தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு. ஆனால் அந்தக்காலத்திலோ மன்னர் தும்பைப்பூ மாலை அணித்து விட்டால் நமது கருப்புப்பூனைகள் முண்டாசால் முகத்தை மூடினால் என்னவோ அது தான் . தும்பை பூ மாலை அணிந்து விட்டாலே அடுத்து வருவது போர் தான்.
தொல்காப்பியத்தில் தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணமே கூறி இருப்பதாகக் கூறுவர் . இதனடிப்படையில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார்.
மற்றும் வான்படை வானவர் மார்பிடை
இற்று இலாதன எண்ணும் இலாதன
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். (யுத்த 1054)
இவனுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்ட இராமன் துளசி மாலை அணிந்து, அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூட்டிக்கொண்டான் என்கிறார் கம்பர்.
அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். (யுத்த 1072)
இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைப்பூச் சூடிப் போருக்குச்சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன .
தமிழில் அற்றைக்கிருந்த செந்தமிழ் வார்த்தைகள் இன்னும் வழக்கொழியாமல் இருப்பது போல் இததகு தாவரங்களும் இன்னும் இருப்பதும் பெரு வியப்பே ! இவை இந்த வார்த்தைகளும், தாவரங்களும் தொடர்ந்து இடையறாமல் இன்று வரை பயன்பாட்டில் இருப்பதையே காட்டுகின்றன .
’அரையாப்புக் கட்டி யனிலமுதிரம்
பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் - தரையிற்
பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!
கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு'
கழுதைத் தும்பை எனும் கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்.

--
தும்பை கொண்டுபட்டாம்பூச்சி பிடி!கோவைத்தழையில்சிலேட்டு அழி!ஊமத்தை இலைகாயில்கரும்பலகை பூசு!பூவரசு இலையில்சீக்கி ஊது!கொட்டை இலையில்ஓட்டுச்சுற்று சுற்றிவிடு!மிளகாய்ப்பூடு தண்டிடித்துகுமிழ்குமிழாய் மொட்டுவிடு!மப்பூட்டுத்தழை கொண்டுகொசுறு வாங்கு!தென்னை ஓலையில்கடிகாரம் கட்டு!பனை ஓலையில்காற்றாடி சுற்று!கோரைப் புல்லில்கட்டியங் கூறு!புளியங்கொழுந்தில்பொன்வண்டு வளர்த்து!தும்பை கொண்டுபட்டாம்பூச்சி பிடி!ஆனால் என்ன?தும்பை இருக்கும்ஊர்தான் இல்லை!!-பழமைபேசி.0o0o0o0o0o0o0தும்பையும் தமிழரும்இருபெரும் வேந்தர்களும் நாள் குறித்து, பொதுவிடத்தில் போர் செய்தல் தும்பைத் திணை ஆகும். இவ்வீரர் இரு பக்கத்தவர்களும் தும்பைப் பூமாலை சூடிப் போர் செய்வர். மேலும் சங்கத்தமிழில் தும்பைச் செடி, தும்பைப்பூவைப் பற்றி ஏராளமான குறிப்புகள், தமிழரும் தும்பைச்செடியும் எப்படி இரண்டறக் கலந்து வாழ்ந்தனர் என்பதை இன்றும் பறைசாட்டுகிறது.தமிழகமெங்கும், கிராமங்களில் சாதாரணமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப்பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். கரும்பச்சை நிறமான இலைகள், நான்கு பக்கங்களைக் கொண்ட தண்டு, நடுவில் மஞ்சரித் தொகுப்பில் சுற்றி மலர்ந்துள்ள வெண்மையான, தேன்சத்து நிறைந்த நாக்கு வடிவ மலர்கள் இவற்றைக் கொண்டு தும்பைச் செடியை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.பெரும்பாலும் மணற்பாங்கான நிலத்திலேயே தும்பை விரும்பி வளர்கின்றது. விவசாய நிலங்களில் இந்தச் செடி மழைக்காலங்களில் மிகச் சாதாரணமாகக் காணப்படும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. தும்பை இலை, பூக்கள் மருத்துவப் பயன் அதிகமானவை. தும்பை மலர்களில் உற்பத்தியாகும் தேனைக் குடிக்க எப்போதும், எறும்பு, வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பிறவகைப் பூச்சிகள் காத்துக் கொண்டிருக்கும். தும்பை செடியைப் பிடுங்கினால் எளிதில் வேருடன் வந்துவிடும். வேரில் மண் ஒட்டாமல் வெண்மையாகவே காணப்படுவது தும்பையின் சிறப்பு அம்சமாகும். மேலும், எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவும் தன்மையுடையது.கடவுள் வழிபாட்டிற்கு தும்பைப் பூக்கள் பயன்படுகின்றன. காலையில், புதிய பூக்கள் சேகரிக்கப்பட்டு, மனத் தூய்மையின் அடையாளமாக வணங்கப்படுகின்றன. முருகக் கடவுளுக்குத் தும்பை மலர்களால் சிறப்பாக அர்ச்சுனை செய்யப்படுவதுண்டு. இப்படியான தும்பைச்செடிகள் இன்று இல்லாமற்போய் வருகின்றன. தமிழரின் வாழ்வாதாரமும் முன்னேற்றமும் சீரழிவதற்கு, தும்பைச் செடிகள் ஒழிந்து வருவதே காரணமாகும் (இப்படியும் சொல்லலாமே? இஃகிஃகி)தும்பைச்செடிகள் இருக்கிற இடத்தில் வண்ணத்துப்பூச்சிகள் வெகுவாக இருக்கும். வண்ணத்துப்பூச்சிகள் வெகுவாக இருக்கும் இடங்களில் மகரந்தச்சேர்க்கை விரைவாகவும் செறிவாகவும் இடம் பெறும். அயல்மகரந்தச் சேர்க்கையானது காடுகள் செழித்திருக்க இன்றியமையானதாகும். காடுகளும் மரங்களும் செழிக்கும் போது அதனதன் பருவம் தவறாமல் மழை பொழியும். பருவந்தப்பாத மழையிருந்தால், தமிழரின் வாழ்வாதாரமான வேளாண் தொழில் சிறப்புறும் தமிழர் வாழ்வு செழித்திடவும், இனப்பெருமை காத்திடவும் தும்பைச்செடிகளை பாதுகாக்க முன் வருவோம். எனவேதான் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னமே வாழ்வியலின் ஒரு கூறாய் தும்பையை வைத்தான் ஆதித்தமிழன்.தும்பை காப்போம்! தமிழர் வாழ்வாதாரம் மீட்டெடுப்போம்!!#SaveThumbai0o0o0o0o0o0o0oதுன்பம் நீக்க ‘தும்பை’ வளர்ப்போம்!
வம்புகளின்றி வம்சம் காப்போம்!