ஐம்புலன்களும் ஐந்து அட்சரங்களும் ஐந்து பூதங்களும் அமைந்த சிவத்துதி.
பூதம் எலாம் சிவனே
சந்த விருத்தம்: தனனா தனனா தனனா தனனா (தோடகம்)
செவிநேத் திர(ம்)மூக் குட(ல்)நாக் கிவைசேர்ந்(து)
அவ(ம்)நீத் தர(ன்)நா மமறா நினைவால்
புவிநீர் வளிவா னெரிபூ தமெலாம்
சிவனே எனவோர் பவர்தேய் விலரே.
பதம் பிரித்து:
செவி நேத்திர(ம்) மூக்கு உட(ல்) நாக்கு இவை சேர்ந்து,
அவ(ம்) நீத்து, அர(ன்) நாமம் அறா நினைவால்,
‘புவி நீர் வளி வான் எரி பூதம் எலாம்
சிவனே’ என ஓர்பவர் தேய்விலரே.
(நாக்கு = வாய்; சேர்ந்து = ஒன்றாகக் குவிந்து; அவம் நீத்து = குற்றம் அல்லது தீமை விலக்கி; அரன் நாமம் = “நமச்சிவாய” என்னும் சிவநாமம்; அறா = நீங்காத; ஓர்பவர் = தியானிப்பவர் அல்லது உணர்ந்து ஒழுகுபவர் )
(கருத்து: பஞ்சேந்திரியங்களில் மாசு நீங்கி, பஞ்சாட்சரத்தை நினைவில் பதித்து, “பஞ்ச பூதங்கள் எல்லாம் சிவனே” என்று உணர்ந்து ஒழுகுபவர்களுக்குக் கேடு நேராது)
- இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/A6070B2F-CB50-4DC2-B5F9-FA64DC60CDFC%40gmail.com.