--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஆங்கிலத்தில் மோனோரைம் என்பது ஒருவகைப் பாடல்
எ.கா
A break from my career,
to visit a new frontier.
Where life is not severe,
and stress will disappear.
I'll become a pioneer,
a new found volunteer.
To help this old sphere,
make it's air all clear.
We will persevere,
for I'm the brigadier.
So as I tip my beer,
lets offer up a cheer.
Lets make this our year
where everyone will be sincere.
ஒற்றை இயைபு
இதோ தமிழில் எனது பாடல்
ஆடு மனமே ஆடு!
இந்தத் தேகம் எனக்குக் கூடு
என்றும் இங்கே இடர்பெரும் பாடு
இங்கே மனமே என்றும் ஆடு
இனிய வாழ்வில் இறைநிலை தேடு
இளைத்த லின்றி நெறியில் ஓடு
உள்ளுக் குள்ளே ஒருபெரும் காடு
ஐந்து பொறிகள் ஆங்காரத்தோடு
அடக்கும், அவற்றை அடக்கிப் போடு
பரவச நிலையில் பக்தி யோடு
இறையைத் தொழுதால் எய்தும் வீடு
அனைவரும் சமமென் றன்ப ரோடு
பழகத் தொலையும் பள்ளம் மேடு
பேதம் காட்டும் பிழையை மூடு
இனிதே படிக்க இலக்கிய ஏடு
ஞான நிலையே சிகரக் கோடு
பொய்மை வேடம் என்றும் சாடு
நாடெலாம் சுற்றினும் நம்தாய் நாடு
அதனிற் குண்டோ வேறோர் ஈடு?
கல்வி பாரம் தாங்கும்சும் மாடு
அதுதான் வாழ்வில் அரும்பெரும் பீடு!
இலந்தை
வேத மோங்கிட வீற்றிருப்பவள்
விண்ணவர்களும் போற்றுவார்
வீழுவார் பதம் வேண்டுவார் தினம்
வெற்றி கிட்டிடச் சூழுவார்
ஏதம் அற்றதாம் ஏற்றம் கண்டவள்
எண்ணம் யாவுமே வெல்லுமே
ஏழுலகமும் தோத்தரிக்குமே
இற்றுப்போகுமே தீவினை
ஓது மந்திரம் ஊற்றம் கொண்டவள்
உண்மை உன்னதம் உன்னதம்
ஊழையும் புறம் காணலாகுமே
உற்றவள் பதம் பற்றவே
ஆதரிப்பவள் ஆற்றல் போற்றுவோம்
அண்ட நாயகி ஆமவள்
ஆ ஆழமாய் அவள் நாமம் போற்றிடில்
அற்புத ஒளி நிச்சயம்
inthஇந்தப் பாடல் தச பங்கி. இது பத்துப்பாடல்களாகப் பிரியும். பிரித்துப் பாருங்களேன்
இலிலந்தை
மிக அருமை ஐயா. பத்தினும் மேற்பட்டுப் பாடல்கள் பிரிக்கலாம் என்பது என் கருத்து.
ஒரே வெண்பாவில் மூன்று
வெண்பாகள் கவிஞர் இக்குவனம்
எழுதியிருப்பதைப் படித்தேன்.. அதற்குமேலும்
வெண்பாக்களை வருவிக்க
முடியுமா என்று சிந்தித்ததன்
முயற்சிதான் இது. இன்னும்
முயன்றால்
தெளிவான பொருளோடு இன்னும்
சிறப்பாகச் செய்திருக்கக் கூடும்.இதைக்
கவிதை
என்று நான் கூற
மாட்டேன். வெண்பா
விளையாட்டு
சில குறிப்புகள்.
1 எதுகை மோனையின் இடத்தைப் பிடிக்கும் என்று ஒரு விதி இருக்கிறது.
2.
இதில் இறுதிச் சீர்களில்
பொழிப்பு அமையவில்லை
இலந்தை
தெய்வமெழில்
வையகம் மெய்தவழும் உய்வளிக்கும்
ஐயனவன் மெய்வடிவைப் பொய்யிலதாய்
- நெய்திடவே
செய்கைகள் எய்துதற்கு மையலறு
தெய்வபக்தி
வையுறுதி மொய்ம்புற வே!
வையகம்
மெய்தவழும் உய்வளிக்கும் ஐயனவன்
மெய்வடிவைப் பொய்யிலதாய் நெய்திடவே
-செய்கைகள்
எய்துதற்கு மையலறு தெய்வபக்தி
வையுறுதி
மொய்ம்புறவே தெய்வம் எழில்
மெய்தவழும்
உய்வளிக்கும் ஐயனவன் மெய்வடிவைப்
பொய்யிலதாய் நெய்திடவே செய்கைகள்
- எய்துதற்கு
மையலறு தெய்வபக்தி வையுறுதி
மொய்ம்புறவே
தெய்வ மெழில்வை யகம்
உய்வளிக்கும்
ஐயனவன் மெய்வடிவைப் பொய்யிலதாய்
நெய்திடவே செய்கைகள் எய்துதற்கு
-மையலறு
தெய்வபக்தி வையுறுதி மொய்ம்புறவே
தெய்வமெழில்
வையகம் மெய்தவ
ழும்.
ஐயனவன்
மெய்வடிவைப் பொய்யிலதாய் நெய்திடவே
செய்கைகள் எய்துதற்கு மையலறு-
தெய்வபக்தி
வை யுறுதி மொய்ம்புறவே
தெய்வமெழில் வையகம்
மெய்தவழும் உய்வளிக் கும்
மெய்வடிவைப்
பொய்யிலதாய் நெய்திடவே செய்கைகள்
எய்துதற்கு மையலறு தெய்வபக்தி
-வையுறுதி
மொய்ம்புறவே தெய்வமெழில் வையகம்
மெய்தவழும்.
உய்வளிக்கும் ஐய னவன்
பொய்யிலதாய்
நெய்திடவே செய்கைகள் எய்துதற்கு
மையலறு தெய்வபக்தி வையுறுதி
-மொய்ம்புறவே
தெய்வமெழில் வையகம் மெய்தவழும்
உய்வளிக்கும்
ஐயனவன் மெய்வடி வை
நெய்திடவே
செய்கைகள் எய்துதற்கு மையலறு
தெய்வபக்தி வையுறுதி மொய்ம்புறவே
தெய்வமெழில்
வையகம் மெய்தவழும் உய்வளிக்கும்
ஐயனவன்
மெய்வடிவைப் பொய்யில தாய்
செய்கைகள்
எய்துதற்கு மையலறு தெய்வபக்தி
வையுறுதி மொய்ம்புறவே தெய்வமெழில்
-வையகம்
மெய்தவழும் உய்வளிக்கும் ஐயனவன்
மெய்வடிவைப்
பொய்யில தாய் நெய்திட
வே!
எய்துதற்கு
மையலறு தெய்வபக்தி வையுறுதி
மொய்ம்புறவே தெய்வமெழில் வையகம்-
மெய்தவழும்
உய்வளிக்கும் ஐயனவன் மெய்வடிவைப்
பொய்யில தாய்
நெய்திட வேசெய்கை கள்.
மையலறு
தெய்வபக்தி வையுறுதி மொய்ம்புறவே
தெய்வமெழில் வையகம் மெய்தவழும்
உய்வளிக்கும்
ஐயனவன் மெய்வடிவைப் பொய்யிலதாய்
நெய்திடவே
செய்கைகள். எய்துதற் கு.
தெய்வபக்தி
வையுறுதி மொய்ம்புறவே தெய்வமெழில்
வையகம் மெய்தவழும் உய்வளிக்கும்-
ஐயனவன்
மெய்வடிவைப் பொய்யில தாய்
நெய்திடவே செய்கைகள்
எய்துதற்கு மைய லறு..
வையுறுதி
மொய்ம்புறவே தெய்வமெழில் வையகம்
மெய்தவழும் உய்வளிக்கும் ஐயனவன்
-மெய்வடிவைப்
பொய்யில தாய் நெய்திடவே
செய்கைகள் எய்துதற்கு
மையலறு தெய்வபக் தி
மொய்ம்புறவே
தெய்வமெழில் வையகம் மெய்தவழும்
உய்வளிக்கும் ஐயனவன்
மெய்வடிவைப் - பொய்யில
தாய்
நெய்திடவே செய்கைகள் எய்துதற்கு
மையலறு
தெய்வபக்தி வையுறு தி.!
இலந்தை
29-8-2008
sarabantham
பெருமையோ காப்பதில் உண்டு
காவலர்
அருமையோ பூப்பதில் உண்டு
எனக்குமகள்
தம்பி இவள் மாமன் பிள்ளை
எனக்கோ இருவர்
கணவர்- எனைவிட்டுச்
சென்றுவிட்டார் தந்தையும்
சீக்காளி இச்சிறுவன்
என்றன் மகனாம்
இவள்.
இலந்தை
தடுமாற்றம்
இல்லை, சரியாக
இப்பா
கடைமாற்றிப் பார்த்தால்
கனி
இந்தப் பாடலைச் சிக்கவிழ்த்துத் தருகிறேன்
கடைசிச் சீராகிய
இவள் என்பதை
முதலில் கொண்டு
செல்லவேண்டும்
இவள் எனக்கு
மகள், தம்பி
இவள் மாமன்,
பிள்ளை எனக்கோ
இருவர், கணவர்
எனைவிட்டுச் சென்றுவிட்டார், தந்தையும் சீக்காளி, இச்சிறுவன் என்றன் மகனாம்
இதற்குக் கடைமாற்றுப் பொருள்கோள் என்று பெயர்.
இலந்தை
புரையோடிப் போயிற்றிப் புண்என்று போட்டேன்
எரியும் பொடியொன் ரெடுத்துப்- பொரியாய்
இடுக்கின்றிப் பூத்ததே என்செய்வேன், போய்நீ
எடுப்பாய் புதிதாக வேறு
இலந்தை
மேலே உள்ள வெண்பாவில் 12 ஈற்றடிகள் இருக்கின்றன?
கணக்கிட்டுப் பாருங்களேன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஓரா திருந்தவன் இருந்தவன் ஆவதும்
சாரா மனத்தினன் மனத்தினன் ஆவதும்
சேராக் கருத்தவன் கருத்தவன் ஆவதும்
ஆரா விடையவன் விடையவன் ஆவதே!
இருந்தவன் - பெரிய தவமுடையவன்
மனத்தினன் - மனத்து இனன் - சூரியனைப்போல பிரகாசம் மனத்தில் உடையவன்
கருத்தவன் கருத்தில் அவனை உடையவன்
விடையவன் ஏறு வாகனமாக உடையவன்.
விடையவன் - இச்செயற்கெல்லாம் விடையாக அவன் இருக்கிறான்
திரிபங்கி
முன்னை வினைகள் இற்றுப் போகவே!
(எழுசீர் விருத்தம்: தேமா புளிமா தேமா கூவிளம் மா மா காய்)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
வாலிறைவன் நெஞ்சத்தில் மாறா திருக்கின்ற
..ஞாலம் புரக்கின்ற நாமமெது?-சீலமுடை
தெய்வத்தை ஊராரும் செப்புமுறை எவ்வாறு?
மெய்யாய் இராமசா மி!
(வாலிறைவன்=அனுமன்--ஊரார் தெய்வங்களை,'சாமி' என்பர்)"வெளிநாடு வந்திங்கே மேவிடும் என்றன்
உளநாடும் நாடும்ஒன் றுண்டு!-வளமோடு
சிந்தை நிறைதேசம், என்தேசம் என்றேநான்
இiந்தியா வுக்கேகு வேன்!
(என்னுடைய தேசம் என்று சொல்லிக்கொண்டு நான் இந்தியாவுக்குப் போவேன்
"வெளிநாடு வந்திங்கே மேவிடும் என்றன்
உளநாடும் நாடும்ஒன் றுண்டு!-வளமோடு
சிந்தை நிறைதேசம் என்தேசம், என்றேநான்
இiந்தியா வுக்கேகு வேன்!
என்றைக்கு நான் இந்தியாவுக்குப் போகப்போகிறேன்?
மூன்றாவது அடியில் கமா வை மாற்றிப்போடுவதால் பொருள் மாறுபடுகிறது.
கட்டளைக் கலித்துறை- வினா உத்தரம்
29 மகிழ்வு தருமழ கானதோர் மந்திர மாண்பெதுவோ?
திகழ்மா மறையு ளுயர்வாய்த் தெரியும் சிறப்பெதுவோ?
புகழில் பெருந்த த் துவத்தில் சிறந்த பொருளெதுவோ?
உகந்தே விடைய உ ரி ய முறையறி ஒன்பதிலே!
(இது வினா உத்தரம்- பாடலிலேயேகேள்வியும் விடையும் இருக்கும். ஒவ்வொரு வரியிலும் ஒன்பதாம் எழுத்தை எடுத்து இணைத்தால் காயத்ரி என்று விடை வரும்.)
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அன்புள்ள இலந்தை,
முதல் மடலை எழுதும்போது , எங்கே இவற்றைக் கண்டேன் என்பது மறந்திருந்தது; அதனால் தான் அப்போதே இடவில்லை.
'தனிப்பாடல் திரட்டில்' உள்ள பாடல்கள் இவை; எழுதிய புலவர்கள் பெயர்கள் தெரியாது.
கந்தனென்றும் வேலனென்றும் கானமயில் வீரனென்றும்
செந்தனென்றும் ஏன்புலவீர் செப்புகிறீர்? - முந்தஇளம்
கூனல்பிறை சூடச்சிவ னாருக்குப தேசித்தருள்
ஞானக்குரு வேடப்பய லை.
பொருள்;
முற்காலத்தில் பிறைமதியைச் சூடிய சிவனுக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்த குருவின்
வடிவான சிறுகுழந்தையை, 'கந்தன்''வேலன்' 'காட்டு மயில் வீரன்' 'சிவந்த நிறமுடையவன்' என்றெல்லாம்
,புலவர்களே, ஏன் அழைக்கின்றீர்?
(செந்தன் - சேந்தனின் குறுக்கல் விகாரம்.)
(இதை முழுமுடுகு என்றே சொல்லலாம்.)
உன்னஇனி தாயிருக்கும்; ஓங்குசெல்வ மும்பெருக்கும் ;
நன்னல்அரு ளைக்கொடுக்கும் நாடோறும் -- பன்னும்
சகடம்உருள நெருடுகமல சரணகருணை அரியின்மருகன்
விகடகரியின் இளையமுருகன் வேல்.
பொருள்:
'சகடாசுரன்' என்பவன் உருண்டு சாகுமாறு அழித்த திருவடிகளுடைய திருமாலின்
மருமகனும், 'விகடசக்கர' விநாயகரின் தம்பியுமான முருகனின் வேல் துதிக்கின்றவர்க்கு
--
வேண்டித் தமிழ்கேட்டாய் வெண்பாவிற் பின்முடுகாய்
நீண்ட நெடுநாள்கள் நீவாழ்க - ஈண்டு
மலையு மலையு மதியு மொளியு
--
பாம்பன் சுவாமிகள் 125 பாடல்களாகப் பிரியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.இலந்தை
தானே எனக்கன்னை தந்தையாய் ஆகியெனை
நானே அறிய நடஞ்செய்தான் – ஆனேன்காண்
அன்னான் அடியனாய் அன்றேஎன் நெஞ்சத்தில்
நின்றான் நிலைத்தான் இறை.
..அனந்த்
ஆங்கிலத்தில் பாண்டம் என்றொரு பாவகை உண்டு. அதைத் தமிழில் நான் பாண்டி
என்று மாற்றியிருக்கிறேன். பாண்டியாட்டத்தில் தாவித் தாவிச்
செல்லுவதுபோல் இங்கும் செல்ல வேண்டியிருப்பதால் அப்பெயர்.
இனி விதியைப் பார்க்க்லாம். நான்கு அடிப்பாடல். சீர்களின்
எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடில்லை. எல்லாஅடிகளும் அளவொத்திருக்கவேண்டும்
அவ்வளவே
இரண்டாம் அடியும் நான்காம் அடியும் அடுத்த பாடலின் முதலடியும் மூன்றாவது
அடியுமாக வரவேண்டும். இப்படி எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதலாம்.
கடைசியில் அந்தாதிபோல் முதல் பாடலின் முதலடியில் தொடங்குவதுபோல்
முடியவேண்டும்.
நான் கீழே கொடுத்துள்ள மாதிரிப்பாடலில் ஒவ்வோர் அடியும் அதன் அளவில்
முற்றுப்பெறறதாக அமைத்துள்ளேன். அப்படியெழுதினால் எளிது. அப்படித்தான்
அமையவேண்டுமென்ற அவசியமில்லை.
எடுத்துக்காட்டு
போடு கோடு புகழில் கூடு
காடும் மலையும் கண்ணுக் கழகு
தேடு தேடு தேடு கிட்டும்
ஏடும் எழுத்தும் இனிய சொத்து
பாடு பட்டால் பயன் நம் பக்கம்
தேடு தேடு தேடு கிட்டும்
ஆடல் பாடல் அலுப்பு மருந்து
பாடுபட்டால் பயன் நம் பக்கம்
ஓடும் மேகம் ஒளிர்பூங் கொத்து
ஆடல் பாடல் அலுப்பு மருந்து
நாடு போற்றல் நமது கடமை
ஓடும் மேகம் ஒளிர்பூங் கொத்து
மூடும் நெஞ்சம் முட்டாள் பண்பு
நாடு போற்றல் நமது கடமை
காடும் மலையும் கண்ணுக்கழகு
மூடும் நெஞ்சம் முட்டாள் பண்பு
போடு போடு புகழில் கூடு! -- இலந்தை
அடுத்த பாடல் காடும் மலையும் கண்ணுக்கழகு என்று தொடங்கும். அதுதானே
முதல் பாடலின் முதலடி.
ஆங்கிலத்தில் இவ்வகைப்பாடல் எழுதுவது எளிது. காரணம். அங்கே எதுகை பற்றிக்
கருத வேண்டிய அவசியமில்லை. ஆனால் தமிழில் அப்படியில்லையே! ஒரே எதுகை
கடைசிவரை தொடரவேண்டியிருகிறது. அப்படி எதுகை அமையாத அகவலாக ஆனால் ஒவ்வோரடியும் ஏகாரத்தில் முடிவதாக எழுதிப்பார்க்கலாம்.
இலந்தை
29-2-2008
உதடுக ளொட்டாத உங்கள தின்சொல்
கதுப்புமா வாகு மெனக்கு.
ils from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/KiMQlEfoi0E/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்
சேர்ப்பதும் ஒப்புமோ சொல்லடா நேர்த்தியாய்
வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி
பார்த்துனைப் பின்தொடர் பாங்குகாண் சீர்பெற
கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை நேர்புகழ்
சோர்ந்திடா தேவரும் சொத்துகாண் மூர்க்கமாய்
ஆர்ப்பதில் நன்மையும் யாதுகொல்? சார்ந்திடும்
தீர்ப்பினை நெஞ்சிலே தேர்ந்துகொள் வேர்ப்பவே!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்
வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி
கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை நேர்புகழ்
ஆர்ப்பதில் நன்மையும் யாது?
ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்
சேர்ப்பதும் ஒப்புமோ சொல்?
... அனந்த்
ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்
சேர்ப்பதும் ஒப்புமோ சொல்லடா நேர்த்தியாய்
வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி
பார்த்துனைப் பின்தொடர் பாங்குகாண் சீர்பெற
கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை நேர்புகழ்
சோர்ந்திடா தேவரும் சொத்துகாண் மூர்க்கமாய்
ஆர்ப்பதில் நன்மையும் யாதுகொல்? சார்ந்திடும்
தீர்ப்பினை நெஞ்சிலே தேர்ந்துகொள் வேர்ப்பவே!
1 ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்
சேர்ப்பதும் ஒப்புமோ சொல்
2 ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்
சேர்ப்பதும் ஒப்புமோ சொல்லடா- நேர்த்தியாய்
வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி
பார்த்துனைப் பின்தொடர் பாங்கு
3 வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி
பார்த்துனைப் பின்தொடர் பாங்கு
4 வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி
பார்த்துனைப் பின்தொடர் பாங்குகாண் -சீர்பெற
கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை உன்புகழ்
சோர்ந்திடா தேவரும் சொத்து
5 கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை நேர்புகழ்
சோர்ந்திடா தேவரும் சொத்து
6 கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை நேர்புகழ்
சோர்ந்திடா தேவரும் சொத்துகாண் மூர்க்கமாய்
ஆர்ப்பதில் நன்மையும் யாதுகொல்? சார்ந்திடும்
தீர்ப்பினை நெஞ்சிலே தேர்.
7 ஆர்ப்பதில் நன்மையும் யாதுகொல்? சார்ந்திடும்
தீர்ப்பினை நெஞ்சிலே தேர்.
8 ஆர்ப்பதில் நன்மையும் யாதுகொல்? சார்ந்திடும்
தீர்ப்பினை நெஞ்சிலே தேர்ந்துகொள்- வேர்ப்பவே!
ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்
சேர்ப்பதும் ஒப்புமோ சொல்
9 சேர்ப்பதும் ஒப்புமோ சொல்லடா நேர்த்தியாய்
வார்த்திடும் ஈகைதான் விண்.
10 பார்த்துனைப் பின்தொடர் பாங்குகாண் சீர்பெற
கூர்த்திடும் புத்தியால் கொள்
11 சோர்ந்திடா தேவரும் சொத்துகாண் மூர்க்கமாய்
ஆர்ப்பதில் நன்மையும் யாது
12 தீர்ப்பினை நெஞ்சிலே தேர்ந்துகொள் வேர்ப்பவே!
ஈர்ப்பதில் காசினுக் கே!
அச்சம்
அச்சமே வீழ்ச்சி அச்சமே தாழ்ச்சி
அச்சமே நோய்களின் அன்னை
அச்சமே நெஞ்சை ஆசன மாக்கி
அமர்த்திடும் தோல்வியை முன்னே
அச்சமே மூத்தோள் பீடம்
அச்சமே பொய்மை வேடம்
அச்சமே வேண்டாச் சாக்குகள் தேடி
அலைப்புற வைத்திடும் நம்மை
இந்தப் புதுமையான விருத்த அமைப்பு இரசிக்கத் தக்கதாய் உள்ளது. குறிப்பாக, இடையில் புகும் மாறுபட்ட விருத்த அமைப்பில் இயைபு பயில்வது இதற்கு மேலும் ஒரு தனித்தன்மையையும் ஓசை அழகையும் தருகிறது.அனந்த்
2013/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>
இடைமுடை விருத்தம்.எழுசீருக்குள் அறுசீர் அடி(சம்புடிதம்)அச்சம்
அச்சமே வீழ்ச்சி அச்சமே தாழ்ச்சி
அச்சமே நோய்களின் அன்னை
அச்சமே நெஞ்சை ஆசன மாக்கி
அமர்த்திடும் தோல்வியை முன்னே
அச்சமே மூத்தோள் பீடம்
அச்சமே பொய்மை வேடம்
அச்சமே வேண்டாச் சாக்குகள் தேடி
அலைப்புற வைத்திடும் நம்மை
ஆம். படித்ததும், குறும்பா நினைவே முதலில் எழுந்தது. இடைமுடை விருத்தம் இலக்கியத்தில் இதற்குமுன் இல்லையென்றே தோன்றுகிறது.2013/11/10 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
சற்று யோசித்தால், இதற்கும் ‘குறும்பா’ வடிவத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு என்பதைக் காணலாம்.பொதுவாக, ஒரு பாடல் இடையே , குறைந்த சீர்கள் கொண்ட சில அடிகள் கொடுக்கும் ஓசையின் கவர்ச்சியே வெண்டுறை, ஆசிரியத்துறை வடிவங்களைத் தோற்றுவித்தது என்றும் கூறலாமோ ?
ஆம், இடைமுடை விருத்தம் நல்ல கட்டமைப்பு கொண்ட, ஓசை அழகு கொண்ட ஒரு புதிய அமைப்பே. மிகவும் அழகு; வரவேற்கத் தக்கது. ஆனால், நான் சொல்ல வந்தது: பாடல் நடுவில் சீர்களைக் குறைப்பதில் உள்ள இசையழகைப் பற்றி முன்னோர்கள் யோசித்திருப்பது.இதன் முன்னோடியாய் இத்தகைய சில முயற்சிகளைச் சைவ சமய நால்வர் செய்திருக்கின்றனர் என்று கூறலாம். சோ.ந.கந்தசாமி சொல்கிறார்:“ தம்பால் பயின்று வரும் சீர்கள் மிக்கும் குறைந்தும் வருவதினால் அளவு ஒவ்வாத அடிகள் நான்கினை அமைத்துப் பாடுவதில் ஒருவகை இசையின்பம் கொண்டனர். “மேலும், இப்படிப் பாடுவதில் இளங்கோ முன்னோடி என்கிறார். சீர்களை மிகுத்தும் குறைத்தும் பாடுவதில் பதினைந்து வகையான உத்திகள் உண்டு என்றும் சொல்கிறார்.2013/11/10 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
ஆம். படித்ததும், குறும்பா நினைவே முதலில் எழுந்தது. இடைமுடை விருத்தம் இலக்கியத்தில் இதற்குமுன் இல்லையென்றே தோன்றுகிறது.2013/11/10 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
சற்று யோசித்தால், இதற்கும் ‘குறும்பா’ வடிவத்திற்கும் ஓர் ஒற்றுமை உண்டு என்பதைக் காணலாம்.பொதுவாக, ஒரு பாடல் இடையே , குறைந்த சீர்கள் கொண்ட சில அடிகள் கொடுக்கும் ஓசையின் கவர்ச்சியே வெண்டுறை, ஆசிரியத்துறை வடிவங்களைத் தோற்றுவித்தது என்றும் கூறலாமோ ?
--
பாரதி கலைக்கழக ஆண்டு விழா: 22 டிசம்பர் 2002
குறிப்பு: கீழ்வரும் வெண்பாக்களில், ஒரு புதிய உத்தியாக, ஒவ்வோர் அடியிலும் குறில்-நெடில் இணைகள் மோனையாக அமைக்கப்பட்டுள்ளன.
கனலில் மலர்ந்த காதல்
கனலே மணக்கின்ற கானலாய் நெஞ்சில்
அனலே மலர்களாய் ஆக - எனக்குள்
எழுந்து பரந்ததோர் ஏக்கம்அவ் வேளை
விழுந்ததென் பார்வையவள் மேல்:
OoO
<> வேட்கை <>
மடுப்புக்கு நீரருந்தும் மாடொன்றைப் பார்த்துச்
சுடுவெம்மை போக்குமரஞ் சூழஅவள் நின்றிருந்தாள்
மின்னை நிகர்ஒளியாள் மீன்விழியாள் அன்னவளைத்
தன்னை மறந்தென்கண் தான்உண்ட காலை
கடும்புலியைக் கண்டிட்ட கானகத்து மான்போல்
ஒடுங்கியவள் பேதலித்தே ஓடுகையில் பின்சென்(று)
அடியே!என் ஆசைபோல் ஆடித் துயர்தீர்!
கொடியே!உன் பார்வைக்குக் கோடிப் பணம்தருவேன்
என்றிங்ஙன் கெஞ்சிடினும் ஏனோ அவள்மறுத்து
வன்னெஞ்சர் பாலிருந்து வானோர் விலகுதல்போல்
சட்டென் றகன்றிட்டாள் சாட்டை யடிகொண்டேன்
வெட்டுண்ட பின்னுணர்ந்தேன் வேட்கை விளைத்த
படுதுன்பம் போகவினிப் பாடுவதே நன்றென்(று)
எடுத்திட்டேன் ஈங்கிந்த ஏடு
OoO
அனந்த் 12-11-2013
கீழ்வரும் பாட்டிலே ஒரு புதுமை இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் அதை ஆய்ந்து சொல்ல வேண்டுகிறேன்.ஈர்ப்பதில் காசினுக் கேற்பவே ஓர்பொருள்
சேர்ப்பதும் ஒப்புமோ சொல்லடா நேர்த்தியாய்
வார்த்திடும் ஈகைதான் விண்ணகம் சேர்வழி
பார்த்துனைப் பின்தொடர் பாங்குகாண் சீர்பெற
கூர்த்திடும் புத்தியால் கொள்ளிதை நேர்புகழ்
சோர்ந்திடா தேவரும் சொத்துகாண் மூர்க்கமாய்
ஆர்ப்பதில் நன்மையும் யாதுகொல்? சார்ந்திடும்
தீர்ப்பினை நெஞ்சிலே தேர்ந்துகொள் வேர்ப்பவே!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/KiMQlEfoi0E/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
குறில்-நெடில் வெண்பாக்கள் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டன. அவற்றைப் பற்றி, டிசம்பர் 2000-ல் மன்றமையத்தின் (ஃபோரம் ஹப்’) ’வெண்பா வடிக்கலாம் வா’ திரியில் இட்டிருந்த சில பாக்களைக் கணினிக் கோப்பிலிருந்து (எழுத்துரு மாற்றிக்) கீழே தந்துள்ளேன்.
..அனந்த்
ஓலமிடும் எண்ணங்கள் ஒளிந்திருக்கும் என்னுள்ளே
காலமிடும் கட்டளைக்கு கட்டுண்டு நூலறுந்து
தள்ளாடும் காற்றாடி தானடா உள்ளாடும்
கல்லூரி கால நினைவு
.. பாபு
நாவல் உயிர்நாடி நன்முடிவில்; வேண்டுமஃதே
ஆவலுடன் உண்ணும் அறுசுவைக்கும் -- நாவூறக்
கார வடுமா கடித்துப்பின் சோற்றுநடு
மோரின்ப வாரிதியில் முங்கு.
.. பசுபதி
கனவினிலே வந்தின்ப கானத்தைப் பாடி
நனவினிலோ சற்றேதான் நாணத்தைக் காட்டி
மனதில் புகுந்தெந்தன் மானங் கவர்ந்தாய்
உணவு மறந்ததென் ஊன்
கட்டழகுக் கன்னிதனைக் காட்டினில் கண்டதனால்
பட்டுவிட்ட துன்பமெலாம் பாட்டினில் இட்டுவிடத்
திட்டமிட்டு ஓலையில் தீட்டுங்கால் நெஞ்சினிலோ
திட்டமாய்ப் பொங்கிய தீ
... சின்னக்கண்ணன்
மாரி இலையெனில் மக்கள் மரிப்பரிப்
பாரில் எனவறிந்தும் தாயாய்ப் பரிதவித்துத்
தானாகத் தண்ணீரைச் சென்னைக்குத் தாராமல்
வீணாய்க் கிடக்குதே விண்.
,,, சங்கரதாஸ் நாகோஜி
மானம் மதிக்கும் மனமும் மனமாரத்
தானம் தரநல் தனமும் பெற்றிடில்யான்
வானம் பொழிந்த வனம்போல் மகிழ்ந்திட்டென்
தீனம் தவிர்ப்பேன் தினம்
(தீனம்=குறை, வறுமை)
இட்டம் பயக்காத ஈட்டம் எளியோர்க்குக்
கட்டம் விளைவிக்கும் காட்டம் பிறர்க்கென்றும்
நட்டம் கொடுப்பதில் நாட்டம் இவையெல்லாம்
விட்டால் கிடைக்குமவ் வீடு
..அனந்த்
கதைபோல் கவிதை கவிவேட்டை தந்தபுதையல் புவியில் புதுசுவேட்கை மிகவும் ரசித்தேன்!
On Tuesday, November 12, 2013, VETTAI ANANTHANARAYANAN wrote:2002-ல் பாரதி கலைக்கழக ஆண்டு விழா மலருக்காக அனுப்பிய கவிதைகள் இரண்டைக் கீழே காணவும் (மலரில் வெளியாயிற்றா என்று நினைவில்லை). இவற்றில் 1,3 சீர்கள் குறில்-நெடிலாக அமையும்.
--
தரமுள்ளார் நல்லதொரு தாரமுள்ளார் நற்பா
வரமுள்ளார் அன்பென்னும் வாரமுள்ளார் நல்கும்
கரமுள்ளார் உள்ளேஓங் காரமுள்ளார் நெஞ்சில்
உரமுள்ளார் யாதுமவர் ஊர்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
நினைத்தேன், நினைத்தேன் எனநான் சுவைத்தேன்
இனித்தேன் எதற்கென் றிருந்தேன்?- தனித்தேன்
புனைந்தேன் கவித்தேன் புதிதாய்ப் படைத்தேன்
தினை, தேன் எனக்கலந் தேன்.
மின்னைத்தான் எண்ணித்தான் வேர்த்தான் விரும்பித்தான்
பொன்னைத்தான் நோக்கித்தான் புன்னகைத்தான் - என்னைத்தான்
உன்னத்தான் என்னத்தான் ஏற்கத்தான் வேண்டுகிறேன்
உன்னைத்தான் என்றான் உவந்து
எண்சீர் உத்தி
30 ஆண்டுகளுக்கு முன்னே புதுச்சேரிக் கடற்கரையில் புதுவை அரசு நடத்திய பாவேந்தர் விழாவில் நான் கவியரங்கில் கலந்துகொண்டேன். அப்பொழுது முதலமைச்சராயிருந்த பரூக் மரைக்காயர் விழாவுக்குத் தலைமை(அவர் பெயரைச் சரியாகத்தான் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன்.). என் தலைப்பு" பாவேந்தர் பண்ணையில் -கிடைத்த பரிசு" பாண்டியன் பரிசு பற்றிப் பாடவேண்டும். அது நீண்ட கவிதை. அதில் நான்கு எண்சீர் விருத்தங்களை மட்டும் அவற்றின் உத்திக்காக இங்கே கொடுக்கின்றேன்.
பாவேந்தர்
பகுத்தறிவை ஊட்டியவர், தமிழர் வாழ்க்கைப்
பண்பாட்டைக் காட்டியவர், வார்த்தைக் குள்ளே
மிகச் செறிவைப் பூட்டியவர், புதிய பார்வை
வெளிச்சத்தைக் கூட்டியவர், கவிதை வாளைத்
தகதகக்கத் தீட்டியவர், மூட வாதத்
தத்துவத்தை வாட்டியவர், சாதி பேதப்
பகுப்புகளை வீட்டியவர், எதுகை மோனை
பரிசாக நாட்டியவர், பாவேந் தர்தான்,
2
மூவேந்தர் மடியினிலே கிடந்த முத்து
முன்னேந்தி வந்தசுவைக் கவிதை வித்து
பாவேந்தர் நெஞ்சுக்குள் பரிண மித்து,
பாண்டியனார் பரிசாக வந்த சித்து
ஆவேந்தித் தந்த சுவைப் பாலோ, பூவின்
அகமேந்தி வந்தநறுந் தேனோ, தாகம்
நாவேந்தி ஆற்றுமிள நீரோ, பாலை
நடுவேந்தும் அமுதத் தண் ணீரோ, சாறோ?
3
'நெஞ்சத்தில் நினைவைத்தேன்' என்றான்,' உங்கள்
நினைவைத் தேன் என நானும் கொண்டேன்' என்றாள்.
'கொஞ்சத்தில் வந்ததில்லை பேழை, ஏற்றுக்
கொள்ளுவையோ, விடையைத்தான் சொல்வாய்' என்றான்.
விஞ்சித்தான் போயிற்று, கேள்விக் கேற்ற
விடை 'அத்தான்' எனச் சொன்னாள் அன்னம்.
பஞ்சுக்குப் பக்கத்தில் நெருப்பி ருந்தும்
பற்றவில்லை, அது தானே பண்பின் எல்லை.
எற்றைக்கும் பேதமற வேலன் அன்னம்
இணை வைத்தார், இருவரையும் இணைய வைத்தார்
பற்றுக்கொண் டேநாட்டை வேலன் காக்கப்
பணிவைத்தார், மாற்றார்கள் பணிய வைத்தார்
கற்றுக்கொண் டிருந்தவனின் முன்னே பேழைக்
கனிவைத்தார், இருநெஞ்சம் கனிய வைத்தார்
முற்றுப்பெற் றானவுடன் இருவ ருக்கும்
முடி வைத்தார், நல்லதொரு முடிவை வைத்தார்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
"யானுமொரு சித்தன் வந்தேனிந்த நாட்டில்" நினைவுக்கு வருகிறது.
விருத்தத்தில் புதுமையாக அசை விருத்தம் சீர்விருத்தம் கண்டுள்ளோம்.
எடுத்துக்காட்டுகள்
வெற்றுச் சொல்லாக இல்லாமல் சொற்செட்டாக அமைந்திருக்கும் இவற்றை ஆராய்ந்து
பார்த்தால் விரிந்த பொருள் கிடைக்கக்கூடும். ஏதாவது ஒன்றை எடுத்து
ஒருபக்கத்துக்குக் குறையாமல் விமரிசனம் எழுதிப்பாருங்களேன். விமரிசனப்
பயிற்சி இது. இந்த வகையில் விருத்தங்களும் எழுதலாம்)
அசைவிருத்தம்
இலா
நிலா
உலா
செலா
(அமாவாசையன்று இல்லாத நிலா உலாப் போகுமா?)
எடு
கொடு
விடு
தொடு
(எடுத்துத் தானம் கொடு. ஆசை விடு. முக்தி நிலையில் இறைபதம் தொடு)
பல்
சொல்
கல்
வெல்
(பல மொழிகளைக் கற்றுக்கொள். வெற்றி பெறுவாய்)
சீர் விருத்தம்
மழலை
மொழியில்
முழுமை
இழையும்
வஞ்சம்
விஞ்சும்
நெஞ்சம்
துஞ்சும்
திருந்து
திருத்து
பொருந்து
பொருத்து
கெஞ்சும்
கொஞ்சும்
மஞ்சம்
விஞ்சும்
வஞ்சி விருத்தம் நெடிலடியா?இலந்தை
நெடிலடி நான்கு அளவொத்தல் விருத்தம் என்பது நூற்பா என நினைக்கிறேன்.
அசை/சீர் பாடல்களுக்கு விருத்தம் என்பது தவிர வேறு ஒரு பெயர் சூட்டினால் நன்று என்று தோன்றுகிறது.
- sankara dass
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஒரே வெண்பாவில் மூன்று வெண்பாகள் கவிஞர் இக்குவனம் எழுதியிருப்பதைப் படித்தேன்.. அதற்குமேலும் வெண்பாக்களை வருவிக்க
முடியுமா என்று சிந்தித்ததன் முயற்சிதான் இது. இன்னும் முயன்றால்
தெளிவான பொருளோடு இன்னும் சிறப்பாகச் செய்திருக்கக் கூடும்.இதைக் கவிதை
என்று நான் கூற மாட்டேன். வெண்பா விளையாட்டுசில குறிப்புகள்.
1 எதுகை மோனையின் இடத்தைப் பிடிக்கும் என்று ஒரு விதி இருக்கிறது.
2. இதில் இறுதிச் சீர்களில் பொழிப்பு அமையவில்லை
இலந்தைதெய்வமெழில் வையகம் மெய்தவழும் உய்வளிக்கும்
ஐயனவன் மெய்வடிவைப் பொய்யிலதாய் - நெய்திடவே
செய்கைகள் எய்துதற்கு மையலறு தெய்வபக்தி
வையுறுதி மொய்ம்புற வே!வையகம் மெய்தவழும் உய்வளிக்கும் ஐயனவன்
மெய்வடிவைப் பொய்யிலதாய் நெய்திடவே -செய்கைகள்
எய்துதற்கு மையலறு தெய்வபக்தி வையுறுதி
மொய்ம்புறவே தெய்வம் எழில்மெய்தவழும் உய்வளிக்கும் ஐயனவன் மெய்வடிவைப்
பொய்யிலதாய் நெய்திடவே செய்கைகள் - எய்துதற்கு
மையலறு தெய்வபக்தி வையுறுதி மொய்ம்புறவே
தெய்வ மெழில்வை யகம்