பின்முடுகு

38 views
Skip to first unread message

kavimamani

unread,
Aug 30, 2008, 10:50:13 PM8/30/08
to Santhavasantham
பின்முடுகு வெண்பாவின் பின் இரண்டு அடிகள் வெண்பா இலக்கணத்தை மீறி
அமையும். அங்கே முடுகுக்குத் தான் முதலிடம். கனிச்சீரும் வருவதுண்டு.

நாளை கவிஞர் பெரியவர் இக்குவனம் அவர்கள் எழுதிய சித்திரப்பாவில்
செம்மொழிக்காவலர் என்னும் நூல் சென்னையில் வெளியிடப்படுகிறது. திராவிடர்
கழகக் கி.வீரமணி தலைமை. நானும் பேசுகிறேன்.

கவிஞர் இக்குவனத்தைப் பற்றி இதோ ஒரு பின்முடுகு வெண்பா!

இக்குவனம் என்னும் இனியதமிழ்ப் பாவாணர்
எக்கணமும் பாடல் இயற்றுகிறார்- இக்கால
கட்டத்தமிழ் கட்டத்தமிழ் கட்டத்தமிழ் என்றத்தமிழ்
இட்டத்தமிழ் என்றிட்டனர் இன்று.

பின்முடுகு அடிகளுக்குப் பொருள் விளங்குகிறதா எனப் பாருங்களேன்.

இலந்தை

kavimamani

unread,
Aug 30, 2008, 11:47:25 PM8/30/08
to Santhavasantham
பின் முடுகில் மூன்றாம் நான்காம் அடிகளும் தளைக்கு உட்பட்டே அமையவேண்டும்
என்று
தமிழழகன் கருதுகிறார்.


. ஆனால் புகழ்பெற்ற சில பாடல்கள் அப்படியில்லை.

அரிவையம் பாகத்தான் அரனொரு மூன்றெய்தோன்
அரிவையம் பாகத்தான் அகம்.

கண்டங்கத் தரிக்கொத்துக் காயங்கம் தரிக்கப்பின்
கண்டங்கத் தரிக்கொத்துக் காய்.

அமைப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில் புதியன புகுதல் என்ற முறையில்,
தேவைப்பட்டால் புதியன உருவாக்கலாம்

இலந்தை

ananth

unread,
Aug 31, 2008, 10:29:41 AM8/31/08
to Santhavasantham
தனிப்பாடல் திரட்டு நூலொன்றில் (இராமசாமிப் புலவர் தொகுத்தது, நான்காம்
பகுதி, கழக வெளியீடு) காணும் சுமார் 55 பின்முடுகு வெண்பாப் பாடல்களில்
4,5- ஐத் தவிர மற்றவற்றில் வெண்டளை பயில்கிறது. தளை பிறழும் பாடல்களில்,
கனிச்சீர் காணவில்லை ஆனால் காய்ச்சீருக்குப் பின் நிரை முதலாகக் கொண்ட
காய்ச்சீர் வருவதைப் பார்க்கலாம். காட்டாக,

பாரோர் புகழவரும் பங்குனி யுத்திரத்தில்
ஆரூரர் வ்விதி அணுகினார் - நேரே
பணச்சர்ப்பந் தரித்துப்பொற் பதத்திற்கிண் கிணிச்சத்தம்
கிணுக்குக்கிண் கிணுக்கென்ன வே
(இதை முன்பொருதரம் நாம் இங்குக் கண்டதாக நினைவு)

மேலும், பின்னடிகள்:

சமரிலங்கங் குழலுநந்தஞ் சதிருறும்செண் டிருமுகஞ்செங்
கமலமுஞ்சத் திரனுமஞ்சுங் காண்.

பளபளவென்ற ஒளிமிகுந்து பவளமிஞ்சு நகைபுனைந்த
கனபரும்ப முலைமடந்தை காண்.

நீங்கள் சொல்வதுபோல கனிச்சீர் வரும் பின்முடுகுப் பாடல்களையும் ஓசைநயம்
கொண்டு நாம் சுவைக்கலாம்.

அனந்த்
1-9-2008
> > இலந்தை- Hide quoted text -
>
> - Show quoted text -

Pas Pasupathy

unread,
Aug 31, 2008, 2:09:35 PM8/31/08
to santhav...@googlegroups.com
ÓýÉ¢Õ «Ê¸û ¦ÅñÀ¡ þÄ츽ò¨¾ò ¾ØÅ¢Ôõ, À¢ýÉ¢Õ «Ê¸Ç¢ø ¸É¢îº£÷¸û ÅÕõ À¢ýÓÎÌô À¡¼ø¸û  þÄ츢Âò¾¢ø ¯ûÇÉ.
 
( À¢ýÉ¢Õ «Ê¸Ç¢ø ¾¨Ç¾ðÎõ À¡¼ø¸¨ÇÔõ, Å¢Ç¡í¸¡öî º£÷¸û ÅÕõ À¡¼ø¸¨ÇÔõ Óý§À
þíÌô À¡÷ò¾¢Õ츢§È¡õ. '¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ'ò ¦¾¡¼Ã¢Öõ º¢Ä ¸¡ðθû ¯ûÇÉ.)
 
¾Á¢ÆÆ¸ý ¦º¡øÅЧÀ¡ø, ¦Åñ¼¨Ç/¦ÅñÀ¡ þÄ츽õ  Á£Úõ À¡¼ø¸¨Ç ¦ÅñÀ¡ ±ýÚ ÜÈì ܼ¡Ð ±ýÈ¡ø, §ÅÚ ¦ÀÂ÷ ¨ÅòÐì ÜôÀ¢¼Ä¡§Á? þÅü¨È¦ÂøÄ¡õ 'À¢ýÓÎÌ ¦Åñ¸Ä¢ôÀ¡' ±ýÚ ¾¡Ã¡ÇÁ¡¸ «¨Æì¸Ä¡õ. ( ¦À¡ÐÅ¡¸, þó¾ô À¡¼ø¸¨Çô 'À¢ýÓÎÌ ¦ÅñÀ¡' ±ýÈ ´Õ ¾¨ÄôÀ¢ý ¸£§Æ§Â¡, §Å¦È¡Õ ÅÊÅò¾¢ý ¦ÀÂâ§Ä¡ ¿¡ý À¡÷ò¾¾¢ø¨Ä. )  ±ý¨Éô ¦À¡Úò¾Å¨Ã ¿øÄ ÅÊÅí¸û ¾¡õ Ó츢Âõ; «ÅüÈ¢ý ¦ÀÂ÷¸û «øÄ. ¿ÁР¡ôÀ¢Ä츽õ Á¢¸ ¦¿¸¢ú ¯ûÇÐ. «¾ý þÄ츽ò¾¢Ä¢ÕóÐ ¦ÅÇ¢§Â ¦ºøÅÐ Á¢¸ì ¸ÊÉõ!
 
ÀÍÀ¾¢
31-8-08 

 

kavimamani

unread,
Aug 31, 2008, 4:56:46 PM8/31/08
to Santhavasantham


அன்புள்ள பசுபதி.

கனிச்சீர்கள் பிமுடுகில் வரும் பாடல்கள் இலக்கியத்தில் இருந்தால் அவற்ரை
இங்கே இட முடியுமா?

இலந்தை

kavimamani

unread,
Aug 31, 2008, 5:04:07 PM8/31/08
to Santhavasantham
சரி, நானே பொருள் சொல்லி விடுகிறேன்.

இக்கால கட்டத்தமிழ்- இக்கால கட்டத்தில் அமிழ்ந்து
கொண்டிருக்கக்கூடியாதாவது மறைந்துகொண்டிருகும்)
கட்டத்தமிழ்- கட்டத்திற்குள் எழுத்துகளை நிரப்பும் சித்திரத் தமிழ்
கட்டத்தமிழ்- கட்டு அத் தமிழ்

இட்டத்தமிழ்- விருப்பமுடைய தமிழ்.


இக்காலகட்டதில் சிறிது சிறிதாக மறைந்துகொண்டிருக்கும் சித்திரக்கவியை
ஏற்று, 'பாடல் இயற்று அத்தமிழில் என்று அதைத் தனது விருப்பத்தமிழாகக்
கொண்டு கவிதை எழுதுகிறார் என்று பொருள்.

இலந்தை

On Aug 31, 7:50 am, kavimamani <ELAND...@gmail.com> wrote:

kavimamani

unread,
Aug 31, 2008, 5:07:29 PM8/31/08
to Santhavasantham
இப்பாடலுக்குப் பின்முடுகு வெண்கலிப்பா என்று பெயர் கொடுத்து
இலக்கியத்தில் ஏற்றிவிடலாம்.


இலந்தை

Pas Pasupathy

unread,
Aug 31, 2008, 6:28:29 PM8/31/08
to santhav...@googlegroups.com
அன்புள்ள இலந்தை,
 
முதல் மடலை எழுதும்போது , எங்கே இவற்றைக் கண்டேன் என்பது மறந்திருந்தது; அதனால் தான் அப்போதே இடவில்லை.
 
'தனிப்பாடல் திரட்டில்' உள்ள பாடல்கள் இவை; எழுதிய புலவர்கள் பெயர்கள் தெரியாது.
 
கந்தனென்றும் வேலனென்றும் கானமயில் வீரனென்றும் 
செந்தனென்றும் ஏன்புலவீர் செப்புகிறீர்? - முந்தஇளம்
கூனல்பிறை சூடச்சிவ னாருக்குப  தேசித்தருள்
ஞானக்குரு வேடப்பய லை.
 
பொருள்;
 முற்காலத்தில் பிறைமதியைச் சூடிய சிவனுக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்த குருவின்
வடிவான சிறுகுழந்தையை, 'கந்தன்''வேலன்' 'காட்டு மயில் வீரன்' 'சிவந்த நிறமுடையவன்' என்றெல்லாம்
,புலவர்களே, ஏன் அழைக்கின்றீர்?
 
(செந்தன் - சேந்தனின் குறுக்கல் விகாரம்.)
 
(இதை முழுமுடுகு என்றே சொல்லலாம்.)
 
உன்னஇனி தாயிருக்கும்; ஓங்குசெல்வ மும்பெருக்கும் ;
நன்னல்அரு ளைக்கொடுக்கும் நாடோறும் -- பன்னும்
சகடம்உருள நெருடுகமல சரணகருணை அரியின்மருகன்
விகடகரியின் இளையமுருகன் வேல்.
 
பொருள்:
 'சகடாசுரன்' என்பவன் உருண்டு சாகுமாறு அழித்த திருவடிகளுடைய திருமாலின்
மருமகனும், 'விகடசக்கர' விநாயகரின் தம்பியுமான முருகனின் வேல் துதிக்கின்றவர்க்கு
இன்ப மயமாக இருக்கும்; மிக்க செல்வத்தை அளிக்கும்; நாள்தோறும் மேலான திருவருளை நல்கும்.

பசுபதி
31-8-08
 

Siva Siva

unread,
Aug 31, 2008, 10:27:42 PM8/31/08
to santhav...@googlegroups.com
இக்கால கட்டத்தமிழ் கட்டத்தமிழ் = "இக்காலகட்டத்துத் தமிழ் கஷ்டத் தமிழ்" ? 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2008/8/31 kavimamani <ELAN...@gmail.com>



--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
Reply all
Reply to author
Forward
0 new messages