கோதை அவள்புனித வடிவுகண்டேன்

14 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Mar 18, 2026, 8:37:11 PM (4 days ago) Mar 18
to Santhavasantham
image0.jpeg
(திருவள்ளூர் வீரராகவர் நாச்சியார் திருக்கோலம்)

கோதை அவள்புனித வடிவுகண்டேன்
(நாச்சியார் என்னும் சொல் ஆண்டாளைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டு எழுதிய பாட்டு)
(சிந்துப் பாட்டு)

(பல்லவி)
கோதை அவள்புனித வடிவுகண்டேன் - கதிர்
… கோடி குவிந்ததுபோல் அழகுகண்டேன்
காதல் மிகுந்ததொரு கனிவுகண்டேன் - வீர
… ராகவன் திருவுருவின் பொலிவுகண்டேன். 

(சரணம்)
வெள்ளை மதிமுகத்தின் மிளிர்வுகண்டேன் - வில்லை
… வெல்லும் புருவமதன் வளைவுகண்டேன்
துள்ளும் கயல்விழியின் விரிவுகண்டேன்  -  தமிழ்
… சொல்லும் இதழிரண்டில் முறுவல்கண்டேன். (1)

கோலப் பசுங்கிளியின் இனிமைகண்டேன் - கருங்
… கூந்தல் அணிமலரின் செழுமைகண்டேன்
மாலை அணிந்துதரும் மகிமைகண்டேன் - திரு
… மாலை மணம்புரியும் மகிழ்வுகண்டேன். (2)

- இமயவரம்பன் 

Kaviyogi Vedham

unread,
Mar 18, 2026, 8:42:41 PM (4 days ago) Mar 18
to santhav...@googlegroups.com
attagasam imayam. vazga,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/70E817D4-8D77-4245-82A9-AF68B3103A86%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Mar 18, 2026, 8:56:40 PM (4 days ago) Mar 18
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாருக்கு மிக்க நன்றி! 

- இமயவரம்பன் 

On Mar 18, 2026, at 8:42 PM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:

attagasam imayam. vazga,
 yogiyar

Rajagopalan Soundararajan

unread,
Mar 18, 2026, 9:07:59 PM (4 days ago) Mar 18
to சந்தவசந்தம்
"வில்லை வெல்லும் புருவமதன் வளைவுகண்டேன்"
மெய்யாகவே வில்லை வென்றவனன்றோ இந்தக் கோலத்தில் இருப்பது!
அழகான படல்கள். ஆனந்த் ஒரு வாக்கேயக் காரரக மாறி வருகிறார்.
ஸௌந்தர் 

இமயவரம்பன்

unread,
Mar 18, 2026, 9:32:01 PM (4 days ago) Mar 18
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தங்கள் அன்பு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி, திரு. ஸெளந்தர்! 

“வில்லைத் தொலைத்த புருவத்தாள்” என்று கோதையே தன்னைப் பற்றிப் பாடியிருப்பதால் அவ்வாறு எழுதினேன். கோதையைப் போல் ஶ்ரீ ராமனும் வில்லை வென்றவன் என்று உணர்த்திக் காட்டியமைக்கு மிக்க நன்றி!

- இமயவரம்பன் 

Ram Ramakrishnan

unread,
Mar 18, 2026, 10:53:30 PM (4 days ago) Mar 18
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 19, 2026, at 06:07, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--

Arasi Palaniappan

unread,
Mar 19, 2026, 4:47:58 AM (4 days ago) Mar 19
to சந்தவசந்தம்
அருமை!

--
image0.jpeg

இமயவரம்பன்

unread,
Mar 20, 2026, 5:11:11 PM (2 days ago) Mar 20
to santhavasantham, Santhavasantham

இமயவரம்பன்

unread,
Mar 20, 2026, 5:12:32 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்புடன் வாழ்த்திய திரு. ராம்கிராம், திரு. பழனியப்பன் ஆகியோருக்கு மிக்க நன்றி!

> On Mar 19, 2026, at 4:47 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
>
> அருமை!

Rajagopalan Soundararajan

unread,
Mar 20, 2026, 7:40:31 PM (2 days ago) Mar 20
to சந்தவசந்தம்

திருவரங்கத்தில் நாச்சியார் திருக்கோலம் (பெரிய திருநாள்- வைகுண்ட ஏகாதஶிக்கு  முதல் நாள்). இதைப் பற்றிய பாரம்பரிய செய்தி ஒன்று வைணவர்களிடையே அறியப் படுகிறது.

ஶ்ரீபராஶர பட்டர் என்ற பெயர்கொண்ட வைணவ ஆசாரியர் தாயாரிடம் மிகவும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். நாச்சியார் திருக்கோலத்தன்று, பெருமாள் அவரிடம், ‘இந்த அலங்காரத்தில் எப்படி இருக்கிறேன், பார்த்துச் சொல்லும்’ என்று பணித்தார். பட்டரும், ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கு, ஆனால். . . ‘ என்று நிதானிக்கப் பெருமாளும், ஆர்வத்துடன் மேலும் சொல்லும்படிப் பணித்தார். பட்டர், ‘அழகில் ஒன்றும் குறைவில்லை; எனினும் என் தாயாரின் கண்களில் இருக்கும் கருணை உங்கள் கண்களில் இல்லை’ என்று வெளிப்படையாகவே கூறிவிட்டாராம்.

தாயாருக்கு, ‘நித்யம் அஞ்ஞாத நிக்ரஹா’ ( नित्यं अज्ञात निग्रहा) அதாவது, ஒருநாளும் பக்தர்களைத் தண்டித்தறியாள், அத்துணை கருணை நிறைந்தவள் என்று பொருள்.

தாயார், பெருமாள் இருவரையும் பட்டர் மட்டுமன்று, திருவடியும் (அநுமன்) ஒப்பிட்டு இதே கருத்தை ஸுந்தர காண்டத்தில் சொல்வதை அறிகிறோம்.

तुल्यशील.वयोवृत्तां तुल्याभिजन.लक्षणाम्। राघवोऽर्हति वैदेहीं तं चेय.मसितेक्षणा॥

எல்லா குணங்களிலும் ஒருவருக்கு ஒருவர் இணையாக இருப்பதை இராகவனிடமும், ஸீதையிடமும் காண்கிறேன் என்று சொல்ல வந்த அநுமன், இராகவனிடமும், அந்த கண்ணழகியிடமும் காண்கிறேன் என்று கூறுவதை உற்று நோக்கினால், மேலே பட்டர் சொல்வது உள்ளங்கை நெல்லிக்கனி.

ஸௌந்தர் 

இமயவரம்பன்

unread,
Mar 20, 2026, 9:31:50 PM (2 days ago) Mar 20
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
நாச்சியார் திருக்கோலத்தைக் குறித்து அருமையான தகவல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, திரு. ஸெளந்தர்!

இரண்டு ஐயங்கள்:

நாச்சியார் திருக்கோலம் என்பது மோகினி அவதாரம் என்று சொல்கிறார்களே அதுவும் சரியா?

நாச்சியார் என்னும் சொல்லுக்கு ஆண்டாள் என்று பொருள் கொண்டு எழுதிவிட்டேனே, எனது இந்தக் கருத்தும் சரிதானா?

அன்புடன் இவ்வையங்களைத் தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன்.

- இமயவரம்பன்

Rajagopalan Soundararajan

unread,
Mar 21, 2026, 7:58:48 AM (yesterday) Mar 21
to சந்தவசந்தம்
நாச்சியார் திருக்கோலம் என்பது மோகினி அவதாரம் என்று சொல்கிறார்களே அதுவும் சரியா?
நாச்சியார் திருக்கோலம் என்பதே ஸம்ப்ரதாயம். பொதுமக்களுக்க்குப் புரிவதற்காக மோஹினி என்று சொல்வர். திருக்குடந்தையில், நாச்சியார் திருக்கோலத்தன்று, பெருமாளுக்கும், தாயாருக்கும் மாற்றி அலங்காரம் செய்து இருவரும் இணைந்தே வீற்றியிருப்பர்; இந்த ஸேவையில் 'மோஹினி' என்று கொள்வது எவ்வாறு தகும்?

நாச்சியார் என்னும் சொல்லுக்கு ஆண்டாள் என்று பொருள் கொண்டு எழுதிவிட்டேனே, எனது இந்தக் கருத்தும் சரிதானா?
நாச்சியார் என்று குறிப்பிடுவது பொதுவாக ஶ்ரீதேவியைக் குறித்தாலும், பூதேவிக்கும், கோதை நாச்சியார் என்ற திருநாமம் பொருத்தமே! 

ஸௌந்தர் 

இமயவரம்பன்

unread,
Mar 21, 2026, 11:11:56 AM (yesterday) Mar 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி, திரு. ஸெளந்தர்!
Reply all
Reply to author
Forward
0 new messages