பாரதி பற்றி உவேசா சொற்பொழிவு = கீதம்மாவுக்கு சமர்ப்பணம்

251 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Feb 11, 2010, 12:49:56 AM2/11/10
to mintamil, santhavasantham

உ வே சாமிநாதையர், பாரதியை ஒரு கவிஞனாகவே மதிக்கவில்லை என்று ஏதோ ஒரு மலரில் வந்திருந்ததாக அண்மையில் கீதம்மா இங்கே குறிப்பிட்டதும், நான் அதை மறுத்ததும் நினைவிருக்கும்.  சந்தவசந்தம் என்ற மின்மடற் குழுவில் (மரபுக் கவிதைகளக்காகவே நடத்தப்படும் எக்ஸ்ளூசிவ் மரபுக் கவிதை குழு)  வெண்பாவிரும்பி என்ற புனைபெயரில் வெண்பாக்களையும் விருத்தங்களையும் இயற்றும் திரு சிவகுமார் அவர்கள் (அறிவியல் துறையில் நல்ல பதவியில்--கனடாவிலா அமெரிக்காவிலா என்பது நினைவில்லை--பணியாற்றிக் கொண்டிருக்கிறார்).  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, உவேசா போன்றவர்களிடம் பேரன்பு பூண்டவர்.  (பாரதியைப் பற்றி சொல்லவே தேவையில்லை.) தன்னுடைய விலைமதிப்பற்ற நேரத்தைச் செலவழித்து,  உவேசா நிகழ்த்திய இந்தச் சொற்பொழிவை மின்பதிப்பாக்கி சந்தவசந்தக் குழுவில் தந்திருக்கிறார்.  

பாரதி எழுத்துகளின்மேல் பர்மா அரசாங்கம் 1928ல் தடை விதித்தது.  உடனே சென்னையிலும் அந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சென்னையில் பாரதி பிரசுராலயம் சீல் வைக்கப்பட்டு, கையிருப்பில் இருந்த அத்தனை (விற்பனைக்கான) பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.  பிறகு சத்தியமூர்த்தி சட்டசபையில் கொண்டுவந்த ஒத்திவைப்பு பிரேரணை வெற்றிபெற்று, பாரதி பாடல்களின்மேல் இருந்த அரசாங்கத் தடை அகன்றது.  மக்கள் மத்தியில் பாரதியின் பெயர் பரவலாகத் தொடங்கியிருந்தது.

மக்கள் பாரதியை உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள்.  ஆனால், பண்டிதர்கள் பாரதியை அவ்வளவு லேசில் ஒப்புக்கொள்வதாயில்லை.  முண்டாசு கட்டிக்கொண்ட பண்டாரக் கவிஞன்’ என்று புலவர் வட்டாரத்தில் பாரதிக்கு நல்ல பெயர் இருந்தது.  (அதெல்லாம் ஒரு மேட்டிமைதான்.  அந்த வியாதி இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  விமர்சக மஹா சார்வபௌமாக்கள் எது கவிதை, எது கவிதையில்லை என்றெல்லாம் இன்னமும்கூட தாசீல் பண்ணாமலா இருக்கிறார்கள்!  போயிட்டுப் போவுது.  அவுங்களுக்கு ரசனைத் திறத்தை அநியாயத்துக்கு அதிகமாக ஆண்டவன் அள்ளிக் கொடுத்துவிட்டான்.  அதனால்தான் துள்ளித் ததும்புகிறது. :D)  ‘

பாரதியார் அண்ணாவி புலவர் என்பார்
கல்வியினில் பழக்கம் இல்லார்
சீரறியார் தளையறியார் பல்லக் கேறுவார்
புலமை செலுத்திக் கொள்வார்
ஆரணியும் தண்டலை நீள்நெ றியாரே
இலக்கணநூல் அறியா ரேனும்
காரிகையா கிலும்கற்றுக் கவிதை சொல்லார்
பேரிகொட்டக் கடவர் தாமே

என்று பாரதியின் பேரில் பாட்டே இயற்றப்பட்டிருந்தது.  இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், மக்களுடைய அங்கீகாரம் கிடைத்தும், புலவர்கள் காய்ந்து கொண்டிருந்த நிலைமை இருந்த சந்தர்ப்பத்தில், 1936ம் வருடம் பண்டிதர்களுக்கெல்லாம் பண்டிதரான மஹாமஹோபத்தியாய உ வே சாமிநாதையர் ஆற்றிய சொற்பொழிவு இது.  

கீதம்மா மட்டும் அந்தக் கடிதத்தை அனுப்பியிராவிட்டால், எனக்கு இந்தச் சொற்பொழிவை இங்கே இடவேண்டும் என்ற எண்ணமே எழுந்திருக்கப் போவதில்லை.  வெண்பாவிரும்பியின் அனுமதிக்குக் காத்திராமல் இதோ அந்தச் சொற்பொழிவை இங்கே இடுகிறேன்.  வெண்பாவிரும்பிக்கு நன்றி. கீதம்மாவுக்கு இது சமர்ப்பணம்.  மரபுக் கவிதை இயற்றி இம்சிக்கும் மகாபாவிகளுக்கு என் அன்புப் பரிசு.  



1936-ஆம் ஆண்டில் அகில இந்தியக் காங்கிரஸின் பொன்விழாவில் சென்னைக்காங்கிரஸ் மண்டபத்தில் பாரதியாருடைய படம் திறக்கப்பட்டபோது ஐயரவர்கள்(தம் 81-ஆம் பிராயத்தில்) செய்த பிரசங்கம்



பிறந்த தேசம், பழகும் மனிதர்கள் முதலிய தொடர்புகளால் ஒருவருடையவாழ்க்கையில் சில பழக்கங்கள் அமைகின்றன.  ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்எட்டயபுரத்திற் பிறந்தவர்.  இவர் பிறந்த பாண்டி நாடு தமிழுக்கு உரியநாடு.  தமிழ் நாடென்று பழைய காலத்தில் அதற்குத் தான் பெயர்.கம்பராமாயணத்தில் ஆஞ்சநேயர் முதலியவர்கள் சுக்கிரீவனால் தென் தேசத்துக்குஅனுப்பப்பட்ட போது அங்கே உள்ளவற்றைச் சுக்கிரீவன் சொல்லுவதாக உள்ளபகுதியொன்றுண்டு; அங்கே ஒரு பாட்டில்,

"தென்றமிழ்நாட் டகன்பொதியிற் றிருமுனிவன் தமிழ்ச்சங்கம சேர்கிற்பீற்
பீரேல் என்றுமவ ணுறைவிடமாம்"

என்று அவன் கூறியதாக இருக்கிறது; "நீங்கள் பாண்டிய நாட்டை அடைந்தால்,அங்கே உள்ள பொதியில் மலைக்கருகில் செல்லும்பொழுது போகும் காரியத்தைமறந்து விடக் கூடாது; ஏனென்றால் அம்மலையில் அகத்தியருக்குரிய தமிழ்ச்சங்கத்தை அணுகினால் தமிழ் நயத்தில் ஈடுபட்டுவிடுவீர்கள்" என்று அவன்சொன்னதாகத் தெரிகிறது.  இதனால் பாண்டி நாட்டின் பெருமைவெளிப்படுகிறதல்லவா?

பாரதியார் பிறந்த எட்டையபுர ஸமஸ்தானத்தில் பல வித்துவான்கள்இருந்தார்கள்.  அந்த ஸமஸ்தானத்து வித்துவானாகிய கடிகை முத்துப் புலவருடையபெருமையை யாரும் அறிவார்கள்.  அவருடைய மாணாக்கருள் ஒருவராகிய உமருப்புலவரென்னும் முகம்மதிய வித்துவான் முகம்மத் நபியின் சரித்திரமாகியசீறாப் புராணத்தை இயற்றியிருக்கிறார்.  அந்நூல் ஒரு தமிழ்க்காவியமாகஇருக்கிறது.  எட்டையபுரத்தில் அங்கங்கே உள்ளவர்கள் தமிழ்ப் பாடல்களைச்சொல்லியும் கேட்டும் இன்புற்று வருபவர்கள்.  இதனால் பாரதியாருக்கு இளமைதொடங்கியே தமிழில் விருப்பம்உண்டாயிற்று.  அது வர வர மிக்கது.

இவர் இளமையில் ஆங்கிலக் கல்வி கற்றார்.  தம்முடைய தமிழறிவை விருத்திசெய்துகொள்ளும் பொருட்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்திற் சேர்ந்து சில காலம்படித்தார்.  சிறு பிராயமுதற்கொண்டே இவருக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம்உண்டாயிற்று.  அக்காலத்திலேயே தேசத்தின் நிலைமை இவருடைய மனத்திற்பதிந்தது.  தெய்வத்தினிடத்திலும், தேசத்தினிடத்திலும், பாஷையினிடத்திலும்அன்பில்லதவர்களைக் கண்டு இவர் மிக வருந்தினார்.  முயற்சியும்சுறுசுறுப்பும் இல்லாமல் வீணாகக் காலத்தைப் போக்குபவர்களை வெறுத்தார்.புதிய புதிய கருத்துக்களை எளிய நடையில் அமைத்துப் பாடவேண்டுமென்றஉணர்ச்சி இவருக்கு வளர்ந்துகொண்டே வந்தது.

இவர் சிலகாலம் சேதுபதி ஹைஸ்கூலில் பண்டிதராக இருந்ததுண்டு.  பிறகு,சென்னைக்கு வந்தார்.  இங்கே ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயர் இவரிடத்தில்ஈடுபட்டுச் 'சுதேசமித்திரன்' உதவி ஆசிரியர்களுள் ஒருவராக இருக்கச்செய்தார்.  கட்டுப்பாடான வேலைகளைச் செய்வதிற் பிரியமில்லாத பாரதியார்அந்த வேலையில் அதிக காலம் இருக்கவில்லை.

சென்னையில் இவர் இருந்த காலத்தில், நான் இவரோடு பலமுறைபழகியிருக்கிறேன்.  பிரசிடென்ஸி காலேஜில் வாரந்தோறும் நடைபெறும் தமிழ்ச்சங்கக் கூட்டத்துக்கு வருவார்; பேசுவார்; புதிய பாட்டுக்களைப் பாடுவார்.வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களில் புதிய செய்யுட்கள் செய்து வாசிப்பார்.ஒரு முறை, ஸ்ரீ வி. கிருஷ்ணசாமி ஐயர் தலைமையில் அச்சங்கத்தில் ஸ்ரீ ஜி.ஏ. வைத்தியராமையர் பேசினார்.  கிருஷ்ணசாமி ஐயருடைய தமிழபிமானமும், தமிழ்வித்துவான்களை ஆதரிக்கும் இயல்பும் தெரியாத பலர், `இவருக்குத் தமிழ்ப்பாஷையில் பழக்கம் இல்லையே; தமிழில் என்ன பேசப் போகிறார்?' என்றுநினைத்தனர்.  அவரோ, "தமிழைப் பற்றி அதிகமாகப் பேசுவானேன்?  உலகத்திலுள்ளபல பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டு விளங்கும் திருக்குறளைத் திருவள்ளுவர்இயற்றிய பாஷை இந்தப் பாஷை.  நவரஸமும் பொருந்திய ராமாயணத்தைக் கம்பர்செய்த பாஷை இது.  எல்லோருடைய மனத்தையும் கரைத்து உருக்கித் தெய்வ பக்தியைஉண்டாக்கும் தேவாரத்தை நாயன்மார்கள் இயற்றிய பாஷை இது.  ஆழ்வார்கள்திவ்வியப் பிரபந்தத்தைப் பாடிய பாஷை இது" என்று உத்ஸாகத்தோடு பிரசங்கம்செய்தார்.  கேட்ட யாவரும் ஆச்சரியமுற்றார்கள்.  அந்தக் கூட்டத்திற்குவந்திருந்த பாரதியார், அந்தப் பிரசங்கத்தில் மிகவும் ஈடுபட்டார்.  பின்புகிருஷ்ணசாமி ஐயர் பாஷையின் பெருமையையும், தேசத்தின் பெருமையையும்வெளிப்படுத்தி யாவருக்கும் விளங்கும்படியான பாட்டுக்களைப் பாடியனுப்பவேண்டுமென்று என்னிடம் சொன்னார்.  எனக்கு அவகாசம் இல்லாமையால் வேறொருவரைஅனுப்பினேன்.  அவருடைய பாட்டுக்கள் அவருக்குத் திருப்தியை அளிக்கவில்லை.பிறகு பாரதியாரே அவருடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்தார்.  ஸ்ரீகிருஷ்ணசாமி ஐயரது பிரசங்கத்தில் இருந்த கருத்துக்களே பாரதியார், "கம்பன்பிறந்த தமிழ்நாடு" என்பது போன்ற பகுதிகளை அமைத்துப் பாடுவதற்குக் காரணமாகஇருந்தன.

தேசத்தின் பெருமையை யாவரும் அறிந்து பாராட்டும்படியான பாட்டுக்களைப்பாடவேண்டுமென்ற ஊக்கம் இவருக்கு நிரம்ப இருந்தது.  அதனால் இவர் பாடியபாட்டுக்கள் மிகவும் எளிய நடையில் அமைந்து படிப்பவர்களைத் தம்பால்ஈடுபடுத்துகின்றன.  இவர் உண்மையான தேச பக்தியுடன் பாடிய பாட்டுக்களாதலின்அவை இவருக்கு அழியாத பெருமையை உண்டாக்குகின்றன.

பாரதியார் தேசீயப் பாட்டுக்களைப் பாடியதோடு வேறு பல துறைகளிலும்பாடியிருக்கிறார்.  இசைப் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார்.  இவர்சங்கீதத்திலும் பழக்கம் உடையவர்.

கவிகளின் தன்மையை உபமானமாக அமைத்து ஒரு புலவர்,

"கல்லார் கவிபோற் கலங்கிக் கலைமாண்ட கேள்வி
 வல்லார் கவிபோற் பலவான்றுறை தோன்ற வாய்த்துச்
 செல்லாறு தோறும் பொருளாழ்ந்து தெளிந்து தேயத்
 தெல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ள இறுத்த தன்றே"

என்று சொல்லியிருக்கிறார்.  அதற்கேற்ப விளங்குபவை இவருடைய செய்யுட்கள்.இப்பாட்டில், "தேசத்து எல்லாரும் வீழ்ந்து பயன் கொள்ள" என்றது இவருடையபாட்டுக்களுக்கு மிக்க பொருத்தமுடையதாகும்.

பாட்டுக்களின் பாகம் ஐந்து வகைப்படும். அவை நாளிகேர பாகம், இக்ஷுபாகம், கதலீபாகம், திராக்ஷாபாகம், க்ஷீரபாகம் என்பனவாம்.  நாளிகேரபாக மென்பது தேங்காயைப் போன்றது. தேங்காயில் முதலில் மட்டையை உரிக்கவேண்டும்; பிறகு ஓட்டை நீக்கவேண்டும்; அதன் பிறகு துருவிப் பிழிந்து வெல்லம் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.  இந்த வகையிலுள்ள பாட்டுக்கள் சில உண்டு.  அதைப் பாடுபவர்கள் தம்முடன் அகராதியையும் எடுத்துக் கொண்டு போகவேண்டும்.  சில சமயங்களில் அவர்களுக்கே தாங்கள் செய்த பாட்டுக்களுக்கு அர்த்தம் விளங்காமற் போய்விடும்.

இக்ஷூபாகமென்பது கரும்பைப் போன்றது.  கரும்பைக் கஷ்டப்பட்டுப் பிழிந்துரசத்தை உண்ணவேண்டும்.  கதலீபாகமென்பது வாழைப்பழத்தைத் தோலுரித்துவிழுங்குவது போலச் சிறிது சிரமப்பட்டால் இன்சுவையை வெளிப்படுத்துவது.திராக்ஷா பாகம் முந்திரிப் பழத்தைப் போல் எளிதில் விளங்குவது. க்ஷீரபாகம்அதனிலும் எளிதில் விளங்குவது; குழந்தை முதல் யாவரும்உண்பதற்குரியதாகவும், இனிமை தருவதாகவும் உடலுக்கும் அறிவுக்கும் பயன்தருவதாகவும் இருக்கும் பாலைப்போல் இருப்பது.  பாரதியாருடைய கவிகள் க்ஷீரபாகத்தைச் சார்ந்தவை.  சிலவற்றைத் திராக்ஷாபாகமாகக் கொள்ளலாம். 

ஆங்கிலம், வங்காளம் முதலிய பாஷைகளிற் பழக்கமுடையவராதலால் அந்தப்பாஷைகளிலுள்ள முறைகளை இவர் தம் கவிகளில் அமைத்திருக்கிறார்.  இவருடையகவிதைகள் ஸ்வ்பாவோக்தியென்னும் தன்மை நவிற்சியணியையுடையவை.  பழையகாலத்தில் இருந்த சங்கப் புலவர்கள் பாடல்களில் தன்மைநவிற்சிதான்காணப்படும்.  அநாவசியமான வருணனைகளும் சொல்லடுக்குகளும் கவியின் ரசத்தைவெளிப்படுத்துவதில்லை.  சில காலங்களில் சில புலவர்கள் தங்கள்காலத்திலிருந்த சில ஜமீன்/தார்கள், பிரபுக்கள் முதலியவர்களுடையவற்புறுத்தலுக்காக அநாவசியமான வருணனைகளை அமைத்ததுண்டு.

பாரதியாருடைய பாட்டுக்களில் தெய்வ பக்தியும் தேச பக்தியும்ததும்புகின்றன.  தனித்தனியாக உள்ள பாட்டுக்கள் இயற்கைப் பொருள்களின் அழகைவிரித்தும், நீதிகளைப் புகட்டியும், உயர்ந்த கருத்துக்களைப்புலப்படுத்தியும் விளங்குகின்றன.

இவருடைய வசனத்தைப்பற்றிச் சில சொல்ல விரும்புகிறேன். பாட்டைக் காட்டிலும்வசனத்திற்குப் பெருமை உண்டாயிருப்பதின் காரணம் அது பாட்டைவிட எளிதில்விளங்குவதனால்தான்.  பாரதியாருடைய பாட்டும் எளிய நடையுடையது; வசனமும்எளிய நடையுடையது.  வருத்தமின்றிப் பொருளைப் புலப்படுத்தும் நடைதான்சிறந்தது.  பாரதியாருடைய வசனம் சிறு வாக்கியங்களால் அமைந்தது; அர்த்தபுஷ்டியுடையது.  இவருடைய கவிகளின் பொருள் படிக்கும்போதே மனத்தில்பதிகின்றது.  வீர ரசம், சிருங்கார ரசம் ஆகிய இரண்டும் இவருடையபாட்டுக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.  பாரதியார் அழகாகப் பேசும்ஆற்றல் வாய்ந்தவர்.

இவருடைய பாட்டுக்கள் எல்லோருக்கும் உணர்ச்சியை உண்டாக்குவன; தமிழ்நாட்டில் இவருடைய பாட்டை யாவரும் பாடி மகிழ்வதனாலேயே இதனை அறிந்துகொள்ளலாம்.  கடல் கடந்த தேசங்களாகிய இலங்கை, பர்மா, ஜாவா முதலியஇடங்களிலும் இவருடைய பாட்டுக்கள் பரவியிருக்கின்றன.  அங்கே உள்ளவர்களில்சிலர் இவரைப் பற்றி எழுத வேண்டுமென எனக்குக் கடிதங்கள் எழுதியதுண்டு."மணவைமகன் கூத்தன் வகுத்தகவி, தளைபட்ட காலுட னேகட லேழையுந் தாண்டியதே"என்று ஒரு புலவருடைய கவியைப்பற்றி வேறொரு புலவர் பாடியிருக்கிறார்.  ஸ்ரீராமனுடைய கவியாகிய ஆஞ்சனேயர் ஒரு கடலைத்தான் தாண்டினார்; மணவைக் கூத்தன்கவியோ ஏழு கடல்களையும் தாண்டிவிட்டது.  ஸ்ரீ ராமனுடைய கவி தளையில்லாமல்தாண்டியது; அங்ஙனம் செய்தது ஆச்சரியமன்று.  இந்தப் புலவர் கவியோ,தளையுடைய காலோடு ஏழு கடலைத் தாண்டியது என்கிறார்.  தளையென்பதற்குவிலங்கென்றும் கவிக்குரிய லக்ஷணங்களுள் ஒன்றென்றும் பொருள்.  இந்தப்பாட்டுக்கு இப்போது இலக்கியமாக இருப்பவை பாரதியாருடைய கவிகளாகும்.

பாரதியார் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், ஜனங்களுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்ற கொள்கையையுடையவர்.  தைரியமுடையவர்.  இவருடைய புகழ் தமிழ் நாட்டின் புகழாகும்.




--
அன்புடன்,
ஹரிகி.

Kaviyogi Vedham

unread,
Feb 11, 2010, 8:07:52 AM2/11/10
to santhav...@googlegroups.com, kaviyog...@gmail.com
என் நண்பர்தான் அவர்...சிவகுமார்..டெக்ஸாஸ்..(அமெரிக்கா)ஸில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்...கூடவே நல்ல ‘செந்தமிழ்’ நடையில்
அற்புத வெண்பாக்களும் இயற்றுவதே (இயற்றி நம் மூளைக்கு சதா.. வேலை கொடுப்பதே)அவரது ‘ஹாபி’
 யோகியார்

2010/2/11 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
யோகியார். வேதம்.(Yogiyar vedham)
Anaivarum vaazhga vaLamudan!--..
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600041
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-41(போன் 64565979)-
*****************************

Kaviyogi Vedham

unread,
Feb 11, 2010, 8:13:05 AM2/11/10
to santhav...@googlegroups.com
 மரபுக் கவிதை இயற்றி இம்சிக்கும் மகாபாவிகளுக்கு என் அன்புப் பரிசு.
 (ஹரி கிருஷ்ணன்.. என்ற அற்புதக் கட்டுரையாளன்)..
 ...
அட! ஹரீ!.. என்னய்யா.. இப்படிச்சொல்லி உன்போன்ற என்போன்ற தலைவர் இலந்தை போன்ற
 அழகிய? மரபுக்கவிஞர்களை மனசு நோகடித்துவிட்டாய்!..சே சே!
 யோகியார்
 &&&&&&&&&&&&&&&&&&&&&&



2010/2/11 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Hari Krishnan

unread,
Feb 11, 2010, 10:35:12 AM2/11/10
to santhav...@googlegroups.com


2010/2/11 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

 மரபுக் கவிதை இயற்றி இம்சிக்கும் மகாபாவிகளுக்கு என் அன்புப் பரிசு.
 (ஹரி கிருஷ்ணன்.. என்ற அற்புதக் கட்டுரையாளன்)..
 ...
அட! ஹரீ!.. என்னய்யா.. இப்படிச்சொல்லி உன்போன்ற என்போன்ற தலைவர் இலந்தை போன்ற
 அழகிய? மரபுக்கவிஞர்களை மனசு நோகடித்துவிட்டாய்!..சே சே!
 யோகியார்
 &&&&&&&&&&&&&&&&&&&&&&

யோகிண்ணா!

திரிசமன் பண்றதுக்கு ஒரு அளவில்லையா?  நீர் அங்கேயும் இருக்கிறீர் இங்கேயும் இருக்கிறீர்.  எது, எதற்காக, என்ன காரணத்துக்காகச் சொல்லப்படுகிறது என்பது உங்களுக்கே தெரியும்.  இங்க வந்து இந்தக் கேள்வி கேக்கறீங்களே, நாயமா?

அங்கே என்னென்ன அல்லோலகல்லோலம் எல்லாம் வெண்பாவிரும்பயின் உபகாரத்தால் கிளம்பி,உவேசா மேல் அடிக்கப்பட்ட தாரை எல்லாம் வழித்து எடுத்திருக்கிறேன்.... அதப் பத்தி ஒண்ணுஞ் சொல்லாதீரு.....எங்கியோ எவனுக்கோ சொன்னதை இங்க வந்து முடியப் பாக்கலாமா?  நாயமா, யோகமா?  சிவகுமார் உமக்கு நம்பர்... அப்ப எனக்கு?

தலைவா!  நான் 1998.  கியாபகம் கீதா?

-- 

Hari Krishnan

unread,
Feb 11, 2010, 10:21:02 PM2/11/10
to santhav...@googlegroups.com


2010/2/11 Hari Krishnan <hari.har...@gmail.com>



2010/2/11 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

 மரபுக் கவிதை இயற்றி இம்சிக்கும் மகாபாவிகளுக்கு என் அன்புப் பரிசு.
 (ஹரி கிருஷ்ணன்.. என்ற அற்புதக் கட்டுரையாளன்)..
 ...
அட! ஹரீ!.. என்னய்யா.. இப்படிச்சொல்லி உன்போன்ற என்போன்ற தலைவர் இலந்தை போன்ற
 அழகிய? மரபுக்கவிஞர்களை மனசு நோகடித்துவிட்டாய்!..சே சே!
 யோகியார்
 


நான் எங்கேயோ எதையோ குறிப்பிட்டு யாருக்கோ சொன்னதை, இங்கே வந்து (விளையாட்டுக்காகத்தான் செய்கிறார்; வெகுளி; மிக நல்ல 
மனிதர் என்பதெல்லாம் எனக்கு 1971 முதலே தெரியும்) ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துப் போட்டு அதற்கு ஒரு கேள்வியை 
வேறு கேட்டு வைத்துவிட்டால், நான் அந்த இன்னொரு குழுவில் என்ன நடந்தது என்பதைச் சொல்லியாக வேண்டிய நிரபந்தம் 
ஏற்படுகிறது.  இங்கே உள்ள சக மரபுக் கவிஞர்களுடைய உள்ளத்தில் வருத்தத்தை விளைவிக்க எனக்கு விருப்பமில்லை.  
வேதத்துக்கும் எனக்கும் உள்ள உறவு எங்கள் இருவருக்கும் தெரியும்.  மற்ற அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய 
அவசியமில்லையே!  நான் வேதத்தை ஒருநாளும் தவறாக நினைகக மாட்டேன்.  ஆனால் ஒருசில சமயங்களில் தனனிலை விளக்கம் 
கொடுக்க வேண்டிய கட்டாயம் (ஏற்பட்டாலும் நான் செய்ததில்லை) ஏற்படுகிறது.  இங்கே ஒரு சிலருக்கு என்மேல் ஏற்கெனவே தப்பான 
அபிப்பிராயம் இருக்கிறது என்பதை அறிவேன்.  ஆகவே, என்ன நடந்தது என்பதைச் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது. அது 
மட்டுமல்ல, இந்த விஷயத்தில் வெண்பாவிரும்பியின் பேருதவி என்ன காரியத்தை எலலாம் செய்திருக்கிறது என்பதை உங்களுக்கு 
எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பும் எனக்கிருக்கிறது.  ஆகவே இந்தக் கடிதம்.  சிலருடைய பெயர்களைக் குறிப்பிடுவதைத் 
தவிர்க்கிறேன்.  இந்த விஷயத்தில் சிக்கல் ஏற்பட காரணமாக இருந்தாலும், நான் அவரிடத்திலும் என்றும்போல் பேரன்பும் பெருமதிப்பும் 
பூண்டவனாகவே இருக்கிறேன்.  கருத்துகளை மட்டும் சொன்னால் போதும் என்பதால், இந்தக் கடிதப் போக்குவரத்தில் ஒருவருடைய 
பெயரை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை இங்கே தருகிறேன்.

சில மாதங்களுக்கு முன்னால் இன்னொரு குழுவில் ஏதோ பேச்சு வந்த சமயத்தில் ‘பாரதியை உவேசா ஒரு கவிஞனாகவே 
மதிக்கவில்லை’ என்று திருமதி கீதா சாம்பசிவம் குறிப்பிட்டிருந்தார்.  மிக நல்ல, அறிவார்ந்த, முதிர்ச்சியுள்ள பெண்மணி.  நான் அதை 
மறுத்து, ‘பல இக்கட்டுகளில் பாரதிக்கு உதவி செய்தவரே உவேசாதான்; இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது’ எனறு சொல்லியிருந்தேன்.  
‘இதை நானாகச் சொல்லவில்லை.  யார், எப்போது சொன்னது என்பதைச் சமயம் வரும்போது சொல்கிறேன்’ என்று அவர் 
சொல்லியிருந்தார்.  இணைய உறவுகளைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியுமாதலால் நான் இந்தப் பெண்மணி சொன்னதைத் தவறாக 
எடுத்துக் கொள்ளவில்லை.  விட்டுவிட்டேன்.

வெண்பா விரும்பி அனுப்பிய இந்தக் குறிப்பிட் உரைதான் மொத்தச் சிக்கலுக்கும் காரணமாக இருந்திருக்கிறது.  (இதை நான் 

உணர்ந்ததே நேற்று அந்தக் கடிதத்தை அங்கே அனுப்பிய பிறகுதான்.)  இப்போது சில கடிதப் பரிமாற்றங்களை இங்கே நகலெடுத்துத் 
தருகிறேன்.  (எல்லாம் நேற்று நடந்தவை.)

திருமதி கீதா சாம்பசிவம் சொன்னார்:

தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் கூறி இருக்கிறார்.  எதோ ஒரு மலர் இல்லை. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் நூற்றாண்டு மலர். 
அந்தக் குறிப்பை *******னுக்கு அனுப்பினேன். நாளைக்குள் இங்கே இடுகிறேன். இப்போக் கொஞ்சம் வேலை! 

நான் சொன்னேன்:

ஆகா!  தாராளமாக அனுப்புங்கள்.  ‘இப்போ கொஞ்சம் வேலை’எப்போ இல்லையோ அப்போ அனுப்பிச்சா போறும்.  வாய்கூசாமல் 

பொய்பேசும் அந்த மகானுபாவர் யார் என்ற உலகத்துக்குத் தெரியட்டுமே! 

பாரதி வரலாற்றுப் பதிவில் சிக்கல்கள் என்று ஈசனோஃபீலியாகாரன் தும்முவதைப் போல ஓயாமல் தும்மிக் கொண்டிருப்பேனே, 

அதற்கான கண்கூடான சாட்சியத்தை கீதம்மா தரப்போறாங்க.  காத்திருப்போம். :-)

அம்மையார் இதன் பிறகு வேறொரு இழையில் அவர் தரப்பு ஆதாரத்தை எடுத்து வைத்துவிட்டு, பினவருமாறு சொன்னார்: 

*************
போட்டாச்சு, அந்த இழையே கிடைச்சுடுத்து, நல்லவேளையா! பாருங்க ஹரிகி அவர்களே. எனக்கு இதில் தனிப்பட எந்த ஆதாயமும் 

இல்லை, இப்படியும் இருக்குனு சொல்லப் படுகிறது என்ற ஒரே கருத்துத் தான்.
*************

இதன் கீழ் தனக்கும் இன்னொருவருக்கும் நடைபெற்ற தனிமடல் பரிமாற்றத்தையும், தொமுசி ரகுநாதன், உவேசாவின் இந்த உரையைக் 

குறிப்பிட்டு பேசியிருப்பதையும் அப்படியே மேற்கோளாக அனுப்பியிருந்தார்.  (கடிதம் நீண்டாலும் பரவாயில்லை.  சிலவற்றை சில 

விதங்களில் செய்யத்தான் வேண்டியிருக்கிறது.  தொமுசி ரகுநாதன் பேச்சிலிருந்து, இந்தத் தலைப்புக்குத் தொடர்புள்ள பத்தியை மட்டும் 

இங்கே தருகிறேன்.

ஹரிகி அவர்களே,

நான் படித்ததைத் தான் இங்கே எடுத்துப் போட்டிருக்கேன். மற்றபடி உ.வே.சா. அவர்களிடமோ, பாரதியிடமோ எனக்கு மதிப்பும், 

மரியாதையும் மிகவும் உண்டு. அதற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்ற கோணத்திலேயே படிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி. 

புத்தகம் இன்னமும் என்னிடம்தான் இருக்கிறது. புத்தகம் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் (கொள்ளுப் பேத்தி,  டாக்டர் உமா 

நடராஜன், அரக்கோணம், அவர்களின் மகள் ப்ரியா வெங்கட்) குடும்பத்தினர் அளித்தது.

இதன் பின்னர் தொடர்வது, நான் முதலில் மறுத்த சமயத்தில் நடைபெற்ற ஒரு தனிமடல் உரையாடல்.  கீதா அம்மையாருக்கும் நான் குறிப்பிட்டுள்ள, என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய நண்பருக்கும் இடையே நடைபெற்றிருக்கிறது. (அதையும் சேர்த்து அம்மையார் அனுப்பியிருக்கிறார்.)

---------- Forwarded message ----------
From: ********* <*******@gmail.com>
Date: 2009/7/30
Subject: Re: உ.வே.சா. - பாரதி பற்றி
To: Geetha Sambasivam <geetha...@gmail.com>


நன்றி. பின்னால் ஒரு சமயம் வெளியிடுவோம்.

திருவாடுதுறை பாரதியை மதித்தது என்பதோ,
உவேசா பலவாறு பாரதிக்கு உதவினார் என்பதோ
(என்னைப் பொருத்தவரை) நம்பும்படியாய் இல்லை.


அன்புடன்,
****


>>
>> 2009/7/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
>> > திரு ******,
>> >
>> > திரு பாஸ்கரத் தொண்டைமான் நூற்றாண்டு மலரில் குறிப்பிட்ட கட்டுரையைத் தேடி
>> > எடுத்துவிட்டேன்.உங்களுக்கு விருப்பமானால் தனி மடலிலேயே அளிக்கிறேன். இல்லை
>> > மின் தமிழில் போட மறுப்பு ஏதும் இல்லை எனில் மின் தமிழிலேயே போடுகிறேன்.
>> > உங்கள்
>> > மடல் கண்டு. நன்றி.
>> >
>> > கீதா சாம்பசிவம்
>>
>> ஹரிகி போன்றோர் காட்டமாக இருப்பதால் இப்போது (குழுப்பெயர்*) இடுவது
>> பொருத்தமாக இல்லை. தட்டெழுதி அனுப்புங்கள். பின்னர் ஒரு சமயம் உங்கள்
>> பதிவிலேயே
>> வெளியிட்டு வைப்போம்.
>>
>> தட்டெழுதிய ஒரு பிரதியை எனக்கு அனுப்புங்கள்.
>>
>>  நன்றி!
>>  **********
>>
>> (தொமுசிக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமென்ன‌
>> என்று விளங்கவில்லை.)
>
>
* அவசியமில்லாததால் குழுப்பெயரைத் தவிர்த்திருக்கிறேன்.  

தொமுசி ரகுநாதன் உரையிலிருந்து இந்தத் தலைப்புக்குத் தொடர்புள்ள கருத்துகளை மட்டும் இங்கே இடுகிறேன்.  I don't want to get into rake it up by giving the other carping comments from his speech. 

> ஈரோட்டில் தொ.மு.சிதம்பர ரகுநாதன் அவர்களுக்கு 2001-ம் ஆண்டுக்கான பாரதி விருது
> வழங்கப் பட்டது. தொ.மு.சி.யின் ஈரோடு வருகை பற்றிய ஓர் வர்ணனை:  2001 டிசம்பர்
> 10.

 தொ.மு.சி. ரகுநாதனின் முழக்கம்
> தொடங்குகிறது.
>
>
>
> “இந்தப் பரிசு கிடைத்தமைக்காக நான் பாரதிக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்.
> பாரதி பதினோராவது வயதில் பாரதி என்ற பட்டம் பெற்றான். அதர்குப் பிறகு அவன்
> உயிரோடு இருந்த காலத்தில் எந்தப் பரிசும் எந்தப் பட்டமும், எந்த விருதும்
> அவனுக்குக் கொடுக்கப் அடவில்லை. உ.வே.சாமிநாதய்யருக்கு மகாமகோபாத்யாய பட்டம்
> கொடுத்த போது அவரைப் பாராட்டி பாரதி பாடியிருக்கிறான். ஆனால் பாரதி செத்த
> பின்பும் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்த உ.வே. சாமிநாதய்யர், தாம் சாகிறவரை பாரதியை
> அஒரு கவிஞனாகவே ஒத்துக் கொண்டதில்லை.
>
>
>
> 1936-ல் சென்னையில் காங்கிரஸ் பொன்விழா நடந்தது. இந்தக் கூட்டத்தை
> ராஜகோபாலாச்சாரி ஏற்பாடு செய்திருந்தார். உ.வே.சாமிநாதய்யர்தான் தலைமை.
> கூட்டத்தில், “பாரதி மகாகவியா? இல்லையா? என்ற சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.
> நாங்கள் எல்லாம் அவனை மகாகவியாக ஒத்துக் கொண்டுவிட்டோம். பாரதி மகாகவிதான் என்ற
> வாசகம் உ.வே.சாமிநாதய்யர் வாயிலிருந்து வரவேண்டும் என்பதற்காகத் தான் இந்தக்
> கூட்டத்திற்கு அவரை தலைமை ஏற்கச் செய்திருக்கிறோம்.” என்றார் ராஜகோபாலாச்சாரி.
>
>
>
> உ.வே.சாமிநாதய்யர் பேசுகின்ற போது, “தமிழ்ப்பண்டிதன் ஒருவனை கவிஞன் என்று
> சொல்லுகின்ற வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.” என்று மட்டுமே
> குறிப்பிட்டார். இதைத் தவிர, பாரதி மகாகவி என்றோ, தேசிய கவி என்றோ அவர் சொல்லவே
> இல்லை.

இதைத் தொடர்ந்து, நான் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன்: 


இது உண்மையானால்,

1) பாரதி மகாகவியா இல்லையா என்று ராஜாஜி உவேசாவிடம் கேட்டாரா என்பதற்கும்;
2) இதை மையமாக வைத்துதான் அன்று அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்க உவேசா அழைக்கப்பட்டாரா என்பதற்கும்;
3) இந்தக் கேள்வி தன்னிடம் கேட்கப்பட்டிருந்தும், உவேசா அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பதற்கும் 

ஏதாவது ஆவணம் இருக்கிறதா?

நல்ல கவி மகாகவி போரின் தொடக்கம் 1935ல்.  அதற்கு அடுத்த ஆண்டில்தான் உவேசா பேசியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.  அப்படியானால், தொமுசி சொல்வதைப்போல் ராஜாஜி, இந்த ஒரு நோக்கத்துக்காகவே உவேசாவை அழைத்திருந்தால், ‘பாரதி மகாகவி அல்லர்’ என்று சொல்லியிருக்க வேண்டியதுதானே!  சரி.  அப்படித்தான் சொல்லாமல் நழுவிவிட்டார் என்றே வைத்துக் கொள்வோம்.  கல்கிக்கும் ராஜாஜிக்கும் அந்தச் சமயத்தில் (நல்லகவி கட்சிக்காரர்கள்) அது கௌரவப் பிரச்சினை அல்லவா?  மேடையிலேயே உவேசாவை மறித்து, ‘இந்தக் கேள்விக்காகத்தானே இந்தக் கூட்டத்தையே கூட்டினோம்?  இதற்கு பதில் சொல்லக் காணோமே’ என்று கேட்டிருக்கலாமே?  அதுகூடவா முடியாமல் போய்விட்டது ராஜாஜிக்கு?  

‘கவிஞர் என்றே ஒப்புக் கொள்ளவில்லை’ என்ற தொடங்கியது.  இப்போது, ‘தேசிய கவி என்றோ, மகாகவி என்றோ’ சொல்லவில்லை என்று சொன்னதாகத் தெரியவருகிறது.  அப்படியானால்,

“இவர் உண்மையான தேச பக்தியுடன் பாடிய பாட்டுக்களாதலின்அவை இவருக்கு அழியாத பெருமையை உண்டாக்குகின்றன” என்றும்; 


“இவருடைய பாட்டுக்கள் எல்லோருக்கும் உணர்ச்சியை உண்டாக்குவன; தமிழ்நாட்டில் இவருடைய பாட்டை யாவரும் பாடி மகிழ்வதனாலேயே இதனை அறிந்துகொள்ளலாம்.  கடல் கடந்த தேசங்களாகிய இலங்கை, பர்மா, ஜாவா முதலியஇடங்களிலும் இவருடைய பாட்டுக்கள் பரவியிருக்கின்றன.  அங்கே உள்ளவர்களில்சிலர் இவரைப் பற்றி எழுத வேண்டுமென எனக்குக் கடிதங்கள் எழுதியதுண்டு."மணவைமகன் கூத்தன் வகுத்தகவி, தளைபட்ட காலுட னேகட லேழையுந் தாண்டியதே"என்று ஒரு புலவருடைய கவியைப்பற்றி வேறொரு புலவர் பாடியிருக்கிறார்.  ஸ்ரீராமனுடைய கவியாகிய ஆஞ்சனேயர் ஒரு கடலைத்தான் தாண்டினார்; மணவைக் கூத்தன்கவியோ ஏழு கடல்களையும் தாண்டிவிட்டது.  ஸ்ரீ ராமனுடைய கவி தளையில்லாமல்தாண்டியது; அங்ஙனம் செய்தது ஆச்சரியமன்று.  இந்தப் புலவர் கவியோ,தளையுடைய காலோடு ஏழு கடலைத் தாண்டியது என்கிறார்.  தளையென்பதற்குவிலங்கென்றும் கவிக்குரிய லக்ஷணங்களுள் ஒன்றென்றும் பொருள்.  இந்தப்பாட்டுக்கு இப்போது இலக்கியமாக இருப்பவை பாரதியாருடைய கவிகளாகும்.“

என்றும் குறிப்பிட்டிருக்கிறாரே, இந்தியாவைத் தாண்டி, கடல்கடந்த தேசங்களில் இவருடைய புகழ் பரவியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறாரே, அனுமனுடைய ஆற்றலையும் தாண்டிய கவி என்று வகுக்கப்பட்டுள்ள இலக்கணகத்துக்கு இலக்கியமாக விளங்குபவை என்று சொல்லியிருக்கிறாரே, அதெல்லாம் என்ன வகையில் சேர்த்தி?  உலகக் கவி இல்லாமல் வேற எந்தக் கவி இந்த வகைப்பாட்டுள் அடங்கும்?  

ஹரிகி காட்டமாக எல்லாம் இல்லை.  நாட்டமாகத்தான் இருக்கிறேன்.  (பாயவேண்டுமானால்தான் பதுங்க வேண்டும்.  எனக்குப் பதுங்கிப் பழக்கம் கிடையாது.  ஆறின பிறகு பார்த்துக் கொல்ல எனக்கு மட்டும் என்ன அவசியம், ஆதாயம்!  உங்கள மாதிரி நானும் ஒரு வாசகன்.  எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்.  அப்புறம் என்ன?)

(தொடர்ச்சியாக மற்றொரு கடிதத்தில் நான்)


ஏஙக்!  பாரதி ஒரு மகாகவி என்று முதலில் பேசியவர் வரா.  1935ல்
காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசினார்.  அதற்குதான் கல்கி மறுப்பு
எழுதினார்.  நல்லகவி என்று வேண்டுமானால் சொல்லலாம்; மகாகவி இல்லை என்று.
பிறகு வரா பதிலடி; ‘நல்லபாம்பு என்பதைப் போல நல்லகவி’ என்ற பதில்
கிண்டல், இந்தப் பக்கத்துக்கு ஒரு கட்சி, அந்தப் பக்கத்துக்கு ஒரு கட்சி,
குடுமிப்பிடி சண்டை..... எல்லாமே ஒரேஒரு வருஷத்துக்குள்ள முடிந்துபோய்,
‘பாரதி மகாகவி என்று நாங்களெல்லாம் ஒப்புக்கொண்டாயிற்று’ என்று ராஜாஜி
சொன்னாரா?  அடேயப்பா!  சும்மா ராக்கெட் வேகத்துல சரித்திரம்
பறக்குதப்போவ்!

பாரதியை 1936லேயே மகாகவி என்று ஒப்புக்கொண்டாயிற்று என்றால், அதற்கு
ஒன்பது வருஷங்கள் கழித்துதான் (1945ல்) பாரதி மணிமண்டபம் கட்டுவதற்கு
கால்கோள் விழா நடத்தினாங்களாமா!  அட அட அட...ஒன்பது வருஷம் என்பது, ஒரு
வருஷத்தைக் காட்டிலும் சுருக்கமானது என்பது இப்பத்தானே என் மரமண்டைக்கு
உறைக்கிறது!

போறும்.  விட்டுட்டேன். :-))
*************

இதற்கு, கடலோடி நரசையா (சென்னை நகரத்தைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை அளிப்பதில குறிப்பிடத் தக்கவர்.) பின்வருமாறு எழுதுகிறார்:

ஏன் விடவேண்டும் ஹரிகி? விடாதீர்கள்! out of context ஆக பல விஷயங்கள் சொல்லப்படுகையில் சரியான வாதம் வைக்கப்படத்தான் வேண்டும்.
தொடருங்கள்.
மணிமண்டபத் த் விழாவில் நடந்தவையெல்லாம் நான் 
‘”சாதாரணமனிதனி” ல் கூறியுள்ளேன். பலர் தமக்குச் சாதகமான விஷ்யங்களை மட்டும் தான் கூறுவார்கள்.
அந்தக்கூட்டததில் நடக்க்விருந்த குழப்பம் எவ்வாறு எம். எஸ், அவர்களது கச்சேரியினால் தவிர்க்கப்பட்டது என்பதையும் எனது நூலில் கூறியுள்ளேன்.
 
எல்லோருமே பாரதிக்குப் பின்னர் தான் பாரதியைப் புகழ்ந்திருக்கின்றன்ர். இப்போது உ. வே. சா பாரதியை மஹா கவி என்று ஒப்புக்கொண்டாரா இல்லையா என்ற சர்ச்சை ஒரு infrctuous exercise என்று தான் நான் சொல்வேன்.
 
ஆனாலும் ஹரிகி சொன்னது சரியான நேரத்தில் தான் என்றே நினைக்கின்றேன். ஆகையால் தொடரச் சொல்கிறேன். விதண்டாவாதம் வேண்டாம்.
நரசய்யா
 
நான் மேலே கொடுத்திருப்பது பனிக்கட்டியின் நுனிமட்டுமே.  இங்கே இருக்கின்ற மற்ற மகாமகா மணிக் கவிஞர்களைப் போலெல்லாம் எனக்குக் கவிதை இயற்றத் தெரியாது; நான் அவங்களுக்கெல்லாம் ஜூனியர்.  உண்மைதான்.  ஆனால், சிறிய வயது தொடங்கி நானும் கவிதை இயற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.  கவிதை இயற்ற இயற்ற உண்டாகும் கவி இயல்பு என்பது என் மனத்துக்கும் உண்டு.  ‘சீனியர் போயட்ஸ்கிட்ட எப்படி நடந்து கொள்ளணும்’ என்று எனக்குத் தெரியவில்லைதான் (இதுவும் எனக்கு இன்னொரு சீனியர் போயட் சொன்னதுதான்.) 

நான் ஜூனியர்தான்.  போயட் இல்லை என்பதை எந்தக் காலத்திலிருந்தோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  ஆனாலும், அவ்வப்போது என்னிடமும் கவிதா தேவிக்குக் கருணை பிறப்பதுண்டு.  தழல்வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை.

இதை மட்டும் தெரிவித்துவிட்டு, விடை பெறுகிறேன்.  நேற்று நான், வெண்பாவிரும்பிக்கு ஒரு தனிமடல் அனுப்பி அனுமதி கோரியிருந்தால் இதெல்லாம் தேவையே இல்லை.  I thought of sharing the mail here because it is of common interest.  எல்லா சீனியர் போயட்டுங்களும் என்னை மன்னிச்சிருங்க.  இனிமேல் இப்படியெல்லாம் தொந்தரவு செய்யமாட்டேன்.

வெண்பாவிரும்பியின் பேருதவிக்கு மறுபடியும் நன்றி.  அவருடைய உழைப்பால் மிகப் பெரிய clinching evidenc கிடைத்தது.  பெருமைபெற்ற ஆய்வாளர்கள் எப்படியெல்லாம் தப்புத் தப்பாய் மக்களிடம் வந்து வரலாற்றைத் திரிக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது.  மீண்டும் மீண்டும் நன்றி வெண்பா விரும்பி.

 

Kaviyogi Vedham

unread,
Feb 12, 2010, 2:51:21 AM2/12/10
to santhavasantham
என் அன்புத் தம்பி  ஹரீ!
 ஆசிகள்.ரொம்ப அழகாக உன் வலியிலும் விரிவாக சிரமம் எடுத்து,-- உவேசா போன்ற மகாப்பெரியவரைக் குறித்துத் தவறாக எடுத்துரைத்த தொமுசி யை ஒரு பிடி பிடித்துள்ளாய்... படித்தபின் என் கண்ணில் தானாக நீர் தளும்பியது.
 எப்படி இவ்வளோ பாயிண்ட்ஸ்.. திரட்டுகின்றாய் என்று எங்களுக்கெல்லாம்  ஒரே வியப்பு...ஆகவே சட்டென்று நெகிழ்ச்சியில் ஒரு வார்த்தை சொன்ன என் குசும்புத்தனத்தை மன்னிக்க.. பெரிதாக எண்ணற்க!. (என்னாலும் எம் சந்தவசந்த நண்பர்கட்கு) ஒரு மிகப்பெரிய தகவல்(உசுப்பியதால்) கிட்டிற்றன்றோ!!
ஆகவே இனிமேலும்( என் அன்பு சிவா என்னை ஒருக்கால் விளித்தபடி--நற் குசும்பர்!)என் நாரதர் வேலையை மிக அவசியமான தருணத்திற்கல்லாது பிற அவயங்களில் பயன்படுத்தகில்லேன்.. எனும் உறுதி மொழியை இவண் விளம்புகின்றேன்.. சரியா?.. ஆக, நீ மனம் பேதலுற வேண்டா! யாவும் என் குருஜி..அருளே!,
 யோகியார்
...
(-- context;;-மரபுக் கவிதை இயற்றி இம்சிக்கும் மகாபாவிகளுக்கு என் அன்புப் பரிசு.
 (ஹரி கிருஷ்ணன்.. என்ற அற்புதக் கட்டுரையாளன்)..
 ...
அட! ஹரீ!.. என்னய்யா.. இப்படிச்சொல்லி உன்போன்ற என்போன்ற தலைவர் இலந்தை போன்ற
 அழகிய? மரபுக்கவிஞர்களை மனசு நோகடித்துவிட்டாய்!..சே சே!
 யோகியார்..)--

2010/2/12 Hari Krishnan <hari.har...@gmail.com>


veNbA virumbi

unread,
Feb 13, 2010, 6:38:58 PM2/13/10
to சந்தவசந்தம்

திரு ஹரி கிருஷ்ணன் அவர்களும் திரு வேதம் அவர்களும் நகைச்சுவையாக எழுதிய
இரு வாக்கியங்கள் யோசனை ஒன்றுடன் எதுகையும் தந்தன. இதனால் பிறந்த
ஹாஸ்யப் பாடலொன்று வருமாறு.

**********
**********
(வெண்பா)

கோபியர்கோன் பேரோற்குக் கூறுவிடை மெய்யேயெந்
நாபியெழ ஓதுமறை நாமத்தோய் - மாபிரிய
'ஆபி'யிது கோபியா தாதரிப்பீர் கூசாதிப்
பாபியிடும் பண்டைமொழிப் பாட்டு:-)

'ஆபி'=hobby
**********
**********

Hari Krishnan

unread,
Feb 13, 2010, 9:28:56 PM2/13/10
to santhavasantham, Subashini Tremmel
வெண்பா விரும்பி, சந்தவசந்த நண்பர்களுக்கு இந்தத் தகவல் மகிழ்ச்சியை அளிக்கும்.  உவேசா அவர்கள் பாரதியைக் குறித்து ஆற்றிய சொற்பொழிலவு தமிழ் மரபு விக்கியில் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டது.  தமிழ் மரபு விக்கி வெண்பா விரும்பிக்கு நன்றி தெரிவிக்கிறது.   வெண்பா விரும்பி என்ற பெயரிலேயே அந்தக் கட்டுரையில், தந்துதவியருடைய பெயர் இருந்தால் சரிதானே?  அவர் அவருடைய சொந்தப் பெயரை எப்படி எழுதுகிறார் என்பதனை அறியேன்.  தெரிவித்தால் அந்தப் பெயரையும் சேர்த்துவிடலாம்.

நாம் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த ஆய்வாளரின் சொற்பொழிவில் ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்ற பாடல் மேற்கோளைத் தொடர்ந்து, ஐயர் பாரதியைப் பாராட்டவில்லை என்ற குறிப்பு இடம்பெற்றிருந்தது.  உள்ளர்த்தங்களை நான் விளக்க வேண்டியதில்லை.  இப்படியெல்லாம் வெறுப்பை உமிழ்ந்து வெட்டவெளியில் பொய்களைக் கொட்டித் திரிபவர்களுடைய வாயைப் பூட்ட முடியாவிட்டாலும், வெளிச்சத்துக்கு வழிசெய்து கொடுத்திருக்கு வெண்பா விரும்பிக்கு என்னுடைய நன்றியும் உரியது.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.  

---------- Forwarded message ----------
From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Date: 2010/2/13
Subject: Re: [MinTamil] பாரதி பற்றி உவேசா சொற்பொழிவு = கீதம்மாவுக்கு சமர்ப்பணம்
To: mint...@googlegroups.com


திரு.ஹரிகி.
 
இந்த கட்டுரையையும் மரபு விக்கியில் இணைத்திருக்கிறேன் திரு. வெண்பாவிரும்பியின் பெயரோடு. அவருக்கு த.ம.அ  நன்றியத்தெரிவிக்க முடியுமா?
 
அன்புடன்
சுபா


அன்புள்ள சுபா,

அவசியம் சொல்கிறேன்.  

Hari Krishnan

unread,
Feb 13, 2010, 9:37:16 PM2/13/10
to santhavasantham


2010/2/14 Hari Krishnan <hari.har...@gmail.com>

வெண்பா விரும்பி, சந்தவசந்த நண்பர்களுக்கு இந்தத் தகவல் மகிழ்ச்சியை அளிக்கும்.  உவேசா அவர்கள் பாரதியைக் குறித்து ஆற்றிய சொற்பொழிலவு தமிழ் மரபு விக்கியில் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டது.  

Reply all
Reply to author
Forward
0 new messages