பாரதியின் பரசிவ வெள்ளம் - பாடல் விளக்கம்

19 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Aug 20, 2025, 11:53:55 PMAug 20
to Santhavasantham
உள்ளத்தில் உண்மையொளி கொண்ட உயர்பெருங் கவிஞனான பாரதியின் வாக்கினிலே பிறந்த அமுதமழையே அவன் இயற்றிய ‘பரசிவ வெள்ளம்’ என்னும் செழுங்கவிதை. வேதாந்தத்தின் சாரத்தை உள்ளடக்கிய அக்கவிதையை விரித்துப் பொருள் விளக்கும் முயற்சியில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டிருந்தேன். அந்த முயற்சியின் விளைவால் எழுந்த இந்தக் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Siva Siva

unread,
Aug 21, 2025, 11:44:15 AMAug 21
to santhav...@googlegroups.com
Nice effort.

It may be a good idea to include the stanza numbers or line numbers for the verse lines.

/ சதுமறைகள் /
Is this spelling (without ர்) correct ?

V. Subramanian

On Wed, Aug 20, 2025 at 11:53 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
உள்ளத்தில் உண்மையொளி கொண்ட உயர்பெருங் கவிஞனான பாரதியின் வாக்கினிலே பிறந்த அமுதமழையே அவன் இயற்றிய ‘பரசிவ வெள்ளம்’ என்னும் செழுங்கவிதை. வேதாந்தத்தின் சாரத்தை உள்ளடக்கிய அக்கவிதையை விரித்துப் பொருள் விளக்கும் முயற்சியில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டிருந்தேன். அந்த முயற்சியின் விளைவால் எழுந்த இந்தக் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- இமயவரம்பன்

Lalitha & Suryanarayanan

unread,
Aug 21, 2025, 12:03:47 PMAug 21
to santhav...@googlegroups.com
நமது மன்றத்தின் ஒரு கவியரங்கில் " பாரதியின் மந்திரச் சொற்கள் - சித்தமிசைக் கொள்ளும் சிரத்தை " என்று எனக்குக் கொடுத்த தலைப்பில் நான் இட்ட கவிதையை இங்கே பகிரலாம் என்று நினைக்கிறேன்:

பரசிவ வெள்ளம் -  சித்தமிசைக் கொள்ளும் சிரத்தை

சொர்க்கத்தைத் தொட்டுத் தழுவிடும் உள்ளம்! - கவிச்
சுகத்தினில் தோய்ந்து துடித்தாடும் வெள்ளம்!
வர்க்கத்தை வாழ்விக்க வந்தவோர் வள்ளல் - நம்
மண்ணகத் தெல்லையை மீறிடும் துள்ளல்!
தர்க்கத்தைத் தாக்கும் தனிப்பேர் ஆண்மை - அத்
தாரகையைப் புணரும் தரணியின் கேண்மை!
துர்க்கத்தைத் தூக்கிச் சுமந்திடும் தோள்காட்டி - நம்
துயர்நீக்க வந்ததோர் பேரின்ப நாள்காட்டி!

நாடகக் காட்சியின் பொன்னாந் தருணம் - அந்த
நடமாடும் பெம்மானின் நயனத்தருட் கிரணம்!
பூடகச் சொற்கூட்டி புவனத்து மாட்சியினை - ஒரு
பொதியத்துத் தமிழ்பதித்துப் புனைந்த கவியாட்சி
ஆடகப் பொற்கடை! அவனியெங்கும் புதுவெள்ளம்! - ஓர்
அமுதத் திருக்கோயில் காட்டும்அக்னிப் பிரகாரம்!
ஏடகத் திட்டும் எழுதவொணாத் தரிசனம் - கவி
இதயத்தில் ஏறிவரும் அன்புக் கரிசனம்!

தவத்திருக்க வேண்டாமல் சாதிக்கும் உயர்நோக்கு -  நம்
தமிழ்ச்சொல்லில் தடம்பார்த்துப் பதித்த திருவாக்கு!
பவித்திர வெள்ளம் சஞ்சரித்த ஓங்காரம் - அது
பரமானந்த நிலைகாட்டும் அற்புத ரீங்காரம்!
கவித்துவக் கடைவிரித்துக் களிக்கும் கவிமோனம்! - அது
கருணையால் நமக்களித்த காதற் பெருஞானம்!
குவித்துக் கொணர்ந்த கோடி சூர்யப் பிரகாசம்! -  உள்ளக்
கோவிலில் ஓங்கி உயர்ந்திருக்கும் பிரம்மாண்டம்!

அந்தத்தை அனந்தத்துடன் பார்க்குமெழிற் கோலம்- அது
அவனியை அவனுடன் சேர்க்குமன்புப் பாலம்!
சொந்தத்தைச் சொந்தமுடன் கூட்டும் நல்லணைப்பு! - அது
தொடர்ந்துவந்த யுகங்கள் தொடுக்கும் உயர்பிணைப்பு!
பந்தத்தைப் பாருணரத் தீட்டிய பெருங்களிப்பு - நம்
பாவலனின் பாசத் துடிப்பின் வாசத்தொகுப்பு!
சந்தத்தில் தோய்ந்து வந்த தீர்க்கதரிசனம் - நம்
தமிழில் பாய்ந்து வந்த மார்க்கதரிசனம்.

சிவசூரி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPgyQnS1F5aA%2BV1H-yz0c0a8V%3DSuZjj6E7pjLUXtsX0xQ%40mail.gmail.com.

Lalitha & Suryanarayanan

unread,
Aug 21, 2025, 12:08:31 PMAug 21
to santhav...@googlegroups.com
அந்தக் கவியரங்கில் அந்தத் தலைப்பில் நான் இட்ட மற்றொரு கவிதை:

கவியரங்கக் கவிதை

சித்தமிசைக் கொள்ளும் சிரத்தை - பரசிவ வெள்ளம்

பரமா னந்தப் படையலிட்டான் - அந்தப்
பரசிவ வெள்ளம் படரவிட்டான்!
வரமாய் அகத்தில் காட்சிகண்டான் - அதை
வடித்தொரு கவிதைச் சாட்சிதந்தான்!

எங்கும் நிறைந்த கற்பகமே - இந்த
ஈடிலாக் காட்சி அற்புதமே!
பொங்கிப் பெருகும் தற்பரமே - ஒரு
புலவனின் வார்த்தை பொற்பதமே!

நின்று நிலைத்த நித்தியமே - அவன்
நீள்விழி கண்ட சத்தியமே
நன்று கலந்த பரசிவமே - இங்கு
நமக்குக் கிடைத்த படுசுகமே!

கடலும் நதியும் கலப்பதுபோல் -  அக்
கவிஞனே அகத்துள் இணைந்துவிட்டான்!
உடலில் உயிரே நிறைவதுபோல் - அவன்
உலகினில் இறையைக் காணுகிறான்! 

பொதியம் படைத்த கவிமோனம் -  உளம்
பொங்கிடக் கிடைத்த பெருஞானம்!
நிதியாய்த் தொடுத்த மொழிகாட்டி - அவன்
நிலையாய்க் கொடுத்த வழிகாட்டி!

ஏட்டில் இட்ட தரிசனமே - அவன்
இதயத் தூறும் கரிசனமே!
பாட்டில் காட்டும் ரீங்காரம் - அந்தப்
பரமனைப் பாடும் ஓங்காரம்!

பரத்திற் கிங்கே சிலைவைத்தான் - உயர்
தரத்தினில் தனது கலைவைத்தான்
சிரத்தை செய்த நிலையென்றான் - இதைச்
செய்துநாம் உய்ய வலைவிரித்தான்!

செம்மை மிகுந்த சிந்தையதை - ஒரு
சிரத்தையாம் மத்தால் கடைந்தெடுத்தான்!
நம்மைக் காக்கும் நவநீதம் - அவன்
நமக்கெனப் பூக்கும் நவகீதம்!

சிவ.சூரியநாராயணன்.

இமயவரம்பன்

unread,
Aug 21, 2025, 10:19:42 PMAug 21
to santhav...@googlegroups.com
Thank you very much for your kind appreciation and nice suggestion.

I have added the line numbers. Corrected the typo சதுர்மறை.

இமயவரம்பன்

unread,
Aug 21, 2025, 10:25:23 PMAug 21
to santhav...@googlegroups.com
"அந்தத்தை அனந்தத்துடன் பார்க்குமெழிற் கோலம்- அது
அவனியை அவனுடன் சேர்க்குமன்புப் பாலம்!"

வெள்ளம் எனப் பொழி தண்டமிழால் மிகு சிரத்தையுடன் பாடிய கவிதைகள் மிக அற்புதம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, சிவசூரியாரே!

Ram Ramakrishnan

unread,
Aug 22, 2025, 8:52:50 AMAug 22
to santhav...@googlegroups.com
அப்பப்பா! என்ன அருமையான விளக்கம்!

அற்புதம், திரு. இமயவரம்பன்.

மேலோட்டமாக ஒருமுறை படித்தேன்.

உங்கள் இலக்கிய சிந்தனை, ஆழ்ந்த அறிவு, சர்வ சாதாரணமாக இலக்கியங்களிலிருந்து
மிகப் பொருத்தமாக மேற்கோள்களை எடுத்தாளும் திறமை யாவும் பிரம்மிக்க வைக்கின்றன.

இந்த அற்புதமான படைப்பை மேலும் பலமுறை படித்து இன்புறுவேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 20, 2025, at 23:53, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

உள்ளத்தில் உண்மையொளி கொண்ட உயர்பெருங் கவிஞனான பாரதியின் வாக்கினிலே பிறந்த அமுதமழையே அவன் இயற்றிய ‘பரசிவ வெள்ளம்’ என்னும் செழுங்கவிதை. வேதாந்தத்தின் சாரத்தை உள்ளடக்கிய அக்கவிதையை விரித்துப் பொருள் விளக்கும் முயற்சியில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டிருந்தேன். அந்த முயற்சியின் விளைவால் எழுந்த இந்தக் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Aug 22, 2025, 8:55:09 AMAug 22
to santhav...@googlegroups.com
ஆகா! அருமை, திரு. சிவசூரி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 21, 2025, at 12:03, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Aug 22, 2025, 8:59:25 AMAug 22
to santhav...@googlegroups.com
அன்புடன் படித்துக் கருத்து அளித்தமைக்கு மிக்க நன்றி, திரு.ராம்கிராம்!

பாரதியின் இந்தக் கவிதையுடன் மேலும் ஐந்து கவிதைகளுக்கு எழுதிய உரைகளையெல்லாம் தொகுத்து ஒரு நூலாகத் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்பதை இங்கே மகிழ்வுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

அன்புடன்
- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Aug 22, 2025, 8:59:50 AMAug 22
to santhav...@googlegroups.com
Also, I think the word used in ThirukuRaL is வாலறிவன் and not வாளறிவன்.

வாலறிவன் என்பதற்கு “தூய அறிவுடையவன்” எனப் பொருள் கூறுவர்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 21, 2025, at 22:19, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

Thank you very much for your kind appreciation and nice suggestion.

இமயவரம்பன்

unread,
Aug 22, 2025, 9:04:32 AMAug 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you very much for that note. Will correct it. 

On Aug 22, 2025, at 8:59 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

Also, I think the word used in ThirukuRaL is வாலறிவன் and not வாளறிவன்.

Arasi Palaniappan

unread,
Aug 22, 2025, 9:06:16 AMAug 22
to சந்தவசந்தம்
மிகவும் அருமையான விளக்கவுரை. எடுத்துக்காட்டுப் பாடல்கள் யாவும் சிறப்பு.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
பரசிவ-1.jpeg

இமயவரம்பன்

unread,
Aug 22, 2025, 9:28:19 AMAug 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்புப் பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு. பழனியப்பன் 

On Aug 22, 2025, at 9:06 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

மிகவும் அருமையான விளக்கவுரை. எடுத்துக்காட்டுப் பாடல்கள் யாவும் சிறப்பு.

On Thu, 21 Aug 2025, 9:23 am இமயவரம்பன், <anandbl...@gmail.com> wrote:
உள்ளத்தில் உண்மையொளி கொண்ட உயர்பெருங் கவிஞனான பாரதியின் வாக்கினிலே பிறந்த அமுதமழையே அவன் இயற்றிய ‘பரசிவ வெள்ளம்’ என்னும் செழுங்கவிதை. வேதாந்தத்தின் சாரத்தை உள்ளடக்கிய அக்கவிதையை விரித்துப் பொருள் விளக்கும் முயற்சியில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டிருந்தேன். அந்த முயற்சியின் விளைவால் எழுந்த இந்தக் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/F74C34FB-9016-4412-8B01-6E3D31701352%40gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Aug 22, 2025, 10:30:59 AMAug 22
to santhav...@googlegroups.com
இமயவரம்பனாருக்கு நன்றி.

சிவசூரி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Aug 22, 2025, 10:32:51 AMAug 22
to santhav...@googlegroups.com
நன்றி ராம்கிராம் அவர்களே.

சிவசூரி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 25, 2025, 8:26:21 PMAug 25
to santhav...@googlegroups.com

’பரசிவ வெள்ளம்’ விளக்கவுரை மிக, மிக அருமை. சேமித்து வைத்துக்கொள்ள வேண்டிய பொக்கிஷம்.

கம்பர், தாயுமானவர், திருமூலர், ரமணர் படைப்புகளிலிருந்து கருத்துத் தொடர்பை எடுத்துக்காட்டியது அருமை.

இருப்புணர்வின் நிலைத்து நிற்கும் தன்மையை பகவான் ரமணர், உள்ளது நாற்பது, உபதேச உந்தியார் போன்றவற்றில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்:

”உள்ளதல உள்ள உணர்வு உள்ளதோ”;

”உள்ள(து) உணர உணர்வுவே றின்மையின்

உள்ள(து) உணர்வாகும் உந்தீபற

உணர்வேநாம் ஆயுளோம் உந்தீபற.

”அறிவறியாமையும் அற்ற அறிவே

அறிவாகும் உண்மையீ(து) உந்தீபற

அறிவதற் கொன்றில்லை உந்தீபற”

இறைத்தத்துவம் உள்ளது/உண்மை, இல்லாதது இரண்டையும் கடந்தது

என்பதையும், அது புற, அகப் பொறிகளால் அறியவொண்ணாதது என்பதையும் சுட்டியுள்ளீர்கள்.

’… (வெள்ளப்) பெருக்கை*ப்* போல; ஒற்றுத் தேவை

பலப்* பெயர்களில் – ஒற்று மிகாது.

அனந்த்

On Wed, Aug 20, 2025 at 11:53 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--

இமயவரம்பன்

unread,
Aug 25, 2025, 10:54:16 PMAug 25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தங்கள் அன்பான வாழ்த்துக்கும் அருமையான மேற்கோள்களுக்கும் சுட்டிக் காட்டிய திருத்தங்களுக்கும் மிக்க நன்றி, திரு. அனந்த்.

On Aug 25, 2025, at 8:26 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

--

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Aug 29, 2025, 1:42:52 PMAug 29
to santhav...@googlegroups.com
என்ன சொல்லிப் புகழ்வேன் - உங்கள்
இவ்வுரை  ஆனந்த ஏற்றத்தின் மேன்மையை

மிகவும் அற்புதம். மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும். அப்பொழுதுதான் உள்வாங்க முடியும்

வாழ்க!

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Aug 29, 2025, 3:08:19 PMAug 29
to santhav...@googlegroups.com
அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி, தலைவரே!

தங்கள் பாராட்டு மிகுந்த மனமகிழ்வை அளிப்பதோடு, தொடர்ந்து இதுபோன்ற உரைகளை எழுத எனக்கு ஊக்கம் கொடுக்கிறது.

அன்புடன்
இமயவரம்பன்

On Aug 27, 2025, at 11:03 AM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

என்ன சொல்லிப் புகழ்வேன் - உங்கள்
இவ்வுரை  ஆனந்த ஏற்றத்தின் மேன்மையை

மிகவும் அற்புதம். மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும். அப்பொழுதுதான் உள்வாங்க முடியும்

வாழ்க!

இலந்தை

On Wed, Aug 20, 2025 at 10:53 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
உள்ளத்தில் உண்மையொளி கொண்ட உயர்பெருங் கவிஞனான பாரதியின் வாக்கினிலே பிறந்த அமுதமழையே அவன் இயற்றிய ‘பரசிவ வெள்ளம்’ என்னும் செழுங்கவிதை. வேதாந்தத்தின் சாரத்தை உள்ளடக்கிய அக்கவிதையை விரித்துப் பொருள் விளக்கும் முயற்சியில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டிருந்தேன். அந்த முயற்சியின் விளைவால் எழுந்த இந்தக் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/F74C34FB-9016-4412-8B01-6E3D31701352%40gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 11, 2025, 1:07:40 PM (8 days ago) Sep 11
to சந்தவசந்தம்
Saw this English translation in poetic form done by the librarian Sri Jayaraman at Ramanasramam, Thiruvannamalai. See page 49.

ananth 

இமயவரம்பன்

unread,
Sep 12, 2025, 4:54:35 PM (7 days ago) Sep 12
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com

A wonderful translation that preserves the elegance of the original—thank you for sharing, Prof. Ananth!

On Sep 11, 2025, at 1:07 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

Saw this English translation in poetic form done by the librarian Sri Jayaraman at Ramanasramam, Thiruvannamalai. See page 49.

ananth 

On Wed, Aug 20, 2025 at 11:53 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
உள்ளத்தில் உண்மையொளி கொண்ட உயர்பெருங் கவிஞனான பாரதியின் வாக்கினிலே பிறந்த அமுதமழையே அவன் இயற்றிய ‘பரசிவ வெள்ளம்’ என்னும் செழுங்கவிதை. வேதாந்தத்தின் சாரத்தை உள்ளடக்கிய அக்கவிதையை விரித்துப் பொருள் விளக்கும் முயற்சியில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டிருந்தேன். அந்த முயற்சியின் விளைவால் எழுந்த இந்தக் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages