமிழர்கள் மனத்தில் லிங்கம் என்றால் ஈசனே தோன்றுவதால் ஈசன் லிங்கமாக மாற்றப் படலாம். 'நான் பணிகின்றதும் அச்சிவ லிங்கம்' என்றிருந்தால் லிங்காஷ்டகம் படித்த உணர்வே வரும் என்று நினைக்கிறேன்.நல்வாழ்த்துக்களுடன்,கோபால்.
2015-12-25
Lingashtakam - My Tamil translation
லிங்காஷ்டகம் - என் மொழிபெயர்ப்பில் - Version-2
--------------------------------------------
("தானன தானன தானன தானா" என்ற சந்தம்.
முதற்சீர் தனதன என்றும் வரலாம்)
(ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்மமுராரிசுரார்சிதலிங்கம்)
1)
நான்முகன் நாரணன் வான்தொழு லிங்கம்
ஊனமி லாஒளி யாய்த்திகழ் லிங்கம்
வான்பிணி தீர்த்தருள் நல்கிடு லிங்கம்
.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்
வான் - தேவர்;
ஊனம் - குறைவு; குற்றம்;
வான்பிணி - பெரும்பிணி - பிறவிப்பிணி;
நாநித மேத்தும தேசிவ லிங்கம் - (என்) நா நிதம் ஏத்தும் அதே சிவ லிங்கம் / நாம் நிதம் ஏத்தும் அதே சிவலிங்கம்;
2)
பன்முனி வான்அடி வாழ்த்திடு லிங்கம்
மன்மத னைப்பொடி ஆக்கிய லிங்கம்
முன்னவு ணன்முடி பத்தடர் லிங்கம்
.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்
பன்முனி வான் - பல் முனி வான் - பல முனிவர்களும் தேவரும்;
முன் அவுணன் முடி பத்து அடர் - முன்னம் அரக்கனான இராவணனுடைய பத்துத் தலைகளை நசுக்கி அவன் கர்வத்தை அழித்த;
3)
சந்தனம் மாமல ரால்தொழு லிங்கம்
சிந்தைம யக்கைஅ றுத்தருள் லிங்கம்
அந்தரர் சித்தரெ லாம்பணி லிங்கம்
.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்
சிந்தை மயக்கை அறுத்து அருள் - மனமயக்கத்தைத் தீர்த்துத் தெளிவை அளித்து அருளும்;
அந்தரர் - தேவர்கள்;
4)
பொன்மணி ஆகமி லங்கிடு லிங்கம்
பன்னக நாணைஅ ரைக்கணி லிங்கம்
முன்னொரு வேள்வித கர்த்தருள் லிங்கம்
.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்
பொன் மணி ஆகம் இலங்கிடு - 1) பொன்னும் மணியும் மேனியில் விளங்குகின்ற; 2) பொன் போல் அழகிய மேனி விளங்குகின்ற (பொன்னார் மேனியன்);
பன்னக நாணை அ\ரைக்கு அணி - பாம்பை அரைநாணாக அணிகின்ற; (பன்னகம் - பாம்பு);
முன் ஒரு வேள்வி தகர்த்து அருள் - முன்னர் (தக்கன் செய்த) ஒரு யாகத்தை அழித்த;
5)
குங்கும சந்தனம் ஏற்றருள் லிங்கம்
பங்கய மாலைஉ கந்தருள் லிங்கம்
தங்கிய முன்வினை சாய்த்தருள் லிங்கம்
.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்
பங்கய மாலை உகந்து அருள் - தாமரைமாலையை விரும்பி ஏற்கின்ற;
தங்கிய முன்வினை - சஞ்சிதம்; (தங்குதல் - to remain; to exist);
சாய்த்து அருள் - அழித்து அருள்கின்ற; (சாய்த்தல் - கெடுத்தல் - To destroy);
6)
பல்லிமை யோர்கணம் முன்பணி லிங்கம்
நல்லுளம் அன்பொடு நாடிடு லிங்கம்
எல்லியொர் கோடிநி கர்த்தொளிர் லிங்கம்
.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்
பல் இமையோர் கணம் முன் பணி - பல தேவகூட்டங்கள் வணங்குகின்ற; ("பல தேவர்களும் பூதகணங்களும் வணங்குகின்ற" என்றும் பொருள்கொள்ளலாம்);
நல் உளம் அன்பொடு நாடிடு - நல்ல உள்ளம் உடையோர் பக்தியோடு போற்றுகின்ற;
எல்லி ஒர் கோடி நிகர்த்து ஒளிர் - ஒரு கோடி சூரியர்கள் போல் ஒளிவீசுகின்ற; (எல்லி - சூரியன்);
7)
எண்மல ரால்தொழு தேத்திடு லிங்கம்
எண்ணிலி அண்டமெ லாம்படை லிங்கம்
மண்ணினர் எண்கலி தீர்த்தருள் லிங்கம்
.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்
எண்மலரால் தொழுது ஏத்திடும் - அஷ்டபுஷ்பங்களால் வழிபாடு செய்யப்பெறுகின்ற;
(அகமலர்கள் எட்டு, புறமலர்கள் எட்டு. அப்பர் தேவாரம் - 5.54.1 - "எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி");
எண்ணிலி அண்டம் எலாம் படை - எண்ணற்ற அண்டசராசரங்களைப் படைக்கின்ற;
மண்ணினர் எண்கலி தீர்த்து அருள் - மனிதர்களுடைய எட்டு வகையான தரித்திரங்களைத் தீர்த்து அருள்கின்ற; (கலி - தரித்திரம்);
8)
வானவ ருங்குரு வுந்தொழு லிங்கம்
வானல ரால்அடி வாழ்த்திடு லிங்கம்
மானமி லங்கிய வான்பொருள் லிங்கம்
.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்
வானவரும் குருவும் தொழும் - தேவர்களும் தேவகுருவும் தொழுகின்ற;
வான் அலரால் அடி வாழ்த்திடும் - தேவலோகத்துப் புஷ்பங்களால் திருவடியைப் போற்றுகின்ற;
மானம் இலங்கிய வான் பொருள் - மேன்மை விளங்கிய பரம்பொருள்; (மானம் - உயர்வு; பெருமை); (வான் பொருள் - எட்டாத பொருள்) (திருவாசகம் - திருச்சாழல் - 10 - "தானந்தம் இல்லான் ... வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ");
** திருவாசகம் - சிவபுராணம் - ஈற்றடிகள் :
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
2015-12-25 11:14 GMT+05:30 Vis Gop <vis...@gmail.com>:குறையா? சிவசிவா! நினைத்துப் பார்க்க முடியுமா? அற்புதம்!சிந்தனைக்கு:ஈசாஷ்டகமாகத் தெரிகிறது. 'லிங்க' வடிவம் எங்கும் குறிக்கப் படவில்லை. தமிழர்கள் மனத்தில் லிங்கம் என்றால் ஈசனே தோன்றுவதால் ஈசன் லிங்கமாக மாற்றப் படலாம். 'நான் பணிகின்றதும் அச்சிவ லிங்கம்' என்றிருந்தால் லிங்காஷ்டகம் படித்த உணர்வே வரும் என்று நினைக்கிறேன்.நல்வாழ்த்துக்களுடன்,கோபால்.நான் சொல்ல நினைத்ததுவும் இதுவே. லிங்காஷ்டகம் என்றால் லிங்கம் கீவேர்ட்.நான்பணி வதுவும் அதேசிவலிங்கம்--அங்கே ஒரு நெடில் வேண்டும் என்பதற்காகவும் ஓசைக்காகவும்.
--அன்புடன்,
ஹரிகி.
சிவ சிவ! எளிமை, இனிமை, புதுமை! ஆக மொத்தமே அருமை! கோபால் சொல்வதுபோல் ஈசன் என்பதை லிங்கமாக மாற்றி, ஈற்றடியையும் கோபால் சொல்வதுபோல் மாற்றிவிட்டால், இது லிங்காஷ்டகமேதான்.. நான் பாடிப்பார்த்தேன்.. மனதுக்கு இதம், பாடுவதற்கு சுகம்!
Super Sir!
On Dec 25, 2015 5:23 AM, "Siva Siva" <naya...@gmail.com> wrote:Please highlight any errors or other potential defects.
இவ்வமைப்பைக் கலிவிருத்தம் என்று கருதலாமா? அன்றேல், மூன்றடிமேல் வைப்பு என்று கொள்ளலாமா?
--
இலந்தைகனியெனத் தந்த கவிஅருமையான பொருத்தமான ஆற்றொழுக்கான மொழியாக்கம். மூன்றடி மேல் வைப்பென்பதே முறைஇனிமை யாக இலிங்காஷ் டகத்தைக்2015-12-25 7:55 GMT-06:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:அருமை! மூன்றடிமேல் வைப்பு என்றே கொள்ளலாம் என்று தோன்றுகிறது.2015-12-25 8:50 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:On Dec 25, 2015 5:23 AM, "Siva Siva" <naya...@gmail.com> wrote:Please highlight any errors or other potential defects.
இவ்வமைப்பைக் கலிவிருத்தம் என்று கருதலாமா? அன்றேல், மூன்றடிமேல் வைப்பு என்று கொள்ளலாமா?
பசுபதி
சிவபக்தர்கள் மிகவும் விரும்பிப் படிக்கும் துதிகளுள் ஒன்றான
லிங்காஷ்டகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தது ஒரு சிறந்த தொண்டு. திருவாதிரைத் திருநாளை ஒட்டி இது கிட்டியது பெரும் பேறு.
..அனந்த்
குறிப்பு:
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். Since you mentioned "I look forward to further feedback" here are some thoughts:
1. நண்பர்கள் விரும்பியது போலத் திருத்தி அமைத்த, சந்தம் நிறைந்த,
ஈற்றடி (நாநித மேத்தும தேசிவ லிங்கம்) மிக அருமை.
2. மூல ஸ்தோத்திரத்தில், வானவரைக் குறிப்பதான, ஸுர என்பது 4 இடங்களிலும், ’தேவ’ 2 இடங்களிலும் வருகிறது. மொழிபெயர்ப்பில், வான், இமையோர், அந்தரர், வானவர் என்று பலவகையாக அமைத்திருப்பது அழகு. எனினும், ‘வான்’ என்னும் சொல் (பொருள் வேறுபாடுடன்) மூன்று
பாடல்களில் வருகிறது. முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.
நான்முகன் நாரணன் வான்தொழு லிங்கம் (பாடல் 1)
வான்பிணி தீர்த்தருள் நல்கிடு லிங்கம் (பாடல் 1)
பன்முனி வான்அடி வாழ்த்திடு லிங்கம் (2)
மானமி லங்கிய வான்பொருள் லிங்கம் (8)
3. மூலத்தில், அடிகளின் மூன்றாவது சீரில் நெடிலோசை பயிலும்படி, நீங்கள் சுட்டிய "தானன தானன தானன தானா" என்ற சந்தம் அமைந்துளது (பாடல் 2-ல் ஓரடியைத் தவிர). மொழிபெயர்ப்பில், இவ்வாறு இல்லாதிருப்பினும், பொதுவாக அதே சந்த ஓசை பயில்கிறது. எனினும் ”முன்னவு ணன்முடி *பத்தடர் லிங்கம்” போன்ற அடிகளில், சந்த ஓசை
சற்றுக் குறைவதாகப் படுகிறது.
4. பாடல் 3 மூலத்தில் காணும் 'ஸர்வ ஸுகந்தி விலேபித (सर्वसुगन्धिसुलेपित - “...smeared with various perfumes") என்னும் இடம் “சந்தனம் மாமல ரால்தொழு” என்று மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. [சந்தனம் என்பது பாடல் 5-ல் (குங்கும சந்தனம் ஏற்றருள்...) மீண்டும் வருவதைக் காணலாம். அங்கு அது சரியானதே. மூலத்திலும் அவ்வாறே உள்ளது.
..அனந்த்
ஆழ்ந்து படித்து, மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக், கருத்துச் சொல்லியிருக்கின்றீர்கள்.
1. கருத்தறிந்து மகிழ்ந்தேன்.
2. பாடல்களை எழுதும்போது 'வான்' என்ற சொல் வெவ்வேறு பொருள்களில் வருவதைப் பற்றிச் சிந்தித்திலேன். அடிகளின் அளவினாலும், சந்தக் கட்டுப்பாட்டினாலும், மூலக் கருத்துகளை ஒட்டி அமையவேண்டுவதினாலும் இப்படி அமைந்ததுபோலும்.
3. கூர்ந்து நோக்கியிருக்கின்றீர்கள். தமிழில் பல சந்தப்பாடல்களில் - நெடில் / குறில்+ஒற்று - இவை பெரும்பாலும் ஒரே மாதிரி கருதப்படுகின்றன என்ற எண்ணத்தில் அப்படிப் பிரயோகித்தேன். நீங்கள் சுட்டியவாறு, மூலத்திலும் ஓர் இடத்தில் அப்படி அமைந்துள்ளதால், மூலத்திலும் அவ்விடத்தில் ஓசை குறைவதாகக் கருதவேண்டுமா?
4. சமஸ்கிருத அகராதியிற் காண்பது:
अनुलेपः लेपनम् 1 Unction, anointing, smearing. -2 Ointment, unguent such as sandal juice, oil &c.; any emollient or oily application; ˚आर्द्रमृदङ्गध्वनि K.28 rubbed with paste; सुरभिकुसुमधूपानुलेपनानि K.324.
ஆகவே, சந்தனம் பொருந்தும் என்று எண்ணுகின்றேன். (சந்தனம் - Sandal paste; அரைத்த சந்தனம்); மாமலர் - பூக்களை அடிப்படையாகக் கொண்டு பல வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுவதால் அவ்வாறு கொண்டேன்; (உதாரணம் - பன்னீர்);
படித்துக் கருத்துச் சொன்ன அனைவர்க்கும் என் வணக்கம்.I have attached the pdf version of the file.(I have also attached a version of the original lingashtakam. - I think there may be some minor variations - "pAdabEdham" in the original lingashtakam).Regards,V. Subramanian
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
<Lingashtakam - Tamil - V Subramanian.mp3>
4. சமஸ்கிருத அகராதியிற் காண்பது:
अनुलेपः लेपनम् 1 Unction, anointing, smearing. -2 Ointment, unguent such as sandal juice, oil &c.; any emollient or oily application; ˚आर्द्रमृदङ्गध्वनि K.28 rubbed with paste; सुरभिकुसुमधूपानुलेपनानि K.324.
ஆகவே, சந்தனம் பொருந்தும் என்று எண்ணுகின்றேன். (சந்தனம் - Sandal paste; அரைத்த சந்தனம்); மாமலர் - பூக்களை அடிப்படையாகக் கொண்டு பல வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுவதால் அவ்வாறு கொண்டேன்; (உதாரணம் - பன்னீர்);
சிந்தைம யக்கைஅ றுத்தருள் லிங்கம்
அந்தரர் சித்தரெ லாம்பணி லிங்கம்
.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்
Thanks to everyone providing feedback.
In the original lingashtakam, some phrases/concept repeat in more than one verse. (For example, Devas worshipping)./So, can I use சந்துகந் தேந்தியன் பர்தொழு லிங்கம் when I quote your Lingashtakam/When one is quoting, whatever is being quoted should not be changed from what the original author wrote.When one is writing a commentary, or when one is translating, different interpretations are possible - based various perspectives.
சமஸ்கிருதத்தில் உள்ள லிங்காஷ்டகம் அதன் யாப்பு :
(Lingashtakam meter info provided by J.K.Mohana Rao):
brahma murAri surArchita liMgaM - taraMgaka / dOdhaka
dinakarakOTi prabhAkara liMgaM - kamalavilAsinI / tAmarasa / lalitapadA
suraguru suravara pUjita liMgaM - kamalalOchanA / kamalAkshI / chaMDI
parAtparaM paramAtmaka liMgaM - unknown
Some stanzas like 3, 5, 7 are mixtures of different metres. Such mixed metres are called upajAti in Sanskrit.
last one (phalasruthi) is SlOka
FYI
வி. சுப்பிரமணியன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
For Sanskrit verses and an English translation:http://sanskritdocuments.org/doc_shiva/lingashhMean.html?lang=saAdditional info on meters used in Lingashtakam Sanskrit version:சமஸ்கிருதத்தில் உள்ள லிங்காஷ்டகம் அதன் யாப்பு :
(Lingashtakam meter info provided by J.K.Mohana Rao):
brahma murAri surArchita liMgaM - taraMgaka / dOdhaka
dinakarakOTi prabhAkara liMgaM - kamalavilAsinI / tAmarasa / lalitapadA
suraguru suravara pUjita liMgaM - kamalalOchanA / kamalAkshI / chaMDI
parAtparaM paramAtmaka liMgaM - unknown
Some stanzas like 3, 5, 7 are mixtures of different metres. Such mixed metres are called upajAti in Sanskrit.
படித்துக் கருத்துச் சொன்ன அனைவர்க்கும் என் வணக்கம்.I have attached the pdf version of the file.(I have also attached a version of the original lingashtakam. - I think there may be some minor variations - "pAdabEdham" in the original lingashtakam).Regards,V. Subramanian2015-12-25 9:36 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:இலந்தைகனியெனத் தந்த கவிஅருமையான பொருத்தமான ஆற்றொழுக்கான மொழியாக்கம். மூன்றடி மேல் வைப்பென்பதே முறைஇனிமை யாக இலிங்காஷ் டகத்தைக்2015-12-25 7:55 GMT-06:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:அருமை! மூன்றடிமேல் வைப்பு என்றே கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
--
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/Ky_ppwIyhdQ/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
அருமை. அருமை.நாநிதம் ஏத்துச தாசிவ லிங்கம் என்பதும் பொருந்தும்.
பாடல்-3 அடி-1: மாற்றிய வடிவம்:
Old: /சந்தனம் மாமல ரால்தொழு லிங்கம் /
Updated: கந்தம லிந்திடு பூச்சணி லிங்கம்
கந்தம் மலிந்திடு பூச்சு அணி - வாசனை மிகுந்த கலவைச்சாந்து முதலியவற்றை அணிந்தருளும்; (பூச்சு - smearing, anointing; தடவுதல்; பூசுதல்);
வி. சுப்பிரமணியன்
பாடல்-2 அடி-3: மாற்றிய வடிவம்:
Old: /முன்னவு ணன்கரு வம்தகர் லிங்கம் /
Updated: முன்னம ரக்கனை ஊன்றிய லிங்கம்
முன்னம் அரக்கனை ஊன்றிய - முன்பு (தனது ஆணவத்தால் கயிலையைப் பெயர்த்த) இராவணனை நசுக்கி அவனது கர்வத்தை அழித்த;
(ஊன்றுதல் - அமுக்குதல்; நசுக்குதல்); (அப்பர் தேவாரம் - 4.74.10 - "திரண்ட திண்டோள் அரக்கனை ஊன்றி");
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN4wGFO5-uE_p6r9RioVe%2Br9x2O6UXoZ%3DKmGNMGvUiiNw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKMOGcA1nPPDqBRbhL5zUVCwVHLPoQe1PLEeKPPT1czV95b64g%40mail.gmail.com.
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP9rOe%3D555Smy327-bqzLSRVAafA_VHmxewB5H-ObpOJw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOFwTNh7x%2B6FhkcMysektQ2EL%3DouuENmjJOpAt7go22GQ%40mail.gmail.com.
On 7 Nov 2023, at 00:32, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMRBBmnZPra3bhVRP2PY8ciSCk6TUz5NSDitOSodNQpSw%40mail.gmail.com.