இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்!

6 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 28, 2025, 2:14:02 AM11/28/25
to santhav...@googlegroups.com
Sri Siva siva’s recent post was a catalyst for writing these verses:

.இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்!

கன்னல் வாழை நெற்பயிர்கள்
   காணும் திசைகள் விளைந்திருக்கும்
சின்னஞ் சிறிய மலர்பூத்துச்
   சிரிக்கும் வரப்பின் ஓரத்தில்
மன்னும் தில்லை மன்னனவன்
   வண்ணக் கழல்கள் தமைச்சேர
என்ன செய்ய வேண்டுமென
   இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்!


நாடும் இன்பம் பல்வகைகள்
   நாளில் அற்றுப் போகாவோ
கூடும் கூட்டம் அத்தனையும்
   குறைந்து குன்றி மறையாவோ
தேடும் பிறவிப் பயனளிக்கும்
   தில்லை ஈசன் கழலிணையைக்
கூடும் வழியை அறிவதற்குக்
   கொஞ்சம் இன்னும் சிந்திப்போம்!

                  —தில்லைவேந்தன்.
..
..

Ram Ramakrishnan

unread,
Nov 28, 2025, 3:25:31 AM11/28/25
to santhav...@googlegroups.com
அருமை.

சன்னல் வழியே கண்டதனால்
… சந்தம் உள்ளே உண்டாச்சோ
பின்னிப் பிணைந்த உறவாச்சோ
… பீடு தருநற் கவியாச்சோ
தென்னன் பெருமான் சித்தமது
… தில்லை வேந்தன் மொழியாச்சோ
இன்னே யிட்ட கருத்ததனை
… இன்பு நெஞ்சி லிருத்திடுவோம்

தென்னன் - தக்‌ஷிணாமூர்த்தி 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 28 Nov 2025, at 12:44 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:

Sri Siva siva’s recent post was a catalyst for writing these verses:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgNYsR2QjNER76qowiLbPcZ9iNh3CoPRXSfiGxMS%2B_Zow%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 28, 2025, 3:28:01 AM11/28/25
to santhav...@googlegroups.com
நன்றி திரு ராம்கிராம்

     —தில்லைவேந்தன்

Arasi Palaniappan

unread,
Nov 28, 2025, 6:17:40 AM11/28/25
to சந்தவசந்தம்
அருமை 

--

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 28, 2025, 6:36:25 AM11/28/25
to santhav...@googlegroups.com
நன்றி திரு பழனியப்பன் 

     —தில்லைவேந்தன்

On Fri, Nov 28, 2025 at 4:47 PM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
அருமை 

Siva Siva

unread,
Nov 29, 2025, 1:31:20 AM11/29/25
to santhav...@googlegroups.com
இனிய சிந்தனை.
வாழ்க!

வி. சுப்பிரமணியன்

On Fri, Nov 28, 2025 at 2:14 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
Sri Siva siva’s recent post was a catalyst for writing these verses:

.இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்!

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 29, 2025, 3:26:00 AM11/29/25
to santhav...@googlegroups.com
நன்றி திரு சிவசிவா

      — தில்லைவேந்தன்.
Reply all
Reply to author
Forward
0 new messages