ஈற்றடி - ரம்கொடுக்கும் வேண்டியவ ரம்

18 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jun 21, 2026, 5:39:52 PM (3 days ago) Jun 21
to santhavasantham
ஈற்றடி - 

ரம்கொடுக்கும் வேண்டியவ ரம்

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Jun 21, 2026, 6:12:31 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
ஏனோ கவல்கின்றாய் என்மனமே  உன்னாலே 
தானோ  நடப்பதெச் சாதனையும்-  தானேவ
ரங்கொடுக்கும் வாராகி நாயகியாம்  தேவிக
ரங்கொடுக்கும் வேண்டியவ ரம்

பிரித்து

ரம் கொடுக்கும்  வாராகி நாயகியாம் தேவி க

ரம்கொடுக்கும் வேண்டியவ ரம்

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOTOVCd3k5Mu9%2Bm9eGYmQ90FBBx-sS71B_5zVzy4ud%2Bdw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jun 21, 2026, 7:35:42 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

Parthasarathy S

unread,
Jun 22, 2026, 12:28:42 AM (3 days ago) Jun 22
to சந்தவசந்தம்
கொடுத்த ஈற்றடிக்கு விடுத்த வெண்பா
ஈற்றடி - ரம்கொடுக்கும் வேண்டியவ ரம்

அண்டம் படைத்தளித்து ஆல்மேல் துயின்றுகோ
தண்டம் விடுத்திலங்கை தண்டித்தான் - கண்ணன்சி
ரம்தழைக்கத் தானீவான் தன்னையே பொன்றாப்ப

ரம்கொடுக்கும் வேண்டியவ ரம்

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Rajja Gopalan

unread,
Jun 22, 2026, 2:55:12 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
கண்மணியா னைவனங் கண்டவகி லாண்டாளே!
அண்மையிரு அன்பிலப யந்தந்து  - வந்தாதா
ரம்கொடுக்க  வாதோ! வகைதந் திடுமுங்க
ரம்கொடுக்கும் வேண்டியவ ரம்.

மீ. ஆர் 
Sent from my iPhone

Ram Ramakrishnan

unread,
Jun 22, 2026, 8:18:03 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
அற்புதம், தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 21, 2026, at 19:35, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 22, 2026, 8:27:47 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
Good.

Some things consider:
1)
/கோதண்டம் விடுத்திலங்கை தண்டித்தான் / 

இங்கே, கோதண்டம் = ?

2)
ரம்தழைக்கத்
ரம்கொடுக்கும்

புணர்ச்சியால் ரந்த & ரங்கொ.
இனவெதுகை ஆகும்.

V. Subramanian

Siva Siva

unread,
Jun 22, 2026, 8:30:01 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
Good.

/ வகைதந் திடுமுங்கரம் / = ?

V. Subramanian

Siva Siva

unread,
Jun 22, 2026, 8:32:45 AM (3 days ago) Jun 22
to santhavasantham

2026-06-20

ஈற்றடிக்கு வெண்பா - ரம்கொடுக்கும் வேண்டியவ ரம்

---------------


1)

கதுமெனக் கூற்றுவந்து காதவிம் மண்மேல்

புதுமேனிப் புக்குழல்தல் போக - இதுகேள்நீ

நம்கொடு வல்வினையை நாசமாக் கித்தேவா

ரம்கொடுக்கும் வேண்டியவ ரம்.


கதுமெனக் கூற்று வந்து காத, இம்-மண்மேல் புதுமேனிப் புக்குல்தல் போக, இது கேள் நீ - (கதுமெனல் - விரைவுக்குறிப்பு); (காதுதல் - கொல்தல்); (புக்கு - புகுந்து);

நம் கொடு-வல்வினையை நாசமாக்கித் தேவாரம் கொடுக்கும் வேண்டிய வரம் -


வி. சுப்பிரமணியன்

==


On Sun, Jun 21, 2026 at 5:39 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

இமயவரம்பன்

unread,
Jun 22, 2026, 9:40:00 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக அருமை, தலைவரே

இமயவரம்பன்

unread,
Jun 22, 2026, 9:43:16 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com, santhavasantham
“தேவாரம் கொடுக்கும் வேண்டிய வரம்” - ஆஹா அருமை! 

Sai Ganesan H

unread,
Jun 22, 2026, 9:47:58 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
‘தேவாரம் கொடுக்கும் வேண்டிய வரம்’ மிகவும் அருமை! 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 22, 2026, 9:58:41 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
Thanks Anand and Sai Ganesan.

V. Subramanian

Sai Ganesan H

unread,
Jun 22, 2026, 10:53:55 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
என் முயற்சி! 

அயலூர்தான்  செல்ல அதிவேகத் தோடே

புயலாய் ரயிலிலே போகும் - பயணிகள்

தம்துயர்கள் தீரத் தரிசனம் செய்கோபு

ரம்கொடுக்கும் வேண்டியவ ரம். 

— சத்யவேழன் H சாயி கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 22, 2026, 11:02:42 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
Good.
Reminded me of that common experience of looking to see a gopuram of a temple as the train passes by a temple town.

தம்துயர்கள்
ரம்கொடுக்கும்

புணர்ச்சியால் தந்து... & ரங்கொ....
இனவெதுகை ஆகும்.

V. Subramanian

Sai Ganesan H

unread,
Jun 22, 2026, 11:04:41 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி! 

சத்ய வேழன் H சாயி கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Jun 22, 2026, 11:16:03 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com

திருத்தமுடன் ——


அயலூர்தான்  செல்ல அதிவேகத் தோடே

புயலாய் ரயிலிலே போகும் - பயணிகள்

தங்களிடர்  தீரத் தரிசனம் செய்கோபு

ரங்கொடுக்கும்  வேண்டியவ ரம். 

— சத்யவேழன் H சாயிகணேசன்

Siva Siva

unread,
Jun 22, 2026, 11:17:52 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
Nice.

Arasi Palaniappan

unread,
Jun 22, 2026, 11:56:07 AM (3 days ago) Jun 22
to சந்தவசந்தம்
காய்கறிகள், நல்ல கனிவகைகள் எல்லாமே 
வாயுணவாய் மக்களுக்கும் மாக்களுக்கும் - ஆயதனால் 
நம்செய்கள் வாழ நலம்புரி வோம்,தாவ
ரம்கொடுக்கும் வேண்டியவ ரம்!

அரசி. பழனியப்பன் 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 22, 2026, 12:21:07 PM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
அன்புதமான எண்ணவோட்டம்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 22, 2026, at 09:47, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Jun 22, 2026, 12:21:43 PM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
அருமை.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 22, 2026, at 10:53, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Jun 22, 2026, 12:25:25 PM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
தாவர வெண்பா மிகச்சிறப்பு. மத்ய கோணத்தில் அமைத்த பாடற்கு வரவேற்பு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 22, 2026, at 12:21, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

அன்புதமான எண்ணவோட்டம்.

Ram Ramakrishnan

unread,
Jun 22, 2026, 12:26:42 PM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
புதிய கோணத்தில் என்று வாசிக்கவும்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 22, 2026, at 12:25, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

தாவர வெண்பா மிகச்சிறப்பு. மத்ய கோணத்தில் அமைத்த பாடற்கு வரவேற்பு.

Arasi Palaniappan

unread,
Jun 22, 2026, 12:36:35 PM (3 days ago) Jun 22
to சந்தவசந்தம்
மிக்க நன்றி அண்ணலே!

Siva Siva

unread,
Jun 22, 2026, 2:47:58 PM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
தாவரமே தா வரமே
என்ற வெண்பா நன்று.

V. Subramanian

Sai Ganesan H

unread,
Jun 22, 2026, 9:55:58 PM (2 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி!

-சத்யவேழன் H சாயி கணேசன்

Siva Siva

unread,
Jun 22, 2026, 10:24:11 PM (2 days ago) Jun 22
to santhavasantham

2)

உடற்றுவினை தீரநெஞ்சே உன்னுமைகோன் பாதம்

சடைக்கண் அலையார் சலமும் - மிடற்றில்நஞ்

சும்கரக்கும் ஈசன் சுவற்றும் பவசாக

ரம்கொடுக்கும் வேண்டியவ ரம்.


உடற்று-வினை தீர, நெஞ்சே, உன்னு உமைகோன் பாதம் - (உடற்றுதல் - வருத்துதல்); (உன்னுதல் - நினைதல்);

சடைக்கண் அலை ஆர் சலமும், மிடற்றில் நஞ்சும் கரக்கும் ஈசன் - (கண் - ஏழாம்வேற்றுமை உருபு); (சலம் - ஜலம் - கங்கை); (மிடறு - கண்டம்); (கரத்தல் - மறைத்தல்);

சுவற்றும் பவசாகரம் - (சுவற்றுதல் - வற்றச்செய்தல்);

கொடுக்கும் வேண்டிய வரம் -


வி. சுப்பிரமணியன்


On Mon, Jun 22, 2026 at 8:32 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

1)

Siva Siva

unread,
Jun 23, 2026, 5:25:28 PM (2 days ago) Jun 23
to santhavasantham

3)

அடல்நமன்பா சத்தால் அழியாமுன் நெஞ்சே

மடவரலோர் பங்கனை வாழ்த்து - விட(ம்)மடுக்

கும்கருத்தன் இன்னருள்சேர்க் கும்பவ சாகரதீ

ரம்கொடுக்கும் வேண்டியவ ரம்.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

அடல்நமன் பாசத்தால் அழியாமுன், நெஞ்சே, மடவரல் ஓர் பங்கனை வாழ்த்து - ;

விட(ம்) மடுக்கும் கருத்தன் இன்னருள் சேர்க்கும் பவசாகர-தீரம்; கொடுக்கும் வேண்டிய வரம் - ;


வி. சுப்பிரமணியன்


On Mon, Jun 22, 2026 at 10:23 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2)

Ram Ramakrishnan

unread,
Jun 23, 2026, 7:38:48 PM (2 days ago) Jun 23
to santhav...@googlegroups.com
பவசாகரதீ ரம் - என்று அமைக்க உங்களால் தான் முடியும். அருமையான சிந்தனையும் சொற்கோப்பும்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 23, 2026, at 17:25, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 23, 2026, 8:12:58 PM (2 days ago) Jun 23
to santhav...@googlegroups.com
Thanks.
V. Subramanian

Siva Siva

unread,
Jun 24, 2026, 9:37:35 PM (8 hours ago) Jun 24
to santhavasantham

Here is the last one I wrote for this last line:

4)

இருள்நிற மேனி இராவணனைக் கத்த

அருமலைமேல் ஊன்றி அடர்த்த - திருமலர்ப்பா

தம்கருத்தில் வைத்தார்க்குச் சங்கரனோர் கற்பகம

ரம்கொடுக்கும் வேண்டியவ ரம்.


வி. சுப்பிரமணியன்


On Tue, Jun 23, 2026 at 5:25 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

3)

Reply all
Reply to author
Forward
0 new messages