எத்தனை ஊர்வலங்கள்

24 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Aug 10, 2026, 7:47:48 AM (4 days ago) Aug 10
to santhavasantham

எத்தனை ஊர்வலங்கள்!

எல்லை யிலாக்கதிரை- தன்னுள்

ஏந்தி அடைகாக்கும்

புல்லின் பனிச்சுமைக்குள்-ஒரு

பூரணம் காணுகிறேன்

 

நாளை வரவேற்கும்- கடல்

நாயகி ஊஞ்சலிலே

கோளை இயக்குபவன் - ஒயில்

கூத்து நடத்துகிறான்

 

குன்று களுக்கிடையே- நெருப்புக்

கோளம் எரிகிறது

சென்று குறைகின்ற -இருட்டு

செம்மை பெறுகிறது

 

ஒற்றைப் பனைமரத்தின் -விசிறி

ஓலை மடிப்பிடையே

சற்றே ஒழுகுமொளி - தரையில்

தங்கம் இழைக்கிறது

 

கூட்டுப் பறவையொன்று - தனது

கோணல் சிறகிடையே

சூட்டைப் பெறுவதற்கு - சற்றே

சோம்பல் முறிக்கிறது

 

துள்ளி விழும்மீனோ - ஒளிச்

சோதிச் சுழற்சியிலே

வெள்ளையொடு வண்ணம்- மினுக்க

மேலே குதிக்கிறது

 

கட்டியம் கூறுகிற - உரிமை

காத்திடு மாப்போலே

பட்டுத் தலைக்கொண்டைச் -சேவல்

பண்ணை இசைக்கிறது

 

இருட்டை ஓட்டுபவன் - தன்னை

இருட்டெ னக் கருதி

விரட்டக் கூடுமென்றே-காகம்

வேண்டிக் கரைகிறது

 

மோட்டு வெளிவானம் - எங்கள்

முற்றத்தி லேயிறங்கி

வீட்டுக்குள்ளே விண்ணைக்-கொணர்ந்தே

விந்தை புரிகிறது.

 

 

வாய்க்கால் பனிப்புல்லில்- கால்கள்

வைத்து நடக்கையிலே

சாய்க்கும் கதிருரசி - இசையாய்ச்

சந்தம் கொடுக்கிறது

 

கருப்பன் கோயில்மணி - வீசும்

காற்றில் அசைகிறது

நெருப்பு வட்டமெனக் - கதிரும்

நேரே எழுகிறது

 

மாலை வரைகிறது - அங்கோர்

மாயம் நிகழ்கிறது

மேலைத் திரைவானில் - வண்ண

வேள்வி நடக்கிறது

 

வண்ணங்கள் இத்தனையா? - இவையும்

வானத்தின் குத்தகையா?

கண்ணுக்குள் காவியமா? - இதுதான்

காலத்தின் ஓவியமா?

 

மேக விளக்குகளை - யாரே

விண்ணிலே ஏற்றுகிறார்?

ஆகம் புதுப்புதிதாய் - ஒளி

அள்ளியே ஊற்றுகிறார்?

 

தங்கச் சரிகைகளும் - எந்தத்

தறியில் நெய்தனவோ?

தொங்கும் கிழிசலுக்கும்- ஓரம்

சொர்ணத்தில் குஞ்சங்களோ?

 

கண்ணை விழித்தபடி - எழில்

காட்சி ரசித்தபடி

எண்ணக் கனவுகளில் - அட

எத்தனை ஊர்வலங்கள்?

 

வீழ்ந்து மறையுமுன்னே - காட்டும்

விந்தை விளையாட்டின்

ஆழ்ந்த கருத்ததனை- எண்ண

யாவுமே இன்பமயம்

Siva Siva

unread,
Aug 10, 2026, 8:52:09 AM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
அழகிய இயற்கையின் இனிய வர்ணனை!

வி. சுப்பிரமணியன்

On Mon, Aug 10, 2026 at 7:47 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

எத்தனை ஊர்வலங்கள்!

...

Swaminathan Sankaran

unread,
Aug 10, 2026, 10:56:25 AM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
ஆஹா! ஆஹா!!

இயற்கையின் கோல விளையாட்டுகளை 
       அற்புதமாகச் சித்தரிக்கும் அருமையான கவிதை.
மனதில் கிளர்ச்சியூட்டும் மகத்தான கவிதை.

சங்கரன்  

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDgJkEpaHqLsSACVuSbV%3DbLrMPBtDRDE57bhRQn5ZhF5w%40mail.gmail.com.


--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Aug 10, 2026, 10:57:46 AM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி

On Mon, Aug 10, 2026 at 10:56 AM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
ஆஹா! ஆஹா!!


GOPAL Vis

unread,
Aug 10, 2026, 12:40:50 PM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
அற்புதக் கவிதை!

விந்தை விளையாட்டில் - தனது
   விழியைப் பறிகொடுத்து
சொந்தக் கவிதைகளால் - அதைச்
   சொலிக்கப் படமெடுத்தான்!

படத்தில் காண்கையிலே - காட்சி
  பரவசம் ஊட்டுமென்றால்
கடவுளின் சாகசத்தை - நேரில்
   கண்டபின் மீளுவமோ!

கோபால்.


On Mon, Aug 10, 2026 at 5:17 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

எத்தனை ஊர்வலங்கள்!

எல்லை யிலாக்கதிரை- தன்னுள்

ஏந்தி அடைகாக்கும்

புல்லின் பனிச்சுமைக்குள்-ஒரு

பூரணம் காணுகிறேன்

 

நாளை வரவேற்கும்- கடல்

....................

Lalitha & Suryanarayanan

unread,
Aug 10, 2026, 9:17:11 PM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com
இலந்தை நடத்திய ஊர்வலங்கள்!

படத்தினில் தீட்டிய ஒவியம்போல் - கவி
   பாட்டினில் காட்டிய காவியமோ!
இடத்தில் வலத்தில் எங்கெங்கும் - எழில்
   எங்கணும் தோன்றும் மருமமென்ன! 

கதிரோ எனநான் இரசிக்கையிலே - அது
   மதியென மாறித் தோன்றியதேன்?!
புதிரோ இதுவெனப் புரியாமல் - அப்
   போதினைக் கண்டே வியந்திருந்தேன்!

காகங்கள் அஞ்சியே ஓடுவதோ - அவை
   கதிரினைக் கண்டே வாடுவதோ!
தேகம் குளிரில் நடுங்குவதைக் கவி
  செப்பும் மொழிதான் விண்டதுவோ!

ஒற்றைப் பனைமர ஓலையது - முன்பு
   ஒப்பில் தமிழைத் தாங்கியதால்
சற்றிவண் பொன்னாய்த் தெரிகிறதோ! - அது
  தரைமகள் புண்ணியப் பயனாமோ!

ஊசலில் ஒய்யாரம் செய்தனளோ? - கடல்
   ஓங்கி உயரவே ஆடினளோ ?
கூசும் ஒளியோ அவள்மேலே? - தன்
   கூத்தை அதுவே நடத்தியதோ!

துள்ளிக் குதித்திடும் மீனெல்லாம் - தம்
   துயிலை மறந்தது ஏனோதான்?
கள்ளைக் குடித்ததோ கயலெல்லாம் - அது
   கதிரின் ஒளியின் செயலோதான்?

முற்றம் தன்னில் முழுவானம் - நல்
    முத்தைக் கொண்டு கொட்டியதோ!
பெற்றம் மேய்க்க எழுப்பியதோ ? - கவி
    பெய்திட வேண்டிக் கேட்டதுவோ?

தொம்பை கட்டியே வந்ததுவோ - அது
    தூண்மிசை தேரில் மின்னிடுதோ!
பம்பை அடித்ததோ கோயிலிலே ! - அதில்
   பரவசம் ஆனது நம்கவியோ!

ஊர்வலம் வந்த பார்மகளின் - உயர்
    உள்ளம் உவக்கச் சீர்வரிசை
பாரெனச் செய்தது யாரென்றேன்? - கவி
    பைந்தமிழ் செய்தவோர் தேரென்றான்!


சிவசூரி.

   
    


On Mon, Aug 10, 2026 at 5:17 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

எத்தனை ஊர்வலங்கள்!

எல்லை யிலாக்கதிரை- தன்னுள்

ஏந்தி அடைகாக்கும்

புல்லின் பனிச்சுமைக்குள்-ஒரு

பூரணம் காணுகிறேன்

 

.

Ram Ramakrishnan

unread,
Aug 10, 2026, 9:54:32 PM (4 days ago) Aug 10
to santhav...@googlegroups.com

எல்லாம் இன்பமயம் - இதை
எண்ணி உரைத்திடுவார்
நல்ல மனவெழுச்சி - இங்கு
நாளும் வெளிப்படுமே.

அற்புதம், தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--

Subbaier Ramasami

unread,
Aug 11, 2026, 7:49:44 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி

இலந்தை

On Mon, Aug 10, 2026 at 12:40 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
அற்புதக் கவிதை!

விந்தை விளையாட்டில் - தனது
   விழியைப் பறிகொடுத்து
சொந்தக் கவிதைகளால் - அதைச்
   சொலிக்கப் படமெடுத்தான்!


....................

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Aug 11, 2026, 7:51:18 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
மிக அற்புதப் பின்னூட்டாம்.    சொல் நாட்டியம்

On Mon, Aug 10, 2026 at 9:17 PM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
இலந்தை நடத்திய ஊர்வலங்கள்!

Subbaier Ramasami

unread,
Aug 11, 2026, 7:52:25 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
நன்றி

Subbaier Ramasami

unread,
Aug 11, 2026, 7:53:19 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
பாராட்டுக்கு நன்றி



On Mon, Aug 10, 2026 at 10:56 AM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:

Swaminathan Sankaran

unread,
Aug 11, 2026, 11:21:10 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
பல நாட்களுக்குப் பின் திரு சிவசசூரியின் கவிதையைப் படித்து மகிழ்ச்சியடைகிறேன்.
அருமையான பாராட்டுக் கவிதை.

சங்கரன்  

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Aug 11, 2026, 11:49:23 AM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி

On Mon, Aug 10, 2026 at 9:54 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

எல்லாம் இன்பமயம் - இதை

Lalitha & Suryanarayanan

unread,
Aug 11, 2026, 12:08:55 PM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
பேராசிரியர் சங்கரன் அவர்களுக்கு நன்றி.

சிவசூரி.

Ram Ramakrishnan

unread,
Aug 11, 2026, 12:41:37 PM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
திரு. சிவசூரியின் கவிமாரி வழ்க்கம்போல் அற்புதம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--

Kaviyogi Vedham

unread,
Aug 11, 2026, 8:31:53 PM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com
  ஆம். சூரியின் கவிதை மிக்க  சொல்நயம் உள்ளது. வாழ்க,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Aug 11, 2026, 10:31:22 PM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com, santhavasantham
மிக மிக அற்புதமான வர்ணனை!
இது போல இரண்டு வரிகளையாவது நாமும் எழுத மாட்டோமா என்று ஏங்க வைக்கும் எழிற்கவிதை!!

இமயவரம்பன்

unread,
Aug 11, 2026, 10:33:04 PM (3 days ago) Aug 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
சிவசூரியாரின் பின்னூட்டக் கவி மாரி மிகச் சிறப்பு!

Lalitha & Suryanarayanan

unread,
Aug 12, 2026, 11:14:56 PM (2 days ago) Aug 12
to santhav...@googlegroups.com
என் பின்னூட்டத்திற்குப் பின்னூட்டம் கொடுத்து என்னை ஆதரிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றியும் வணக்கங்களும்.


சிவசூரி.
Reply all
Reply to author
Forward
0 new messages