just a reminder..about Ilanthevan- read hisgreat linesthro pasupathy

9 views
Skip to first unread message

Kaviyogi Vedham

unread,
Apr 16, 2026, 9:04:58 PM (8 days ago) Apr 16
to santhavasantham

Pas Pasupathy(pl read ilandevan)

unread,
Jul 12, 2017, 8:12:15 AM
to Santhavasantham

"ஒன்று தெய்வம் ராமனே 

உலகனைத்தும் கோயிலே

என்றுவாழும் தேவனே
எங்கள் ஆஞ்சநேயனே
அன்றரக்கர் வாலிலே
அஞ்சிலொன்றை வைப்பினும்
வென்றுவந்த வீரனே
வெல்க ராம தூதனே.

இரு நிலத்து வீரர்கள்
இருபுறத்தும் போரிட
குருநிலத்துப் பார்த்தனின்
கொடியில் வந்த மாருதி
அரிய வெற்றி அர்ஜுனன்
அன்றுபெற்ற காரணம்
கருதிவந்து நிற்கிறேன்
காக்கவேண்டும் ஐயனே

மூன்று தேவ தேவர்கள்
மூன்று தேவிமாருடன்
தோன்றுகின்ற போதிலே
தூயபிரம்மச் சாரியாய்த்
தோன்றுகின்ற வீரனே
துணையெனக்கு நின்னருள்
தோன்றுமாயின் என்னிடம்
தொடர்ந்து வெற்றி காணுமே

நாலு வேதம் நாவிலே
நல்லபக்தி மூச்சிலே
சீலம் அன்பு நெஞ்சிலே
சீர்த்தியென்றும் பேரிலே
நீலமேனி ராமனின்
நிலைத்தநாமம் உயிரிலே
நாளும் கொண்டு வாழும் உன்
நாமம் எங்கள் மந்திரம்

அஞ்சு பூதம் உன்னிடம்
அஞ்சும் பூதம் ஐயனே
மஞ்சுவண்ண ராமனை
மனதில் வைத்த மாருதி
தஞ்சமென்ற நேயரைத்
தாங்குகின்ற தெய்வமே
அஞ்சுவண்ண நாயகா
அஞ்சல் என்று காக்கநீ.

ஆறு வான மாகவே
அன்று சென்று ஜானகி
மீறு துன்பம் தீரவே
மீட்சிதந்த தூதனே
வீறுகொண்டு தூதர்கள்
மூவர்வந்து நிற்கையில்
கூற உண்டு மந்திரம்
கூவ உண்டு நெஞ்சகம்

ஏழு சாகரத்தையும்
இமைக்கும் முன்னர் தாவவே
மேலும் மேலும் ஓங்கும் உன்
மேன்மையென்ன புதியதா
பாலனான போதிலே
பரிதிநல்ல பழமென
நீளுகின்ற கையினால்
நீபறிக்கத் தாவினாய்

எட்டெழுத்தில் உள்ளவை
இரண்டெழுத்தில் உள்ளதைச்
சுட்ட வந்த மாருதி
சொல்லின் செல்வன் நீயெனக்
கட்டறுத்த ஞானியும்
கருதுகின்ற ராமனே
பட்டம் அன்று தந்தனன்
பல்கலைக்கும் வேந்துநீ.

ஒன்பதான வாசல்கள்
உள்ள வீட்டில் உள்ளநான்
இன்பவாழ்வு வாழவே
இராமநாமம் வேண்டுமே
அன்பிலாத கூட்டிலே
அச்சம் என்ற பேய்வரும்
என்பதாலே வேண்டினேன்
ஏற்றபக்தி நீகொடு

பத்து மொத்தம் திக்குகள்
பத்திடத்தும் உன்பெயர்
அத்தனென்று ஜானகி
அன்றழைத்த தன்மையால்
வித்து வேத வித்துநீ
வேட்கையற்ற ஞானிநீ
சித்து நீ அசித்துநீ
செய்கையற்ற பிரம்மம்நீ

தன்னை வெல்லும் ஒருவனே
தடையைவெல்லுவான் எனும்
உண்மைசொன்ன தேவனே
உன்னிடத்தில் வேண்டுகோள்
என்னுடம்பை எஃகிலும்
என்மனத்தை இடியிலும்
கண்ணிரண்டைக் கதிரிலும்
கடைந்துவைக்க வேண்டும் நீ

கன்னியர்க்குத் திருமணம்
காளையர்க்குப் பதவிகள்
சின்னவர்க்கு நெஞ்சுரம்
ஜெயம் எவர்க்கும் வேண்டுமே
பொன்னிறத்து மாருதி
புயலளித்த மைந்தனே
முன்னுகின்ற செயலெலாம்
முடித்துவைக்க வேண்டும் நீ

ஆழிதாவி ஆழியை
அன்று தந்த மாருதி
மீளவந்து நேரிலே
மெய்யர்காண நிற்கிறாய்
ஊழி ஊழி செல்லினும்
ஓங்கும் ஓங்கும் உன்புகழ்
வாழிராம மந்திரம்
வாழி ஆஞ்சநேயனே."  (  இளந்தேவன் ) 

[ நன்றி : க.ரவி ]


Subbaier Ramasami

unread,
Apr 16, 2026, 10:11:12 PM (8 days ago) Apr 16
to santhav...@googlegroups.com
புயலின் புதல்வன் என்ற பெயரில் இது ஒரு கையடக்கப்புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இதைவீரா என்ற வீரராகவன்   பித்துக்குளி முருகதாஸைப் பாடச் சொல்லி  ஒலிநாடாக வெளியிட விரும்பினார். ஏற்பாடுகள் செய்தார். முதலில் ஒத்துக்கொண்ட இளந்தேவன், பிறகு தானே ஒலிநாடாகவாக வெளியிடப் போவதாகச் சொன்னார்.    மனம் நொந்து போனா வீரராகவன் மதிவண்ணனை நெருங்கி அனுமன் பாடல் எழுதிச்சொல்லித் தரக் கேட்டார். அவர் அதற்குப் பணம் கேட்டதாகவும்,  எழுதித் தரக் காலம் தாழ்த்தியதாகவும் சொல்லி என்னிடம் கேட்டார். நான் எந்த நிபந்தனையும் இன்றி  இரண்டே நாளில் எழுதிக் கொடுத்துவிட்டேன். நான் எழுதிவிட்டேன் என்பதை அறிந்த மதிவண்ணன் அவரும் உடனே எழுதிக் கொடுத்தார். வீரராகவனுக்குத் தர்மசங்கடமாகப் போகவே பித்துக்குளி முருகதாஸை மதிவண்ணன் பாடல்களைப் பாடச் சொல்லி வெளியிட்டார். என் பாடல்களைப் பிரபல கர்நாடக இசைப்பாடகி திருமதி வசுந்தரா ராஜகோப்லை இசையமைப்பாளர் எல். கிருஷ்ணன் அவர்களின் இசையமைப்பில் பாடவைத்து ஒலிநாடாவாகவும்  குறுந்த தகடாகவும் வெளிட்டார். அதிலிருந்து இரண்டு பாடல்களை இணைத்துள்ளேன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-%2BH5jp%3Doirgj%2B8TTJYzZTkuHSsiaL_MtmGd0i4HNogMHw%40mail.gmail.com.
ithenna nyayamayya(1) - Copy.mp3
ATHIVYATHIHARA 1.mp3

M. Viswanathan

unread,
Apr 17, 2026, 3:40:13 AM (8 days ago) Apr 17
to Santhavasantham
கவிமாமணி இளந்தேவனின் கவிதையும், கவி வேழம் இலந்தை யாரின் இரண்டு பாடல்களும் தேன்.
அன்பன்,
மீ.விசுவநாதன்
17.04.2026 13.09pm

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 17, 2026, 8:58:29 PM (7 days ago) Apr 17
to santhav...@googlegroups.com
Vasundgara Rajagopalan lived in Toronto  with her husband and daughter in Toronto till around 1987 when she moved to India  Girija and I attended her concert in Pittsburg temple many years ago; her daughter Nisha was a very young girl accompanying her. One can say it was Nisha's debut. 

Nisha and Vasundhara Rajagopalan@ Pittsburg Venkatesar Temple.jpg
   
ananth 17-4-2026
------------------------------------

sudha's creations

unread,
Apr 17, 2026, 9:02:22 PM (7 days ago) Apr 17
to santhavasantham
என்ன ஒரு அற்புதமான தகவல் மாமா.. நிஷா ராஜகோபால் ஒரு அற்புதமான பாடகி..
நல்ல தகவல்களுக்கு நன்றி..
சுதா வேதம்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages